என்றி கர்னி பள்ளி
என்றி கர்னி பள்ளிகள் (ஆங்கிலம்: Henry Gurney Schools; மலாய்: Sekolah Henry Gurney) என்பது மலேசியாவில் இளம் குற்றவாளிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட சீர்த்திருத்தப் பள்ளிகள் ஆகும். மலேசியாவில் ஐந்து இடங்களில் இந்தப் பள்ளிகள் (மையங்கள்) உள்ளன.[1]
இந்த மையங்கள் சிறார் நீதிமன்றங்கள் சட்டம் 1947 [சட்டம் 90] (Juvenile Courts Act 1947 [Act 90]) கீழ் 1949-இல் நிறுவப்பட்டன. 15 மே 1950-க்கு முன்னர், இந்தப் பள்ளிகள் உயர் ஒழுக்கப் பள்ளிகள் என்று அழைக்கப்பட்டன.[1]
பொது
தொகுஇந்தப் பள்ளி 1949-இல் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. சிறார் ஆண்களுக்காக நிறுவப்பட்ட இந்தப் பள்ளி அதன் பெயரில் 3 முறை மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. 1949-இல் உயர் ஒழுக்கப்பள்ளி என்ற பெயரில் தொடங்கியது. 1950-இல் இளைஞர் பயிற்சிப் பள்ளி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மூன்றாவதாக 15 மே 1950-இல் என்றி கர்னி பள்ளி எனப் பெயர் மாற்றம் கண்டது.
என்றி கர்னி
தொகுசர் என்றி கர்னி (Sir Henry Lovell Goldsworthy Gurney) மலாயா கம்யூனிச சித்தாந்தங்களையும் தீவிரவாதத்தையும் முறியடித்த பிரித்தானிய ஆணையர் ஆவார். அவர் மலாயாவில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். மலாயா கம்யூனிச ஆதரவாளர்களை அழித்தே தீருவேன் என்று உறுதிபூண்டு போராடியவர்.[2][3]
ஆனால், இறுதியில் கம்யூனிச ஆதரவாளர்களால் 1951-ஆம் ஆண்டு பிரேசர் மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். சர் என்றி கர்னியின் கல்லறை கோலாலம்பூர் செராஸ் சாலையில் உள்ளது.[4]
என்றி கர்னி பள்ளிகள்
தொகு- என்றி கர்னி பள்ளி, பத்து காஜா, பேராக் (பெண்களுக்கான பள்ளி)
- என்றி கர்னி பள்ளி, தெலுக் மாஸ், மலாக்கா (இணை கல்வி)
- என்றி கர்னி பள்ளி, கோத்தா கினபாலு, சபா (பெண்களுக்கான பள்ளி)
- என்றி கர்னி பள்ளி புஞ்சாக் போர்னியோ, கூச்சிங், சரவாக் (ஆண்களுக்கான பள்ளி)
- என்றி கர்னி பள்ளி, கெனிங்காவு, சபா (ஆண்களுக்கான பள்ளி)
திட்டங்கள்
தொகுஇந்த மையங்களில் மறுவாழ்வுத் திட்டங்கள் நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன:
- அறிமுகத் திட்டம்
- புத்தொளி பயிற்சி
- நோக்குநிலை
- மதிப்பீடு
- சுய ஆளுமைத் திட்டம்
- ஆன்மீகத் தொகுதி
- கல்வித் தொகுதி
- ஆலோசனை தொகுதி
- விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு தொகுதி
- தொழில் பயிற்சி
- தையல்
- கைவினை
- பத்தீக் துணி நெய்தல்
- சமையல்
- வெளியாவதற்கு முன்னர் தயார்படுத்துதல்
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 "Sekolah Henry Gurney - As an institution established specifically to improve morals". www.prison.gov.my. பார்க்கப்பட்ட நாள் 24 April 2024.
- ↑ Text of telegram from Sir M.V.del Tufo,Chief Secretary,Federation of Malaya Govt. to Mr.Griffiths,Secretary of State for the Colonies. accessed 4 November 2013]
- ↑ "Guerrillas Murder High Commissioner In Malaya.". The Canberra Times (ACT : 1926 - 1995) (ACT: National Library of Australia): p. 1. 8 October 1951. http://nla.gov.au/nla.news-article2839310. பார்த்த நாள்: 4 November 2013.
- ↑ Slain British Officer Buried