ஐதராபாத்து (இந்தியா)

இது ஆந்திர மாநிலத்தின் தலைநகரம் மற்றும் தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மாநகராட்சி ஆக
(ஐதரபாது, இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐதராபாத் (ஆங்கில மொழி: Hyderabad, தெலுங்கு: హైదరాబాద్, உருது: حیدرآباد‎) தென்னிந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரமும், ஆந்திரா மாநிலத்தின் உரிமைப்படியான தலைநகரமும் ஆகும். இந்நகரம் "முத்துக்களின் நகரம்" என்றும் நிஜாம்களின் நகரம் என்றும் புகழ்பெற்றது.

ஐதராபாத்
హైదరాబాద్
حیدرآباد
மாநகராட்சி
ஐதராபாத் நகரப் படங்கள்
மேல் இடப்பக்க மூலையில் இருந்து: சார்மினார், நவீன வான்வரை, உசேன் சாகர், கோல்கொண்டா, சௌமாலா அரண்மனை, பிர்லா மந்திர்
அடைபெயர்(கள்): முத்துக்களின் நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தெலுங்கானா
பிரிவுதென்னிந்தியா, தக்காணப் பீடபூமி
மாவட்டங்கள்ஐதராபாது, ரங்காரெட்டி, மேதக்
நிறுவல்பொ.ஊ. 1591
தோற்றுவித்தவர்முகம்மது குலி குட்பு ஷா
அரசு
 • வகைமேயர்-ஆட்சி
 • நிர்வாகம்ஐதராபாது மாநகராட்சி
 • நா.உஅசதுத்தீன் ஒவைசி, மல்லா ரெட்டி, பி. தத்தாத்திரேயா, கே. விஸ்வேஸ்வர ரெட்டி
 • நகரத் தந்தைபொந்து ராம் மோகன்
 • துணை நகரத் தந்தைபாபா பாசி உதின்
பரப்பளவு
 • மாநகராட்சி650 km2 (250 sq mi)
 • மாநகரம்
7,100 km2 (2,700 sq mi)
ஏற்றம்
505 m (1,657 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மாநகராட்சி68,09,970
 • தரவரிசை4-ஆவது
 • அடர்த்தி18,480/km2 (47,900/sq mi)
 • பெருநகர்
77,49,334
 • பெருநகர் தரவரிசை
6வது
இனம்ஐதராபாதி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடுகள்
500 xxx, 501 xxx,
502 xxx, 508 xxx, 509 xxx
இடக் குறியீடு(கள்)+91–40, 8685, 8413, 8414, 8415, 8417, 8418, 8453, 8455தொலைபேசிக் குறியீடு
வாகனப் பதிவுTS 09 முதல் TS 14 வரை
அதிகாரபூர்வ மொழிகள்தெலுங்கு, உருது
மமேசுஉயர்
இணையதளம்www.ghmc.gov.in

ஐதராபாத்தின் மக்கள் தொகை 4 மில்லியனுக்கும் மேற்பட்டதாகும். நகரத்தின் பரப்பளவு, மக்கள் தொகை, வளர்ச்சி ஆகியவற்றின் தாக்கத்தின் அடிப்படையில் ஐதராபாத் -1 நகரம் என்று வகைப்பட்டுள்ளது.[1]

இந்தியாவின் தலை சிறந்த தகவல் தொழில்நுட்பக்கூடங்களை உள்ளடக்கி ஐதராபாத் தனிப்பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய திரைப்படப் படப்பிடிப்பகமான ராமோஜி திரைப்பட நகரம், அத்துடன் இந்தியாவின் 3ம் இடம் வகிக்கும் பெரிய தொழிற்சாலையான டோலிவுட் எனப் பெயர் பெற்ற ஆந்திரத் திரைப்படத்துறை ஆகியவை இங்கு அமைந்துள்ளன. இந்நகரம் மிகையான விளையாட்டு அரங்கங்களுடன் பற்பல விளையாட்டுத் திடல்களுடன் கூடிய விளையாட்டுப் புகலிடமாகவும் அமைந்துள்ளது. அனைத்துலக அளவிலும் தேசிய அளவிலும் போட்டிகள் இங்கு மிகுதியான அளவில் நடக்கின்றன. இந்நகரம் இந்திய பிரீமியர் லீகின் ஓர் முன்னணி அணியான டெக்கான் சார்ஜர்சின் தாயகமாகவும் விளங்குகிறது.

ஐதராபாத்தில் வசிக்கும் மக்களை ஐதராபாதி என்று அழைக்கின்றனர். இந்நகரம் பழமையுடன் புதுமையும் இணைந்த நவீன நகரமாக விளங்குகிறது.[2]

பெயர் வரலாறு

தொகு

ஐதராபாத்தின் பெயர் வரலாற்றுக்குக் கீழே இருக்கும் கோட்பாடுகள் பல்வேறு விளக்கங்களை அளிக்கின்றன. முகம்மது குலி குதுப் ஷா இந்த நகரத்தை நிறுவியபிறகு பாக்மதி அல்லது பாக்யவதி என்ற பஞ்சார இனப்பெண்ணைக் காதலித்து மணந்து அந்நகரத்திற்குப் பாக்யநகரம் என்ற பெயரைச் சூட்டினார் என்ற கருத்து அவற்றில் புகழ்பெற்றதாக நிலவுகிறது. பாக்யவதி இசுலாமுக்கு மாறியபொழுது, அவள் தன் பெயரை ஐதர் மஹால் என்று மாற்றிக்கொண்டாள். இந்தக் காரணத்தால் இந்நகருக்கு இரண்டு உருது வார்த்தைகளாகிய ஐதர்-ஆ'பாத் ஆகியவற்றைக் கொண்டு ஐதராபாத் என்ற பெயரைச் சூட்டினர், இதற்கு ’ஐதர் நீடூழி வாழ்க’ என்பது பொருளாகும். ஆனால் இந்நகரத்தின் பெயர்குறித்து மிகுதியாக மக்கள் நம்புவது இசுலாமிய ஞானி முகம்மதின் மருமகனான, அலி இப்ன் அபி தாலிபின் மற்றொரு பெயர் ஐதர் என்பதால் இப்பெயர் சூட்டினார்கள் என்பதாகும்.[3][4]

வரலாறு

தொகு
 
முசி ஆற்றங்கரையில் இந்நகரத் தோற்றம்,1895

சுமார் 500 க்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்நகரம் நிறுவப்பெற்றது என்றாலும் தொல்பொருள் ஆய்வாளர்கள் பொ.ஊ.மு. 500 ஆம் ஆண்டில் இருந்த இரும்புக் காலம் சார்ந்த இடங்களை இவ்விடத்தில் அகழாய்வு செய்து வெளிக்கொணர்ந்துள்ளனர்.[5][6] ஏறத்தாழ 1000+ ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதியைக் காக்கத்தியர்கள் அரசாண்டனர். குதுப் சாகி வம்சத்தைச் சேர்ந்த முகம்மது குலி குதுப் சா கொல்கொண்டாவை ஆண்டு வந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராவார். அதற்கு முன்பாக, பாமினி சுல்தான் வம்சத்தின் கீழ் அடிமையாக இருந்த இந்நகரத்திற்கு, 1512 ஆம் ஆண்டில் விடுதலையளித்தார்கள். இந்த வம்சத்தினரின் பழைய தலைநகரமான கொல்கொண்டாவில் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறையிலிருந்து விடுபடுவதற்காக, 1591ஆம் ஆண்டில் ஐதராபாத் நகரமானது, முசி ஆற்றங்கரையோரம் நிறுவப்பெற்றது.[7][8] இவரே சார்மினார் கட்டிடம் கட்டுவதற்கும் ஆணையிட்டார்.[9]

 
முஹம்மது குலி குதுப் ஷாவின் கல்லறை, ஐதராபாத், இந்தியா.

முகலாயப் பேரரசர் ஔரங்கசீப், ஐதராபாத்தை 1687 ஆம் ஆண்டு கைப்பற்றினார்[10]. இந்தக் குறுகியகால முகலாய ஆட்சியில், இந்நகரத்தில் முகலாயர்கள் நியமித்த ஆளுநர்கள் மிகவிரைவில் தன்னாட்சியைப் பெற்றனர். 1724 ஆம் ஆண்டில் நிஜாம் உல் முல்க் (நாட்டின் ஆளுநர்) என்ற புனைப்பெயருடைய முகலாயப் பேரரசர் முதலாம் ஆசப் ஜா, தனது பகைவரைத் தோற்கடித்து ஐதராபாத்தைக் கைப்பற்றித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.[10][11] ஆசப் ஜா வம்சத்தின் ஆதிக்கம் இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு ஓராண்டு வரையில் நீடித்தது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த ஆசப் ஜா வின் சந்ததியினர் ஐதராபாத்தின் நிஜாம்களாகப் பொறுப்பேற்றனர். ஏழு நிஜாம்களின் ஆட்சிக்குப் பின் ஐதராபாத் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் மிகுந்த வளர்ச்சி அடைந்தது. பேரரசின் தலைநகரான கொல்கொண்டாவைக் கைவிட்டு முறைப்படி ஐதராபாத்தைத் . தலைநகராக மாற்றியமைத்தார்கள். நிஜாம் சாகர், துங்கபத்ரா, ஒஸ்மான் சாகர், ஹிமாயத் சாகர் மற்றும் இது போன்ற பல பெரிய நீர்த்தேக்கிடங்களை அமைத்தார்கள். இச்சமயத்தில் நாகர்ச்சுனா சாகர் கட்டுவதற்கான ஆயத்தபணிகளில் ஈடுபட்டாலும்; உண்மையில் இப்பணியை இந்திய அரசாங்கம் பொறுப்பெடுத்து 1969 ஆம் ஆண்டில் கட்டி முடித்தார்கள். இங்குள்ள நிஜாம்களின் செல்வவளத்தையும் ஆடம்பரத்தையும் விவரிக்கும் நிஜாம்களின் ஆபரணங்கள்குறித்த கட்டுக்கதைகள் சுற்றுலாப் பயணிகளை < ஈர்க்கின்றது. இந்திய அரசாட்சிக்குட்பட்ட மாநிலங்களில் மிகவும் செழிப்பானதாகவும் பெரியதாகவும் இம்மாநிலமே அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பகுதி 90,543 மீ² ஆகவும் 1901 ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 50,073,759 ஆகவும் இருந்தது. இதன் தோராய வருமானம் £90,029,000[12] ஆகும்.

 
நிஜாம்கள் வாழ்ந்த சௌமகல்லா அரண்மனை ஆசப் ஜாகி வம்சத்தின் மையமாக இருந்தது.

