என் மகன் (1974 திரைப்படம்)
1945 இல் இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றிய கட்டுரைக்கு என் மகன் (1945 திரைப்படம்)
என் மகன் | |
---|---|
சுவரிதழ் | |
இயக்கம் | சி. வி. இராசேந்திரன் |
தயாரிப்பு | கே. பாலாஜி |
திரைக்கதை | ஏ. எல். நாராயணன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் மஞ்சுளா |
ஒளிப்பதிவு | மஸ்தான் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
கலையகம் | சுஜாதா சினி ஆர்ட்ஸ் |
வெளியீடு | ஆகத்து 21, 1974 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
என் மகன் (En Magan) என்பது 1974 ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தை சி. வி. இராசேந்திரன் இயக்கினார்.[1] இதில் சிவாஜி கணேசன், மஞ்சுளா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடிக்க, அவர்களுடன் கே. பாலாஜி, மேஜர் சுந்தரராஜன், ஆர். எஸ். மனோகர், வி. எஸ். ராகவன், வி. கே. ராமசாமி மனோரமா ஆகியோர் துணை வேடங்களில் நடித்தனர்.[2] இது 1972 இல் வெளியான இந்தி படமான பீ-இமான் என்ற படத்தின் மறு ஆக்கமாகும்.[3] படம் 1974, ஆகத்து, 21 அன்று வெளியாகி, வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
நடிப்பு
தொகு- இராஜா என்கிற இராஜாராமன் மற்றும் ஏட்டு ராமையா தேவராக சிவாஜி கணேசன்
- இராதாவாக மஞ்சுளா
- ஜகதீசாக கே. பாலாஜி
- ஜகன்நாதனாக மேஜர் சுந்தரராஜன்
- பாஸ்கராக இரா. சு. மனோகர்
- டி.ஐ.ஜி. இராமநாதனாக வி. எஸ். ராகவன்
- ஈரோடரேயாவாக வி. கே. ராமசாமி
- நாமக்கலாக மனோரமா
- கமலாவாக ரோஜா ரமணி
- தங்கமாக காந்திமதி
- ஜம்புவாக டி. கே. இராமச்சந்திரன்
- செவ்வமாக அரிகிருஷ்ணன்
தயாரிப்பு
தொகுபடத்தின் இறுதி நீளம் 4,138.00 மீட்டர்கள் (13,576.12 அடி) என இருந்தது.[4]
பாடல்கள்
தொகுபடத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[5][6]
பாடல் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|
"நீங்கள் அத்தனை பேரும்" | டி. எம். சௌந்தரராஜன் | 03:41 |
"பொன்னுக்கென்ன அழகு" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 04:32 |
"நீங்கள் அத்தனை பேரும்" (சோகம்) | டி. எம். சௌந்தரராஜன் | 03:10 |
"சொல்லாதே சொல்லாதே" | எல். ஆர். ஈஸ்வரி | 04:06 |
"சோன் பப்பிடி" | டி. எம். சௌந்தரராஜன், கோவை சௌந்தரராஜன் | 04:30 |
வெளியீடும், வரவேற்பும்
தொகுஎன் மகன் 1974, ஆகத்து, 21 அன்று வெளியாகி,[7] வணிக ரீதியாக வெற்றி பெற்றது.[8] படத்தின் கதைக்கு என் மகன் என்ற தலைப்பு பொருந்தவில்லை என்றும், திருடன் என்ற தலைப்பு பொறுத்தமாக இருந்திருக்கும் என்று கல்கியின் கௌசிகன் குறிப்பிட்டார். அப்பா வேடத்தில் கம்பீரமாக நடித்த சிவாஜியின் நிடிப்பையும், நகைச்சுவையையும் பாராட்டிய அவர், சிவாஜியின் இரட்டை வேடங்களில் ராமையாவின் கதாபாத்திரம் ரசிகர்களைக் கவரும் என்று முடித்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "என் மகன்". கல்கி. 8 September 1974. p. 41. Archived from the original on 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.
- ↑ "171–180". nadigarthilagam.com. Archived from the original on 17 September 2014. பார்க்கப்பட்ட நாள் 21 August 2014.
- ↑ 3.0 3.1 கெளசிகன் (29 September 1974). "என் மகன்". Kalki. p. 27. Archived from the original on 27 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 4 January 2022.
{{cite magazine}}
: Check date values in:|archive-date=
(help)கெளசிகன் (29 September 1974). . Kalki (in Tamil). p. 27. Archived from the original பரணிடப்பட்டது 2022-07-27 at Archive.today on 27 July 2022. Retrieved 4 January 2022. - ↑ "En Magan (Tamil)". இந்திய அரசிதழ். 20 December 1975. p. 2496. Archived from the original on 13 November 2023. பார்க்கப்பட்ட நாள் 13 November 2023 – via இணைய ஆவணகம்.
- ↑ "En Magan". JioSaavn. 31 December 1974. Archived from the original on 28 September 2021. பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
- ↑ "En Magan Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Macsendisk. Archived from the original on 24 August 2022. பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 27 January 2013. பார்க்கப்பட்ட நாள் 29 March 2023.
- ↑ "சிவாஜp – பாலாஜp கூட்டணியில் உருவான காவியங்கள்". தினகரன் (இலங்கை). 4 December 2011. Archived from the original on 24 August 2022. பார்க்கப்பட்ட நாள் 24 August 2022.