இரண்டாம் கோகல்லன்
இரண்டாம் கோகல்லன் (Kokalla II; ஆட்சிக் காலம் பொ.ச. 990-1015 ) மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது. இவனது குர்கி கல்வெட்டு, இவன் கூர்ஜர-பிரதிகாரர்கள், பாலர்கள், கமேலைச் சாளுக்கியர்களின் பிரதேசங்களைத் தாக்கியதாகக் கூறுகிறது.
இரண்டாம் கோகல்லன் | |
---|---|
தஹாலாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 990-1015 பொ.ச. |
முன்னையவர் | இரண்டாம் யுவராசதேவன் |
பின்னையவர் | கங்கேயதேவன் |
குழந்தைகளின் பெயர்கள் | கங்கேயதேவன் |
அரசமரபு | திரிபுரியின் காலச்சூரிகள் |
தந்தை | இரண்டாம் யுவராசதேவன் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகோகல்லன், காலச்சூரி மன்னன் இரண்டாம் யுவராசதேவனின் மகனாவான். தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அரியணையில் அமர்த்தப்பட்டான்.[1]
ஆட்சி
தொகுகோகல்லனின் குர்கி கல்வெட்டு, மற்ற மன்னர்கள் இவனைப் பார்த்து பயந்தார்கள் என்று பெருமை பேசுகிறது: கூர்ஜர மன்னன் இமயமலையில் ஒளிந்து கொண்டான் எனவும், கௌட மன்னன் நீர் கோட்டையில் ஒளிந்தான் எனவும், குந்தள மன்னன் காட்டில் வாழ்ந்தான் எனவும் கூறுகிறது. இந்த கூற்றுக்கள், கோகல்லன் இந்த பிரதேசங்களை தாக்கியிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது: [1]
- கூர்ஜர அரசன் மூலராஜா அல்லது சாமுண்டராசனாக இருக்கலாம். இருப்பினும், காலச்சூரி கல்வெட்டு, இமயமலைப் பகுதி இவனது இராச்சிஜியத்தின் ஒரு பகுதியாக இருந்ததைக் குறிப்பிடுவதால், இவன் ஒரு பலவீனமான கூர்ஜர-பிரதிகார ஆட்சியாளராகவும், அநேகமாக இராச்சியபாலனாகவும் அடையாளம் காணப்படலாம். [1]
- கௌட மன்னனை பால மன்னன் மகிபாலனுடன் அடையாளம் காணலாம்.[1]
- குந்தள மன்னனை மேலைச் சாளுக்கிய மன்னன் ஐந்தாம் விக்கிரமாதித்தனுடன் அடையாளம் காணலாம். கோகல்லனின் தந்தைவழி அத்தை சாளுக்கிய மன்னன் இரண்டாம் தைலப்பனை மணந்தாள். தைலப்பனின் மரணத்திற்குப் பிறகு சாளுக்கிய - காலச்சூரி உறவுகள் மோசமடைந்திருக்கலாம். [1]
கோகல்லனின் வழித்தோன்றலான யசகர்ணனின் ஜபல்பூர் மற்றும் கைரா கல்வெட்டுகள், கோகல்லன் நான்கு பெருங்கடல்களை அடையும் வரை நான்கு திசைகளிலும் நாடுகளை தாக்கியதாக பெருமை கொள்கிறது. இது வெறும் வழமையான பாராட்டு என்றே தோன்றுகிறது. [1]
பரமாரர்களின் உதய்பூர் கல்வெட்டு, அவர்களின் மன்னன் போஜன் ஒரு தோக்லாலாவை தோற்கடித்ததாக கூறுகிறது. [2] வரலாற்றாசிரியர் எஸ். கே. போஸ் தோக்லாலாவை இரண்டாம் கோகல்லனுடன் அடையாளப்படுத்துகிறார். [3] கோகல்லனுக்குப் பிறகு அவனது மகன் கங்கேயதேவன் பதவியேற்றான். இவன் தனது ஆட்சியின் முதல் சில ஆண்டுகளில் போஜனின் ஆட்சியாளனாக பணியாற்றினான். [4]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 V. V. Mirashi 1957, ப. 488.
- ↑ Mahesh Singh 1984, ப. 36.
- ↑ Saikat K. Bose 2015, ப. 281.
- ↑ Krishna Narain Seth 1978, ப. 170.
உசாத்துணை
தொகு- Krishna Narain Seth (1978). The Growth of the Paramara Power in Malwa. Progress. இணையக் கணினி நூலக மைய எண் 8931757.
- Pranab Kumar Bhattacharyya (1977). Historical Geography of Madhya Pradesh from Early Records. Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8426-9091-1.
- Saikat K. Bose (2015). Boot, Hooves and Wheels: And the Social Dynamics behind South Asian Warfare. Vij Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-38446-454-7.
- V. V. Mirashi (1957). "The Kalacuris". In R. S. Sharma (ed.). A Comprehensive history of India: A.D. 985-1206. Vol. 4 (Part 1). Indian History Congress / People's Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7007-121-1.