எஸ். கே. மிஸ்ரா

எஸ்.கே. மிஸ்ரா (S. K. Misra) (பிறப்பு 1932) இவர் ஒரு ஓய்வுபெற்ற இந்திய அரசு ஊழியரும், சமூக சேவகரும், எழுத்தாளரும் மற்றும் இந்தியாவின் 8 வது பிரதம மந்திரியான சந்திர சேகரின் முன்னாள் முதன்மை செயலாளரும் ஆவார்.[1] அரியானாவின் மூன்று முதலமைச்சர்களின் முதன்மை செயலாளராக பணியாற்றிய இவர் சுற்றுலா, பொது விமானப் போக்குவரத்து மற்றும் வேளாண் அமைச்சகங்களில் முன்னாள் செயலாளராகவும் உள்ளார்.[2] இராய் என்ற இடத்திலுள்ள மோதிலால் நேரு விளையாட்டுப் பள்ளிகளின் நிறுவனர்களில் ஒருவரான இவர், கிராமப்புற பாரம்பரியம் மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய அறக்கட்டளையின் நிறுவனர் தலைவரும் ஆவார்.[3] இந்திய ஆட்சிப் பணியில் இவர் செய்த பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமக்கள் கௌரவமான பத்ம பூசண் விருது இந்திய அரசு இவருக்கு வழங்கியது.[4]

சுயசரிதை தொகு

1932 இல் இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பிறந்த மிஸ்ரா, அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1956 இல் இந்திய ஆட்சிப் பணியில் சேருவதற்கு முன்பு தான் படித்தப் பள்ளையில் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[5] இவரது ஆட்சிப் பணி பாட்டியாலா மற்றும் கிழக்கு பஞ்சாப் பகுதிகள் ஒன்றியம் மற்றும் கிழக்கு பஞ்சாப் மாநில ஒன்றியத்தில் ஒரு இடுகையுடன் தொடங்கியது. பின்னர் இவர் துணை ஆணையராக ஹிசார் சென்றார். 1968 இல் பன்சி லால் ஹரியானாவின் மூன்றாவது முதல்வரானபோது, மிஸ்ரா அவரது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் 1975 வரை அந்தப் பதவியில் இருந்தார்.[6] இவர் பாதுகாப்பு அமைச்சராக மத்திய அரசுக்கு சென்றபோது, பன்சி லால் மிஸ்ராவை முதன்மை செயலாளராக தொடர அழைத்துக் கொண்டார்.[2] முதன்மை செயலாளராக இவரது இரண்டாவது பதவிக்காலம் 1979 முதல் 1985 வரை மாநில முதல்வராக இருந்த பஜன் லாலுடன் இருந்தது. பஜன் லால் இரண்டாவது முறையாக முதலமைச்சராக (1985-87) பன்சி லாலுடனான இவரது தொடர்பும் தொடர்ந்தது. இவருக்குப் பின் வந்த முதல்வர் சவுத்ரி தேவி லால் மிஸ்ராவை அவரது முதன்மை செயலாளராக தக்க வைத்துக் கொண்டார். இந்த காலகட்டத்தில் தான், பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம், லூதியானா மற்றும் ஹிசார் [7] மற்றும் தேசிய தேசிய உடையலங்கார தொழில்நுட்ப நிறுவனத்தை அமைப்பதில் பங்களித்தார்.[8] மிஸ்ரா அந்தப் பதவியில் இருந்தபோது, 1990 ல் இந்தியாவின் பிரதமரான சந்திர சேகர் இவரை முதன்மைச் செயலாளர் பதவி வழங்கினார். இவர் அந்தப் பதவியை வகித்து ஆட்சிப்பனியில் இருந்து உயர்ந்தார்.[9]

ஆட்சிப் பணியிலிருந்து இருந்து ஓய்வு பெற்ற பின்னர், மிஸ்ரா ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணைத்துடன் ஒரு குறுகிய காலம் பணியிலிருந்தார். பின்னர் இந்தியத் திருவிழா நிறுவனத்தில் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இது பிரான்ஸ், அமெரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற கலாச்சார விழாக்களை ஒருங்கிணைத்தது.[9] அதேசமயம், இந்திரா காந்தியால் கருத்தாக்கம் செய்யப்பட்டு 1984 ஆம் ஆண்டில் புபுல் செயகரால் நிறுவப்பட்ட ஒரு கலாச்சார மன்றம் , கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையுடன் (இன்டாக்) இவர் தொடர்பு கொண்டிருந்தார். மேலும் இந்த அமைப்பை அதன் துணைத் தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றினார். அடுத்த 6 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் . 2010 ஆம் ஆண்டில் அதிலிருந்து இவர் விலகினார், 2011 ஆம் ஆண்டில் கிராமப்புற பாரம்பரியம் மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய அறக்கட்டளை [10] என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்வியில் ஈடுபட்டுள்ளது; இங்கிலாந்தின் லுடியன்ஸ் அறக்கட்டளயுடன் இணைந்து,[11] அவர்கள் உத்தரபிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தில் ஹரிஹார்பூரில் ஒரு கிராமப் பள்ளியை நடத்தி வருகின்றனர்.[12] சோனிபத்தில் அமைந்துள்ள அரியானா அரசாங்கத்தின் கீழ் இணை கல்வி நிறுவனமான ராய் என்ற மோட்டிலால் நேரு விளையாட்டுப் பள்ளியை நிறுவியதிலும் இவரது பங்களிப்புகள் இருந்தது.[3] 2009 ஆம் ஆண்டில் இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் கௌ|ரவத்தை வழங்கியது.[4]

மேற்கோள்கள் தொகு

  1. "S K Misra's memoirs released 1". 13 June 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2016.
  2. 2.0 2.1 "Flying in High Winds on FPJ". Free Press Journal. 8 May 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2016.
  3. 3.0 3.1 "S. K. Misra on TNU". The Neotia University. 2016. Archived from the original on 15 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. 4.0 4.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  5. "Where The Wind Blows". 21 May 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2016.
  6. "In past, bureaucracy didnt fear speaking up". India Today. 13 April 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2016.
  7. "S K Misra's memoirs released". 13 June 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
  8. "The Book in my Hand". 24 April 2014. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
  9. 9.0 9.1 "Bio Data of S. K. Misra" (PDF). Inter-Corp. 2016. பார்க்கப்பட்ட நாள் 26 June 2016.
  10. "India's heritage to propel growth of rural economy". 21 July 2011. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
  11. "ITRHD New Primary School for Deprived Girls and Boys". Lyutens Trust. 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
  12. "Azamgarh's Weaves and Melodies". 4 April 2013. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._கே._மிஸ்ரா&oldid=3928253" இலிருந்து மீள்விக்கப்பட்டது