இராஜ் மகால், ஜெய்ப்பூர்
இராஜ் மகால் (Raj Mahal) என்பது ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் இராச்சியத்தின் முந்தைய மகாராஜாவின் அரண்மனையாகும்.
வரலாறு
தொகுஇதன் அசல் கட்டுமானம் 1729ஆம் ஆண்டுக்கு முந்தையது. பின்னர், காலப்போக்கில் புதுப்பிக்கப்பட்டு மாற்றப்பட்டது. 1821ஆம் ஆண்டில் இது ராஜ்புதனத்தில் வசித்த பிரித்தானிய அரசப் பிரதிநிகளின் உத்தியோகப்பூர்வ இல்லமாக மாறியது. இது எழில்படுக் கலை பாணியில் புதுப்பிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு 1958இல் மகாராஜா இரண்டாம் மன்சிங் இதை தனது தனி இல்லமாக மாற்றினார்.[1]
இந்த அரண்மனையை பார்வையிட்டவர்களில் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத், எடின்பர்க் டியூக், ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், ஈரானின் ஷா, மவுண்ட்பேட்டன் பிரபு , திருமதி மவுண்ட்பேட்டன், சார்லசு, வேல்சு இளவரசர், டயானா, வேல்ஸ் இளவரசி ஆகியோர் அடங்குவர்.[2]
வடிவமைப்பாளர் ஆதில் அஹ்மத் அரண்மனையை சொகுசு விடுதியாக மாற்றி மீட்டெடுக்க நியமிக்கப்பட்டார்.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Sujan Rajmahal Palace Jaipur | Rooms Price | Online Booking". www.heritagehotelsofindia.com.
- ↑ 2.0 2.1 "Sujan Rajmahal Palace Jaipur | Rooms Price | Online Booking". www.heritagehotelsofindia.com."Sujan Rajmahal Palace Jaipur | Rooms Price | Online Booking". www.heritagehotelsofindia.com.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் இராஜ் மகால், ஜெய்ப்பூர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- SUJÁN Rajmahal Palace | Boutique Luxury Palace Hotel | Jaipur, Rajasthan, India