இரத்தன்ஜி டாட்டா

சர் இரத்தன்ஜி ஜம்சேத்ஜி டாட்டா (Sir Ratanji Jamsetji Tata) (20 சனவரி 1871, மும்பை - 5 செப்டம்பர் 1918, செயின்ட் இவ்சு, கார்ன்வால், இங்கிலாந்து ) இவர் ஓர் இந்திய நிதியாளரும் அறப்பணியாற்றிவருமாவார்.

இரத்தன்ஜி டாட்டா
Sir Ratan Tata.jpg
பிறப்புசனவரி 20, 1871(1871-01-20)
இறப்பு5 செப்டம்பர் 1918(1918-09-05) (அகவை 47)
படித்த கல்வி நிறுவனங்கள்மும்பை பல்கலைக்கழகம்
பெற்றோர்ஜம்சேத்ஜி, கிராபாய்
வாழ்க்கைத்
துணை
நவாஜ்பாய் சேத்
பிள்ளைகள்நேவல் டாட்டா (தத்தெடுத்தவர்)
உறவினர்கள்தோரப்ஜி டாடா (சகோதரன்) ரத்தன் டாட்டா (பேரன்)

சுயசரிதைதொகு

இவர் பிரபல பார்சி வணிகர் ஜம்சேத்ஜி டாடாவின் மகனாவார். இவர் முமபையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் தனது தந்தையின் நிறுவனத்தில் நுழைந்தார். 1904 இல் மூத்த டாடாவின் மரணத்தின் போது, இவரும் இவரது சகோதரர் தோராப்ஜி டாடாவும் மிகப் பெரிய செல்வத்தை பெற்றனர். அவற்றில் பெரும்பாலானவை நடைமுறை இயல்புடைய அறப்பணிகளுக்கும் இந்தியாவின் வளங்களை வளர்ப்பதற்காக பல்வேறு தொழில்துறை நிறுவனங்களை நிறுவுவதற்கும் அர்ப்பணித்தனர்.

1905 ஆம் ஆண்டில் பெங்களூரில் ஒரு இந்திய அறிவியல், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான இந்திய அறிவியல் கழகம் நிறுவப்பட்டது, 1912 ஆம் ஆண்டில் டாட்டா ஸ்டீல் மத்திய மாகாணங்களில் உள்ள சச்சியில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது. இருப்பினும், டாடா நிறுவனங்களில் மிக முக்கியமானது, மேற்குத் தொடர்ச்சி மலையின் (1915) நீர் சக்தியை சேமிப்பதாகும். இது மும்பைக்கு ஏராளமான மின்சக்தியை வழங்கியது, எனவே அதன் தொழில்களின் உற்பத்தி திறனை பெருமளவில் அதிகரித்தது.

1916 இல் நைட் ஆன இவர் இந்தியாவுக்கு இவர் அளித்த நன்மைகளை குறையவில்லை. இங்கிலாந்தில், திவிக்கன்காம், யார்க் மாளிகையில் நிரந்தர குடியிருப்பை வைத்திருந்த இவர், 1912 ஆம் ஆண்டில் இலண்டன் பொருளியல் பள்ளியில் சமூக அறிவியல் மற்றும் நிர்வாகத்தின் ரத்தன் டாடா துறையை நிறுவினார். மேலும் ஏழை மக்கள் படிப்பதற்காக இலண்டன் பல்கலைக்கழகத்தில் ரத்தன் டாடா நிதியத்தையும் நிறுவினார்.

இவர் கலைகளின் சிறந்த இணைப்பாளராக இருந்தார். சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலயம் (முன்னர் வேல்ஸ் இளவரசர் அருங்காட்சியகம் ) இவரது (1923 இல் வாங்கப்பட்டது) சேகரிப்புகளைக் காண்பிக்கும் ஒரு பகுதியைக் கொண்டுள்ளது. மேலும் சர் தோராப்ஜி டாடா (1933 இல் வாங்கியது) மற்றும் சர் புருஷோத்தம் மவ்ஜி (வாங்கியது) 1915) போன்றவையும் அடங்கும். [1]

தனிப்பட்ட வாழ்க்கைதொகு

 
புரூக்வுட் கல்லறையில் உள்ள ரத்தன்ஜி டாடாவின் கல்லறை

இவர் 1893 இல் நவாஜ்பாய் சேத் என்பவரை மணந்தார். 1915 இல் இங்கிலாந்து சென்றார். இவரது தொலைதூர உறவினர் குடும்பத்திலிருந்து நேவல் டாடா என்பவரை தத்தெடுத்தனர். இவர் 1918 செப்டம்பர் 5 அன்று இங்கிலாந்தின் கார்ன்வாலில் உள்ள செயின்ட் இவ்சில் இறந்தார். இலண்டனுக்கு அருகிலுள்ள வோக்கிங், புரூக்வுட் கல்லறையில் இவரது தந்தையின் (ஜாம்சேத்ஜி டாடா) பக்கத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். [2]

மும்பை வணிகரான தோரப்ஜி சக்லத்வாலாவை மணந்த ஜெர்பாய் டாடா என்ற அத்தை மூலம், இவர் சாபுர்ஜி சக்லத்வாலாவின் உறவினரானார். பின்னர் இவர் ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தில் பொதுவுடமை கட்சியின் உறுப்பினரானார் . [3]

மரபுதொகு

இவரது மரணத்திற்குப் பிறகு சர் ரத்தன் டாடா அறக்கட்டளை ஒன்று ரூ. 8 மில்லியன் ஆரம்ப நிதியைக் கொண்டு 1919 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. [2]

மேற்கோள்கள்தொகு

  1. "About Maharashtra". Maharashtra Tourism. 24 ஏப்ரல் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 April 2020 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. 2.0 2.1 "More than a businessman". டாட்டா குழுமம் website. August 2008. 2013-08-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-13 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி) பிழை காட்டு: Invalid <ref> tag; name "ta" defined multiple times with different content
  3. Oxford Dictionary of National Biography, Volume 48. Oxford University Press. 1904. பக். 675–676. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-861398-9. Article on Saklatvala by Mike Squires, who refers to Jamsetji as J.N. Tata.

அடிக்குறிப்புகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தன்ஜி_டாட்டா&oldid=3364089" இருந்து மீள்விக்கப்பட்டது