1947 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐதராபாத் பிரித்தானிய முடியாட்சியின் ஒரு அங்கமாக இருந்ததேயன்றி ஆங்கிலேய இந்தியாவின் அங்கமாக இல்லை. 1947 ஆம் ஆண்டில் ஆங்கிலேய இந்தியா சுதந்திரம் பெற்று அதனை இந்தியாவாகவும் பாக்கித்தானாகவும் பிரிக்கும் சமயத்தில், ஆங்கிலேய முடியாட்சி அரசாட்சிக்குரிய மாநிலங்களின் மீது இருந்த தனது உரிமையைக் கைவிட்டு தனது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமையை அவற்றிடமே கொடுத்தது. நிஜாம்கள் இசுலாமிய மரபைச் சார்ந்து இருந்ததால் தாங்கள் தனித்து ஆள வேண்டும் அல்லது பாக்கித்தானிடம் சேர வேண்டும் என விரும்பினர். இருப்பினும், இது இந்திய ஒன்றியத்தின் தொலைநோக்குப் பார்வையில் ஏற்கமுடியாததாக அமைந்தது. நிஜாம்களின் முயற்சிகள் நவீன இந்திய வரலாற்றின் மிகப்பெரிய நில உடைமை சார்ந்த கிளர்ச்சிக்கு வித்திட்டது. நிஜாம்களை பின்வாங்க வைப்பதற்காக இந்திய ஒன்றியம் ஐதராபாத்துக்கு பொருளாதார தடைகளை விதித்து இடையூறு விளைவித்தது. இதைத் தடுக்கும் வண்ணம் ஒரு அசையா நிலை ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட முன்வந்தனர். ஆனால் நிஜாம்கள் ஒத்துழைக்க மறுத்ததால் இந்திய அரசு ஐதராபாத் அரசாட்சிக்குட்பட்ட மாநிலத்தின் மீது தனது இராணுவத்தை செலுத்தி முற்றுகையிட்டது. ஆபரேஷன் போலோ என்ற இந்த நடவடிக்கை 17 செப்டம்பர் 1948 அன்று வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்திய ஒன்றியத்தோடு இணைவதற்கான ஆவணத்தில் நிஜாமும் கையெழுத்திட்டார்.[13]

1955 ஆம் ஆண்டு ஐதராபாத்தின் நவீன வளர்ச்சியைப் பார்த்து வியந்த அம்பேத்கர் இந்தியாவின் இரண்டாம் தலைநகரமாக ஐதராபாத்தை ஆக்க வேண்டும் என்று முன் மொழிந்தார். அவர், "தில்லியில் இருக்கும் எல்லா வசதிகளும் ஐதராபாதில் உள்ளது. இது தில்லியைக் காட்டிலும் மேலான நகரம். தில்லியில் இருக்கும் பிரம்மாண்டம் அனைத்தும் இங்கு உள்ளது. இங்கு இருக்கும் கட்டிடங்கள் விலை மலிவாகவும் இவை தில்லியில் இருப்பவற்றை விட மிக அழகாகவும் இருக்கின்றன. இங்கு நாடாளுமன்ற இல்லம் மட்டும் தான் இல்லை. ஆனால் அதையும் இந்திய அரசு எளிதாகக் கட்டலாம்," என்று கூறினார்.[14]

1956 நவம்பர் 1 அன்று அரசு இந்திய மாநிலங்களை மொழியின் அடிப்படையில் சீரமைத்தது. ஐதராபாத் மாநிலத்தின் ஆட்சிப்பகுதிகள் இந்தக் காலகட்டத்தில் புதிதாக உருவாகிய ஆந்திரப் பிரதேசத்திற்கும், மும்பை மாநிலத்திற்கும் (பின்னர் மகாராட்டிரம்), கர்நாடக மாநிலங்கள் ஆகியவற்றிற்கும்) சென்றது. ஐதராபாத் மாநிலத்தில் இருந்த தெலுங்கு பேசும் பகுதிகளை ஆந்திர மாநிலத்துடன் இணைத்து ஆந்திரப் பிரதேசம் உருவானது. இவ்வாறு ஐதராபாத் புதிய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகராக மாறியது.[15]

'90 ஆம் ஆண்டுகளில் நடந்த தாராளமயமாக்குதல் மூலம் இந்நகரம் தகவல் தொழில் நுட்பத் தொழிற்சாலைக்கான முக்கிய மையமாக வளர்ச்சியடைந்தது. அதன் காரணமாக இந்நகரம் நாகரிகத்திலும் வாழ்க்கை முறையிலும் மிகுந்த மாற்றங்களை அடைந்தது. தகவல் தொழில் நுட்பத் தொழிற்துறையின் வளர்ச்சியும் புதியதாகக் கட்டிய சர்வதேச விமான நிலையம் ஆகியவை 2000 ஆம் ஆண்டுகளில் [நிலவிற்பனைத் துறை உள்ளிட்ட பல தொழில் துறைகள் வளர்ச்சிக்குச் சான்றாக விளங்கியது, இருப்பினும் 2008–2009 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட சர்வதேச நிதிநெருக்கடி இதனுடைய வளர்ச்சியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது.[12]

புவியியல்

தொகு
 
ஹுசைன் சாகர் ஏரி

தக்காண பீடபூமியில் அமைந்துள்ள ஐதராபாத் ஏறத்தாழ கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 489 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது (1,607 அடி உயரம்).[16] பெரும்பாலான பகுதிகள் பாறைகளாக இருந்தாலும் சில பகுதிகள் குன்றுகள் நிறைந்ததாகவும் இருக்கின்றன. இப்பகுதியின் பொதுவான விளைபயிராக நெல் உள்ளது.[17]

உண்மையில் ஐதராபாத் நகரம் முதலில் முசி நதிக்கரையில் நிறுவப்பெற்றது.[18] தற்பொழுது அறியப்படும் வரலாற்றுப் பழமைவாய்ந்த நகரம் நதியின் தெற்குக் கரைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இவ்விடத்திலேயே சார்மிநாரும் மெக்கா மசூதியும் அமைந்துள்ளன. பல அரசு கட்டடங்களும் முக்கிய இடங்களும் நதியின் வடக்குப்பகுதியில் குறிப்பாக ஹுசைன் சாகர் ஏரியின் தெற்குப்பகுதியில் அமைந்ததால், இப்பகுதியே நாளடைவில் நகரத்தின் மையப்பகுதியாக மாற்றமடைந்தது. செகந்திராபாத்துடன் இணைந்து, விரைவாக வளர்ச்சியடைந்த இந்நகரம், 12 நகராட்சி வட்டங்களுடைய மண்டலமாக அமைந்து பெரிய நிலப்பரப்பும், மிகுதியான மக்கள்தொகையும் கொண்ட ஒருங்கிணைந்த நகரமாக விளங்குகிறது. வருங்காலத்திலும் இதன் அருகில் உள்ள மேலும் பல சிறிய கிராமங்கள் இந்த இரட்டை நகரங்களுடன் இணையக்கூடும் என்று எதிர்பார்ப்புள்ளது.[19]

தட்ப வெப்ப நிலை

தொகு

ஐதராபாத் வெப்பமான வெப்பப் புல்வெளி ஈர, உலர் வெப்ப நிலையைக் கொண்டுள்ளது (கோப்பென் Aw). பெப்ப்ரவரியின் பிற்பகுதி முதல் சூன் முற்பகுதி வரை கோடைக்காலமாகவும், சூன் இறுதியிலிருந்து அக்டோபர் மாதம் முற்பகுதி வரை மழைக்காலமாகவும், அக்டோபர் இறுதியிலிருந்து பிப்ரவரி முற்பகுதி வரை மிதமான குளிர்காலமாகவும் காணப்படுகிறது.[20] இந்த நகரம் அதிக உயரத்தில் இருப்பதால் இங்கு காலை வேளைகளும் மாலை வேளைகளும் பொதுவாகக் குளிர்ச்சியாக உள்ளது. ஐதராபாத் ஆண்டுதோறும் சுமார் 32 அங்குல (அதாவது 810 மி.மி) மழையைப் பெறுகின்றது, இம்மழையானது பெரும்பாலும் பருவமழைக் காலங்களிலேயே பொழிகின்றது. இதுவரை பதிவாகியதில் அதிகபட்ச வெப்ப நிலையாக 2 சூன், 1966 அன்று பதிவாகிய 45.5 o செ. (113.9 °ப) வெப்பநிலை அமைந்துள்ளது, அது போலவே குறைந்தபட்ச வெப்பநிலையாக 8 சனவரி 1946 ஆம் ஆண்டில் பதிவான 6.1o செ (43 °ப) வெப்பநிலை அமைந்துள்ளது.[21]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஐதராபாத்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 28.6
(83.5)
31.8
(89.2)
35.2
(95.4)
37.6
(99.7)
38.8
(101.8)
34.4
(93.9)
30.5
(86.9)
29.6
(85.3)
30.1
(86.2)
30.4
(86.7)
28.8
(83.8)
27.8
(82)
32.0
(89.6)
தாழ் சராசரி °C (°F) 14.7
(58.5)
17.0
(62.6)
20.3
(68.5)
24.1
(75.4)
26.0
(78.8)
23.9
(75)
22.5
(72.5)
22.0
(71.6)
21.7
(71.1)
20.0
(68)
16.4
(61.5)
14.1
(57.4)
20.2
(68.4)
மழைப்பொழிவுmm (inches) 3.2
(0.126)
5.2
(0.205)
12.0
(0.472)
21.0
(0.827)
37.3
(1.469)
96.1
(3.783)
163.9
(6.453)
171.1
(6.736)
181.5
(7.146)
90.9
(3.579)
16.2
(0.638)
6.1
(0.24)
804.5
(31.673)
சராசரி மழை நாட்கள் .3 .4 .9 1.8 2.7 7.6 10.6 10.1 8.9 5.7 1.6 .4 51.0
சூரியஒளி நேரம் 279.0 271.2 263.5 273.0 282.1 180.0 142.6 136.4 168.0 226.3 246.0 263.5 2,731.6
[சான்று தேவை]

மக்கள் வாழ்க்கைக் கணக்கியல்

தொகு

2001 ஆம் ஆண்டில் இந்நகரின் மக்கள் தொகை 3.6 மில்லியனாக இருந்து 2009 ஆம் ஆண்டில் 4.0 மில்லியனைத்[22] தாண்டியது, இதன் காரணமாக இந்தியாவின் அதிக மக்கள் இருக்கும் நகரங்களில் ஒன்றாக இந்நகரம் திகழ்கிறது. தொடர்ந்து இந்த நகரின் பெருநகர்ப் பகுதியின் மக்கள் தொகை 6.3 மில்லியனைத் தொடும் வாய்ப்புள்ளது.[24] மக்கள் தொகையில் 40% இஸ்லாம் சமயத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளதன் பொருட்டு, ஆந்திரப் பிரதேசத்தின் பெரிய சமூகமாக ஐதராபாத் இஸ்லாம் சமூகம் உள்ளது.[25] இந்நகரத்தின் தலைமை இடத்திலும், பழைய நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் கணிசமான அளவில் காணப்படுகின்றனர். இந்நகர மக்கள்தொகையில் கிறித்தவர்கள் குறைந்த அளவே காணப்படுகின்றனர். கிறித்தவ தேவாலயங்கள் நகரத்தைச் சுற்றிலும் அமைந்துள்ளன, அவற்றில் புகழ்பெற்றவை ஆபித் மற்றும் செகந்தரபாத் பகுதிகளில் காணப்படுகின்றன.[26]

இந்நகரில் தெலுங்கு மொழியும் உருது மொழியும் முதன்மை மொழிகளாக விளன்க்குகின்றன. கல்வி கற்றவர்கள் பெருமளவில் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்.[13]

துருக்கி, பெர்சியன், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளின் தாக்கத்துடன் இங்கே வழங்கும் உருது மொழி தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது, இது ஐதராபாத்தி உருது அல்லது தக்காணி என்று அழைக்கப்படுகிறது. ஆட்சி மொழியான தெலுங்கு மாநிலத்தின் சில இடங்களில் வேறுபடுகிறது, இருப்பினும் இது மாநிலம் முழுவதிலும் அடிப்படையில் ஒரே மாதிரியாக வழங்குகிறது.[19]

நிர்வாகம்

தொகு
 
ஆ.பி உயர் நீதி மன்றம், ஐதராபாத்; ஆந்திரா மாநிலத்தில் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றும் முதன்மை மன்றம்.

இந்நகரத்தின் நிர்வாகம் பெருமைமிகு ஐதராபாத் மாநகராட்சி மன்றம் (GHMC) என்று வழங்கும் நகர் நிகம் (மாநகராட்சி மன்றம்) மூலம் நடைபெறுகிறது,[27] சில செயற்குழு அதிகாரங்களைக் கொண்டுள்ள ஐதராபாத்தின் மாநகராட்சித் தலைவரே இம்மன்றத்தின் தலைவராவார். முன்பு மாநகராட்சியின் சட்டமன்ற குழுதான் மாநகராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுத்தது, ஆனால் கடந்த தேர்தலுக்கு முன்பிருந்து மாநில அரசு இதற்கான ஐதராபாத் மாநகராட்சி மன்ற சட்டத்தை மாற்றியமைத்தது. இதன்படி நேரடியாக மாநகராட்சி தலைவருக்கான தேர்தல் மாநகராட்சி தேர்தலுடன் இணைந்து நடக்கிறது. மாநகராட்சியின் உண்மையான செயற்குழு அதிகாரம் நகராட்சி ஆணையரிடம் உள்ளது, இதற்காக ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஒரு (IAS) அதிகாரியை நியமித்துள்ளது.

