இராஜேசு பிண்டால்

இராஜேசு பிண்டால் (Rajesh Bindal)(பிறப்பு 16 ஏப்ரல் 1961) என்பவர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ளார். இவர் முன்னர் செயல் தலைமை நீதிபதியாகக் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றினார். டி. பி. இராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்ற பிறகு, தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்ற இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். "நியாயமான மற்றும் பாரபட்சமற்ற நீதி வழங்குவதில் குறுக்கீடு" என்ற அடிப்படையில் இவரை நீக்குமாறு மேற்கு வங்கத்தின் வழக்கறிஞர் குழு, இந்தியத் தலைமை நீதிபதியிடம் முறையீடு செய்துள்ளது.

மாண்புமிகு நீதியரசர்
இராஜேசு பிண்டால்
Rajesh Bindal
தலைமை நீதிபதி அலகாபாத் உயர் நீதிமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 அக்டோபர் 2021
பரிந்துரைப்புஎன். வி. இரமணா
நியமிப்புராம் நாத் கோவிந்த்
செயல் தலைமை நீதிபதி கல்கத்தா உயர் நீதிமன்றம்
பதவியில்
29 ஏப்ரல் 2021 – 10 October 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்டி. பி. இராதாகிருஷ்ணன்
நீதிபதி கல்கத்தா உயர் நீதிமன்றம்
பதவியில்
5 சனவரி 2021 – 28 ஏப்ரல் 2021
பரிந்துரைப்புஎஸ். ஏ. பாப்டே
நியமிப்புராம் நாத் கோவிந்த்
செயல் தலைமை நீதிபதி ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்
பதவியில்
9 திசம்பர் 2020 – 4 ஜனவரி 2021
நியமிப்புராம் நாத் கோவிந்த்
முன்னையவர்கீதா மித்தால்
பின்னவர்பங்கஜ் மிட்டல்
நீதிபதி ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றம்
பதவியில்
19 நவம்பர் 2018 – 8 திசம்பர் 2020
பரிந்துரைப்புரஞ்சன் கோகோய்
நியமிப்புராம் நாத் கோவிந்த்
நீதிபதி பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம்
பதவியில்
22 மார்ச் 2006 – 18 நவம்பர் 2018
பரிந்துரைப்புயோகேசு குமார் சபர்வால்
நியமிப்புஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 ஏப்ரல் 1961 (1961-04-16) (அகவை 63)
அம்பாலா, பஞ்சாப் (தற்போது அரியானா)
முன்னாள் கல்லூரிகுருச்சேத்திரப் பல்கலைக்கழகம்

நீதிபதியாக

தொகு

ராஜேஷ் பிண்டால் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் நீதிபதியாக 2006-ல் நியமிக்கப்பட்டார்.[1] இவர் நீதிமன்றத்தின் கணினிக் குழு மற்றும் நிலுவைத் தொகைக் குழுவின் தலைவரானார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 26 அன்று, கொலிஜியம் இவரைச் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பணியிடமாற்றத்திற்குப் பரிந்துரைத்தது. இவர் தனது இடமாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரினார். சென்னைக்குப் பதிலாக வட இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரினார். கொலீஜியம் இடமாற்றத்தினை மறுபரிசீலனை செய்ய இயலாது என நிராகரித்து, இடமாற்றத்திற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. நவம்பர் 11 அன்று, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசங்களுக்கான உயர் நீதிமன்றமான ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது.[2]

2020 திசம்பர் 9 அன்று , கீதா மிட்டல் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற பிண்டல் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார்.[3] ஜனவரி 5, 2021 அன்று, ஜம்மு மற்றும் காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பங்கஜ் மிதால் பொறுப்பேற்ற பிறகு, எஸ். ஏ. பாப்டேயின் பரிந்துரையின் மூலம் இவர் கல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். டி. பி. இராதாகிருஷ்ணன் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இவர் ஏப்ரல் 29 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்ற இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார். பின்னர் ஜூன் 27 அன்று, மேற்கு வங்கத்தின் வழக்கறிஞர் குழுமம், "நியாயமான மற்றும் பாரபட்சமற்ற நீதி வழங்கலில் குறுக்கீடு" என்ற அடிப்படையில், பிண்டாலை தற்காலிக தலைமை நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யுமாறு தலைமை நீதிபதி என். வி. இரமணாவிடம் முறையிட்டது.[1]

இதன் பின்னர் அக்டோபர் 9, 2021 அன்று பிண்டால் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பணி உயர்வு பெற்று, அக்டோபர் 11, 2021 அன்று பதவியேற்றார்.

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்

தொகு

பதவி உயர்வில் இடஒதுக்கீடு

தொகு

பஞ்சாப் பட்டியல் சாதி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (சேவைகளில் இட ஒதுக்கீடு) சட்டம், 2006ஐ ரத்து செய்த நீதிபதி பி. எஸ்.வாலியாவுடன் பிண்டால் இரு நீதிபதிகள் இருக்கையில் இருந்தார். சி மற்றும் டி பிரிவு அரசுப் பணிகளில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பதவி உயர்வுகளில் 20% இட ஒதுக்கீடும், ஏ மற்றும் பி வகை அரசுப் பணிகளில் 14% இட ஒதுக்கீடும் சட்டம் வழங்கியது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Upadhyay, Sparsh (2021-06-27). "Bar Council Of West Bengal Writes To CJI Seeking Removal Of Calcutta HC Acting CJ Rajesh Bindal". Live Law (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Chandigarh: Justice Rajesh Bindal transferred to J&K HC". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). Chandigarh Bureau. 2018-11-11. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.{{cite web}}: CS1 maint: others (link)
  3. Vishwanath, Apurva (2020-12-09). "J&K High Court Chief Justice Gita Mittal retires". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.
  4. "HC quashes provisions of Punjab law on accelerated promotions to SCs". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). Chandigarh correspondent. 2018-02-21. பார்க்கப்பட்ட நாள் 2021-06-27.{{cite web}}: CS1 maint: others (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேசு_பிண்டால்&oldid=3995609" இலிருந்து மீள்விக்கப்பட்டது