இந்திரா யோசப் வென்னியூர்

இந்திரா யோசப் வெண்ணியூர் (Indira Joseph Venniyoor) (பிறப்பு இந்திரா போதுவால்; 1925/1926 -29 திசம்பர் 2020) ஓர் இந்திய வானொலி ஒலிபரப்பாளரும், திருவிதாங்கூர் வானொலியின் முதல் ஆங்கில மொழி செய்தி ஒளிபரப்பாளரும் ஆவார். இவர் 1984இல் ஓய்வு பெறும் வரை அனைத்திந்திய வானொலியில் ஒளிபரப்பாளராக இருந்தார்.

இந்திரா யோசப் வென்னியூர்
பிறப்புஇந்திரா போதுவால்
1925/1926
திருவிதாங்கூர், பிரித்தானிய இந்தியா
இறப்பு (அகவை 94)
பூஜாப்புரம், கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்இராணி மேரிக் கல்லூரி, சென்னை
பணிவானொலி ஒலிபரப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஏ. எம். ஜே. வெண்ணியூர்
(தி. 1954; இற. 1984)
பிள்ளைகள்3

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இந்திரா திருவிதாங்கூர் மாநிலத்தில் (இன்றைய கேரளா) உயர் சாதி இந்துக் குடும்பமான அம்பாடி வீட்டில் பிறந்தார்.[1] இவருடைய தந்தை வாசுதேவ போதுவால் திருவிதாங்கூர் மாநிலத்தில் தொல்பொருள் கண்காணிப்பாளராகவும் பின்னர் தொல்பொருள் அருங்காட்சியகத்தின் இயக்குநராகவும் இருந்தார்.[1] [2] இவர் தனது 17 வயதில் திருவனந்தபுரத்திற்கு குடும்பத்துடன் சென்றார் தனது குழந்தைப் பருவத்தை நினைவுகூர்ந்த பின்னர், தனது குடும்பத்துக்கு உருசிய ஓவியர் இச்வெடோசுலாவ் ரோரிச், அமெரிக்க கலை வரலாற்றாசிரியர் இசுடெல்லா கிராம்ரிச்சு, பிற ஆங்கில மொழி அறிஞர்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அதனால் தன்க்கு மொழி மீதான அன்பை வளர்த்தது என்றும் கூறினார்.[1]

இவர் சென்னை இராணி மேரிக் கல்லூரியில் கௌரவத்துடன் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.[3] மலையாளப் பாடகி சாந்தா பி. நாயர் இவரது சகோதரி ஆவார்.

தொழில்

தொகு

திருவிதாங்கூர் மாநிலத்தின் திவான் சே. ப. இராமசுவாமி, திருவிதாங்கூர் வானொலியை குறைந்த சக்தி ஒளிபரப்பு அரங்கத்துடன் நிறுவிக்கொண்டிருந்த சமயத்தில் இந்திரா (அப்போது போதுவால்) பட்டம் பெற்றார். திருவாங்கூர் கொச்சியின் அப்போதைய முதலமைச்சர் பறவூர் தா. கி. நாராயண பிள்ளையிடம் இவர் தனது விண்ணப்பத்தை சமர்ப்பித்து வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] இந்த நிலையம் 1949இல் தனது ஒலிபரப்பைத் தொடங்கியபோது, இவர் அறிவிப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். அதன் முதல் ஆங்கில மொழி செய்தி ஒளிபரப்பாளராகவும் இருந்தார். [3] திருவிதாங்கூர்-கொச்சின் மாநில சட்டப்பேரவையின் நடைமுறைகளின்படி, 1949இல் செய்தி ஒலிபரப்பாளராக இவர் வேலை செய்ததற்காக 69 ரூபாய் (பின்னர் US $ 14.50 க்கு சமம்) வழங்கப்பட்டது. [a]</ref>[4]}} திருவிதாங்கூர் வானொலி 1 ஏப்ரல் 1950இல் திருவனந்தபுரத்தின் அனைத்திந்திய வானொலியின் ஒரு பகுதியாக ஆனது.

