ஏ. ஆர். பிள்ளை

ஏ. இராமன் பிள்ளை ((Ayyappan Pillai Raman Pillai)) ஏ. ஆர். பிள்ளை எனவும் அய்யப்பன் பிள்ளை இராமன் பிள்ளை எனவும் அறியப்படும் இவர் (26 டிசம்பர் 1879–7 செப்டம்பர் 1938), வெளிநாடு வாழ் இந்தியராவார். இவர், ஜெர்மனியில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பணியாற்றியனார். இவர், ஒரு பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும், ஜெர்மனியின் கோட்டிங்கன் நகரில் ஒரு புத்தக வெளியீட்டாளராகவும் இருந்தார்.

வெளிநாட் இந்தியரான ஏ.ஆர் பிள்ளை

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

பிள்ளை 1879 டிசம்பர் 26 அன்று, அப்போதைய தெற்கு திருவிதாங்கூரைச் சேர்ந்த ஒரு அரசுப் பள்ளி ஆய்வாளரான பத்மநாப பிள்ளை என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரிகள் இருந்தனர். இவரது தாயார், புகழ்பெற்ற ஈஸ்வர பிள்ளை விச்சாரிப்புகரின் மருமகள் நாராயணி பிள்ளை காளியம்மா பிள்ளை ஆவார். ஒரு பிரபுத்துவ மற்றும் வசதியான இந்து (நாயர்) திருமண / திருமண கூட்டுக் குடும்பத்தில் உறுப்பினராக இருந்தார். திருவனந்தபுரம் கோட்டையின் உள்ளே பத்மநாபசுவாமி கோயிலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள புன்னக்கல் எனப்படும் பெரிய கட்டிடங்களில் இந்த குடும்பம் வசித்து வந்தது. [1]

பிள்ளை ஒரு சமூக ஆர்வலராக இருந்தார், மேலும் ச. வே. இராமன் பிள்ளை போன்ற இலக்கியவாதிகளுடனும், நகரின் சமூக-கலாச்சார உயரடுக்கு சம்பந்தப்பட்ட கலாச்சார நடவடிக்கைகளுடன் இணைந்து தனது சமூக சமூகங்களிடையே பல சமூக செயல்பாடுகளை ஒழுங்கமைக்கப் பணியாற்றினார். திருவனந்தபுரத்தில் முதல் அனைத்து கேரள நாயர் மகா சம்மேளனத்தை கூட்டி ஏற்பாடு செய்வதில் இவர் தீவிரமாக பங்கேற்றார். இவர் பேரரசின் ஆசிய அமைப்பின் உறுப்பினராகவும் ஆனார்

 
1905இல் பிள்ளை

பிள்ளை, உயர்நிலைக் கல்விக்குப் பிறகு தனது படிப்பைக் கைவிட்டு, புத்தக விற்பனையை ஒரு தொழிலாக எடுத்துக் கொண்டார். [2] திருவனந்தபுரத்திலேயே முதலாவதாக ஒரு ஆங்கில புத்தகக் கடையை அமைத்தார். இங்கிலாந்தில் உள்ள பிளாக்கீஸ் & கோ, லாங்மேன்ஸ், கிரீன் & கோ போன்ற வெளியீட்டாளர்களிடமிருந்தும், கின்னரப்பெட்டி, வயலின், செலோ போன்ற மேற்கத்திய இசைக் கருவிகள் சார்பான ஆங்கில புத்தகங்களையும் இறக்குமதி செய்தார். இங்கிலாந்திலிருந்து பிள்ளை இறக்குமதி செய்த ஏராளமான ஆங்கில புத்தகங்களை மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகங்களின் பட்டியலில் சேர்க்க திருவிதாங்கூர் அரசாங்கம் முற்றிலும் மறுத்துவிட்டது. இதன் விளைவாக, பிள்ளை கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொண்டு தனது புத்தகக் கடையை மூட வேண்டியிருந்தது.

குடும்பம் தொகு

சமூக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் குறிப்பிடத்தக்க இளைஞராக வளர்ந்த இவர், மலையாள புதின ஆசிரியர் ச. வே. இராமன்பிள்ளையின் மகளான கௌரி அம்மா என்பவரை 1904 இல் திருமணம் செய்து கொண்டார். [3]

ஐரோப்பாவில் தொகு

பின்னர், உயர் படிப்பைத் தொடரவும், சிறந்த வேலைவாய்ப்பைப் பெறவும் முடிவு செய்தார். மே 1909 இல் ஐரோப்பாவுக்குச் சென்ற இவர், எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் வனவியல் துறையில் நான்காண்டு பட்டப்படிபை முடித்தார். [4] பின்னர், வனவியல் பாடத்தின் ஒரு பகுதியாக கறுப்பு வனப்பகுதியில் ஒரு வேலைத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக அக்டோபர் 1913 இல் ஜெர்மனிக்குச் சென்றார். எட்டு மாதங்கள் கறுப்பு வனத்தில் கழித்தார். பின்னர் ஏப்ரல் 1914இல் கோட்டிங்கனுக்குச் சென்று ஜார்ஜ்-ஆகஸ்ட்-பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். இந்த நேரத்தில் முதலாம் உலகப் போர்வெடித்தது. இதனால் தனது படிப்பை பாதியில் விட்டு திருவனந்தபுரம் திருபினார். [5]

