அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையம்

அரக்கோணம்- செங்கல்பட்டு பாதை: இது தினமும் காலை, மாலை என இரு வேளை டீசல் என்ஜின் மூலம் 63 கிமீ தூரம

அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையம் (Arakkonam Junction railway station, நிலையக் குறியீடு:AJJ) என்பது தமிழ்நாட்டின், இராணிப்பேட்டை மாவட்டத்தில், அரக்கோணம் நகரில் அமைந்துள்ள, ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னிந்தியாவின் முதல் தொடருந்து பாதையில் அமைந்துள்ள, இந்தியாவின் பழமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின் மும்பை - சென்னை வழித்தடத்தில், குண்டக்கல் - சென்னை எழும்பூர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இங்கு அதிவிரைவு இரயில்களைத் தவிர, அனைத்து இரயில்களும் நின்று செல்கின்றன. இங்கிருந்து சென்னைக்கு புறநகர் இரயில்களும் இயக்கப்படுகின்றன.

அரக்கோணம் சந்திப்பு
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்அரக்கோணம், தமிழ்நாடு
இந்தியா
ஆள்கூறுகள்13°04′55″N 79°40′06″E / 13.08191°N 79.66845°E / 13.08191; 79.66845
உரிமம்இந்திய இரயில்வே அமைச்சகம், இந்திய இரயில்வே
தடங்கள்எம். ஜி. ஆர். சென்னை சென்ட்ரல் - மும்பை வழித்தடம்
எம். ஜி. ஆர். சென்னை சென்ட்ரல் - பெங்களூரு நகரம் வழித்தடம்
அரக்கோணம் - செங்கல்பட்டு வழித்தடம்
அரக்கோணம் - ரேணிகுண்டா வழித்தடம்
நடைமேடை8
இருப்புப் பாதைகள்12
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உள்ளது
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுAJJ
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
அரக்கோணம் சந்திப்பு is located in தமிழ் நாடு
அரக்கோணம் சந்திப்பு
அரக்கோணம் சந்திப்பு
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
அரக்கோணம் சந்திப்பு is located in இந்தியா
அரக்கோணம் சந்திப்பு
அரக்கோணம் சந்திப்பு
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்


இது சென்னை - பெங்களூரு - கோயம்புத்தூர், திருப்பதி வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையத்தை நாளொன்றுக்கு நூறுக்கும் அதிகமான இரயில்கள் கடந்து செல்கின்றன.

இது எட்டு நடைமேடைகளைக் கொண்டது. மூன்றாம், நான்காம் நடைமேடைகளை சென்னைப் புறநகர் இரயில்களில் செல்வோர் பயன்படுத்துகின்றனர். முதலாம், இரண்டாம் நடைமேடைகளை சென்னை, பெங்களூரு, கோயம்புத்தூர், திருப்பதி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

திட்டங்கள் மற்றும் மேம்பாடு

தொகு

இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5]

அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் சென்னை தொடருந்து கோட்டத்தில் 17 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, அரக்கோணம் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[6][7][8][9]


இரயில்கள்

தொகு

இங்கிருந்து செல்லும் இரயில்களின் பட்டியலை கீழே காணவும்.

இரயிலின் எண். பெயர் வகை சேரும் இடம் வழி
56261 அரக்கோணம் - பெங்களூர் பயணியர் இரயில் பயணிகள் இரயில் (நாள் தோறும்) பெங்களூர் நகரம் ஜோலார்பேட்டை
16085 அரக்கோணம் - ஜோலார்பேட்டை விரைவுவண்டி விரைவுவண்டி (நாள் தோறும்) ஜோலார்பேட்டை காட்பாடி சந்திப்பு
56011 அரக்கோணம் - கடப்பா பயணியர் இரயில் பயணிகள் இரயில் (நாள்தோறும்) கடப்பா ரேணிகுண்டா

அரக்கோணம் சந்திப்பிற்கு வந்தடையும் வழிதடங்கள்

தொகு
புறப்படும் இடம் தொடருந்து நிலையம் வழியாக செல்கிறது வகை / வழித்தடம்
காட்பாடி சந்திப்பு அரக்கோணம் சந்திப்பு அகலப்பாதை, மின்மயமாக்கப்பட்ட - இரட்டை வழித்தடம்
ரேணிகுண்டா அரக்கோணம் சந்திப்பு அகலப்பாதை, மின்மயமாக்கப்பட்ட - இரட்டை வழித்தடம்
எம். ஜி. ஆர். சென்னை சென்ட்ரல் அரக்கோணம் சந்திப்பு அகலப்பாதை, மின்மயமாக்கப்பட்ட - நான்கு வழித்தடம்
செங்கல்பட்டு அரக்கோணம் சந்திப்பு அகலப்பாதை, மின்மயமாக்கப்பட்ட - ஒற்றை வழித்தடம்

நான்கு தடங்களைக் கொண்ட வழிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Arakkonam railway station".
  2. "AMRIT BHARAT STATIONS". Press Information Bureau (New Delhi). 10 Feb 2023. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1897980. 
  3. https://sansad.in/getFile/annex/262/AU1585.pdf?source=pqars
  4. https://pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=1941449
  5. https://www.youtube.com/watch?v=2ilIzAsYJVs
  6. https://swarajyamag.com/infrastructure/amrit-bharat-station-scheme-60-suburban-railway-stations-to-get-facelift-in-tamil-nadu
  7. https://www.dtnext.in/news/city/upgradation-of-15-stations-in-chennai-division-under-amrit-bharat-station-scheme-762832
  8. https://sr.indianrailways.gov.in/cris//uploads/files/1705928319674-PRESS%20RELEASE%20-%20REDEVELOPMENT%20UNDER%20ABSS%20IN%20CHENNAI%20BEACH%20-%20CHENGALPATTU%20SECTION.pdf
  9. https://sr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&dcd=14090&id=0,4,268