இளவரசர் பகதூர் ஷா
இளவரசர் பகதூர் ஷா (Bahadur Shah of Nepal) (நேபாளி: बहादुर शाह) (பிறப்பு:1757 - இறப்பு 1797) நேபாள இராச்சியத்தின் ஷா வம்ச மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் (1723–1775) மூன்றாவது மகனும், மன்னர் பிரதாப் சிங் ஷாவின் தம்பி ஆவார்.
பகதூர் ஷா | |
---|---|
நேபாள இராச்சியத்தின் இளவரசர் | |
துணைவர் | வித்தியா லெட்சுமி தேவி |
வாரிசு(கள்) | ரிபு மார்தன் ஷா சத்ரு பங்கன் ஷா |
Dynasty | ஷா வம்சம் |
தந்தை | பிரிதிவி நாராயணன் ஷா |
தாய் | நரேந்திர இராச்சிய லெட்சுமி தேவி |
பிறப்பு | 16 சூன் 1757 நுவாகோட், கோர்க்கா |
இறப்பு | 24 சூன் 1797 (வயது 40) ஆரியகாட், பசுபதிநாத் கோயில், நேபாள இராச்சியம் |
சமயம் | இந்து சமயம் |
அரசப் பிரதிநிதி பகதூர் ஷா राजप्रतिनिधि माँहिला साहिबज्यू बहादुर शाह | |
---|---|
நேபாள இராச்சியத்தின் இளவரசர் & தலைமை அமைச்சர் [1] | |
மூல் கஜி | |
பதவியில் 31 ஆகஸ்டு 1778 – 20 சூன் 1779[2] | |
முன்னவர் | நிறுவப்பட்டது |
பின்வந்தவர் | கலைக்கப்பட்டது |
பதவியில் 13 சூலை 1785 – 6 சூன் 1794[2] | |
முன்னவர் | தலைமை அமைச்சர் |
பின்வந்தவர் | கீர்த்திமான் சிங் பஸ்யந்த், தலைமை அமைச்சர் |
படைத்துறைப் பணி | |
பட்டப்பெயர்(கள்) | பதே பகதூர் சிங் |
பற்றிணைவு | ![]() |
தர வரிசை | தலைமைப் படைத்தலைவர் |
சமர்கள்/போர்கள் | நேபாள திபெத்தியப் போர் & சீன நேபாளப் போர் [3] |
இளமைதொகு
பகதூர் ஷா இளமையில் தன் தந்தையும், மன்னருமான பிரிதிவி நாராயணன் ஷாவுடன் போர்க்களத்திற்கு செல்வார். ஒன்றுபட்ட நேபாளத்தை நிறுவுவதற்கான முயற்சிகளில் மன்னருக்கு உதவுவார். [2] இவரது தந்தை மறைந்த பிறகு, நேபாள இராச்சியத்தை விட்டு தானாக வெளியேறினார். இவரது அண்ணனும், மன்னருமான பிரதாப் சிங் ஷாவின் மறைவிற்குப் பின்னர் நேபாள அரசவை பிரபுக்கள் வேண்டுதல் பேரில் மீண்டும் நேபாளம் வந்தார்.
அரசப் பிரதிநிதி (1785–1794)தொகு
மறைந்த மனன்ர் பிரதாப் சிங் ஷாவின் மகன் கீர்வான் யுத்த விக்ரம் ஷா குழந்தையாக இருந்தார். கீர்வான் யுத்த விக்கிம் ஷாவின் அரசப் பிரதிநிதியாகவும், தலைமை அமைச்சராகவும் செயல்பட்ட பகதூர் ஷா, தனது படைத்தலைவர்களான அமர்சிங் மற்றும் தாமோதர பாண்டே ஆகியவர்களுடன் இணைந்து நேபாளத்தின் கிழக்கில் உள்ள சிக்கிம் மொரங் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளை வென்று, நேபாள இராச்சியத்துடன் இணைத்தார்.
மேலும் சூம்லா, பால்பா மற்றும் டோட்டி குறுநில மன்னர்களை வென்று, அப்பகுதிகளை நேபாள இராச்சியத்துடன் இணைத்தார். மேலும் நேபாள திபெத்தியப் போர் மற்றும் சீன நேபாளப் போர்களில் கலந்து கொண்டவர்.
பின்னாட்களில்தொகு
பகதூர் ஷா தனது அதிகாரம் சிறிது சிறிதாக குறைந்து கொண்டிருக்கும் வேளையில், நேபாளம் - இந்தியா எல்லையை ஒட்டியுள்ள, பிகார் மாநிலத்தின் பேட்டையா இராச்சியத்தில் தன் பிற்கால வாழ்க்கையைக் கழித்தார்.
ஒரு முறை, மன்னர் ராணா பகதூர் ஷாவின் அரசவையினர், பகதூர் ஷாவை நேபாளத்திற்கு வரவழைத்து, சிறையில் அடைத்துக் கொன்றனர்.
இதனையும் காண்கதொகு
மேற்கோள்கள்தொகு
- Failure of Captain Knox's Mission
- Bahadur Shah: the Regent of Nepal, by Bhadra Ratna Bajracharya. South Asia Books, 1992. ISBN 8170416434.