கெனிங்காவு
கெனிங்காவு அல்லது கெனிங்காவ் என்பது (மலாய்: Pekan Keningau; ஆங்கிலம்: Keningau Town); மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, கெனிங்காவு மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபாவின் ஐந்தாவது பெரிய நகரம்; தாவாவ்; லகாட் டத்து ஆகிய நகரங்களுக்கு அடுத்தப் பெரிய நகரம். மேலும் பழைமையான நகரங்களில் ஒன்றாகும். [1]
கெனிங்காவ் நகரம் Keningau Town Pekan Keningau | |
---|---|
ஆள்கூறுகள்: 5°20′00″N 116°10′00″E / 5.33333°N 116.16667°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சபா |
பிரிவு | உட்பகுதி பிரிவு |
மாவட்டங்கள் | கெனிங்காவு மாவட்டம் |
நகராண்மைக் கழகம் | 1 சனவரி 2022 |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,73,130 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 89xxx0 to 89xx49 |
தொலைபேசி | +6-087 |
வாகனப் பதிவெண்கள் | SU NNNN |
மாநிலத் தலைநகர் கோத்தா கினபாலுவில் இருந்து 180 கி.மீ. தொலைவில் அமைந்து இருந்தாலும்; தம்புனான் - தெனோம் ஆகிய இரு பெரும் நகரங்களுக்கும் இடையில் இந்த நகரம் அமைந்து உள்ளது என்பது தான் மிக முக்கியமான புவியியல் கூறு. இந்த நகரத்தில் 173,130 மக்கள் தொகை இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.[1]
கெனிங்காவில் முக்கியமாக கடாசான், மூருட், சீனர்கள், பஜாவ் போன்ற மக்கள் வசிக்கின்றனர். பனை எண்ணெய்த் தோட்டங்களில் கணிசமான அளவிற்கு இந்தோனேசிய மக்கள் பணிபுரிகின்றனர். ஒரு காலத்தில் இலவங்கப்பட்டை மற்றும் வெப்பமண்டல மரங்களுக்கு பெயர் பெற்ற இடமாக விளங்கியது.[2]
சொல் பிறப்பியல்
தொகுகெனிங்காவு மாவட்டத்தின் உள்பகுதிகளில் ஏராளமான ஜாவானிய இலவங்கப் பட்டை (Cinnamomum burmannii) மரங்கள் இருந்தன. அந்த மரங்களில் இருந்து கெனிங்காவ் என்ற பெயர் பெறப்பட்டது. இந்த மரங்கள் உள்நாட்டில் கோனிங்கா என்று அழைக்கப் படுகின்றன. மலாய் மொழியில் 'காயூ மானிஸ்'.[2]
இந்த மரம் சில சமயங்களில் 'மசாலாப் பொருட்களின் ராஜா' என்றும் குறிப்பிடப் படுகிறது. அதன் பட்டைகள், பிரித்தானிய போர்னியோ நிறுவனத்தால் மசாலாப் பொருள்களாக விற்கப்பட்டன.[3]
வரலாறு
தொகு1893-ஆம் ஆண்டில் கெனிங்காவ் ஒரு சாதாரண நகரமாகத் தான், தன் தொடக்கத்தைத் தொடங்கியது. பிரித்தானிய வடக்கு போர்னியோ நிறுவனத்தார், கெனிங்காவில் ஒரு வணிக நிலையத்தையும்; பின்னர் ஒரு மாவட்ட அலுவலகத்தையும் அமைத்தனர்.
