இரண்டாம் இரத்தின மாணிக்கியா

திரிபுராவின் ஆட்சியாளர்
(இரண்டாம் ரத்ன மாணிக்கியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரண்டாம் இரத்தின மாணிக்கியா (Ratna Manikya II) ( ஆட்சி 1680 – 1712) 1685 முதல் 1693 வரையிலும், மீண்டும் 1695 முதல் 1712 திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார்

இரண்டாம் இரத்தின மாணிக்கியா
திரிபுராவின் மன்னன்
முதல் முறை ஆட்சி1685–1693
முன்னையவர்ராம மாணிக்கியா
பின்னையவர்நரேந்திர மாணிக்கியா
2வது முறை ஆட்சி1695–1712
முன்னையவர்நரேந்திர மாணிக்கியா
பின்னையவர்மகேந்திர மாணிக்கியா
பிறப்புரத்ன தேவன்
அண். 1680
இறப்பு1712 (அகவை 31–32)
மனைவிலள்[1]
  • சத்யவதி
  • பகவதி
  • உட்பட மேலும் 118 பேர்
மரபுமாணிக்ய வம்சம்
தந்தைராம மாணிக்கியா
மதம்இந்து சமயம்

இவர் ஆட்சியாளராக ஆனபோது ஒரு சிறு குழந்தையாகவே இருந்தார். தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை வெளிப்புற சக்திகளின் கட்டுப்பாட்டிலேயே கழித்தார். ஆதிக்க உறவுகளால் ஒரு பொம்மை-மன்னராகப் பயன்படுத்தப்பட்டார். அத்துடன் சக்திவாய்ந்த முகலாயப் பேரரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டு அரியணை ஏறினார். இறுதியில் இவர் தனது இளைய சகோதரனால் திட்டமிடப்பட்ட சதித்திட்டத்தில் கொல்லப்பட்டார்.

வரலாறு

தொகு

இரத்தின தேவன் என்ற பெயரில் பிறந்த இவர் மகாராசா இராம மாணிக்யாவின் நான்கு மகன்களில் மூத்தவரும் அவரது தலைமை அரசியாருக்குப் பிறந்தவரும் ஆவார். [2][3] தனது தந்தையின் ஆட்சியின் போது, இவர் யுவராஜ் பதவியை வகித்தார்.[4]

இவரது தந்தை இராம மாணிக்கியா 1685 இல் இறந்தார். அப்போது 5 வயதுடைய இரத்தினா, இரத்தின மாணிக்யா என்ற பெயரில் அரியணை ஏறினார். இவரது தந்தையின் மரணத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை இரத்தினாவின் ஆட்சியின் ஆரம்ப ஆண்டுகள் முழுவதும் தொடர்ந்தது. இவரது இளம் வயதின் காரணமாக, மாநிலத்தின் கட்டுப்பாட்டை அவரது தாய்வழி மாமா, பலிபீம நாராயணன் வைத்திருந்தார். அவர் ஒரு அடக்குமுறை ஆட்சியாளராக இருந்ததாக அறியப்படுகிறார்.[5] நாராயணன் இறுதியில் வங்காளத்தின் சுபதார் சயிஸ்ட கானின் படையெடுப்பால் வீழ்ந்தார். அவர் முகலாய பிரதேசமான சில்ஹெட்டின் மீதான படையெடுப்பிற்கு பதிலடியாக, [6] 1693 இல் திரிபுரா மீது தாக்குதலைத் தொடங்கினார். நாராயணன் சிறையில் அடைக்கப்பட்டார். இளம் இரத்தினா பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். இவருக்குப் பதிலாக கானுக்கு போரில் உதவிய இவரது உறவினரான நரேந்திர மாணிக்யா அரியணையில் அமரவைக்கப்பட்டார்.[1]

இரண்டாவது ஆட்சிக் காலம்

தொகு

நரேந்திரன் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தார். அப்போது ரத்னாவை தன் பக்கத்தில் வைத்து அன்புடன் நடத்தினார். [7] நரேந்திரன் இறுதியில் சயிஸ்ட கானால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக மற்றொரு உறவினரான[8] சம்பக் ரேவின் கண்கானிப்பில் ரத்னா மீண்டும் அரியணைக்கு மீட்டெடுக்கப்பட்டார். இருப்பினும் இவருக்கு அதிகாரம் இல்லை, ரேயின் கீழ் ஒரு பொம்மை-ஆட்சியாளராகவே இருந்தார். இவருக்கு யுவராஜ் என்று பெயரிடப்பட்டது. கடைசியில் சம்பக் ரே மன்னரின் ஆதரவாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். [9]

