உருபீடியம் செலீனைடு
உருபீடியம் செலீனைடு (Rubidium selenide) என்பது Rb2Se என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். உருபீடியமும் செலீனியமும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஒளிமின்னழுத்த செல்களில் சீசியம் செலினைடுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.[5]
Rb+: __ Se2-: __
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
உருபீடியம் செலீனைடு
| |
இனங்காட்டிகள் | |
31052-43-4 | |
ChemSpider | 148024 |
EC number | 250-447-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 169243 |
| |
பண்புகள் | |
Rb2Se | |
வாய்ப்பாட்டு எடை | 249.89 |
தோற்றம் | நிறமற்றது. அதிக நீருறிஞ்சும் படிகங்கள்[1] |
அடர்த்தி | 2.912 கி/செ.மீ3[2] 3.16 g/cm3[3] |
உருகுநிலை | 733 °செல்சியசு[2] |
hydrolyses[4] | |
மற்ற கரைப்பான்கள்-இல் கரைதிறன் | எத்தனால் மற்றும் கிளிசரால் கரைப்பான்களில் கரையும் |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம்: எதிர் புளோரைட்டு கட்டமைப்பு |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு |
GHS pictograms | |
H331, H301, H373, H410 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | உருபீடியம் ஆக்சைடு, உருபீடியம் சல்பைடு, ருபீடியம் தெல்லூரைடு, உருபீடியம் பொலோனைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் செலீனைடு, சோடியம் செலீனைடு, சீசியம் செலீனைடு, பிரான்சியம் செலீனைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபாதரச செலீனைடு மற்றும் உலோக உரூபிடியம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் உரூபிடியம் செலீனைடை தயாரிக்கலாம்.[6] திரவ அம்மோனியாவில் தனிமங்கள் ஒருங்கிணைக்கப்படலாம். நீர்ம அம்மோனியா இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.[7]
ஐதரசன் செலீனைடை உருபீடியம் ஐதராக்சைடின் நீரிய கரைசலில் கரைத்து இறுதியில் உரூபிடியம் செலீனைடை உருவாக்கலாம். இந்த தயாரிப்பு முறை உருபீடியம் சல்பைடு தயாரிப்பதற்கான முறையைப் போன்றதாகும். ஏனெனில் இவை இரண்டும் சால்கோசெனைடு சேர்மங்கள்.[8]
- RbOH + H2Se → RbHSe + H2O
- RbHSe + RbOH → Rb2Se + H2O
கட்டமைப்பு
தொகுFm3m என்ற இடக்குழுவில் a=801.0 பைக்கோமீட்டர் என்ற அலகு செல் அளவில் 4 அலகு செல்களுடன் எதிர்புளோரைட்டு கனசதுரப் படிகக் கட்டமைப்பில் உரூபிடியம் செலீனைடு படிகமாகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Jean D'Ans, Ellen Lax: Taschenbuch für Chemiker und Physiker. 3. Elemente, anorganische Verbindungen und Materialien, Minerale, Band 3. 4. Auflage, Springer, 1997, ISBN 978-3-5406-0035-0, S. 692 ([1], p. 692, கூகுள் புத்தகங்களில்).
- ↑ 2.0 2.1 Dale L. Perry, Sidney L. Phillips: Handbook of inorganic compounds. CRC Press, 1995, ISBN 978-0-8493-8671-8, S. 336 ([2], p. 336, கூகுள் புத்தகங்களில்).
- ↑ Sommer, Helmut; Hoppe, Rudolf (February 1977). "Die Kristallstruktur von Cs2S. mit einer Bemerkung über Cs2Se, Cs2Te, Rb2Se und Rb2Te" (in de). Zeitschrift für anorganische und allgemeine Chemie 429 (1): 118–130. doi:10.1002/zaac.19774290116.
- ↑ வார்ப்புரு:Alfa
- ↑ Solid State Technology (in ஆங்கிலம்). Vol. 4. Cowan Publishing Corporation. 1961. p. 34.
- ↑ Bergmann, Alfred (1937-03-13). "Über die Darstellung und Eigenschaften von Caesium-und Rubidium-Sulfid, Selenid und Tellurid" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 231 (3): 269–280. doi:10.1002/zaac.19372310306. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.19372310306.
- ↑ Mellor, Joseph William (1963). A Comprehensive Treatise on Inorganic and Theoretical Chemistry (in ஆங்கிலம்). Longmans, Green. p. 2178.
- ↑ R. Abegg, F. Auerbach: 'Handbuch der anorganischen Chemie'. Verlag S. Hirzel, Bd. 2, 1908. S. 430.Volltext