இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகம்

(ஐஐபிஎம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகம்அல்லது ஐஐபிஎம் (Indian Institute of Planning and Management, IIPM) புதுதில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இந்தியாவெங்கும் 18 கிளைகளைக் கொண்ட தனியார் மேலாண்மை பள்ளி ஆகும். மலேயேந்திர கிசோர் சௌத்திரியால் 1973இல் துவங்கப்பட்ட இந்நிறுவனம் தேசிய பொருளியல் திட்டமிடல், தொழில் முனைவு ஆகியத் துறைகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் முனைவர் கல்வித்திட்டங்களை வழங்கி வருகிறது.[1][2] ஊழியர் கல்வித் திட்டங்களில் பதிவுறா கல்வியும் வெளிநாட்டு மேலாண்மைப் பள்ளிகளுக்கு சுற்றுலாவும் இடம் பெறுகிறது.[3][4] கடந்த காலங்களில் தான் வெளியிட்ட விளம்பரங்களால் ஐஐபிஎம் சர்ச்சைகளுக்கு உள்ளானது. 2011இல், ஐஐபிஎம் இந்தியாவில் 5வது சிறந்த வணிகப் பள்ளியாக தரவரிசையில் இடம் பெற்றது.[5][6]

இந்தியத் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக் கழகம்
குறிக்கோளுரைஇன்று நாங்கள் கற்பிப்பதை பிறர் நாளை பின்பற்றுவர்
வகைதனியார் மேலாண்மை பள்ளி
துறைத்தலைவர்அரிந்தம் சௌத்திரி (கௌரவ தலைவர்)
பணிப்பாளர்மலேயேந்திர கிசோர் சௌத்திரி
பட்ட மாணவர்கள்600
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்4500
அமைவிடம்
புதுதில்லி
, ,
வளாகம்புதுதில்லி
இணையதளம்IIPM.edu

இந்தியாவில் பல்கலைக்கழக கல்வியின் சீர்தரத்திற்கு பொறுப்பான அரசு அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு, ஐஐபிஎம் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்ல எனவும் இதன் தொழினுட்ப கல்வித்திட்டங்கள் செல்லுபடியாகாதெனவும் அடிக்கடி பொது அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.[7] இதற்கு எதிர்வினையாக ஐஐபிஎம் தான் பட்டம் எதுவும் வழங்குவதில்லை எனவும் தன்னை பல்கலைக்கழகம் என்று கூறிக்கொள்வதில்லை என்றும் அறிக்கை விட்டுள்ளது.[8]

ஐஐபிஎம் வளாகம், புதுதில்லி

தற்போது இக்கல்வி நிறுவனம் 18 கிளைகளை நிறுவியுள்ளது: குர்காவுன், நொய்டா, பெங்களூரு, சென்னை, அகமதாபாத், கொல்கத்தா, சண்டிகர், ஐதராபாது, புனே, இலக்னோ, இந்தூர், புவனேசுவர், போபால், ஜெய்ப்பூர், தேராதூன், மற்றும் கொச்சி.[9]

இதன் நிறுவன இயக்குநராக முனைவர். எம். கே. சௌத்திரியும் கௌரவ துறைத்தலைவராக இவரது மகன் அரிந்தம் சௌத்திரியும் பொறுப்பேற்றுள்ளனர்.[10]

சான்றுகோள்கள்

தொகு
  1. Retrieved 20 June 2010 from the original 7 April 2010 Pioneer newspaper article, broken link here http://www.dailypioneer.com/247366/IIPM-An-intriguing-story-of-growth-and-envy.html
  2. Partner Universities IIPM web site, partner universities பரணிடப்பட்டது 2013-04-01 at the வந்தவழி இயந்திரம். Retrieved 4 July 2012
  3. CNN Executive Education Asia schools. Retrieved 20 June 2010
  4. http://www.darden.virginia.edu/uploadedFiles/Navigate_Darden/Darden_Around_the_Globe/Darden_Indian_Alumni_Chapter_Newsletter_Jan_2009_02-20.pdf பரணிடப்பட்டது 2010-06-10 at the வந்தவழி இயந்திரம் retrievedon 22 March 2010
  5. Zee Business Best B School Survey Results, 2011, Zee Business
  6. "News brief - Hindustan Times". Archived from the original on 2013-04-11. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. http://indiatoday.intoday.in/story/ugc-aicte-corrupt-iipm-arindam-chaudhuri-web-pages/1/250580.html
  8. http://www.business-standard.com/article/management/iipm-dares-to-take-on-the-regulators-113022300309_1.html
  9. "IIPM branches". IIPM.
  10. "IIPM History". Archived from the original on 2013-03-02. பார்க்கப்பட்ட நாள் 2013-02-28.

வெளி இணைப்புக்கள்

தொகு