அந்தக் காலக் கட்டத்தில், கெனிங்காவில் இருந்து சேகரிக்கப்பட்ட இலவங்கப்பட்டை தெனோம் நகரில் இருந்து இரயில் வண்டி வழியாக ஜெசல்டன் (தற்சமயம்: கோத்தா கினபாலு) கொண்டு செல்லப்பட்டது. அங்கு இருந்து இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பப்பட்டது, பின்னர் அங்கு இருந்து ஐரோப்பா முழுவதும் விநியோகிக்கப்பட்டு சந்தைப் படுத்தப்பட்டது.[2]
ஜப்பானியர்கள் ஆட்சி
தொகுபிரித்தானியக் காலனித்துவ காலத்தில், பிரித்தானிய வடக்கு போர்னியோவின் மிக முக்கியமான நிர்வாக மையங்களில் ஒன்றாக கெனிங்காவ் நகரம் விளங்கியது.[2]
இரண்டாம் உலகப் போரின் போது, வடக்கு போர்னியோவை ஜப்பானியர்கள் ஆக்கிரமித்த காலக் கட்டத்தில், கெனிங்காவ் நகரத்தைத் தங்களின் முக்கிய நிர்வாக மையங்களில் ஒன்றாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
நகரப் பிரிவுகள்
தொகுகெனிங்காவ் 1
தொகுகெனிங்காவ் 1 (Keningau 1), கெனிங்காவ் நகருக்கு தெற்கே உள்ளது. சில வரலாற்று 'கடை வீடுகள்' கொண்ட துடிப்பான வணிக மாவட்டம்.
கெனிங்காவ் 2 புதிய நகரம்
தொகுகெனிங்காவ் 2 (Keningau 2), கெனிங்காவ் நகருக்கு வடக்கே அமைக்கப்பட்ட புதிய நகரம். இந்தப் புதிய நகரத்தில், புதிய கெனிங்காவ் மருத்துவமனை உள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் பள்ளிகளும் உள்ளன.
மக்கள்தொகை
தொகுஇனம் மற்றும் மதம்
தொகுகெனிங்காவ் மாவட்டத்தின் மக்கள் தொகை 2020-இல் 150,927 என மதிப்பிடப்பட்டு உள்ளது. மொத்தத்தில், 90% டூசுன் மற்றும் மூருட்; 8% சீனர்கள் என பிரிக்கப்பட்டு உள்ளனர்.[4]
மொழிகள்
தொகுசொந்த மொழிகளைத் தவிர, கெனிங்காவில் உள்ள பழங்குடிச் சபா இனத்தவர்கள் பெரும்பாலும் ஆங்கிலம், மலாய், மலாய் மொழி அடிப்படையிலான கிரியோல் மொழி பேசுகிறார்கள்.[4]
சீன இன மக்கள் தங்களுக்குள் சீன மொழி பேசுகிறார்கள். ஆனால் பழங்குடி இனத்தவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது மலாய் மொழி பேசுகிறார்கள்.
இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து குடியேறியவர்களில் பெரும்பாலானோர் தங்கள் தாய்மொழிகளுடன்; மலாய் மொழியையும் பேசுகின்றனர்.
காட்சியகம்
தொகு-
கெனிங்காவ் நகரம்
-
கெனிங்காவ் சாலை
-
கெனிங்காவ் நகரத்தில் இரட்டைப் பாதை
-
கெனிங்காவ் பிராந்திய நூலகம்
-
கெனிங்காவ் விளையாட்டு அரங்கம்
-
கெனிங்காவ் மருத்துவகம்
மேற்கோள்
தொகு- ↑ 1.0 1.1 "Daerah Sabah". www.coursehero.com/file/12081502/Daerah-Sabah. பார்க்கப்பட்ட நாள் 2020-02-26.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Keningau was named after koningau (cinnamon), a popular spice used by natives for their rituals and also cooking. Cinnamon from Keningau was much sought after in markets overseas". keningautheguide.com.my. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
- ↑ "Keningau in Sabah's interior is some 180 km from Kota Kinabalu and has a population of around 150,000, comprising mainly of Kadazandusun, Murut and Chinese, with some Bajau and a sizeable Indonesian population working in palm oil plantations; once famous for its cinnamon trees and abundance of tropical timber". www.flyingdusun.com. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
- ↑ 4.0 4.1 "Keningau (District, Malaysia) - The population development of Keningau as well as related information and services". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2 April 2022.
மேலும் காண்க
தொகு- இணையத்தளம்: www.sabah.gov.my/md.kgu www.sabah.gov.my/pd.kgu