மக்களின் தேவைகள் மற்றும் நகரத்தின் உள்கட்டமைப்புகள் ஆகியவற்றை நிறைவேற்றும் பொறுப்பை GHMC ஏற்றுக்கொண்டுள்ளது. ஐதராபாத் 150 நகராட்சிப் பிரிவுகளைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் ஒரு மாநகராட்சி உறுப்பினரின் பொறுப்பில் உள்ளது. மாநகராட்சியை நிருவாகம் செய்யும் உறுப்பினர்கள் தேர்தல்மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், பெரும்பாலும் இத்தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை முன்னிறுத்துகிறார்கள்.இரட்டை நகரங்களான ஐதராபாத் மற்றும் செகந்தராபாத்தில் உள்ள மூன்று மாவட்டங்களாவன: ஐதராபாத், ரங்கா ரெட்டி மற்றும் மேடக். ஓவ்வொரு மாவட்டத்தின் நிர்வாகமும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் உள்ளது, இவர் மத்திய அரசின் சார்பாகச் சொத்துக்களை பதிவு செய்து விவரங்கள் குறிப்பது மற்றும் வருவாய் வசூல் செய்வது ஆகிய பொறுப்புகள் உடையவராவார். மாவட்ட ஆட்சியர்கள் நகரத்தில் நடைபெறும் தேர்தல்களைகளையும் கண்காணிப்பர்.[28]

 
ஆந்திரப் பிரதேச சட்ட சபை, ஐதராபாத்

ஐதராபாத் பெருநகர் வளர்ச்சி ஆணையம் (HMDA), என்பது முதலமைச்சர் தலைமையின் கீழ் இயங்கும் இஆப நிலை அதிகாரிகளைக் கொண்டுள்ள ஒரு திட்டக்குழுவாகும், இவ்வாணையம் 6,250 கிமீ² பரப்பளவுக்கும் மேல் உள்ள இடங்களுக்கான வளர்ச்சி திட்டங்களை உருவாக்க அதிகாரம் படைத்தவர்கள் ஆவார்கள்.[29] ஐதராபாத் பெருநகர் பகுதி[30] யை நல்ல முறையில் நிர்வாகம் செய்வதற்கு, பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் மாவட்ட ஆட்சியரே தலைவராவார்: ஐதராபாத் மாவட்டம்- முழுவதும் (16 மண்டலங்கள்), மேடக் மாவட்டம்- பகுதி (10 மண்டலங்கள்), ரங்காரெட்டி மாவட்டம்-பகுதி (22 மண்டலங்கள் ), மகபூப்நகர் மாவட்டம்- பகுதி (64 மண்டலங்கள்), நல்கொண்டா மாவட்டம்-பகுதி (4 மண்டலங்கள்)

சட்டப் பேரவைக்கு ஐதராபாத் வாக்காளர்கள் 24 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள், இவர்களது வாக்காளர் தொகுதி மக்களவையின் கீழமைந்த 5 தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் புதிய சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் அவற்றிற்கான நாடாளுமன்ற தொகுதிகளாவன: மல்கஜ்கிரி, குகத்பல்லி, உப்பல், லால் பகதூர் நகர் (LB நகர்), செகந்தராபாத் பாளையம், மல்கஜ்கிரி பாரளுமன்ற தொகுதியின் கீழ்வரும் குதுபுள்ளப்பூர்; முஷீரபாத், அம்பேர்பெட், கைரதாபாத், ஜுபிலி குன்றுகள், சனத்நகர், நம்பல்லி, செகந்தராபாத் நாடாளுமன்ற தொகுதியின் கீழ்வரும் செகந்தராபாத்; மலக்பேட், கரவன், கோஷமஹால், யகுட்புரா, சார்மினார், சந்திராயனகுட்டா, ஐதராபாத் தொகுதியின் கீழ் வரும் பகதூர்புரா; மகேஸ்வரம், ராஜேந்திரநகர், சேவெல்லா தொகுதிகீழ் வரும் செரிலிங்கம்பல்லி மற்றும் மேடக் தொகுதிகீழ் வரும் பட்டஞ்சேறு.

இந்நகரின் மாநில காவல் துறை ஐதராபாத் காவல் துறை மற்றும் சைபராபாத் காவல் துறை என்று இரண்டாகப் பிரிபட்டுள்ளது, இது மாநில உள்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்துள்ளது, மேலும் இதனை IPS அதிகாரிகளாக இருக்கும் காவல் துறை ஆணையாளர்கள் தலைமையேற்று நடத்துகின்றனர். பஷீர்பாக் என்னுமிடத்தில் முக்கிய அரசு அலுவலகங்கள் இருக்கின்றன. அவற்றுள் சில: காவல் துறை ஆணையர் அலுவலகம், காவல் துறைக் கட்டுப்பாட்டு அறை, வருமானவரி துறை ஆணையர் அலுவலகம், மத்திய ஆயத்தீர்வை மற்றும் சுங்க அலுவலகம் போன்றவையாகும். இந்நகரம் ஐந்து காவல் துறை மண்டலங்களாகப் பிரிபட்டுள்ளது, இவை ஒவ்வொன்றும் அதன் காவல் துறை துணை ஆணையரை தலைமையாகக் கொண்டுள்ளது. இதன் போக்குவரத்து காவல்துறை ஐதராபாத் மற்றும் சைபராபாத் ஆணையகங்களின் கீழமைந்து பகுதி-தன்னாட்சியுடன் செயல்படுகிறது.[31]

ஐதராபாத் நீதிமன்றம் ஆந்திரப் பிரதேசத்தின் உயர் நீதிமன்றத்தின் கீழ் அமைந்ததாகும், இங்கு குடியுரிமை வழக்குகளுக்கான சிறு வழக்குகளுக்கான நீதி மன்றமும், குற்ற வழக்குகளுக்கான குற்றவியல் அமர்வு நீதிமன்றமும் செயல்படுகிறது. இங்குள்ள உயர்நீதிமன்றம் மற்றும் சட்டமன்ற கட்டிடங்கள் இங்கு ஆட்சி புரிந்த நிஜாம்கள் கட்டிய பாரம்பரியப் புகழ் வாய்ந்த கட்டிடங்களாகும்.

பொருளாதாரம்

தொகு
 
சோமாசிகுடா, வெகுவிரைவாக நகரமாகி கொண்டிருக்கும் இடம்.
 
இருபுறமும் அலுவலகங்கள் அமைந்திருக்கும் நவீன வீதி.

ஆந்திரப் பிரதேசத்தின் வருவாய் சார்ந்த, பொருளாதார மற்றும் அரசியல் தலைநகராக ஐதராபாத் திகழ்கிறது. இந்நகரம் மாநிலத்தின் உள்நாட்டு ஒட்டுமொத்த‌ உற்பத்தி, மாநிலவரி மற்றும் சுங்கவரி ஆகிய வருவாய்களை ஈட்டுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இங்கு பணியாற்றுபவரின் விகித பங்கேற்பு விழுக்காடு 29.55% ஆகும். 1990 ஆம் ஆண்டுகளில் துவங்கி இந்த நகரின் பொருளாதாரம் அடிப்படை சேவைகளை வழங்கும் நிலைமையிலிருந்து இப்பொழுது பல்வேறு நவீன சேவைகளுடன் மிகுந்து வேறுபடுகிறது. இதன் மூலம் இந்நகரின் வணிகம், போக்குவரத்து, வர்த்தகம், சேமிப்புகள், தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் வளர்ந்துள்ளன, இந்த நகரில் உள்ள மக்களில் சுமார் 90% சேவைகள் வழங்கும் தொழிலில் பணியாற்றுகின்றனர்.[32]

ஐதராபாத் ஏரிகள் நிறைந்ததாகவும் முத்துக்களின் நகரம் என்றும் புகழ் பெற்றது, தற்பொழுது இங்குள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களாலும் புகழ் பெற்றுவிளங்குகிறது. சார்மினார் அருகில் இருக்கும் லாத் பஜார் வளையல்கள் சந்தைக்குப் புகழ்பெற்றது. வெள்ளிப் பாண்டங்கள், புடவைகள் நிர்மல் மற்றும் கலம்கரி ஓவியங்கள், கலைப் பொருட்கள், தனித்துவமான பித்ரி கைவினைப் பொருட்கள், கற்கள் பதித்த அரக்கு வளையல்கள், பட்டு, பருத்தி மற்றும் கைத்தறியாலாகிய உடைகள் இங்கு உற்பத்தி செய்து, இவை போன்ற பொருட்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளாக இங்கு விற்று வருகிறார்கள்.

மருந்து நிறுவனங்களின் முக்கிய மையமாகவும் ஐதராபாத் திகழ்கிறது, இங்கு டாக்டர். ரெட்டிஸ் லாபோரட்டரீஸ், மாட்ரிக்ஸ் லாபோரட்டரீஸ், ஹெட்ரோ ட்ரக்ஸ் லிமிடட், டிவிஸ் லேப்ஸ், ஆரோபிந்தோ பார்மா லிமிடட், லீ பார்மா, விம்டா லேப்ஸ் போன்ற பல நிறுவனங்கள் அமைந்துள்ளன. உயிர்-தொழில்நுட்பவியலில் வளர்ச்சி அடையும் நோக்குடன் இங்கு ஜினோம் வேலி, பேப் சிட்டி, நானோ தொழில்நுட்ப பூங்கா போன்றவைகளை உருவாக்கும் உட்கட்டமைப்புப் பணிகள் நடைபெறுகிறது.[33]

 
வளையல் மற்றும் நகைகளை விற்கும் லாத் பஜார் கடை.முத்துக்களுக்குப் புகழ்பெற்றதாக லாத்பசார் மற்றும் சார்மினார் சந்தைகள் இருக்கின்றன.

மற்ற இந்திய நகரங்களைப் போலவே ஐதராபாத்தும் நில உடைமைகள் விற்பனைத் துறையில் மிகுந்த வளர்ச்சியைக் கண்டுள்ளது[34], இதற்கு 1990 ஆம் ஆண்டுகளில் விரைவாக முன்னேறிய தகவல் தொழில்நுடபத் துறைக்குத் தான் நன்றி கூற வேண்டும்.[35] மற்றும் இதன் மூலம் சில்லறை வணிகத் தொழிலும் கடந்த சில ஆண்டுகளாக அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது. பெரிய பெரிய நவீன 'மால்' வகை கடைகள் கொண்ட கட்டிடங்கள் இந்த நகரில் தோன்றி வருகின்றன அல்லது புதியதாகக் கட்டப்படுகின்றன.[36] ஐதராபாத்தைச் சுற்றியுள்ள கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் நில உடைமைகள் விற்பனைத் துறை மிகுதியாக வளர்ச்சியடைந்துள்ளதன் காரணமாக இங்கு கடந்த சில ஆண்டுகளாக விலையேற்றம் கட்டுக்கடங்காமல் மிகுதியாக உள்ளது.[37]

சில்லறை வணிகமும் ஐதராபாத்தில் பெருமளவு வளர்ச்சி அடைந்து வருகிறது. பல சர்வதேச மற்றும் தேசிய தரமுடைய குறியீட்டுடன் கூடிய நிறுவனங்கள் தங்கள் சில்லறை வணிகத்தை இங்கு துவங்கியுள்ளன. இந்த நகரில் பல்வேறு மத்திய தொழில் மாவட்டங்கள் (Central Business Districts (CBDs)) பரவலாக உள்ளன. பழைய சார்மினாரிலிருந்து புதிய கொதகுடா வரை மிகுதியான வணிக/வர்த்தக மாவட்டங்கள் அமைந்துள்ளன. இதன் வளர்ச்சிகுறித்த கட்டமைப்புக்காக அரசு பல வானளாவிய கட்டிடங்களை மன்சிறேவுளா மாவட்டத்தில் கட்டி வருகிறது. இது ராஜேந்திரநகர் அருகில் உள்ளது, இந்தக் கட்டிடத்தின் நடுவில் 450 மீ. உயரத்தில் ஒரு APIIC கோபுரமும் கட்டப்படும். கச்சிபவுளி அருகில் இருக்கும் லாங்கோ குன்றுகளில் குடியிருப்பு மற்றும் வணிகத்திற்காகக் கட்டிய கட்டிடங்கள் இந்தியாவின் மிக உயர்ந்த கட்டிடமாகத் திகழ்கிறது.

