எம்மா ராபர்ட்ஸ்
அமெரிக்க நடிகை (பிறப்பு 1991)
எம்மா ரோஸ் ராபர்ட்ஸ் (பிறப்பு: 10 பெப்ரவரி 1991) என்பவர் அமெரிக்க நடிகரும் பாடகரும் ஆவார்.[1] இவர் இளம் கலைஞர் விருது, எம் டிவி திரைப்படம் & தொலைக்காட்சி விருது, ஷோவெஸ்ட் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
எம்மா ராபர்ட்ஸ் | |
---|---|
2016 சான் டியேகோ காமிக்-கானில் ராபர்ட்ஸ் | |
பிறப்பு | எம்மா ரோஸ் ராபர்ட்ஸ் பெப்ரவரி 10, 1991 ரைன்பெக், நியூ யோர்க, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
பணி | நடிகர் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001 முதல் தற்போது வரை |
பெற்றோர் |
|
துணைவர் | இவான் பீட்டர்ஸ் (2012–2019) காரெட் ஹெட்லண்டின் (2019–2022) |
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் |
|
2001இல் ப்ளோ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நடிகராக அறிமுகமானார். பிறகு நிக்கலோடியன் தொலைக்காட்சியில் வெளியான அன்ஃபேபுலஸ் என்ற நாடகத்தொடரின் மூலம் பரவலாக அறியப்பட்டார். 2013 முதல் வெளியாகும் அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி மற்றும் 2015-16இல் வெளியான ஸ்க்ரீம் க்வீன்ஸ் தொடர்களால் மேலும் புகழடைந்தார்.[2]
குறிப்பிடத்தக்க பணிகள்
தொகுநடிகர்
தொகுதிரைப்படங்கள்
தொகுஆண்டு | பெயர் | பாத்திரம் |
---|---|---|
2001 | ப்ளோ | கிரிஸ்ட்டீனா சன்ஷைன் ஜங் |
2002 | கிராண்ட் சாம்பியன் | தங்கை |
2006 | ஸ்ப்பைமேட் | அமெலியா ஜக்கின்ஸ் |
2007 | நான்சி ட்ரூ | நான்சி ட்ரூ |
2008 | வைல்ட் சைல்டு | பாப்பி மூர் |
2009 | ஹோட்டல் ஃபார் டாக்ஸ் | ஏண்டி |
2010 | வேலண்ட்டைன்ஸ் டே | க்ரே ஸ்மார்ட் |
2010 | 4.3.2.1 | ஜேன் |
2011 | ஸ்க்ரீம் 4 | ஜில் ராபர்ட்ஸ் |
2013 | அடல்ட் வேர்ல்ட் | ஏமி ஏண்டர்சன் |
2013 | வி ஆர் தி மில்லர்ஸ் | கேசி மேத்திஸ்/ கேசி மில்லர் |
2015 | ஐ அம் மைக்கேல் | ரெபேக்கா ஃபுல்லர் |
2016 | நேர்வ் | வீனஸ் வீ |
2018 | இன் ஏ ரிலேஷன்ஷிப் | ஹேலி |
2019 | பேரடைஸ் ஹில்ஸ் | உமா |
2020 | ஹாலிடேட் | ஸ்லேன் பென்சென் |
தொலைக்காட்சி
தொகுஆண்டு | பெயர் | பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|
2004 - 2007 | அன்ஃபேபுலஸ் | ஆடி சிங்கர் | முக்கிய பாத்திரத்தில் 41 எபிசோடுகளில் நடித்தார் |
2004 | ட்ரேக் அண்ட் ஜாஷ் | ஆடி சிங்கர் | 1 எபிசோடில் தொடர் சங்கமத்தில் நடித்தார். |
2013 - 2014 | அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி | மேடிசன் மோண்ட்கோமெரி | கவன் என்ற சீசனில் 13 எபிசோடுகள் நடித்தார் |
2014 - 2015 | அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி | மேகி எஸ்மெரெல்டா | ஃப்ரீக் ஷோ என்ற சீசனில் 11 எபிசோடுகள் நடித்தார் |
2015 - 2016 | ஸ்க்ரீம் க்வீன்ஸ் | சேனல் ஓபர்லின் | முக்கியப் பாத்திரத்தில் 23 எபிசோடுகள் நடித்தார் |
2017 | அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி | சேரேனா பெலிண்டா | கல்ட் என்ற சீசனில் 1 எபிசோடில் நடித்தார் |
2018 | அமெரிக்கன் ஹாரர் ஸ்ட்டோரி | மேடிசன் மோண்ட்கோமெரி | அப்போகேலிப்ஸ் என்ற சீசனில் 7 எபிசோடுகள் நடித்தார் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "எம்மா ராபர்ட்ஸ் - பயோகிராஃபி டாட்காம் பக்கம் (ஆங்கிலம்)". Archived from the original on 2016-10-09. பார்க்கப்பட்ட நாள் 2021-03-01.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Ginsberg, Merle (September 25, 2019). "Scream Queen Emma Roberts Is Afraid of Everything." பரணிடப்பட்டது சூன் 26, 2020 at the வந்தவழி இயந்திரம் LAmag.com. Retrieved November 23, 2020.