இந்திய சுதந்திரக் குழு தொகு

பின்னர், வீரேந்திரநாத் சட்டோபாத்யாய, சரோஜினி நாயுடுவின்]சகோதரன் பூபேந்திரநாத் தத்தர், விவேகானந்தரின் தம்பியான நரேந்திரநாத் தத்தா, எம் பிரபாகர், ராஜா மகேந்திர பிரதாப், செண்பகராமன் பிள்ளை உள்ளிட்ட சில இந்தியர்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டார். [6] பிள்ளை அவர்களுடன் சேர்ந்து ஜெர்மனி அரசாங்கத்தால் பிரித்தன் குடிமக்கள் என்ற அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டனர். எவ்வாறாயினும், வீரேந்திரநாத் சட்டோபாத்யாயாவின் தலைமையில் பெர்லினில் இந்திய சுதந்திரக் குழுவை அங்குள்ள சில இந்தியர்கள் ஒன்றாக உருவாக்கியபோது அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். [7] இந்திய சுதந்திரக் குழுவின் வேண்டுகோளின் பேரில், பிள்ளை பிரித்தனியப் பேரரசின் ஏகாதிபத்தியத்தைக் கண்டித்து கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். மேலும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கும் ஆதரவளித்தார். [8]

இந்தியா திரும்புதல் தொகு

தனது நிறுவனத்தின் ஜெர்மன் பங்குதாரர்கள் சிலர் வெளியேறினர். அதன்பிறகு "ஏ.இராமன் பிள்ளை எக்ஸ்போர்ட்-புச்சண்ட்லுங், கோட்டிங்கன்" என்ற மற்றொரு நிறுவனத்தை நிறுவி, உலகெங்கிலுமுள்ள வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களிடமிருந்து புத்தகங்களை இறக்குமதி செய்தார். மேலும் ஜெர்மன் மொழியில் புத்தகங்களையும் வெளியிட்டார். ஆனாலும் இந்த நிறுவனமும் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்த போது இவரது மாமனார். ச. வே. இராமன் பிள்ளை இவரை மீண்டும் இந்தியாவுக்கு வரும்படி கேட்டுக்கொண்டார். இந்தியாவில் உள்ளூர் அரசியலில் ஈடுபடக்கூடாது என்றும், ஜெர்மனியுடன் இனி தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் உறுதியளித்த பின்னர் தனது நிறுவனத்தை விட்டுக்கொடுத்துவிட்டு, பிரிட்டிசாரிடமிருந்து புதிய கடவுச்சீட்டைப் பெற்ற பின்னர், 21 மார்ச் 1922 இல் தனது மாமனார் இறந்து ஆறு மாதம் கழித்து இந்தியா திரும்பினார்.

வெளிநாடுகளில் 18 ஆண்டுகள் வாழ்ந்த பிறகு 1926 அக்டோபரில் கொழும்பு வழியாக திருவனந்தபுரம் திரும்பியபோதும், பிள்ளை சிலகாலம் ஆங்கிலேய அரசால் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

பின்னர், திருவனந்தபுரத்தில் தனது சமூக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கினார். இவர் 1934இல் அகில இந்திய கண்காட்சி, பொழுதுபோக்கு பூங்கா, சித்ரா கண்காட்சிகள் போன்றவற்றின் நிர்வாகியாக இருந்தார். பின்னர் இவர் படிப்படியாக திருவனந்தபுரத்தில் தனது சொந்த வணிக நிறுவனத்தைத் தொடங்கும் நோக்கில் ஜெர்மனி மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் உள்ள பிரபல ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் பிற வணிக நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார். தென்னிந்தியாவின் முதல் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை விற்பனை செய்வதற்கான ஒரு நிறுவனத்தை பிள்ளை ஆரம்பித்தார். ஆனால் அதற்கு முன்பு, இரண்டாம் உலகப் போர் வெடிப்பதற்கு ஒரு வருடம் முன்பு 7 செப்டம்பர் 1938 அன்று தனது 58 வயதில் இறந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Iyer, Ulloor S. Parameswara (1974). Kerala Saahitya Charitram. Thiruvananthapuram: University of Kerala. பக். 28. 
  2. Pillai, E.V. Krishna (1978). EV Krithikal. Kottayam: D.C Books. பக். 691. 
  3. Pillai, K. Bhaskara (1998). Swadesabhimaani- A biography in Malayalam. Department of Cultural Publications, Govt. of Kerala. 
  4. Nair, Guptan (1992). C.V. Raman Pillai. New Delhi: Sahitya Akademi. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7201-273-X. https://books.google.com/books?id=rr20K3WL-qgC&pg=PA24. 
  5. Nair, Guptan (1992). C.V. Raman Pillai. New Delhi: Sahitya Akademi. பக். 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7201-273-X. https://books.google.com/books?id=rr20K3WL-qgC&pg=PA24. 
  6. Chempakaraman Pillai
  7. Unpublished letter in the archives of Rosscote Krishna Pillai
  8. Unpublished letter in the archives of Rosscote Krishna Pillai

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._ஆர்._பிள்ளை&oldid=3160608" இலிருந்து மீள்விக்கப்பட்டது