ஐதராபாத்தைச் சேர்ந்த பணியாளர்களில், ஆந்திரப் பிரதேச அரசு 113,098[38] நபர்களுக்கும் இந்திய அரசு 85,155[39] நபர்களுக்கும் வேலை வாய்ப்பினை அளித்துள்ளன.

தகவல் தொழில் நுட்பவியல் தொழில்

தொகு

தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல்-சார்ந்த சேவைகள், மருத்துவத்துறை சார்ந்த அழைப்பகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைகள் ஆகியவற்றிற்கு ஐதராபாத் தனிச்சிறப்புடையதாக விளங்குகிறது. 1990 ஆம் ஆண்டு முதல் பல கணினி மென்பொருள் நிறுவனங்கள், மென்பொருள் ஆலோசனை நிறுவனங்கள், அயல் பணியாளர்கள் கொண்டு வணிகச்செயல்முறை செய்யும் (BPO) நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் பிற தொழில் நுட்ப சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் போன்றவை இங்கு மிகுதியாக நிறுவப்படுகிறது.

தொழில்நுட்பவியல் உட்கட்டமைப்புடன் கூடிய ஒரு தனி நகரம், ஹைடெக் நகரத்தை மேம்படுத்தியதன் விளைவாக, இச்சூழல் காரணமாக இங்கு பல தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த சேவைகள் வழங்கும் நிறுவனங்கள் இந்நகரில் தம் செயல்பாடுகளை அமைத்துள்ளது. இதன் அதி நவீன வளர்ச்சி காரணமாக இப்பகுதி மக்களால் இந்நகரம் சைபராபாத் என்றழைக்கப்படுகிறது.[40] இந்நகரின் எண்முறைக் கட்டமைப்புகளில் மிகுதியான முதலீடுகள் மேற்கொண்டதால், பல நிறுவனங்களும் அணிதிரண்டு பல வளாகங்களை இங்கு அமைத்துள்ளன. இப்பட்டியலில் பல பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் மேம்பாட்டு நிறுவனங்களை அமைத்து வருவதும் உள்ளடங்கும். இதுபோன்ற வளாகங்களைக் கொண்டுள்ள சில முக்கிய இடங்களாக மதபூர், கொண்டபூர், கச்சிபவ்லி மற்றும் உப்பல் போன்றவை அமைந்துள்ளன.

வளம்வாய்ந்த 500 நிறுவனங்களில், பெரும்பான்மையானவை தகவல் தொழில் நுட்பவியல் தொழில் மற்றும் BPO சேவைகள் சார்ந்தவையாகும். மைக்ரோசாப்ட் (அமெரிக்காவிற்கு வெளியே மிகப் பெரிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வளாகத்தைக் கொண்டுள்ளது), ஆக்செஞ்சுவர், ADP, அஜிலென்ட், அல்கேடல் லுசென்ட், அமேசான், AMD AT&T, பேங்க் ஆப் அமெரிக்கா, கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ், CSC, கோன்வேர்ஜிஸ், டெல், டேலோயிட், டுயுபோன்ட், பிடிலிட்டி இன்வெஸ்ட்மென்ட்ஸ், பிராங்க்ளின் டேம்ப்லேடன், GE, கூகிள், ஹவ்லேட்-பக்கார்ட், ஹனிவெல், ஹுண்டாய், IBM, மோடோரோலா, ந்விடியா, ஆரகள் கார்ப்ரேஷன், குவால்காம், ராக்வெல் காலின்ஸ், SAP AG, UBS AG, வேரைசான், விர்டுசா, வெல்ஸ் பார்கோ போன்ற குறிப்பிடத் தக்க நிறுவனங்கள் ஐதராபாத்தில் அமைந்துள்ளன.

மஹிந்திரா சத்யம், HCL, இன்போசிஸ், விப்ரோ, பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், காக்னிசன்ட் டெக்னாலாஜீஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், போலாரிஸ் போன்ற முக்கிய இந்திய தகவல் தொழில் நுட்பவியல் தொழில் நிறுவனங்களும் ஐதராபாத்தில் அமைந்துள்ளன.

மருத்துவம்

தொகு
ஐதராபாத் நிசாம்மருத்துவ வசதிகள்

இந்தியாவில், மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஐதராபாதும் ஒன்று. இந்த வளர்ச்சி முக்கியமாகத் தகவல் தொழில் நுட்பவியல் தொழில் மற்றும் BPO தொழிற்சாலை, உற்பத்தித் தொழிற்சாலை, கல்வி, மென்பொருள் தொழிற்சாலை, வங்கி, கட்டுமானத்துறை போன்றவற்றில் அமைந்திருப்பினும் மருத்துவத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. கடந்த பத்து ஆண்டுகளில் மருத்துவத் துறை எண்ணிக்கையிலும், தரத்திலும் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. அமெரிக்கா, ஐக்கியப் பேரரசு, மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் போன்ற வளர்ந்த நாடுகளில் மட்டுமே கிடைத்துவந்த சிறப்பான மருத்துவ வசதிகள் இப்பொழுது எந்தத் தடையுமின்றி இந்த நகரிலும் கிடைக்கிறது. நகரில் உள்ள இத்தகைய மருத்துவமனைகள் 5 நட்சத்திர மருத்துவ மனைகள் என்று மக்கள் அழைக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளோடு ஒப்பிடுகையில் இங்குள்ள மருத்துவமனைகளிலும் தரம் வாய்ந்த சிகிச்சைகள் கிடைக்கின்றன, இருப்பினும் அதற்கான கட்டண விலை வேறுபட்டே காணப்படுகிறது.

  • ஒஸ்மானியா பொது மருத்துவமனை - அப்சல் கஞ்சில் இருக்கின்ற ஒஸ்மானியா பொது மருத்துவமனை இந்தியாவின் மிகப்பழமையான மருத்துவமனையாகும்.கடைசி நிஜாமான ஒஸ்மான் அலி கானின் காலகட்டத்தில் இதைக் கட்டினார்கள், அதன்பிறகு இதற்கு அவர் பெயரைச் சூட்டினார்கள்.இது இப்பொழுது ஆந்திர அரசு நடத்துகிறது, மற்றும் இது ஆந்திர மாநிலத்தின் மிகப்பெரிய மருத்துவமனையாகும்.மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இயங்கும் ஒஸ்மானியா பொது மருத்துவமனை ஆந்திரப் பிரதேசம் முழுவதும் நிறைய சேவைகளை வழங்கி வருகிறது. பாமர நோயாளிகளுக்கு இலவசமாக நல்ல தரமான மருத்துவ சிகிச்சை வழங்கும் நோக்குடன் இந்த மருத்துவமனை துவங்கியது.இந்த மருத்துவமனையில் 1,168 படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றில் 363 சகல வசதிகளுடன் கூடியதாகவும், 160 அவசர தேவைகளுக்கானதாகவும், 685 பொதுவான நோயாளிகளுக்கானதாகவும் பிரிபட்டுள்ளது. இங்கு 250 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர், அவர்களில் 60 பேராசிரியர்களும் 190 துணை அறுவை சிகிச்சையாளர்களும் அடங்குவர். இங்கு 530 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சேவையாற்றுகின்றனர்.
  • காந்தி மருத்துவமனை - காந்தி மருத்துவமனை முஷீராபாத்தில் அமைந்துள்ளது.இதையும் ஆந்திரப் பிரதேச அரசு நடத்துகிறது.இந்த மருத்துவமனையில் 1000-படுக்கைகளுக்கும் மேல் உள்ளது மற்றும் இம்மருத்துவமனையில் ஆண்டுதோறும் சுமார் 80,000 புறநோயாளிகளும், சுமார் 42,000 உள்ளுறை நோயாளிகளும் நோய்க்கான சிகிச்சையைப் பெற்று வருகின்றனர். இங்கு பொது மருத்துவம், குழந்தை மருத்துவம், எலும்பு மருத்துவம், ENT, இருதய மருத்துவம், நரம்பு மருத்துவம், மன நல மருத்துவம் ஆகிய முக்கியத் துறைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
  • அப்பல்லோ மருத்துவமனை - 350 படுக்கை வசதிகளைக் கொண்டுள்ள அப்பல்லோ மருத்துவமனையின், அப்பல்லோ இணைப்பு மருத்துவமனைகள் ஐதராபாத் நிசாம் த்தின் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக விளங்குகிறது. இம்மருத்துவமனை மிகவும் சிறந்த அமைதியான ஜுபிலி குன்றுகளில் அமைந்துள்ளது, இதுவே ஐதராபாதில் அமைந்துள்ள அதிநவீன வசதி கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாகும். வெளிநாடுகளிலிருந்தும் இந்தியா முழுவதிலிலுமாகச் சுமார் 100,000 நோயாளிகள் ஆண்டுதோறும் சிகிச்சைக்காக இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். இந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை மையத்துடன் கூடிய மருத்துவ மையம் ஒன்றும் இந்நகரில் அமைந்துள்ளது. இங்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மிகப் பிரபலமானவர்களாகவும், மருத்துவ துறையில் மதிப்புடையவர்களாகவும் இருக்கின்றனர். மதிப்பு-சார் மேலாண்மை மற்றும் மருத்துவத் தரம் ஆகியவை குறித்த அப்பல்லோவின் நம்பிக்கை அதனை ஒரு கல்வி நிறுவனத்தைத் தொடங்குவதற்கான ஊக்கத்தை அளித்தது, இந்த அமைப்பு வழங்கிய முதுகலை மருத்துவ மேலாண்மை (MHM) பட்டம் இளைய தலைமுறையினரை தொழில்முறைத் தகுதியுடையவர்களாகவும் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளாகவும் மாற்றியது. மேலும் இந்த மருத்துவமனை செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் துறைக்கான பயிற்சிகளையும் வழங்குகிறது.
  • நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம் - NIMS பல்கலைக்கழக மானியக் குழு (UGC) மற்றும் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. இது ஆணையக் குழு, செயலாக்க குழு, இயக்குநர் மற்றும் பிற அவசியமான குழுக்களின் மேற்பார்வையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது.இது இரட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள பஞ்சகுட்டாவில் சுமார் 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் கட்டடப் பரப்பு சுமார் ஆறு லட்சம் சதுர அடியாகும். இந்நிறுவனம் 27 துறைகளில் தன் சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் அதிசிறப்பு வாய்ந்தவையாக 14 துறைகள் உள்ளன, பிற துறைகள் துணைத் துறைகள் ஆகும். இந்த நிறுவனத்தில் 946 படுக்கைகள் உள்ளன, அவற்றில் 603 படுக்கைகள் பொது நோயாளி பிரிவிலும், 166 தனி அறைகளிலும் மற்றும் 177 அவசரசிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய சிகிச்சைக்கான அறைகளாகவும் உள்ளன.
  • நில்லோபர் மருத்துவமனை - ஓட்டோமான் பேரரசரின் கடைசி மகளான இளவரசி நில்லோபர் ஐதராபாத் நிஜாமின் இரண்டாவது மகனைப் பிரான்சில் 1931 ஆம் ஆண்டு மணந்துகொண்டார். வறுமை மற்றும் நோய்வாய்ப்பட்ட மக்கள்மீதான அவரின் மனிதநேயம் மற்றும் கருணையே, இந்தச் சிறப்பு வாய்ந்த நிறுவனமான நில்லோபர் மருத்துவமனைத் தோன்ற காரணமாக அமைந்தது. இதன் மூலம் நோயுற்ற மக்களுக்குச் சேவையாற்றுதல், இரத்த சீழ் மற்றும் நலிவு முதலான பல சிக்கலான நோய்களிலிருந்து அவர்களைக் காத்தல் ஆகிய சேவைகளை வழங்குகிறது.1953 ஆம் ஆண்டில் நிறுவிய இந்த 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தொடர்ந்து இப்பொழுதும் தாய் சேய் நலனுக்கான தனது சேவையை இடைவிடாது வெற்றிகரமாக வழங்கி வருகிறது. இதனை மேம்படுத்துவதற்கான இடையறாத, கடின முயற்சிகள் காரணமாக இம்மருத்துவமனை எப்பொழுதும் 200 சதவிகித பயன்பாட்டிற்குரியதாக உள்ளது. இப்பொழுது இம்மருத்துவமனை 500 படுக்கை வசதிகளுடன் மகப்பேறு, குழந்தை மருத்துவம், குழந்தை அறுவை சிகிச்சை ஆகிய துறைகளில் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.[41]
  • L V பிரசாத் கண் மருத்துவமனை - L V பிரசாத் கண் மருத்துவமனை நோயாளி நலன் உணர்தல், மருத்துவ ஆய்வு, பார்வைத்திறனை உயர்த்துதல் மற்றும் சீரமைத்தல், சமூக கண் நலன், கல்வி மற்றும் மேம்பாடு ஆகிய துறைசார்ந்த சேவைகளை வழங்குகிறது. LVPEI உலக சுகாதார அமைப்புடன் (World Health Organization) இணைந்து பார்வைக் குறைபாட்டைத் தடுப்பதற்கான மையத்தை அமைத்துள்ளது. வெட்டுவிளிம்பு தொழிநுட்பத்திற்கான அனைத்து நவீன சாதனங்கள் மற்றும் சிறப்புவாய்ந்த தொழில்முறை மருத்துவர்கள் இம்மருத்துவமனையில் உள்ளனர், சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களிடமும் தரமான கண் மருத்துவத்திற்கு LVPEI புகழ்பெற்று விளங்குகிறது.