இறுதியாக தனது சொந்த உரிமையில் ஆட்சியாளராகப் பாதுகாப்பாக இருந்த இரத்தினா, முந்தைய அமைச்சர் பதவிகளை மீட்டெடுப்பது மற்றும் புதிய பதவிகளை உருவாக்குவது போன்ற பல நிர்வாக மாற்றங்களைச் செய்தார். இவரது சகோதரர்களில் ஒருவரான துர்ஜோய் சிங் புதிய யுவராஜ் என்றும் மற்றொருவரான கனாஷ்யாம் பரதாக்கூர் என்றும் பெயரிடப்பட்டனர்.[10] ரத்னா 1696 இல் மணிப்பூரின் மன்னன் பைகோம்பாவுடன் போரிட்ட பிற இராச்சியங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் மற்றொரு உடன்பிறந்தாரான சந்திரமணியை முகலாய அரசவைக்கு பணயக்கைதியாக அனுப்பினார்.[11] 1710 மற்றும் 1715 க்கு இடையில், முகலாய தாக்குதல்களுக்கு எதிராக ஒரு இந்து கூட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன் திரிபுராவின் அரசவைக்கும் அகோம் இராச்சியத்தின் ஆட்சியாளரான உருத்திர சிங்கனுக்கும் இடையே தூதரகங்கள் ஏற்படுத்தப்பட்டு சமசுகிருதத்தில் ஒரு தொடர் கடிதங்கள் பரிமாறப்பட்டன.[12][13]

இவரது ஆட்சியின் போது ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக, இரத்தினா தனது இராச்சியத்தில் பொதுப் பணிகளில் பங்களிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது. இவர், இன்றைய பங்களாதேசத்தில் அமைந்துள்ள கொமிலாவில் உள்ள ஜெகநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சடேரோரத்னா மந்திர் என்றா ஒரு கோயிலை கட்டினார். இதில் காளியின் உருவங்கள் கோமிலாவிலும், கஸ்பாவில் உள்ள கோவிலிலும் நிறுவப்பட்டுள்ளன. [12]

பதவியிறக்கமும் இறப்பும்

தொகு

இவரது ஆட்சியின் முடிவில், இரத்தினாவுக்கு எதிராக இவரது உடன்பிறந்தார் மகேந்திர மாணிக்கியா மூலம் சதித் திட்டம் தீட்டப்பட்டது. பிந்தையவருக்கு முராத்து பெக்கு உதவினார்.அரசவையில் செல்வாக்கு மிக்க பிரபு ஒருவரால் அவமதிக்கப்பட்டார். [14][12] [15]

1712 ஆம் ஆண்டில், இரத்தினா வலுக்கட்டாயமாக அரியணையில் இருந்து அகற்றப்பட்டு அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர், மகேந்திர மாணிக்கியா என்ற பெயரில் ஆட்சியைப் பிடித்த கனாசியாம், பின்னர் இவரை கொன்று, இவரது உடலை கோமதி நதிக்கரையில் தகனம் செய்தார்.[16][17] இரத்தினாவின் மனைவிகள், 120 பேர் எனக் கூறப்பட்டது.[1] அனைவரும் இவரது இறுதிச் சடங்கில் உடன்கட்டை ஏறினர்.[18]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Sarma (1987), ப. 117.
  2. Sarma (1987), ப. 116.
  3. Sharma & Sharma (2015), ப. 53.
  4. Sarma (1987), ப. 115.
  5. Sarma (1987), ப. 116–17.
  6. Majumdar (1974), ப. 166.
  7. Roychoudhury (1983), ப. 30.
  8. Thakurta (1999), ப. 13.
  9. Sarma (1987), ப. 118.
  10. Saha (1986), ப. 63.
  11. Sarma (1987), ப. 118–19.
  12. 12.0 12.1 12.2 Sarma (1987), ப. 119.
  13. Dey (2005), ப. 73.
  14. Roychoudhury (1983), ப. 31.
  15. Roychoudhury (1983).
  16. Acharjee (2006), ப. 30.
  17. Sharma & Sharma (2015), ப. 62.
  18. Raatan (2008), ப. 152.

உசாத்துணை

தொகு