இராஜபாளையம் தொடருந்து நிலையம்
இராஜபாளையம் தொடருந்து நிலையம் (Rajapalayam railway station) தமிழ்நாட்டிலுள்ள, விருதுநகர் மாவட்டத்தில், ராஜபாளையம் நகரத்தில் அமைந்துள்ளது. இது தெற்கு இருப்புப் பாதை மண்டலத்திற்கு உட்பட்ட மதுரை இருப்புப்பாதைப் பிரிவின் ஒரு பகுதியாக இராஜபாளையம் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுடனும், நாட்டின் பிற பகுதிகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[1]
இராஜபாளையம் இரயில் நிலையம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே பீட்டர் ரோடு, இராஜபாளையம், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, அஞ்சல் குறியீட்டெண்-626117. இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 9°27′08″N 77°33′37″E / 9.4522°N 77.5604°E | ||||
ஏற்றம் | 175 m (574 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | தென்காசி சந்திப்பு – விருதுநகர் சந்திப்புத் தடம் | ||||
நடைமேடை | 3 | ||||
இருப்புப் பாதைகள் | 5 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், வாடகையுந்து நிலையம், ஆட்டோ ரிக்சா நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
தரிப்பிடம் | ஆம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | RJPM[1] | ||||
பயணக்கட்டண வலயம் | தென்னக இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | இல்லை | ||||
|
அமைவிடம்
தொகுஇத்தொடருந்து நிலையம் இராஜபாளையம் நகரிலுள்ள, இரயில்வே பீட்டர் சாலையில் அமைந்துள்ளது. இங்கிருந்து இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் 500மீ தொலைவிலும் மற்றும் புதிய பேருந்து நிலையம் 2.8கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கிருந்து 76 கிலோமீட்டர் தொலைவில் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.[1]
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
தொகுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, இராஜபாளையம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8]
வழித்தடங்கள்
தொகுஇத்தொடருந்து நிலையம் சென்னையை இணைக்கும் வழித்தடத்தின் ஒரு பகுதியாக இருப்பதுடன் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகிய இடங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.[9][10]
- விருதுநகர் வழியாக வடக்கு நோக்கி மதுரைச் செல்லும் அகல இருப்புப் பாதை உள்ளது.
- தென்காசி வழியாக மேற்கு நோக்கி கொல்லம் செல்லும் அகல இருப்புப் பாதை உள்ளது.
வண்டிகளின் வரிசை
தொகுபடத்தொகுப்பு
தொகு-
ஒரு மழைநேர மாலைப்பொழுதில் இராசபாளையம் தொடருந்து நிலையத்தின் இரண்டாவது நடைமேடை. பின்புலத்தில் தெரிவது சஞ்சீவி மலை
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "RJPM/Rajapalayam Railway Station Map".
- ↑ "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980.
- ↑ https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
- ↑ https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
- ↑ https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
- ↑ https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
- ↑ https://timesofindia.indiatimes.com/city/madurai/modi-to-lay-foundation-stone-for-redevelopment-of-13-amrith-bharat-railway-stations-in-madurai-today/articleshow/107997384.cms
- ↑ https://x.com/drmmadurai/status/1762094114886345054
- ↑ "RJPM/Rajapalayam Railway Station arrivals".
- ↑ "RJPM/Rajapalayam Railway Station departures".
வெளி இணைப்புகள்
தொகு