இந்தக் கண் மருத்துவமனை ஓர் இலாப-நோக்கற்ற அமைப்பாகும்: இது ஐதராபாத் கண்மருத்துவ நிறுவனம் (HEI) மற்றும் ஐதராபாத் கண்மருத்து ஆய்வு அமைப்பு (HERF) ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனை அளிக்கும் கண்மருத்துவ சேவைகள் எல்லா தரப்பினருக்கும் ஏற்றதாகவும், பெறக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும். ஆகவே LVPEI புவியியல் மற்றும் பொருளாதார வசதி குறைந்த குறைபாடுடைய மக்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது, இவற்றில் கிராமம் மற்றும் நகர்புறம் சார்ந்த பின்தங்கிய மக்களுக்கான தங்களின் விரிவாக்கச் சேவைகளைச் செயற்கைக்கோள் மருத்துவமனை மூலமாகக் கிராமங்களை இணைத்துச் சேவையாற்றுவதும் அடங்கும். LVPEI நிறுவியது முதல், LVPEI இதுவரை ஏறத்தாழ 4 மில்லியன் மக்களுக்குப் புறநோயாளிக்கான சேவைகளையும், 400,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளுக்கான சேவைகளையும் வழங்கியுள்ளது. இவர்களில் ஏறத்தாழ ஐம்பது சதவிகிதத்தினருக்கான சிகிச்சைகள் இலவசமாகவே வழங்கப்பட்டுள்ளது.[42]

போக்குவரத்து

தொகு

சாலை

தொகு
 
ஆந்திரப் பிரதேச மாநில சாலை போக்குவரத்து கழகம்

ஐதராபாத் நாட்டின் பிறபகுதிகளுடன் தேசிய நெடுஞ்சாலைகள்—NH-7, NH-9 மற்றும் NH-202 மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளுடனும் ஐதராபாத் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பிற நகரங்களைப் போலவே, ஐதராபாத்திலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இங்கு உள் வட்ட சாலை கட்டிமுடித்த பிறகு வெளி வட்ட சாலை கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது, இது நிறைவுற்றால் ஐதராபாத் நகரத்தின் போக்குவரத்து மேலும் எளிமையாக, வசதிகளுடன் கூடியதாக மேம்படும். பல மேம்பாலங்களும், சுரங்கங்களும் கூடப் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டது.[43]

உள்ளூர் போக்குவரத்து

தொகு

ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின்[44] கீழ் 19,000 பேருந்துகள் ஓடுகின்றன, இதுவே உலகிலேயே மிகப்பெரியப் பேருந்து எண்ணிக்கையுடைய கழகமாகும்.[45] ஐதராபாத் ஆசியாவிலேயே மூன்றாவது பெரிய பேருந்து நிலைய வசதியைக் கொண்டுள்ளது, இங்கு ஒரே நேரத்தில் 89 பேருந்துகளுக்கான 72 நடைமேடைகள் மக்களை ஏற்றிச்செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகாரபூர்வ பெயர் மகாத்மா காந்தி பேருந்து நிலையம் என்பதாகும், இதனை உள்ளூர் மக்கள் இம்லிபன் பேருந்து நிலையம் என்றழைக்கின்றனர், செகந்தராபாதில் உள்ள ஜூபிலி பேருந்து நிலையத்திலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், தென்னிந்தியாவின் சில பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மஞ்சள் நிறமுடைய ஆட்டோ என்றழைக்கப்படும் மூவுருளி தானியங்கிகள் (Auto Rickshaw) போக்குவரத்துக்குப் பரவலாகப் பயன்படுகிறது, இதில் பயணிக்கக் குறைந்தபட்சக் கட்டணம் முதல் 1.5 கி.மீ.க்கு ரூ.12 உம் அதற்கடுத்த ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.7 என்ற அளவில் மலிவானத் தொகையே வசூலிக்கப்படுகிறது. தனியார் அளிக்கும் ரேடியோ டாக்சிகள் மற்றும் வாடகை வண்டிகள் ஆகியவை நகரில் பயணிப்பதை எளிமையாக்குகிறது.[43] நவீன டாக்சிகள் மற்றும் பேருந்துகள் நகரத்துக்குள்ளான மக்கள் போக்குவரத்துக்குப் பயன்படுகிறது. கச்சிபவ்லி மற்றும் ஷம்ஷாபாத் இடையே உள்ள நேரு வெளி வட்ட சாலை அதிவிரைவுப் பாதையாகப் பயன்படுகிறது.

தொடருந்து

தொகு
 
நெக்லெஸ் சாலை நிலையத்தில் உள்ள புறநகர் இரயில் நிலையம்

ஐதராபாத், மல்டி-மோடல் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் (Multi-Modal Transport System (MMTS)) என்ற பெயர்கொண்ட திறமான புறநகர் இரயில் அமைப்பைக் கொண்டுள்ளது. இது இரயில் மற்றும் சாலைப் போக்குவரத்தை இணைத்துப் பயணிகளுக்கான வசதிகளை வழங்குகிறது. புறநகர் இரயில்கள் நகரின் முக்கிய இடங்கள் அனைத்தையும் இணைக்கின்றன. இது சாலைப் போக்குவரத்து நெரிசல்களைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு ஏற்ற மாற்றுவழியாகவும் உள்ளது.[46] நகருக்கான அதிவேக போக்குவரத்து சாதனமாக ஐதராபாத் மெட்ரோ செயல்பட உள்ளது.

இந்திய ரயில்வேயின் மத்திய தென்னக இரயில்வே மண்டலத்தின் தலைமையகமாகச் சிக்கந்தராபாத் இரயில் நிலையம் இருக்கிறது. இதுவே ஐதராபாத்தின் மிகப்பெரிய இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையம் இந்திய இரயில்வேயின் முக்கிய இரயில்வே சந்திப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நகரத்தில் உள்ள ஐதராபாத் ரயில் நிலையம் (நாம்பள்ளி) மற்றும் கச்சிகுடா ரயில் நிலையம் ஆகியவை மற்ற முக்கிய இரயில் நிலையங்களாகும். இந்த இரயில் நிலையங்கள் நகரை நாட்டின் பிற இடங்களோடு இணைக்கின்றன. ஹைடெக் நகர் இரயில் நிலையம் அருகே ஒரு நவீன இரயில் முனையத்தை அமைக்கும் திட்டமுள்ளது. இது நகரின் மேற்கு பகுதிகளில் உள்ள மக்களுக்கு வசதியாக இருக்கும்.[47] நகருக்குள்ளே இருக்கும் மிகுதியான இரயில் போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும், அதிகரித்துவரும் உள்ளூர் இரயில் போக்குவரத்தை கையாளவும் நான்காவதாக ஓர் இரயில்வே முனையம்[48] கட்டுவதற்கான திட்டமும் ஆலோசனையில் உள்ளது.

வான்வழி

தொகு
 
சம்சாபாதில் உள்ள ராசீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் ஆண்டுதோறும் 40 மில்லியன் மக்கள் வந்து செல்லுமளவிற்கு வசதியைக் கொண்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவு தற்பொழுது மிகுதியான அளவில் பயணிகளிடையே விமான போக்குவரத்து அதிகரித்துள்ளது.[49][50] பேகம்பேட் விமான நிலையத்தால் இச்சூழலை எதிர்கொள்ள இயலாமல் மார்ச்சு 22, 2008 அன்று மூடினார்கள்.[51] புதிய ராசீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை மார்ச் 2008 ஆம் ஆண்டு சோனியா காந்தி சம்சாபாதில் திறந்து வைத்தார். நகரின் தென் மேற்குப் பகுதியில்[52] உள்ள இந்த விமான நிலையமே புது தில்லிக்கு அடுத்ததாக இந்தியாவிலேயே இரண்டாவது மிக நீளமான ஓடுபாதை[53] கொண்ட விமான நிலையம் ஆகும். இங்கு சரக்குககள் கையாளுதல் மற்றும் பயணிகள் போக்குவரத்து இரண்டும் மிகுதியான அளவில் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டில் உள்ள பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் இயங்குகின்றன.[54]

விமான நிலையத்திற்கு அதிவேகமாகப் பயணிக்கும் பொருட்டு ப. வெ. நரசிம்மராவ் அதிவிரைவுப் பாதை என்கிற உயர்நிலை சாலையை மேதிபட்டினத்திலிருந்து ராஜேந்திரநகர் வரை கட்டினார்கள். இதனுடன் இணைந்து சுரங்கப்பாதை மற்றும் சிறப்பான மாற்றுவழியும் கட்டிமுடித்தார்கள். இந்தியாவிலேயே இதுதான் மிக நீளமான மேம்பாலமாகும்[55] நகரிலிருந்து புதிய விமான நிலையம் செல்வதற்கு மூன்று அகலமான சாலைகள் அமைந்துள்ளன.