இவரது செய்தி வாசிப்பின் தொடக்கத்தில், "இது திருவனந்தபுரம். இந்திரா போதுவால் படிக்கும் செய்திகளை இப்போது நீங்கள் கேட்பீர்கள்". இது இவரது தினசரி இரவு 7 மணி வானொலி ஒலிபரப்பின் சிறப்பம்சமாகும்.[3][5] பல சாதாரண மக்களின் வீடுகளில் இருந்து வானொலி இன்னும் எட்டாத நிலையில், மக்கள் சந்திரசேகரன் நாயர் மைதானத்தில் திரண்டனர். அங்கு செய்தி பொது வெளியில் ஒளிபரப்பப்படும்.[6] அவர் 1984இல் ஒரு நிரல் நிர்வாகியாக ஓய்வு பெறும் வரை அனைத்திந்திய வானொலியுடன் பணிபுரிந்தார்.[3][7]

சொந்த வாழ்க்கை

தொகு

இந்திரா வென்னியூர் கலை விமர்சகரும், எழுத்தாளரும் தனது வருங்கால கணவருமான இ. எம். ஜே. வெண்ணியூரை, அனைத்திந்திய வானொலியில் நிகழ்ச்சி உதவியாளராக இருந்தபோது, இவர்கள் ஒன்றாக ரசகோலம் என்ற நிகழ்ச்சியை தயாரித்தபோது சந்தித்தார்.[8] இவர்கள் 1954இல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தனர்.[3] ஒரு உயர் சாதி இந்துவான தான் ஒரு கிறிஸ்தவரை திருமணம் செய்ததை நினைவுகூர்ந்து, "அவர் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்; அதுதான் எங்களை நெருக்கமாக்கியது" என்று கூறுவார்.[1] இவரது கணவர் 1984இல் மும்பை அனைத்திந்திய வானொலியில் நிலைய இயக்குநராக இருந்தபோது இறந்தார்.

இறப்பு

தொகு

29 திசம்பர் 2020 அன்று கேரளாவின் உள்ளபூஜாப்புரத்திலுள்ள வீட்டில், தனது 94 வயதில் இறந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. 1949 இல், 4.76 இந்திய ரூபாய் 1 அமெரிக்க டாலருக்கு சமம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Menon, Ravi. ""Call us Indira and Francesca"; how 'Moby Dick' united two souls separated by seas". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
  2. updusr5; മാര്‍ച്ച്, 01; 2020 (1 March 2020). "This is tvm. You will now hear the news read by Indira Poduval : ആള്‍ ഇന്ത്യാ റേഡിയോയിലെ പ്രസിദ്ധമായ ഇംഗ്ലീഷ് വാര്‍ത്താപ്രക്ഷേപണം". Kerala Women (in மலையாளம்). Archived from the original on 22 September 2020. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020. {{cite web}}: |first2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 ടി.ആര്‍.രമ്യ. "അനന്തപുരിയുടെ ഇഷ്ട ശബ്ദം മാഞ്ഞു, ഇനി ചരിത്രം ബാക്കി". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 30 December 2020. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
  4. Johri, Devika; Miller, Mark. "Devaluation of the Rupee: Tale of Two Years, 1966 and 1991". Center for Civil Society – Working Papers. https://ccs.in/internship_papers/2002/28.pdf. பார்த்த நாள்: 30 December 2020. 
  5. "Veteran broadcaster Indira Joseph Venniyoor passes away" (in en-IN). The Hindu. 30 December 2020. https://www.thehindu.com/news/national/kerala/veteran-broadcaster-indira-joseph-venniyoor-passes-away/article33448982.ece. 
  6. ടി.ആര്‍.രമ്യ. "ഇന്ദിരാവാണി". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
  7. "Travancore Radio's first English newscaster Indira Joseph no more". The New Indian Express. Archived from the original on 16 January 2021. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.
  8. "ആള്‍ ഇന്ത്യാ റേഡിയോയിലെ പെണ്‍ശബ്ദം -ഇന്ദിരാപൊതുവാള്‍". Nanaonline (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 27 July 2020. பார்க்கப்பட்ட நாள் 30 December 2020.