உருபீடியம் ஐதராக்சைடு
ருபீடியம் ஐதராக்சைடு (Rubidium hydroxide) என்பது RbOH என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஒரு ருபீடியம் மற்றும் ஒரு ஐதராக்சைடு அயனிகள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் ஒரு வலிமையான காரத் தன்மையுள்ள வேதிப்பொருளாகவும் மற்றும் ஒரு வலிமையான காரமாகவும் இருக்கிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் ஐதராக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
1310-82-3 | |
ChEBI | CHEBI:32108 |
ChemSpider | 56181 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 62393 |
வே.ந.வி.ப எண் | VL8750000 |
| |
பண்புகள் | |
வாய்ப்பாட்டு எடை | 102.475 கி/மோல் |
தோற்றம் | சாம்பல் கலந்த வெண்மை நிற்த் திடப்பொருள், நீருறிஞ்சும் |
அடர்த்தி | 1.74 கி/மி.லி 25 °செ இல் |
உருகுநிலை | 301 °C (574 °F; 574 K) |
கொதிநிலை | 1,390 °C (2,530 °F; 1,660 K) |
100 கி/100 மி.லி (15 °செ) | |
கரைதிறன் | எத்தனாலில் கரையும் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−413.8 கியூ/மோல் |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | அரிப்புத் தன்மை உடையது |
தீப்பற்றும் வெப்பநிலை | எளிதில் தீப்பற்றாது. |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | இலித்தியம் ஐதராக்சைடு சோடியம் ஐதராக்சைடு பொட்டாசியம் ஐதராக்சைடு சீசியம் ஐதராக்சைடு |
தொடர்புடைய சேர்மங்கள் | ருபீடியம் ஆக்சைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ருபீடியம் ஐதராக்சைடு இயற்கையில் தனித்துக் கிடைப்பதில்லை. ஆனால் ருபீடியம் ஆக்சைடை தொகுப்பு வினைக்கு உட்படுத்தி ருபீடியம் ஐதராக்சைடு தயாரிக்கலாம். சில விநியோகிப்பாளர்கள் ருபீடியம் ஐதராக்சைடின் நீர்த்தக் கரைசலை ருபீடியம் ஐதராக்சைடு என்ற பெயரில் வழங்கி வருகிறார்கள்.
ருபீடியம் ஐதராக்சைடு மிகவும் அரிப்புத் தன்மை மிகுந்த வேதிப்பொருளாகும். இக்காரத்தைப் பயன்படுத்துகையில் கைககள், கண், முகம் முதலானவற்றைப் பாதுக்காக்கும் வகைகள் கையுறைகள் முகமுடிகள் அணிவது அவசியமானதாகும்.
தயாரிப்பு
தொகுருபீடியம் ஆக்சைடில் உள்ள ஆக்சைடை தண்ணீரில் கரைக்கும் தொகுப்பு வினை வழியாக ருபீடியம் ஐதராக்சைடைத் தயாரிக்கலாம்.
- Rb2O (s) + H2O (l) → 2 RbOH (aq)
சில விநியோகிப்பாளர்கள் ருபீடியம் ஐதராக்சைடின் 50 சதவீத நீர்த்தக் கரைசலை அல்லது 99 சதவீத அளவிலுள்ள நீர்த்த கரைசல் வரை 5 இன் மடங்குகளில் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
பயன்கள்
தொகுருபீடியம் ஐதராக்சைடு அரிதாகவே தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இதைவிடப் பாதுகாப்பான முறையில் இதன் செயல்பாடுகள் அனைத்தையும் சோடியம் ஐதராக்சைடும் பொட்டாசியம் ஐதராக்சைடும் வழங்கி விடுகின்றன.
ருபீடியம் ஐதராக்சைடு முக்கிய அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது. ருபீடியம் விலை மதிப்பு மிக்கது என்பதால் பெரும்பாலும் ருபீடியத்தை வீணாக்குவதை தவிர்க்க்கும் நோக்கில் மிக அரிதாக பதிலியாகவே இதைப் பயன்படுத்துவார்கள். உதாரணமாக, பட்டாசுத் தொழிலில் ஊதா நிறம் வேண்டுமிடங்களில் தூய்மையான ருபீடியத்திறகுப் பதிலாக ருபீடியம் ஐதராக்சைடு பயன்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட காரணங்களால் ருபீடியம் ஐதராக்சைடு தொழிற்சாலைகளில் அரிதாகப் ப்யன்படுத்தப்பட்டாலும் மற்ற ருபீடியம் சேர்மங்கள் தயாரிக்கப்படுகையில் இது இடைநிலைச் சேர்மமாக உருவாவதால் முக்கியத்துவம் பெறுகிறது. இயற்கையில் தோன்றும் ருபீடியம் ஆக்சைடை நீரில் கரைத்து கரையக்கூடிய ருபீடியம் ஐதராக்சைடு தயாரிக்கப்படுகிறது.[1]
முன்பதுகாப்பு
தொகுருபீடியம் ஐதராக்சைடு மிகவும் அரிப்புத் தன்மை மிகுந்த வேதிப்பொருளானதால் இதைப் பயன்படுத்துகையில் தோலில் புண் முதலிய காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். எனவே போதுமான முன்பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இச்சேர்மத்தைக் கையாளவேண்டும். ஆய்வகங்களில் உரிய மேலாடை கையுறை, முகமுடி போன்ற பாதுகாப்பு சாதங்களைப் பயன்படுத்துவது ருபீடியம் ஐதராக்சைடின் எதிர்பாராத விபத்துகளில் இருந்து காப்பாற்றும்.
நீருள்ள குடுவையில் ருபீடியம் ஐதராக்சைடை மெல்ல மெல்ல கவனமாக ஊற்றுவதன் மூலம் நீர்த்த கரைசலாக அதை மாற்றலாம். மேலும் இச்சேர்மம் ஈடுபடும் வேதிவினைகள் வெப்ப உமிழ் வினைகளாக இருப்பதால் அதிக அளவு வெப்பம் வெளியிடப்படும் காரணத்தல் கலன்கள் வெடிக்க நேரிடும் என்பதையும் கவனத்திற்கொண்டு கரைசலை தேவையான எல்லைக்கு மேல் கொதிக்க விடுவதையும் தவிர்க்க வேண்டும்.
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lenk, Winfried; Prinz, Horst; Steinmetz, Anja (2005), "Rubidium and Rubidium Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a23_473.pub2
- "Rubidium hydroxide". ChemExper Chemical Directory : catalog of chemicals and suppliers. ChemExper. பார்க்கப்பட்ட நாள் 16 November 2011.