இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்

இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்

இரணைமடு திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு நீர்த் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே அமைந்துள்ள கோயில். இங்கு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி நின்ற திருக்கோலத்தில் "கனகாம்பிகை" எனும் பெயர் தாங்கி மூல தெய்வமாக உள்ளார்.

இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்
கோயில் விமானம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வடமாகாணம்
மாவட்டம்:கிளிநொச்சி
அமைவு:இரணைமடு]], கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் இடதுகரையில்
கோயில் தகவல்கள்
மூலவர்:அம்பாள்
சிறப்பு திருவிழாக்கள்:சித்திரை மாதத்தில் வரும் பூரணை தினமான சித்திரா பௌர்ணமி தினத்தை 10வது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்டமைந்த11நாட்களாகும்
இணையதளம்:http://www.srikanakampikai.com

வரலாறு

தொகு

ஐம்பதுகளின் மத்தியில் கிளிநொச்சியில் பல குடியேற்றங்கள் அமைக்கபட்டன. அக்கால பகுதியில் கிளிநொச்சியில் பல கிராமங்கள் தோன்றின. கிராமங்களில் குடியேறியவர்கள் பல ஆலயங்களையும் அமைத்து வந்தனர். அந்த வகையில் அக்காலபகுதியில் வாழ்ந்த யோகர் சுவாமிகளது அருள்வாக்கினாலும் ஆலோசனையாலும் வழிகாட்டுதலாலும் அக்காலப்பகுதியில் வாழ்ந்த பெரியோர்கள் சிலரது முயற்சியில் 1957 ஆம் ஆண்டு இரணைமடுகுளத்தின் இடது கரையில் 13.5 ஏக்கர் காணியில் ஒரு வேப்பமரத்தின் கீழ் சிறு குடிசையால் ஆலயம் அமைக்கப்பட்டது. இதில் தற்போது ஒன்பது ஏக்கர் காணி மட்டுமே ஆலய நிர்வாகத்தின் கீழ் காணப்படுகிறது.

 
கனகாம்பிகை அம்பாள்

கிளிநொச்சியின் அன்னை எனப்போற்றப்படும் கனகாம்பிகை அம்பாள் ஆலயம் இதுவரையில் நான்கு குடமுழுக்குகளைக் கண்டுள்ளது. முதல்குடமுழுக்கானது அறுபதுகளிலும், இரண்டாவது குடமுழுக்கு 1981 இலும் இடம்பெற்றன. மூன்றாவது குடமுழுக்கு 1996, சனவரி 26 நடைபெற்றது. நான்காவது குடமுழுக்கு 2012 சனவரி 30 அன்று நடைபெற்றது.

தேர்

தொகு
 
முத்தேர்களும் பவனி வரும்காட்சி

வன்னி பகுதியிலேயே சித்திரை தேரோடிய முதல் ஆலயம் என்றும் மூன்று சித்திரதேர்கள் ஓடும் ஒரே ஆலயம் என்றும் மிகப்பெரிய தேர் உள்ள ஆலயம் என்றும் பல பெருமைகள் ஆலயத்திற்கு அங்கு உள்ள சிற்ப வேலைகள் மிக்க சித்திரைதேர்களால் கிடைத்திருக்கின்றன இத் தேர்களானது 1989 ஆம் ஆண்டு மகோற்சவத்தின் பொது வெள்ளோட்டம் விடப்பட்டது

மகோற்சவம்

தொகு

வருடாந்த பெருந்திருவிழா என அழைக்கப்படும் அம்பாள்ஆலய மகோற்சவமானது ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பூரணை தினமான சித்திரா பௌர்ணமி தினத்தை பத்தாவது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்டமைந்த பதினொரு நாட்களாகும். இங்கே கோடியேற்ற திருவிழா, வேட்டை திருவிழாவும் அன்றிரவு சப்பரமும், தேரும், தீர்த்தமும், பூங்கவனமும் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களாகும்.

கொடியேற்ற திருவிழா அன்று பகலும் இரவும் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் உள்வீதி வெளி வீதி வலம் வருவர். 2ம் 3ம் 4ம் 5ம் 6ம் 7ம் திருவிழாக்களில் பகலில் அம்பிகை மட்டும் உள்வீதி வலம் வருவார். இரவில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் உள்வீதி வெளி வீதி வலம் வருவார்.

வேட்டைத் திருவிழா

தொகு

8ம் நாள் பகல் உற்சவம் முடிவடைந்ததும் அம்பிகை வேட்டைதிரு விழாவின் முக்கிய நிகழ்வான வாழைவெட்டும் நிகழ்விற்காக திருவையாறு 2ம் பகுதி விநாயகர் ஆலயத்திற்கு எழுந்த்தருளி அங்கு வாழை வெட்டும் உற்சவம் நடைபெறும் அதன் பின் ஆலயம் திரும்பியவுடன் பிரச்சித்த அபிடேகம் நடைபெற்று இரவு பூசையின் பின் அழகிய முத்து சப்பறத்தில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் வெளி வீதி வலம் வருவார்.

