இராமநாதபுரம் (திண்டுக்கல் மாவட்டம்)
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இராமநாதபுரம் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தைச் சேர்ந்த கிராமமாகும்.[4] திண்டுக்கல் நகரில் இருந்து கிழக்குத் திசையில் சுமார் 10 கி.மீ தொலைவில் இராமநாதபுரம் அமைந்துள்ளது. கிழக்கில் குப்பமுத்துப்பட்டி. மேற்கில் களராம்பட்டி. தெற்கில் புகையிலைப்பட்டி. வடக்கில் தாதநாயக்கன்பட்டி ஆகிய ஊர்கள் இருக்கின்றன. வேளாண்மை, சலவை, கட்டுமானத் தொழில் ஆகியவை இந்த ஊர் மக்களி்ன் முக்கியத் தொழில்களாகும். இங்கு விளைவிக்கப்படும் மொச்சைக்குச் சந்தையில் நல்ல வரவேற்பு உண்டு.
இராமநாதபுரம் | |||
— கிராமம் — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | திண்டுக்கல் | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3] | ||
மக்களவைத் தொகுதி | இராமநாதபுரம் | ||
மக்களவை உறுப்பினர் | |||
சட்டமன்றத் தொகுதி | இராமநாதபுரம் | ||
சட்டமன்ற உறுப்பினர் |
காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கம் (திமுக) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
இங்குள்ள கோட்டை முனியாண்டி கோவில் முழுவதும் கரணைக் கற்களால் உருவாக்கப்பட்டது. சிதிலமடைந்த நிலையில் இங்கு ஒரு கோட்டை இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. எழுத்துப் பாறை என்ற இடத்தில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மாறஞ்சடையன் என்ற பாண்டிய மன்னனால் இந்தக் கல்வெட்டு படைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வரகுணன் என்ற பெயரும் இம்மன்னருக்கு உண்டு. சோழ நாட்டிலிருந்து இடவை என்ற ஊரின் மீது இம்மன்னன் படையெடுத்துள்ளான். உடன் சென்ற பராந்தகப்பள்ளி என்ற ஊரின் வேளாண் பெயரால் இங்கு ஒரு குளம் வெட்டப்பட்டுள்ளது. அதில் கல்லால் கரையும் குமிழி இருந்திருக்கிறது. வட்டெழுத்தில் உள்ள கல்வெட்டுத் தகவல் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி[சான்று தேவை]
ஸ்ரீகோமாறஞ் சடையனோடு சோழ நாட்டிடவை யாத் திரை செய்த பராந்தகப்பள்ளி வேளானா இன நக் கம்புள்ளன் றன்பேராற் புள்ளனேரி என்று குளமாக்கிக் கற்கோதிக் குமுழி செய்வித்துக் குறை ப்பணி நின்றது முற்றுப் பெறுத்தான் புள்ளந க்கன் னது செய்த தச்சன் வடுகன் கூற்றன் அ வன் மகன் குறைப்பணி முற்றுவிக்க புள்ளந க்கன் அவனுக்குக் காணிக்கையாக அட்டின பூமிப் பள் ளி நாட்டிரண்டு கூற்றிலும் ஊர்குளத்துக்கிழ் தலைநீர் பாடுகால் லொரோ வயல் பதக் குநெல்
என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அறிவித்துள்ளது
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-31.