எங்க ராசி நல்ல ராசி
2009 திரைப்படம்
எங்க ராசி நல்ல ராசி (Enga Raasi Nalla Raasi) என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இரவி-ராஜா இரட்டையரால் இயக்கப்பட்ட இப்படமானது ஆர்.பி. பூரணியால் தயாரிக்கப்படது. இப்படத்தில் முரளி, விஸ்வா, ரீத்திமா, எஸ். வி. சேகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். இப்படத்திற்கு தேவா இசை அமைத்தார்.[1][2][3] இந்த படம் தெலுங்கு திரைப்படமான ஒக்க ராதா இத்தரு கிருஷ்ணல்லு பெல்லி (2003) என்ற படத்தின் மறு ஆக்கம் ஆகும். எங்க ராசி நல்ல ராசி எதிர்மறையான விமர்சனங்களுடன் வெளியானது.
எங்க ராசி நல்ல ராசி | |
---|---|
இயக்கம் | இரவி-இராஜா |
தயாரிப்பு | ஆர். பி. பூரணி |
கதை | இரவி-இராஜா (உரையாடல்) |
திரைக்கதை | இரவி-இராஜா |
இசை | தேவா |
நடிப்பு | முரளி விஷ்வா ரீத்திமா எஸ். வி. சேகர் |
ஒளிப்பதிவு | தயால் ஓஷோ |
படத்தொகுப்பு | ஏ. ஜோசப் |
கலையகம் | ஜி. ஆர். கோல்ட் பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 24, 2009 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- முரளி விஜயாக
- விஸ்வா விஸ்வாவாக
- ரீதிமா ஐஸ்வர்யா / மாலதி
- எஸ். வி. சேகர் சிவசங்கர்
- ஜி. இராமச்சந்திரன் விஜயின் தந்தை
- லிவிங்ஸ்டன் பாண்டியனாக
- சார்லி பாலாவாக
- சின்னி ஜெயந்த் பாலாவின் நண்பராக
- வினிதா சந்திரமுகியாக
- ஜெயரேகா
- கனகபிரியா
- பயில்வான் ரங்கநாதன்
- மோகன் ராமன் காவல் ஆய்வாளராக
- அபிநயசிறீ சிறப்புத் தோற்றத்தில்
இசை
தொகுஇத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார்.
எண். | தலைப்பு | பாடகர் (கள்) | பாடல் வரிகள் | நீளம் (மீ: கள்) |
---|---|---|---|---|
1 | "எந்த வருசம்" | செந்தில் தாஸ், ரேணுகா | முத்துமகன் | 04:25 |
2 | "நீ எதுக்கு" | அஷ்ரித், மாலதி லட்சுமன் | பொன்னியின்செல்வன் | 04:26 |
3 | "வய்யா வய்யா" | பிரசன்னா, சுசித்ரா | பிறைசூடன் | 04:29 |
4 | "வைரமுத்து வரிகளில்" | பிரசன்னா, கல்யாணி நாயர் | கருணாநிதி | 04:27 |
5 | "வைரமுத்து வரிகளில்" II | பிரசன்னா, கல்யாணி நாயர் | 04:25 |
குறிப்புகள்
தொகு- ↑ "Enga Rasi Nalla Rasi". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
- ↑ "Enga Rasi Nalla Rasi". nowrunning.com. Archived from the original on 2014-09-24. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.
- ↑ "Enga Rasi Nalla Rasi". indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 2014-09-19.