தேர்த் திருவிழா

தொகு

தேர் உற்சவமானது 9ம் நாள் காலையில் இடம்பெறும் காலை வசந்த்தமண்டப பூசைகள் முடிந்ததவுடன் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் தேரில் ஆரோகணிப்பர். முதலில் விநாயகரின் தேரும் அடுத்து சுப்பிரமணியரின் தேரும் அடுத்து அன்னயினுடைய தேரும் வீதிவலம்வரும் தேரிலிருந்த்து பச்சை சாத்தி உற்சவ மூர்த்திகள் இறக்கப்பட்டு நவசக்தி அர்ச்சனை இடம்பெறும் இரவு தேரடி பார்க்கும் உற்சவம் இடம்பெறும்.

 
தேர் திருவிழா

தீர்த்தம்

தொகு

10ம் நாள் தீர்த்தம் காலையில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் தீர்த்தமாடுவதற்காக இரணைமடு குளத்திற்கு எழுந்த்தருளி அங்கு தீர்த்த திருவிழா இடம்பெறும். அன்றிரவு கொடியிறக்கம் இடம்பெறும். பதினோராம் நாள் பூங்காவன திருவிழா அன்று பகல் சங்காபிசேகம் இடம்பெறும். அன்றிரவு அலங்கரிக்கபட்ட பந்ததலில் அம்பிகைக்கு திருவூஞ்சல் இடம்பெற்று மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூந்த்தண்டிகையில் அம்பிகை சுப்பிரமணியர் விநாயகர் சமேதராய் வெளி வீதி வலம் வருவார்.

வருடாந்த திருவூர்வலம்

தொகு

இது வருடந்தோறும் பங்குனி மாதத்தில் இரணைமடு குளத்தின் நீர் பாயும் கிராமங்களுக்கும் ஆலயத்தின் அயற்கிராமங்களுக்கும் அம்பாள் உலா போகும் நிகழ்வாகும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இத்திருவூர்வலமானது ஆரம்பத்தில் ஏழு நாட்களும் பின்னர் பத்து நாட்களும் தற்போது பன்னிரெண்டு நாட்களும் நடைபெறுகின்றது

சிறப்பு உற்சவங்கள்

தொகு

ஆலயத்திலே மகோற்சவம் தவிர பல விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தைப்பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்தரம், சித்திரை வருடப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிச் செவ்வாய், ஆடிப் பூரம், ஆவணி சதுர்த்தி, நவராத்திரி, விஜய தசமி (மானம்பூ), கேதாரகௌரி விரதம், கந்தசஷ்டி, திருவெம்பாவை போன்றவை சிறப்பாக நடைபெறும்.

அதேவேளை நவராத்திரியின் 9ம்நாளன்று மகிஷாசூரன்போர் இடம்பெறும். இந்நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இவ் ஆலயத்தில் மட்டுமே இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சமயகுரவர் நால்வரின் குருபூசை தினங்கள் ஆலயகும்பாபிசேக திதியில் சங்காபிசேகம் ஆடிச் செவ்வாய் கடைசி செவ்வாயில் யாகம் போன்றனவும் சிறப்பாக இடம்பெறும்.

அமைப்பு

தொகு

இவ்வாலயமானது ஆகம முறைப்படி அமைக்கபட்டுள்ளது. கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இவ்வாலயத்தில் கருவறையில் மூலவர் வீற்றிருக்கிறார். கருவறையைத் தொடர்ந்து அர்த்தமண்டபம், மகாமண்டபம், சபாமண்டபத்தில் நடராஜர் சந்நிதியும், ஸ்தம்பமண்டபம் ஆகியவை காணப்படுகின்றன.

உள்பிரகாரத்தில் கருவறைக்கு வலதுபக்க மூலையில் கிழக்கு நோக்கியவாறு விநாயகர் சந்நிதியும், இடதுபக்க மூலையில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் சந்நிதியும் அமைந்துள்ளது. தெற்கு வாயிலுக்கு அருகில் சமயகுரவர் சந்நிதியும், கருவறை கோமுகைக்கு அருகில் தெற்கு நோக்கி சண்டேசுவரி சந்நிதியும், தம்பமண்டபத்திற்கு கிட்டவாக நவக்கிரக சந்நிதியும் தெற்கு அதனையடுத்து மூன்று தள விமானத்தையுடைய வசந்தமண்டபமும் அமைந்துள்ளது. இதேவேளை ஆலய பிரதான வாயிலுக்கு வலப்புறம் (வெளியிலிருந்து வரும் போது) மணிக்கோபுரமும் அதனை அடுத்து வைரவர் நாகதம்பிரன் சந்நிதியும், அதனை அடுத்து யாகசாலையும் அமைந்துள்ளது.

இதனைவிட உள் பிரகாரத்தில் அலுவலகம், மடைபள்ளி, களஞ்சிய அறை, வாகனசாலை போன்றனவும் அமைந்துள்ளன. வடக்கு பகுதியில் உள்பிரகாரத்திற்கும் வெளிபிரகாரத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அழகிய நந்தவனமும் அமைந்துள்ளது. இதேவேளை கூரைபோடப்பட்ட உள் வீதியும் விசாலமான வெளிவீதியும் அமைந்துள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு