இலுப்பைத்தண்டலம்

இராணிப்பேட்டை மாவட்ட சிற்றூர்

இலுப்பைத்தண்டலம் (Illupaithandalam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊரானது இலுப்பைத்தண்டலம் ஊராட்சிக்கு உட்பட்டது.

இலுப்பைத்தண்டலம்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்இராணிப்பேட்டை
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
631 151

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது வேலூரி்ல் இருந்து 69 கிலோமீட்டர் தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், நெமிலியிலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 74 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 375 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,544 ஆகும்.[2]

வரலாறு

தொகு

இந்த ஊரில் பராந்தகச் சோழன், இராசராச சோழன் காலத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இராசிராச சோழன் காலத்துக் கல்வெட்டில் திருவெண்காடிச்சாணி என்ற பெயர் கொண்ட ஒரு பிராமணப் பெண்ணும் அவரது உறவினரும் இலுப்பைத் தண்டலத்திலுள்ள திரு அகத்தீஸ்வரர் கோயிலின் மூன்று காலப் பூசை வழிபாட்டுட்டுச் செலவுக்காக கொடையாக அளித்த நிலம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகளில் இந்த ஊரின் பெயரை இலுப்பைத் தண்டலம் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இது பன்மா நாட்டில் அடங்குகிறது என்ற தகவலும் உள்ளது. இதன் மூலம் இந்த ஊரின் பெயரான இலுப்பைத் தண்டலம் என்ற பெயர் ஆயிரத்து நூறு ஆண்டுகளாக மாறாமல் வழங்கிவருகிறது தெரியவருகிறது.

இராசராச சோழன் காலத்து மூன்றாக உடைந்த கல்வெட்டில், நடுப் பகுதி மட்டும்தான் தற்போது கிடைத்துள்ளது அந்தக் கல்வெட்டு இவ்வாறு படிக்கப்பட்டுள்ளது;[3]

1. பூண்டமை மனக்கெளெ காந்தனூர் சாலை…
2. நாடுங் கொல்லமுங் கபிங்கமும் பெட்டியை…
3. க விளங்கும் யாண்டேய் செழியரைத் தேசு கொள்…
4. து பந்மா நாட்டு இலுப்பைத் தண்டலமாகிய கந்த…
5. தாமன் பிராஹ்மணி திருவெண்காட்டிச் சாணியும் இவள்…
6. ற்கு தானமட்டின பூமியும் உறுப்பிட்டூர்க் கிரமங்…
7. த்தி கமார இராமவித்தனும் நடாதூர் மாதவ சோமா…
8. மூன்று சந்தியும் பலி வலமி செயக் கொட்டவ…
9. ண்டக நூர் மாதவச் சோமாசி பூமிக்கு தெற்கும் தென்
10. (க்கும்) வடபாற்கெல்லை புற்றுக்கு தெற்கும் இனனா (ன் கெல்லை)…

தொடருந்து நிலையங்கள்

தொகு

இந்த ஊரில் தொடருந்து நிலையம் இல்லை. இந்த ஊருக்கு அருகில் உள்ள தொடருந்து நிலையங்களாக தக்கோலம் தொடருந்து நிலையம், அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகியவை உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. "Illupaithandalam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  2. "Illuppaithandalam Village in Arakonam (Vellore) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
  3. "தண்டலம் கிராமத்தில் ராஜராஜ சோழன் காலத்துக் கல்வெட்டுகள்!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2022-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலுப்பைத்தண்டலம்&oldid=3696271" இலிருந்து மீள்விக்கப்பட்டது