கலாச்சாரம்

தொகு

வரலாற்று ரீதியாகத் தென்னிந்தியா மற்றும் வடஇந்தியாவின் கலாச்சாரமும், மொழி மரபுகளும் சந்திக்கும் இடமாக ஐதராபாத் விளங்குகிறது. இந்நகரில் வசிக்கும் மக்கள் ஐதராபாத்தி என்று அழைக்கப்படுகின்றனர், இவர்கள் இந்து மற்றும் இஸ்லாமிய மரபுகளின் கலப்பு சார்ந்து வளர்ந்த கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர். ஒரு ஐதராபாத் வாசி தெலுங்கு அல்லது உருது பேசும் இஸ்லாமியராகவோ அல்லது மராத்தியராகவோ அல்லது ஒரு மார்வாரியாகவோ அல்லது இந்தப் பல்வேறு இனக்குழுக்களில் ஒன்றாகவோ இருப்பின் அவர் ஐதராபாத்தைத் தாயகமாக உடையவரென அறியலாம்.[56]

ஐதராபாதில் அனைத்து கலாச்சாரம் மற்றும் மதத்தைச் சேர்ந்த பெண்களும் இந்தியப் பாரம்பரிய உடையான புடவையை அணிந்து கொள்கின்றனர், தற்காலத்தில் இளைய தலைமுறை பெண்களிடையே சல்வார் கமீஸ் அணியும் பழக்கமும் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கான ஐதராபாத் பாரம்பரிய உடையாகத் துப்பட்டா மற்றும் சல்வார் கமீஸ் உள்ளது, ஆண்களுக்கானதாக ஷெர்வானி விளங்குகிறது.[57] இது ஐதராபாதில் தெளிவாகப் புலப்படும் ஓர் கலாசார பழக்க வழக்கம் ஆகும்.[58]

ஆண்டுதோறும் கொண்டாடும் ஐதராபாத்தின் பொதுவிழாக்களில் ஒன்றாக விநாயகர் சதுர்த்தி விழாக்களும், அது தொடர்ந்த 10 நாள் விழாக்களுக்குப் பிறகு விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் அனந்த சதுர்த்தி (உள்ளூர்வாசிகளால் இது விநாயகர் நிமஜ்ஜனம் விசர்ஜனம் என்றறியப்படுகிறது) விழாவும் இந்துக்களால் கொண்டாடுகிறார்கள். போனலு என்பது வட்டார மொழி சார்ந்து உற்சாகமான ஒரு திருவிழாவாகும்.ரம்ழான் புனித மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் தெய்வ பக்தியுடனும், ஈகைக் குணத்தோடும் விரதம் இருக்கின்றனர், இதன் இறுதியாக ஈத் உல்-பிதர் என்னும் கொண்டாட்டத்தில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்வதுடன் இவ்விழா முடிவடைகிறது. அன்று சீர் கோரமா என்றறியப்படும் ஈத் என்கின்ற பாரம்பரிய இனிப்பு தயாரிக்கப் படுகிறது. சார்மினார்அருகே [சியா இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் முஹர்ரம் 10 அன்று (இஸ்லாம் நாள்காட்டியின் முதல் மாதம்) ஊர்வலம் நடத்துகிறார்கள், இதில் பங்கேற்பவர்கள் தங்கள் தலை, மார்பு, முதுகை கூர்மையான ஆயுதங்களால்(கத்தி, வாள், சங்கிலியில் கட்டப்பட்டிருக்கும் கத்தி) அடித்துக்கொண்டு தங்கள் இரத்தத்தை சிந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார்கள்.[59]

சமையல்

தொகு
 
ஐதராபாதி பிரயாணி

தென்னிந்திய, முகலாய மற்றும் பெர்சிய சமையலின் சங்கமமாக ஐதராபாதி சமையல் திகழ்கிறது. இங்கு ஐதராபாதி பிரியாணி மிகப் பிரபலமான உணவாக உள்ளது.[60] குபாணி கா மீதா, டபிள் கா மீதா, பிர்ணீ, பாயா) மற்றும் ஹலீம் என்றறியப்படும் நஹரி குல்சே (இது ரமலான் மாதத்தில் உண்ணும் பாரம்பரிய இறைச்சி உணவு), கட்டு கி கீர் (இனிப்பு கறிகாயை வைத்துச் செய்யும் இனிப்பு கஞ்சி), ஷீர் கோரமா (சேமியா மற்றும் பால் கொண்டு செய்யும் ஓர் திரவவகை இனிப்பு), மிர்ச்சி கா சாலன், பாகாரே பைகன், கட்டி தால், கிச்சடி மற்றும் கட்டா, டில் கி சட்னி, பைகன் கி சட்னி, டில் கா கட்டா, ஆம் கா அச்சார், கோஷ்ட் கா அசார், பியோசி (முட்டை வெள்ளை மற்றும் பாலை கொண்டு செய்யும் இனிப்பு), ஷாஹி துக்டே, கீமா ஆலு போன்றவையும் வீட்டில் தயாரிக்கும் உணவு வகைகள் ஆகும்.[61][62]

இந்திய இனிப்புகள் பெரும்பாலும் நெய்யை அடிப்படையாகக் கொண்டதாகும். பிரபலமான இனிப்பு கடைகளில் பாரம்பரியமாக இவற்றைத் தயாரிக்கிறார்கள். புல்லா ரெட்டி, ராமி ரெட்டி இனிப்புகள் ஆகிய இரண்டு கடைகளுமே சுத்தமான நெய்யில் செய்த இனிப்புப் பலகாரங்களுக்கு ஐதராபாத்தில் புகழ்பெற்று விளங்குகின்றன. தெரு முனைகளில் பரவலாகக் இயங்கும் இராணி காபி கடைகளில், இராணி சாய், இராணி சமோசா மற்றும் ஒஸ்மானியா பிஸ்கெட்கள் ஆகியவை கிடைக்கின்றன.

இந்நகரில் இத்தாலிய, மெக்சிக, சைனீஸ் மற்றும் காண்டினெண்டல் ஆகிய புகழ்பெற்ற சமையல் வகைகளுடன் ஆந்திரா மற்றும் பிற தென்னிந்திய சமையல் வகைகளும் விரும்பி உண்ணப்படுகின்றன மதுபானக்கடைகளும் இப்பொழுது ஐதராபாதில் புகழ் பெற்று வருகின்றது.

கல்வியும் ஆராய்ச்சியும்

தொகு
 
ஐதராபாதில் இருக்கின்ற இந்திய வணிக பள்ளி, உலகின் MBA பள்ளிகளில் 15 இடத்தைப் பிடித்துள்ளது.- பினான்சியல் டைம்ஸ் ஆப் லண்டன், 2009[63]

ஐதராபாத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு குறிப்பிடத் தக்க கல்வி நிறுவனங்கள் உள்ளன.இந்த நகரில் மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்களும், இரண்டு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும், ஆறு மாநில பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவற்றில் 1917 ஆம் ஆண்டு துவங்கிய ஒஸ்மானியா பலகலைக்கழகம் இந்தியாவிலேயே ஏழாவது பழமைவாய்ந்த ஒன்றாகவும் தென்னிந்தியாவின் மூன்றாவது பழமையான பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது.[64] ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகம், சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம், மருந்தியல் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் (NIPER), போட்டி ஸ்ரீராமுலு தெலுங்குப் பல்கலைக்கழகம், மௌலானா அஸாத் தேசிய உருதுப் பல்கலைக்கழகம் மற்றும் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், Dr. BR அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆகியவை இந்நகரில் அமைந்துள்ள முக்கியமான பல்கலைக்கழகங்கள் ஆகும்.[65] ஆச்சார்யா N.G. ரங்கா வேளாண்மைப் பல்கலைக்கழகம், நகரின் வெளிப்புறத்தில் இருக்கும் சிறப்பு வாய்ந்த வேளாண்மைக் கல்வி நிறுவனமாகும்.

ஐதராபாத்தின் கச்சிபவுளியில் உள்ள இந்தியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் என்னும் சிறப்பான தரமுடைய வணிகப்பள்ளி, உலகின் பல பகுதிகளில் உள்ள மாணவர்களையும் கவர்கிறது.

ஐதராபாத்திலும் அதனைச் சுற்றியும் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு அமைந்துள்ள பொறியியல் கல்லூரிகளில் சிறப்பானவற்றில் சில: இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஐதராபாத், GITAM பல்கலைக்கழகம் ஐதராபாத் வளாகம், BITS பிலானியின் ஒரு வளாகம், வாசவி பொறியியல் கல்லூரி, இன்டெர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, VNR விஞ்ஞான ஜோதி இன்ஸ்டிட்யூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, MVSR பொறியியல் கல்லூரி, முஃபாகம் ஜா காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி, சைன்ட் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, டெக்கான் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மற்றும் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்றவைகளாகும். முக்கிய மருத்துவ கல்லூரிகளில் சில காந்தி மருத்துவ கல்லூரி, ஒஸ்மானியா மருத்துவ கல்லூரி ஆகியனவும் மற்றும் டெக்கான் மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் சதன் மருத்துவ கல்லூரி போன்ற தனியார் மருத்துவ கல்லூரிகளும் அடங்கும். ஃப்ளை-டெக் ஏவியேஷன் அகாடெமி மற்றும் ராஜீவ் காந்தி ஏவியேஷன் அகாடெமி ஆகியவை வான்வழி துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்கள் ஆகும்.

ஐதராபாதில் மிகுதியான ஆய்வு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் சில: இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் (IICT), உயிரணு மற்றும் மூலக்கூற்று உயிரியியல் மையம் (CCMB), தேசிய புவியமைப்பியல் ஆய்வு நிறுவனம் (NGRI பரணிடப்பட்டது 2011-07-07 at the வந்தவழி இயந்திரம்), IRISET ஃபார் ரயில்வே சிக்னல் இன்ஜினியரிங் மற்றும் ICRISAT போன்றவை உள்ளடங்கும். பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புடன் (DRDO) ஐதராபாதில் உள்ள DRDL மற்றும் DERL ஆகிய ஆய்வு மையங்கள் இணைந்து ஒருங்கிணைந்து வழிபடுத்திய ஏவுகணை மேம்பாட்டு திட்டத்திற்கான (IGMDP) தகவல் தொடர்புகள் மற்றும் ரேடார் அமைப்புகளை மேம்படுத்தும் பணியினைச் செய்துவருகிறது. அணுக்கரு ஆற்றல் பிரிவில் மிகுதியான பங்களிப்பை நல்கும் மூன்று நிறுவனங்கள் அணு ஆற்றல் துறையின் (இந்தியா) கீழ் செயல்பட்டு வருகின்றது, அட்டோமிக் மினரல்ஸ் டைரக்ட்டரேட் ஃபார் எக்ஸ்ப்ளோரேஷன் அண்ட் ரிசர்ச் (AMD), நியூக்ளியர் ஃப்யூயல் காம்ப்ளெக்ஸ் (NFC), எலெக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடட் (ECIL) என்பனவே அம்மூன்று நிறுவனங்களாகும்.[43]

ஐதராபாத் பெரிய அளவிலான சர்வதேச மாநாடுகளை நடத்திவருகிறது. ஐதராபாத் ஆகஸ்ட் 2010 இல் இண்டர்நேஷனல் காங்கிரஸ் ஆப் மேத்தமேட்டிசியன்ஸ் (ICM) என்கின்ற பெருமைவாய்ந்த மாநாட்டை நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக 4000 க்கும் மேற்பட்ட கணிதவியலாளர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊடகங்கள்

தொகு
 
பிரசாத் IMAX திரையரங்கு. உலகின் மிகப்பெரிய IMAX-3D அரங்கம்.[66]
 
ரவீந்திர பாரதி, கலை மற்றும் நாடகத்திற்குப் புகழ்பெற்ற மையம்.

