இராகவன் திருமுல்பாது
வைத்யபூசணம் கே. இராகவன் திருமுல்பாது (Raghavan Thirumulpad) (20 மே 1920 - 21 நவம்பர் 2010) ஒரு ஆயுர்வேத அறிஞரும், பயிற்சியாளருமாவார். திருமுல்பாது என்பது மருத்துவ அலங்காரமாகும். மே 20, 1920 இவர் நாராயண ஐயர், இலட்சுமிகுட்டி ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். [1] இவர், சமசுகிருதம், மெய்யியல் சோதிடம், இலக்கணம் போன்றவற்றை பல்வேறு ஆசிரியர்களின் கீழ் படித்தார். இவர், சென்னையில் இந்தியன் இரயில்வே எழுத்தராக பணியாற்றினார். இந்த சந்தர்ப்பத்தில், இவர் நோய்வாய்ப்பட்டு ஆயுர்வேத சிகிச்சையை நாடினார். மருத்துவர் வாசுதேவன் நம்பீசனின் சிகிச்சையில் ஈர்க்கப்பட்ட இவர், அவரது சீடத்துவத்தை ஏற்றுக்கொண்டு, குருகுல பாணியில் மருத்துவம் பயின்றார். பின்னர், வைத்யபூசணம் என்ற பட்டப்படிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றார். மிகச் சிறிய வயதிலிருந்தே இவர் காந்தியச் சிந்தனையால் ஈர்க்கப்பட்டார். மேலும் காதியை பயன்படுத்தவும் பிரச்சாரம் செய்யவும் தொடங்கினார்.
இராகவன் திருமுல்பாது | |
---|---|
2007இல் இராகவன் திருமுல்பாது | |
பிறப்பு | 20 மே 1920 சிங்கோலி, ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா |
இறப்பு | 21 நவம்பர் 2010 சாலக்குடி, இந்தியா | (அகவை 90)
பணி | ஆயுர்வேத அறிஞர் |
வாழ்க்கைத் துணை | விசாலாட்சி தம்புராட்டி |
சிகிச்சை முறை
தொகுஇவர், ஜான் ரஸ்கின் எழுதிய, அன்டு திஸ் லாஸ்ட் என்ற கட்டுரையால் மிகவும் ஈர்க்கப்பட்டார். மேலும் தனது அன்றாட மருத்துவ நடைமுறையில் அதன் நெறிமுறைகளை செயல்படுத்த முயன்றார். இது அந்த காலத்தில் இந்தியா முழுவதும் நிலவிய ஆயுர்வேத நடைமுறையின் மாற்றத்தின் மாற்றமாகும். இவர் தனது சிகிச்சையில் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். மேலும் மருத்துவத்திற்கு குறைந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. நோய்களைத் தடுப்பதில் உடல் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து அதிகபட்ச அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆரோக்கியமான வாழ்க்கை கட்டமைக்கப்பட்ட நான்கு தூண்களாக ஆரோக்கியமான உணவு, ஆழ்ந்த தூக்கம், மிதமான காமம், உகந்த உடற்பயிற்சி ஆகியவற்றை சிறப்பிக்கும் ஒரு பாணியை இவர் ஊக்குவித்தார். இவர், பல இளம் ஆயுர்வேத பட்டதாரிகளுக்கு ஆயுர்வேதத்தை மிகவும் தர்க்கரீதியான விஞ்ஞான ஆனால் எளிமையான பாணியில் கற்பித்தார். இவர் தனது சாலக்குடியில் வசித்து வந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர், விசாலாட்சி தம்புராட்டி என்பவரை மணந்தார். இவர்களுக்கு முரளி (மருத்துவர்), முகுந்தன், முராரி, இரவிவர்மா என்ற நாங்கு மகன்களும், முத்துலட்சுமி என்ற ஒரு மகளும் இருந்தனர்.[2] முத்துலட்சுமி ஒரு சமசுகிருத பேராசிரியராகவும், எழுத்தாளராகவும், காலடி சங்கரா பல்கலைக்கழகத்தில் வேதாந்தத் துறைத் தலைவராகவும் இருக்கிறார். 2008 ஆம் ஆண்டிற்கான மொழிபெயர்ப்பிற்கான கேரள சாகித்ய அகாடமி விருதைப் பெற்ற இவர், சனவரி 2009 இல் இறந்தார்.
இறப்பு
தொகுஇவர் 2010 நவம்பர் 21 அன்று இறந்தார். இறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, 25 சனவரி 2011 அன்று, பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது. [3]
குறிப்புகள்
தொகு- ↑ . 21 November 2010.
- ↑ "Sahitya Akademi awards announced". 19 April 2009 இம் மூலத்தில் இருந்து 22 ஏப்ரல் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090422154508/http://www.hindu.com/2009/04/19/stories/2009041954720500.htm.
- ↑ "Medicine Padma winners". New Kerala. பார்க்கப்பட்ட நாள் 2011-01-26.