இலங்கை தவளைவாயன்

ஒரு பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Batrachostomus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

இலங்கை தவளைவாயன் (Sri Lanka frogmouth, அறிவியல் பெயர்: Batrachostomus moniliger) என்பது ஒரு சிறிய தவளைவாயன் பறவை இனம் ஆகும். இவை தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையிலும், இலங்கையிலும் காணப்படுகின்றன. இவை பக்கிகளுடன் தொடர்புடைய பறவைகள் ஆகும். காடுகளில் காணப்படும் இரவாடியான இதன் உடல் நிறமானது இலைச் சருகுகளை ஒத்திருக்கிறது. இந்த பறவைகள் அமைதியாக மரக் கிளைகளின் மீது அமர்ந்திருக்கும்போது உருமறைப்பால் பார்வையில் படுவது கடினமாகும். இவை மரத்தில் தங்களுக்கு பிடித்த ஒரு இடத்தில் தங்குகின்றன. அதற்கு தொந்தரவு நேராதவரை தொடர்ந்து அதே இடத்தைப் பயன்படுத்துகிறன்றன. இவை ஒரு விசித்திரமான ஒலியை எழுப்புகின்றன. பொதுவாக விடியலிலும், அந்தியிலும் ஒலியை எழுப்புகின்றன. இவற்றின் உடலில் உள்ள நிறத் திட்டுகளானது பாலினங்களுக்கு ஏற்ப சற்று வேறுபடுகின்றது.

இலங்கை தவளைவாயன்
ஒரு இணைப்பறவைகள். வலப்பக்கம் பெண் பறவை
அழைப்புகள்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Batrachostomus
இனம்:
இருசொற் பெயரீடு
Batrachostomus moniliger
பிளைத், 1849

விளக்கம் தொகு

 
தட்டேகாடு பறவைகள் சரணாலயத்தில்

மைனா அளவுள்ள இலங்கை தவளைவாயன் 23 சென்டிமீட்டர்கள் (9.1 அங்) நீளம் வரை வளர்கின்றது. இதன் அலகு ஆலிவ் பழுப்பு நிறத்திலும், விழிப்படலம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் கால்கள் லேசான சிவப்புத் தோய்ந்த கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். கால்களின் பெரும்பகுதியை தூவிகள் மறைத்து இருக்கும். இதன் அலகு அகன்று தவளை போன்ற தோற்றத்தை இதற்குத் தருகிறது. பிற தவளைவாயன்களைப் போலவே, இந்த இனப் பறவையும் அகலமான அலகுடன் கூடிய பெரிய தலையும் அதில் முன்னோக்கி காணப்படும் கண்களையும் கொண்டு பரந்த இருநோக்கி பார்வையைக் கொண்டுள்ளது. இந்த இனத்தைச் சேர்ந்த மற்ற பறவைகளுடன் ஒப்பிடுகையில், இது சிறிய இறக்கைகளைக் கொண்டுள்ளது.

ஆண் பறவை உடலின் மேல் தோற்றம் கருஞ்சாம்பல் நிறப் பெரும்புள்ளிகளாக அமைந்துள்ளது. கழுத்தில் ஒரு வெள்ளைப் பட்டையைக் காணலாம். தோள்பட்டை இறகுகள் வெண்மையாக இருக்கும். வால் வெளுத்துக் குறுக்குப் பட்டைகளோடு காணப்படும். உடலின் கீழ்ப்பகுதி கருஞ்சாம்பல் நிறப் பெரும் புள்ளிகளோடு காணப்படும், என்றாலும் வயிறு சற்று வெளுத்துக் காணப்படும்.

பெண் பறவையின் மேல் தோற்றம் வெளிர் கருஞ்சிவப்பாக இருக்கும். வயிறு ஆணைக் காட்டிலும் வெளுத்திருக்கும்

வாழ்விடமும், பரவலும் தொகு

இந்த இனம் தென்மேற்கு இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், இலங்கையிலும் காணப்படுகிறது. இதன் வாழ்விடம் வெப்பமண்டல காடுகள் ஆகும். இவை பொதுவாக அடர்த்தியான மரங்களை வாழிடமாகக் கொண்டவை.[2] இவை சில நேரங்களில் பெருந்தோட்டங்கள் உட்பட மிகவும் தொந்தரவான வாழ்விடங்களிலும் காணப்படலாம்.[3][4] உருமறைப்பு மற்றும் இரவாடுதல் பழக்கத்தின் காரணமாக இவை இருப்பது பார்வையில் படாமல் போகலாம்.[5]

