உருபீடியம் ஆக்சலேட்டு
உருபீடியம் ஆக்சலேட்டு (Rubidium oxalate) என்பது Rb2C2O4 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஆக்சாலிக் அமிலத்தினுடைய உருபீடியம் உப்பான இதில் ருபீடியம் நேர்மின் அயனியும் (Rb+) ஆக்சலேட்டு எதிர்மின் அயனியும் (C2O2−4 சேர்ந்துள்ளன. உருபீடியம் ஆக்சலேட்டு பெரும்பாலும் ஒற்றை நீரேற்றாக(Rb2C2O4·H2O) உருவாகிறது.
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
10010-65-8 நீரிலி 7243-75-6 ஒற்றைநீரேற்று | |||
ChemSpider | 10760835 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 13955568 | ||
| |||
பண்புகள் | |||
Rb2C2O4 | |||
வாய்ப்பாட்டு எடை | 258.95 g·mol−1 | ||
தோற்றம் | colourless crystals | ||
அடர்த்தி | 2.76 கி/செ.மீ3 (ஒற்றைநீரேற்று) | ||
தொடர்புடைய சேர்மங்கள் | |||
ஏனைய எதிர் மின்னயனிகள் | |||
ஏனைய நேர் மின்அயனிகள் |
| ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு
தொகுருபீடியம் கார்பனேட்டும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து வினைபுரிந்து ருபீடியம் ஆக்சலேட்டு உருவாகிறது:[1]
- Rb2CO3 + H2C2O4 → Rb2C2O4 + H2O + CO2↑
ருபீடியம் பார்மேட்டை வெப்பச்சிதைவுக்கு உட்படுத்தியும் உருபீடியம் ஆக்சலேட்டைத் தயாரிக்கலாம்.:[2]
- 2 HCOORb → Rb2C2O4 + H2↑
பண்புகள்
தொகுஒரு நீரிய கரைசலில் இருந்து, ரூபிடியம் ஆக்சலேட்டு Rb2C2O4·H2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட ஒற்றைநீரேற்றாக ஒற்றைச்சரிவச்சு படிகத்திட்டத்தில் படிகமாக உருவாகிறது.[3] பொட்டாசியம் ஆக்சலேட்டு ஒற்றைநீரேற்றுடன் K2C2O4·H2O ஒத்த உருவமைப்பைக் கொண்டுள்ளது.[4] அறை வெப்பநிலையில் உருபீடியம் ஆக்சலேட்டின் (Rb2C2O4) இரண்டு நீரிலி வடிவங்கள் அறியப்படுகின்றன. சீசியம் ஆக்சலேட்டுடன் (Cs2C2O4) ஒருபடித்தான வடிவம் கொண்ட ஒற்றைச்சரிவச்சு வடிவம், பொட்டாசியம் ஆக்சலேட்டுடன் (K2C2O4) ஒருபடித்தான வடிவம் கொண்ட செஞ்சாய்சதுரப் படிகவடிவம் என்பன இவ்விரண்டு வடிவங்களாகும்.[5] புதியதாகத் தயாரிக்கப்படும் நீரிலி வடிவ ருபீடியம் ஆக்சலேட்டு ஆரம்பத்தில் முக்கியமாக ஒற்றைச்சரிவச்சு வடிவத்தைக் கொண்டுள்ளது. ஆனால் இது மெதுவாக செஞ்சாய்சதுர படிகவடிவ உருபீடியம் ஆக்சலேட்டாக மாறுகிறது.[6] 2004 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு உயர்வெப்ப உருபீடியம் ஆக்சலேட்டு வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[7]
உருபீடியம் ஆக்சலேட்டின் வெவ்வேறு வடிவ படிகத்தரவுகள்
வடிவம் | படிக வடிவம் | இடக்குழு | a Å | b Å | c Å | β | Z |
---|---|---|---|---|---|---|---|
ஆல்பா[5] | ஒற்றைச்சரிவச்சு | P21/c | 6.328 | 10.455 | 8.217 | 98.016° | 4 |
பீட்டா[5] | செஞ்சாய்சதுரம் | Pbam | 11.288 | 6.295 | 3.622 | — | 2 |
ஒற்றைநீரேற்று[8] | ஒற்றைச்சரிவச்சு | C2/c | 9.617 | 6.353 | 11.010 | 109.46° | 4 |
உருபீடியம் ஆக்சலேட்டு படிகத்தின் உருவாதல் வெப்பம் 1325.0 ± 8.1 கிலோயூல்/மோல் ஆகும்.[9]
507-527 °செல்சியசு (945-981 °பாரங்கீட்டு; 780-800 கெல்வின்) வெப்பநிலையில் உருபீடியம் ஆக்சலேட்டின் சிதைவு நடைபெற்று கார்பன் மோனாக்சைடும் பின்னர் கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஆக்சிசன் வாயுக்கள் வெளியிடப்படுகின்றன.
- Rb2C2O4 → Rb2CO3 + CO↑
- Rb2CO3 → Rb2O + CO2↑
- Rb2O → 4 Rb + O2↑
நடுநிலையான உருபீடியம் ஆக்சலேட்டுடன் Rb2C2O4 கூடுதலாக, RbHC2O4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டுடன் கூடிய ஓர் அமில உப்பு ருபீடியம் ஐதரசன் ஆக்சலேட்டும் அறியப்படுகிறது.[10] இது பொட்டாசியம் ஐதரசன் ஆக்சலேட்டுடன் KHC2O4 ஒத்த அமைப்பைக் கொண்டு ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் உள்ளது.[11] இதைதவிர இருநீரேற்று சேர்மமாக இருக்கும் RbHC2O4·H2C2O4 சேர்மமும் அறியப்படுகிறது. இது 18 °செல்சியசு வெப்பநிலையில் 2.125 கி/செ.மீ3 அடர்த்தியும், 21 ° செல்சியசு வெப்பநிலையில் 21 கி/லிட்டர் கரைதிறன் கொண்டது.
