ம. நடராசன்

எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி
(எம். நடராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மருதப்பன் நடராசன் (23 அக்டோபர் 1943 – 20 மார்ச்சு 2018)[1] என்பவர் புதிய பார்வை இதழின் ஆசிரியரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மனைவி வி. கே. சசிகலா ஆவார். 1967ஆம் ஆண்டு மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் பங்கேற்றார். பிறகு திமுகவில் இணைந்தார். தெற்கு ஆற்காடு மாவட்டத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். ஜெயலலிதா-சசிகலா நட்பு உருவாக அடிப்படைக் காரணம் இவர்தான். அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரலேகாவின் உற்ற நண்பராக இருந்தார்.

ம. நடராசன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மருதப்பன். நடராசன்

(1943-10-23)23 அக்டோபர் 1943
விளார், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்புமார்ச்சு 20, 2018(2018-03-20) (அகவை 74)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிமுக (1965–1980)
அதிமுக (1980–2018)
துணைவர்வி. கே. சசிகலா
பெற்றோர்தந்தை : மருதப்பன் மண்ணையார்
தாயார் : மாரியம்மாள்
வாழிடம்(s)சென்னை, தமிழ்நாடு
வேலைஅரசியல்வாதி, இதழாசிரியர்

பிறப்பும் படிப்பும்

தொகு

நடராசன் தஞ்சாவூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள விளார் என்ற ஊரில் மருதப்பன் மண்ணையார்-மாரியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ராமசந்திரன், பழநிவேல் என்ற இரண்டு இளைய சகோதரர்கள் உள்ளனர்.[2] தனது பள்ளிப் படிப்பை தஞ்சை தூய அந்தோணியார் பள்ளியிலும், இளங்கலைப் படிப்பை தஞ்சை மன்னர் சரபோசிக் கல்லூரியிலும், முதுகலைப் படிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.

அரசியல் பணிகள்

தொகு
  • இவரது முதல் அரசியல் களப்பணியானது. 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டதில் கல்லூரி மாணவராக இருந்தபோது தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அன்றைய திமுகவை சேர்ந்த எல். கணேசன் அவர்களின் வழிகாட்டுதலில் மாணவர்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்று செயல்படுத்தினார்.
  • இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட பல போராளிகளுக்கு திமுக ஆட்சிக்கு வந்த 1967 இல் முதல்வர் அண்ணாதுரை தலைமையில் அனைவருக்கும் அரசுப் பணிகள் வழங்கப்பட்ட நிலையில் நடராசனுக்கும் அரசு வேலை வழங்கப்பட்டது. 1970க்கு காலகட்டத்தில் திமுக ஆட்சியில் முதல்வர் மு. கருணாநிதியால் நடராசனுக்கு மக்கள் தொடர்பு அதிகாரியாக பணி உயர்வு வழங்கப்பட்டது.
  • அதே காலகட்டத்தில் அன்றைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் நடராசன்–சசிகலா சுயமரியாதை திருமணமாக நடைபெற்றது.
  • 1975–1977 காலகட்டத்தில் திமுகவில் முதல்வர் மு. கருணாநிதி தலைமையில் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி கொண்டு வந்த நெருக்கடி நிலையை எதிர்த்து போராடியதால் அவரது அரசு வேலை பறிக்கப்பட்டது.
  • பின்பு 1980 நாடாளுமன்றத் தேர்தலில் நெருக்கடி நிலை போராட்டத்திற்கு காரணமாக இருந்த இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரசுடன் திமுக–காங்கிரசு கூட்டணி சேர்ந்ததால் அதனை எதிர்த்து நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் பலரும் திமுகவிலிருந்து வெளியேறி அன்றைய முதல்வர் எம். ஜி. ஆர் தலைமையிலான அதிமுகவில் இணைந்த போது ம.நடராசனும் நாவலர் வழியில் அதிமுகவில் இணைந்து கொண்டார்.
  • அதன் பிறகு முன்பு இழந்த மக்கள் தொடர்பு அதிகாரி அரசுப் பணியை பல சட்டப்போராட்டங்கள் நடத்தி மீண்டும் அவ்வேலையை 1982 ஆம் ஆண்டு பெற்றார்.
  • பின்பு நடராசன் "மக்கள் தொடர்பு அதிகாரி"யாக கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவிடம் இருந்த போது தான் செயலலிதாவிடம் அறிமுகம் கிடைத்தது.
  • அந்த சந்திப்பிற்கு பிறகே நடராசனின் மனைவி சசிகலா–செயலலிதா நட்புறவு மேம்பட்டு தோழியானார்கள்.
  • 1989 சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
  • அவர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த நடராசன் மீதும் தொடக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நடராசன் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதம் கிடைத்தது.

ஈழ ஆதரவு

தொகு

பின்பு புதிய பார்வை என்ற இதழைத் தொடங்கினார். ஈழத் தமிழர்களின் படுகொலைகளையும் பட்ட அவலங்களையும் நினைவுகூரும் வகையில் விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் என்னும் பெரிய கூடத்தை நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் கலை இலக்கிய விழாவை பொங்கல் விழாவின் போது நடத்தி வந்தார். ஈழப்போர் பற்றிய ஒரு நூலை எழுதினார்.

மறைவு

தொகு

பல மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நடராஜன் 2018 மார்ச் 20 அன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் சென்னை குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்தார்.[3][4]

மேற்கோள்கள்

தொகு
  1. "நடராசன் மரணம் - பரோலில் வருகிறார் சசிகலா..!".
  2. "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்". தினத்தந்தி.
  3. சசிகலாவின் கணவர் நடராசன் காலமானார்!
  4. நடராசன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._நடராசன்&oldid=3926718" இலிருந்து மீள்விக்கப்பட்டது