நடத்தை தொகு

 
அண்மையில் பொரித்த குஞ்சுடன் கூட்டில் இலங்கை தவளைவாயன்
 
இளம் பறவை (நடுத்தர) வயது வந்த பெண் இடதுபுறம் மற்றும் ஆண் வலதுபுறம் ( தட்டெக்காடு பறவைகள் சரணாலயம் )

இந்த தவளைவாயனானது, பகல்நேரங்களில் அரிதாக தங்கும் இடங்களிலில் தெரியும். இது பல மாதங்கள் ஒரே இடத்தை இருப்பிடமாக பயன்படுத்துகிறது.[6] இது பூச்சிகளை உணவாக கொள்கிறது. அவற்றை பறக்கும்போது பிடிக்கிறது அல்லது தரையில் அல்லது மரக் கிளைகளிலிருந்து பிடிக்கிறது. இதில் ஆண் பெண் என இருபால் பறவைகளும் அந்தி நேரத்தில் குரல் எழுப்புகிறது.

இப்பறவைகளின் இனப்பெருக்க காலமானது தென்னிந்தியாவில் சனவரி முதல் ஏப்ரல் வரை, இலங்கையில் பெப்ரவரி முதல் மார்ச் வரை ஆகும். இதன் கூடானது அடியில் பாசிகளையும், அடி இறகுகளையும் கொண்ட திண்டால் ஆனது. கூடின் வெளிப்புறமானது இலைக்கன் மற்றும் பட்டைகளால் மூடப்பட்டிருக்கும். இப்பறவை வெள்ளையான ஒற்றை முட்டையை மட்டும் இட்டு அடைகாக்கும். முட்டையை பகலில் பெரும்பாலும் ஆண் அடைகாக்கிறது. இரவில் இரண்டும் தங்கள் பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன.[7] குஞ்சு பொறித்த பிறகு, ஆண் கூட்டை அழிக்கிறது. தவளைவாயன் இணைகள் பெரும்பாலும் ஒரே கிளையை பல கூடுகளை பயன்படுத்துகின்றன.[8] குஞ்சானது பெற்றோருடன் சில மாதங்கள் தங்கி, அவர்களுக்கிடையில் பதுங்கியிருக்கும்.[6]

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2012). "Batrachostomus moniliger". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22689603/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. Sugathan, R (1981). "A survey of the Ceylon Frogmouth (Batrachostomus moniliger) habitat in the Western Ghats of India". J. Bombay Nat. Hist. Soc. 78 (2): 309–316. https://biodiversitylibrary.org/page/48228835. 
  3. Kannan, R. (1993).
  4. Borges, Renee of the Bombay Natural History Society (1986). On the occurrence of the Ceylon frogmouth (Batrachostomus moniliger) in north Kanara, Karnataka. 83. p. 200. https://biodiversitylibrary.org/page/48761167. 
  5. Kumara, H.N.; Singh, M. (2006). "Ceylon Frogmouth Batrachostomus moniliger Blyth in the rainforests of the Western Ghats, Karnataka". J. Bombay Nat. Hist. Soc. 103 (1): 100. 
  6. 6.0 6.1 Kannan, R (1994). "Notes on the status and ecology of the Ceylon Frogmouth (Batrachostomus moniliger Blyth) from the Anaimalai Hills of Tamil Nadu". J. Bombay Nat. Hist. Soc. 91 (3): 454–455. https://biodiversitylibrary.org/page/48378937. 
  7. Phillips, W. W. A. (1947). "A Note on the Nesting of the Ceylon Frogmouth, Batrachostomus moniliger Blyth". Ibis 89 (3): 515–516. doi:10.1111/j.1474-919X.1947.tb04373.x. 
  8. Jayarathna, K D Thandula (2004). "Observations on a nest of Sri Lanka Frogmouth Batrachostomus moniliger". Forktail 20: 129–130. http://www.orientalbirdclub.org/publications/forktail/20pdfs/Jayarathna-Frogmouth.pdf. 

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Batrachostomus moniliger
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_தவளைவாயன்&oldid=3927867" இலிருந்து மீள்விக்கப்பட்டது