இந்தியாவிலேயே மிகப் பெரிய திரைப்படத் தொழிற்சாலையை ஐதராபாத் கொண்டுள்ளது, இங்கு ஏராளமான படங்கள் தயாரிக்கப்படுகின்றன, டோலிவுட் என்றழைக்கப்படும் தெலுங்கு சினிமா உலகில் ஆண்டுதோறும் சுமார் முன்னூறு படங்கள் தயாரிக்கப்படுகிறது. சாரதி ஸ்டூடியோஸ், அன்னபூர்ணா ஸ்டூடியோஸ், ராமநாய்டு ஸ்டூடியோஸ், ராமகிருஷ்ணா ஸ்டூடியோஸ், பத்மாலயா ஸ்டூடியோஸ், ராமோஜி திரைப்பட நகரம் (இந்தியாவின் மிகப்பெரிய திரைப்படத் தளம்) ஆகியவை இந்நகரில் உள்ள பிரபலமான படப்பிடிப்புத் தளங்கள் ஆகும். முதல் ஐதராபாத் சர்வதேச திரைப்படத் திருவிழா (HIFF) 2007 ஆம் ஆண்டு ஐதராபாத் திரைப்படக் கழகம் மற்றும் ஆந்திரப் பிரதேச திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.ஆசியாவிலேயே மிகப்பெரிய ஐமேக்ஸ் 3D திரையரங்கம் இங்குள்ளது, மற்றும் உலகிலேயே ஆற்றல் வாய்ந்த 24 நோக்காடி குவிமையத்தைக் (optical focus) கொண்ட ஒளிப்படக்காட்டியானது இந்தியாவின் ஐதராபாதில் உள்ள பிரசாத் ஐமேக்ஸில் 4D சிம்யுலேடரைக் கொண்டு அமைந்துள்ளது. ஐநாக்ஸ், PVR சினிமாஸ், சினி பிளானெட், சினிமாக்ஸ், பிக் சினிமாஸ், தாகி டவுன் போன்றவைகள் ஐதராபாத்தின் முக்கிய பல்திறத் திரையரங்கங்கள் ஆகும். வருங்காலத்தில் குகட்பல்லி, கசெகுட போன்ற இடங்களில் 17 பல்திற திரையரங்குகள் வரவிருக்கிறது.[67]

சைபாபாத்தில் அமைந்துள்ள ரவீந்திர பாரதி கலையரங்கம், நாடகம் மற்றும் நிகழ்த்துக் கலைகளுக்கான ஒரு முக்கியமான புகழ்பெற்ற மையமாக இந்நகரில் திகழ்கிறது. உலகம் முழுவதுமிருந்து வருகின்ற பல கலைஞர்கள் இங்கு வழக்கமாகத் தம் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். லலித்கலா தோரணம், சில்பகலா வேதிகா போன்ற கலையரங்குகளும் கலை மற்றும் நாடகங்களுக்கான மையமாக விளங்குகிறது. இம்மாநிலத்தின் ஐதராபாத் இண்டர்நேஷனல் கன்வென்ஷன் சென்டர் (HICC) அல்லது சுருக்கமாக HITEX, உலகத்தரம் வாய்ந்த தெற்காசியாவின் முதல் கலை மையமாகும்.[68]

வானொலித் துறை, தனியார் மற்றும் அரசின் புதிய பல FM (பண்பலை) அலைவரிசைகளை அமுகம் செய்து வளர்ச்சியடைந்து காணப்படுகிறது. இந்நகரில் ஒலிபரப்பாகும் FM வானொலி அலைவரிசைகளாவன: விவித் பாரதி FM (102.8 MHz), ரெயின்போ FM (101.9 MHz), ரேடியோ மிர்ச்சி FM (98.3 MHz), ரேடியோ சிட்டி FM (91.1 MHz), பிக் FM (92.7 MHz), ரெட் FM (93.5 MHz) மற்றும் AIR ஞான வாணி FM (107.6 MHz). அரசிற்கு சொந்தமான தூர்தர்ஷன் நிறுவனம் இரு தரைவழி ஒளிபரப்பு அடிப்படையிலான தொலைக்காட்சி அலைவரிசைகளையும், ஒரு செயற்கைக்கோள் ஒளிபரப்பு அடிப்படையிலான தொலைக்காட்சி அலைவரிசையையும் ஐதராபாத்திலிருந்து ஒளிபரப்பி வருகிறது. ஐதராபாத்திலிருந்து ஒளிப்பரப்பாகும் சில பிரபலமான தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகள்: ABN - TV9, MAA TV, i-நியூஸ், ஆந்தரஜ்யோதி நியூஸ், ஜெமினி, தேஜா, ஜீ தெலுங்கு, சாக்ஷி TV, லோக்கல் TV போன்றவையாகும்.

ஐதராபாத்திலிருந்து வெளி வரும் செய்தித்தாள்கள் மற்றும் நாளேடுகள் தெலுங்கு, உருது, ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியிடுகின்றன. தெலுங்கில் வெளிவரும் முக்கிய நாளிதழ்களாவன: ஈநாடு, சாக்ஷி, சூர்யா', வார்தா, ஆந்தர ஜ்யோதி, அந்தர பிரபா, அந்தர பூமி மற்றும் பிரஜா ஷக்தி என்பனவாகும். முக்கிய ஆங்கில நாளிதழ்களாவன: தி டைம்ஸ் ஆப் இந்தியா, தி ஹிந்து, தி டெக்கான் குரோனிகள், பிசினெஸ் ஸ்டாண்டர்ட், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தி எகனாமிக் டைம்ஸ் என்பனவாகும். இந்தியாவில் உள்ள பிற நகரங்களைக் காட்டிலும் ஐதராபாத்திலிருந்து தான் மிகுதியான உருது நாளிதழ்கள் வெளிவருகின்றன. முக்கிய உருது நாளிதழ்களாவன: தி சியாசாட் டெய்லி, தி முன்சிப் டெய்லி, தி எடேமாத், ரேஹ்னுமா-இ-டெக்கான், ரோசனாமா ராஷ்ட்ரிய சஹாரா மற்றும் தி டெய்லி மிலாப் என்பனவாகும்.

ஐதராபாத், ஒளிநாரிழை வடத்தினாலான பெரிய வலையமைப்பினால் பின்னப்பட்டுள்ளது. இந்நகரில் உள்ள நான்கு நிரந்தர தொலைபேசி இணைப்புகளாவன: BSNL, டாட்டா இண்டிகாம், ரிலையன்ஸ் மற்றும் ஏர்டெல் என்பனவாகும். GSM வசதியுடன் கூடிய பத்து கைபேசி நிறுவனங்கள் உள்ளன, அவற்றில் வோடபோன், ஏர்டெல், BSNL, ஐடியா, டாட்டா டோகோமோ, ரிலையன்ஸ், ஏர்செல் போன்ற நிறுவனங்கள் அடங்கும்; CDMA சேவைகளை BSNL, வெர்ஜின் மொபைல், டாட்டா இண்டிகாம் மற்றும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் தற்பொழுது வழங்கிவருகின்றன, இவற்றுடன் வெகுவிரைவில் ஸ்பைஸ் டெலிகாமும் இந்தச் சேவையை அளிக்கவுள்ளது.

விளையாட்டுகள்

தொகு
 
ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம்

கிரிக்கெட் மற்றும் ஹாக்கி ஆகியவை இந்நகரின் முக்கிய விளையாட்டுகளாகும். 2005 ஆம் ஆண்டுக்கான பிரீமியர் ஹாக்கி லீக் பட்டத்தை ஐதராபாத் வென்றனர். இங்கு பெருமை வாய்ந்த தேசிய விளையாட்டுகள் மற்றும் ஆப்பிரிக்க-ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்தேறின. ஐதராபாத் 10கி.மீ மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சி ஆண்டுதோறும் இங்கு நடக்கிறது.

முதலில் கட்டிய விளையாட்டரங்கம் லால் பகதூர் சாஸ்திரி விளையாட்டரங்கம் ஆகும். முன்பு பதெக் மைதான் என்ற பெயரில் வழங்கிய இந்த மைதானமே, சமீபகாலம் வரை, சர்வதேச கிரிக்கேட் போட்டிகள் நடத்தும் ஒரே மைதானமாகத் திகழ்ந்தது. இங்கு 19 நவம்பர் 1955 அன்று முதல் கிரிக்கேட் போட்டி நடைபெற்றது. தற்பொழுது இந்த அரங்கம் ICL போட்டிகள் நடத்த பயன்பட்டு வருகிறது. உப்பலில் இருக்கும் புதிய ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஏறத்தாழ 55,000 பார்வையாளர்களை அமர்த்தும் அளவுக்குப் பெரியதாக உள்ளது மற்றும் இங்கு சர்வதேச தரத்திலான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள இருப்பிடங்களில் அதி நவீன உடற்பயிற்சிக் கூடமும் மற்றும் நீச்சல் குளமும் உள்ளன.[69]

ஐதராபாத் உலக புகழ் பெற்ற வீரர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் குலாம் அஹ்மத், முஹம்மத் அசாருதீன்,VVS லக்ஸ்மன் (கிரிக்கெட்), சயித் அப்துல் ரஹீம்,[70], சானியா மிர்சா (டென்னிஸ்), புல்லேலா கோபிசந்த், ஜ்வாலா குட்டா, சைனா நேவால், சேதன் ஆனந்த் (பூப்பந்தாட்டம்),முகேஷ் குமார்(ஹாக்கி) ஆகியோர் அடங்குவர்.

இந்தியன் பிரீமியர் லீகில் விளையாடும் ஐதராபாத்தின் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009 ஆம் ஆண்டுக்கான கோப்பையை வென்றனர்.இந்த நகரில் ஐதராபாத் ஹீரோஸ் என்ற ஒரு ICL அணியும் உள்ளது.[26]

இந்த நகரில் சுவர்ணந்திரா பிரதேஷ் விளையாட்டு அரங்கம் மற்றும் கச்சிபாலியில் உள்ள ஹாக்கி மற்றும் கால் பந்தாட்டத்திற்கான G.M.C. பாலயோகி விளையாட்டு அரங்கம் ஆகியன உள்ளன, மேலும் மிதி வண்டி போட்டிக்கான அதிநவீன விரைவுப்பாதை தடம் (Velodrome) ஒன்று இந்நகரில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் சீருடற்பயிற்சி (gymnastics), சுடுதல் போன்ற விளையாட்டுக்கான மையங்களைச் சரூர்நகர் உள்விளையாட்டரங்கம் மற்றும் ஐதராபாத் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கொண்டுள்ளதன் மூலமாகச் சிறப்பு பொருந்திய கலை மாநிலமாகத் திகழ்கிறது. கச்சிபவுளியில் உள்ள அக்குவாடிக் காம்ப்ளக்ஸ் ஸ்டேடியம் என்னும் நீச்சல்குள மைதானம் 3000 பார்வையாளர்கள் நீச்சல், பாய்ந்து முழுகுதல், நீர் போலோ மற்றும் ஒருங்கிணைந்த நிகழ்வுகளைக் கண்டுகளிக்கும் வகையில் சிறப்புற அமைந்துள்ளது. கோட்லா விஜய் பாஸ்கர் ரெட்டி உள்விளையாட்டு அரங்கம் என்னும் பல-பயன்பாடுடைய மைதானம் 2500 பார்வையாளர்களுக்கான இடவசதியைக் கொண்டுள்ளது மற்றும் இது மரத்தால் செய்யப்பட்ட தரையையும், வெப்பத்தை கட்டுப்படுத்தும் தன்மையையும் கொண்டுள்ளது. SAAP டென்னிஸ் வளாகத்தில் இருக்கும் மத்திய ஆடுகளத்தில் 5000 பார்வையாளர்களுக்கான இடவசதி உள்ளது மற்றும் இங்கு செயற்கை கூட்டிணைப்பினாலான மேற்பரப்பு கொண்ட ஏழு ஆடுகளங்கள் உள்ளன. ரோவிங், யாச்டிங், கையாகிங் மற்றும் கேநோவிங் போன்ற நீர் விளையாட்டுப் போட்டிகள் ஹுசைன் சாகர் ஏரியில் நடக்கின்றன. இந்த நகரில் ஐந்து கோ-கார்டிங் தளங்களும் ஒரு பெயிண்ட் பால் மைதானமும் உள்ளன. மேசை டென்னிஸ், கூடைபந்தாட்டம், குதிரையேற்றம், குத்துச்சண்டை, பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளுக்கான உலகத்தரம் வாய்ந்த மையங்களும் உள்ளன. ஐதராபாத், ஆந்திரப்பிரதேசத்தில் மோட்டார் பந்தயப் போட்டிகள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது, ஆந்திரப் பிரதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் (APMSC) இங்கு 1977 ஆம் ஆண்டு துவங்கியது. இது தொடர்ந்து டெக்கான் 1/4 மைல் ட்ராக், TSD ராலீஸ், 4x4 ஆப் ரோடு போன்ற சிறப்புமிகு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது, இது சமீப காலமாக இந்தியா முழுவதிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நகரம் குதிரைப்பந்தயத்திற்கு சிறப்புவாய்ந்ததாகும். நிஜாம் ரேஸ் க்ளப் என்று பெயர் பெற்ற ஐதராபாத் ரேஸ் கிளப் மலக்பெட் என்னுமிடத்தில் உள்ளது. ஐதராபாத் ரேஸ் கிளப், நாடு முழுவதிலுமுள்ள குதிரைப்பந்தய வீரர்களைப் பல்வேறு டெர்பைஸ்களை/நிகழ்வுகளை நடத்துவதன் மூலம் வெகுவாகக் கவர்ந்துவருகின்றது. டெக்கான் டெர்பை என்னும் போட்டி ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் புகழ்பெற்ற நிகழ்வாக உள்ளது. சமீப காலமாக இங்கு குளிர்கால போட்டிகளும் நடக்கின்றன. கச்சிபவுளி மைதானம் மற்றும் கோட்லா விஜய் பாஸ்கர் மைதானம் போன்ற மைதானங்களில் பூப்ந்தாட்டப் போட்டிகள் நடக்கின்றன, மேலும் இவ்விளையாட்டு இளைஞர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களால் உள்ளூர் பூங்காக்களிலும் விளையாடப்படுகிறது.