ஐதரசன் பெராக்சைடில் கரைக்கப்பட்ட கரைசலை ஆவியாக்கும்போது, உருபீடியம் ஆக்சலேட்டு Rb2C2O4·H2O2 என்ற வாய்ப்பாடு கொண்ட ஒற்றைபெர்நீரேற்றாக உருவாகிறது. இது காற்றில் ஒப்பீட்டளவில் நிலையாக இருக்கும் ஒற்றைச் சரிவச்சுப் படிகங்களை உருவாக்குகிறது.[12]
உருபீடியம் ஆக்சலேட்டு ஐதரசன் புளோரைடுடன் வினைபுரிந்து ஐதரோபுளோரிடேட்டு என்ற உப்பாக உருவாகிறது.:[13]
Rb2C2O4 + 2 HF → RbHC2O4·HF + RbF
மேற்கோள்கள்
தொகு- ↑ Giglio, E.; Loreti, S.; Pavel, N. V. (May 1988). "EXAFS: a new approach to the structure of micellar aggregates" (in en). The Journal of Physical Chemistry 92 (10): 2858–2862. doi:10.1021/j100321a032. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3654. https://pubs.acs.org/doi/abs/10.1021/j100321a032.
- ↑ Meisel, T.; Halmos, Z.; Seybold, K.; Pungor, E. (February 1975). "The thermal decomposition of alkali metal formates" (in en). Journal of Thermal Analysis 7 (1): 73–80. doi:10.1007/BF01911627. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-5215. http://link.springer.com/10.1007/BF01911627.
- ↑ Ans, Jean d'; Lax, Ellen (1998). Taschenbuch für Chemiker und Physiker (in ஜெர்மன்). Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-60035-0.
- ↑ Pedersen, B. (1966-03-01). "The equilibrium hydrogen–hydrogen distances in the water molecules in potassium and rubidium oxalate monohydrates". Acta Crystallographica 20 (3): 412–417. doi:10.1107/S0365110X66000951. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0365110X66000951.
- ↑ 5.0 5.1 5.2 Dinnebier, Robert E.; Vensky, Sascha; Panthöfer, Martin; Jansen, Martin (2003-03-10). "Crystal and molecular structures of alkali oxalates: first proof of a staggered oxalate anion in the solid state". Inorganic Chemistry 42 (5): 1499–1507. doi:10.1021/ic0205536. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:12611516. https://pubmed.ncbi.nlm.nih.gov/12611516.
- ↑ Vensky, Sascha (2004). Konformationsaufklärung anorganischer Oxoanionen des Kohlenstoffs und Festkörpersynthesen durch Elektrokristallisation von Ag3O4 und Na3BiO4 (doctoralThesis thesis) (in ஜெர்மன்).
- ↑ Robert E. Dinnebier, Sascha Vensky, Martin Jansen, Jonathan C. Hanson (2005-02-04), "Crystal Structures and Topological Aspects of the High-Temperature Phases and Decomposition Products of the Alkali-Metal Oxalates M2[C2O4] (M=K, Rb, Cs)", Chemistry - A European Journal, vol. 11, no. 4, pp. 1119–1129, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/chem.200400616, PMID 15624128
{{citation}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Takuya Echigo, Mitsuyoshi Kimata (November 2006), "The common role of water molecule and lone electron pair as a bond-valence mediator in oxalate complexes : the crystal structures of Rb2(C2O4) · H2O and Tl2(C2O4)", Zeitschrift für Kristallographie, vol. 221, no. 12, pp. 762–769, Bibcode:2006ZK....221..762E, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1524/zkri.2006.221.12.762, S2CID 98482669
- ↑ Masuda, Y.; Miyamoto, H.; Kaneko, Y.; Hirosawa, K. (February 1985). "The standard molar enthalpies of formation of crystalline rubidium and cesium oxalates" (in en). The Journal of Chemical Thermodynamics 17 (2): 159–164. doi:10.1016/0021-9614(85)90068-0. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0021961485900680.
- ↑ Piccard, Julius (1862). "Beitrag zur Kenntniss der Rubidiumverbindungen" (in de). Journal für Praktische Chemie 86 (1): 449–460. doi:10.1002/prac.18620860163. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-8383. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/prac.18620860163.
- ↑ Watts, Henry (1866). A Dictionary of Chemistry and the Allied Branches of Other Sciences (in ஆங்கிலம்). Longmans, Green, Longman, Roberts & Green.
- ↑ Pedersen, Berit F.; Seip, Hans M.; Santesson, Johan; Holmberg, Pär; Eriksson, G.; Blinc, R.; Paušak, S.; Ehrenberg, L. et al. (1967). "The Crystal Structure of Potassium and Rubidium Oxalate Monoperhydrates, K2C2O4.H2O2 and Rb2C2O4.H2O2." (in en). Acta Chemica Scandinavica 21: 779–790. doi:10.3891/acta.chem.scand.21-0779. பன்னாட்டுத் தர தொடர் எண்:0904-213X. http://actachemscand.org/doi/10.3891/acta.chem.scand.21-0779.
- ↑ Weinland, R. F.; Stille, W. (1903). "Ueber die Anlagerung von Krystallfluorwasserstoff an Oxalate und an Ammoniumtartrat" (in de). Justus Liebig's Annalen der Chemie 328 (2): 149–153. doi:10.1002/jlac.19033280205. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/jlac.19033280205.