சுற்றுலா தலங்கள்

தொகு
 
ஹைதெராபாத் உள்ள சார்மினார்
 
உசேன் சாகர் ஏரியில் இருக்கும் புத்தர் சிலை
 
சலர் ஜங் அருங்காட்சியகம்
 
ராமோஜி திரைப்பட நகரம்
 
ந. தா. இராமா இராவ் பூங்காக்கள்
 
கோல்கொண்டா கோட்டை
  • நகரின் நடுவில் வெள்ளை பளிங்கால் அமைந்த வெங்கடேசுவரர் சுவாமி கோவிலான பிர்லா மந்திர் உள்ளது.
  • மெக்கா மஸ்ஜித் - ஐதராபாதில் இருக்கும் மிகப்பழமையானதும் பெரியதுமான மசூதி.
  • சார்மினார் - ஐதராபாத்தின் மிக முக்கியமான தளம் ஆகும். நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இதில் நான்கு அழகிய தூபிகள் உள்ளன. ஐதராபாத்தை நிறுவிய முஹம்மது க்யூலி குதுப் ஷா இதைக் கட்டினார், ஒரு தீராத தொற்று நோயினை முடிவுக்குக் கொண்டு வந்தமை குறித்த நன்றிக்காகவும் மற்றும் ஹுசைனுக்கான புகழ் சின்னமாகவும் கட்டியதாகும். சார்மினார் நினைவுச்சின்னத்தின் மையமாக அமைந்துள்ள சார்க்மன் என்னும் பகுதி நான்கு ஆரவளைவுகளைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொன்றின் வழியாகவும் நான்கு திசைகளை நோக்கியும் சாலைகள் அமைந்துள்ளன.
  • சௌமஹால்லா அரண்மனை - ஆசப் ஜாஹியின் வம்சத்தைச் சேர்ந்த இந்த அரண்மனையில், நிஜாம் தங்கள் விருந்தினர்கள் மற்றும் அரசு அலுவலகர்களை உபசரித்தார். 1750 ஆம் ஆண்டு நிஜாம் சலபட் ஜங் இதைக் கட்டினார். இச்பஹானில் உள்ள ஷா வின் அரண்மனையைப் போல் வடிவமைத்தது. உண்மையில் இது தொகுப்பு அரண்மனைகள் ஆகவும் இவை ஒவ்வொன்றும் தர்பார் கூடமாகவும் பயன்பட்டது. இப்பொழுது புதுப்பித்தபிறகு, இங்கு பல மாநாடுகள் நடைபெற்றன.
  • பாலாக்ணுமா அரண்மனை- பைகா கலைஞர்களுள் ஒருவரான நவாப் விகார் அல் உம்ரா என்னும் இத்தாலிய கட்டிட வல்லுநர், முழுவதுமாக இத்தாலிய பளிங்கால் கட்டியது. லூயிஸ் 14 -கட்டிட முறைப்படி கட்டிய இந்தக் கட்டிடம் மதிமயக்கும் அழகின் வடிவமாகும். இதில் பெருமளவிலான முகலாய வடிவமைப்புகளும், இத்தாலியப் பளிங்குகளும், கலையுணர்வுடன் இருக்கும் நீரூற்றுகளும் அமைந்துள்ளன. தற்பொழுது தாஜ் குழுவினர் இதை வாங்கியுள்ளனர், ஒரு புராதான பழமைவாய்ந்த உணவகமாக மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • கொல்கொண்டா கோட்டை - கொல்கொண்டா கோட்டை இந்தியாவின் மிகப் பிரம்மாணடமான கோட்டைகளில் ஒன்றாகும். மலையின் ஒரு பக்கமாக அமைந்துள்ளதாலும் மற்றும் இதன் உள்கட்டமைப்பினாலும், இருப்பிடம் சார்ந்தும் உலகிலேயே மிக வலிமை வாய்ந்த கோட்டைகளில் ஒன்றாக இது திகழ்கிறது.
  • உசேன் சாகர் - ஹஸ்ரத் உசேன் ஷா வாலி நிர்மாணித்த இந்தத் தடாகம் நகரின் மையப்பகுதியில் உள்ளது. மேலும் இந்த ஏரியின் மையப்பகுதியில் உள்ள தீவு போன்ற நிலப்பகுதியின் மேடையில் 19-மீட்டர் உயரமுள்ள ஒரு புத்தர் சிலையும் உள்ளது, இது ராக் ஓப் கிப்ரால்டர் என்று அழைக்கப்படுகிறது. இதன் கரையோரங்களில் அழகிய பூங்காக்களும், பிரபலமானவர்கள் சிலைகளும் அமைக்கப்பெற்ற பந்த் தடாகம் உள்ளது.
  • ஐதராபாத் முத்துக்கள் - ஐதராபாத் கடலிலிருந்து தொலைவில் இருந்தாலும் இது எப்பொழுதும் முத்துக்களின் நகரம் என்றே கூறப்படுகிறது. பதேர்கட்டி என்னும் சந்தை மிகவும் புகழ்பெற்ற முத்துக்களுக்கான சந்தையாகும்.
  • நெக்லெஸ் சாலை - இருபுறமும் மரங்களுள்ள அகலமான புகழ்பெற்ற இச்சாலை ஏரியின் மறு பக்கத்தில் உள்ளது. இது IMAX திரையரங்கு மற்றும் சஞ்சீவையா பூங்காவை இணைக்கிறது. இது ஐதராபாத் மக்களின் மாலை நேரங்களைக் கழிப்பதற்கான இடமாக உள்ளது. இவ்விடத்தில் எங்கும் பசுமையாக இருக்கும் புல் தரைகள் மற்றும் நீண்ட வரிசையிலான பூவிரிப்புகளால் ஆகிய மேற்பரப்பு கண்களுக்கு இதமாகக் காட்சியளிக்கின்றன. ஈட்-ஸ்ட்ரீட் மற்றும் வாடர் பிரண்ட் ஆகிய இரண்டும் இந்தப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற உணவகங்களாகும். இந்தப் பகுதியில் தற்பொழுது கூடுதலாக, புதியதாக அமைந்துள்ள ஜல விஹார் என்னும் சிறிய நீர் உலகம் உணர்வுகளுக்கு அமைதியை நல்கும் விதத்தில் அமைந்துள்ளது. PV கட் என்னுமிடம் PV நரசிம்மராவின் நினைவாக அமைந்துள்ளது.
  • குதுப் ஷாஹி கல்லறைகள் - கொல்கொண்டா கோட்டைக்கு அருகே உள்ள ஷைக்பேட்டையில், குதுப் ஷாஹி வம்சத்தைச் சார்ந்த வெவ்வேறு அரசர்களுக்கான கல்லறைகள் உள்ளன. இவை டெக்கான் கட்டிட வேலைப்பாடுடன் அமைந்துள்ள பெரிய தூபிகள், பிரம்மாண்டமான குவிமாடங்கள், நுணுக்கமான பளிங்கு வேலைப்பாடுகள் மற்றும் பல உள் வழிப்பாதைகள் ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன.
  • ராமோஜி திரைப்பட நகரம் - இது உலகிலேயே மிகப்பெரிய திரைப்படத் தளம் மற்றும் விளையாட்டுப் பூங்கா ஆகும். இதன் பரப்பளவு சுமார் 3,000 ஏக்கராகும் (8 km²). இது ஆசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தற்பொழுது இது உலகின் மிகப்பெரிய படப்பிடிப்புத் தளமாக இருப்பதால், இது உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. 1996 ஆம் ஆண்டு துவங்கப்பெற்ற இது, ஐதராபாத்திலிருந்து 20 நிமிட பயணத்தொலைவில் உள்ள விஜயவாடா நெடுஞ்சாலையில் உள்ளது.
  • சலார் ஜங் அருங்காட்சியகம் - இது ஒரே மனிதன் தனியாளாகச் சேகரித்த உலகத் தொல்பொருள்களின் மிகப்பெரிய அருங்காட்சியகமாகும். இங்கு தி வெயில்ட் ரெபேக்கா உள்ளிட்ட சேகரிப்பு மற்றும் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பிற தொல் பொருட்கள் பலவற்றின் சேகரிப்புகளும் உள்ளன. இந்த அருங்காட்சியகம் முழுவதையும் ஒரே நாளில் பார்ப்பது சாத்தியமற்றதாகும்.
  • லும்பினி பூங்கா - பொதுமக்களுக்கான சிறிய நகர பூங்கா. இது பரபரப்பாக இருக்கும் நெக்லஸ் சாலை பகுதியில் உள்ள உசேன் சாகர் ஏரியின் அருகாமையில் 7.5 ஏக்கர்கள் (0.030 கி.மீ2; 0.0117 ச.மீ) பரப்பளவில் அமைந்துள்ளது. இது மிகுதியான சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது. 2000ஆம் ஆண்டு முதல் இதனைப் புத்த பூர்ணிமா திட்டக் குழுவினர் நிருவகிக்கின்றனர்.[71] 25 ஆகஸ்ட் 2007 அன்று நடந்த முக்கிய தீவிரவாத சதித்திட்டம் காரணமாக இங்கு 44 நபர்கள் உயிர் இழந்தனர்.[72][73]
  • தாராமதி பரடரி|தாராமதி சத்திரம் - தாராமதி ஏரி என்னுமிடம் கண்டிப்பேட் ஏரியின் அருகாமையில் அமைந்துள்ளது. இது கோல்கொண்டாவின் ஏழாம் சுல்தானான அப்துல்லா குதுப் ஷா வின் காலகட்டத்தில், அவரது அன்புக்குரியவரான தாராமதி என்பவரின் நினைவாகக் கட்டியது. இது காதல் மற்றும் நளினத்தின் கலவையாக அமைந்த கலை வடிவமாக இடைக்காலங்களில் கொண்டாடப்பட்டது. இந்தச் சத்திரத்தில் காற்று வசதிக்காக 12 நுழை வாயில்கள் அமைந்துள்ளது. இது அக்காலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த தொழில்நுட்பமாகக் கருதப்படுகிறது.
  • உசுமான் சாகர் - 1920 ஆம் ஆண்டு மூசி ஆறு|மூசி ஆற்றின் மேல் கட்டிய அணையே உசுமான் சாகர் ஆகும். இது ஐதராபாத் மக்களுக்கு குடிநீர் வழங்கவும் 1908 ஆம் ஆண்டு ஐதராபாதில் வந்த வெள்ளத்தில் இருந்து மக்களைக் காப்பதற்கும் கட்டியது. இது ஐதராபாத்தின் கடைசி நிசாமான உசுமான் அலி கானின் காலத்தில் கட்டப்பட்டதால் இப்பெயரினைப் பெற்றது. உசுமான் ஏரி ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். குறிப்பாக மழைக்காலத்துக்குப் பிறகு நீர் நிறைந்து காணப்படும் இந்த ஏரி மற்றும் இங்குள்ள பூங்காக்கள், உணவகங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள் ஆகியன சிறப்பு வாய்ந்தவையாகும். ஐதராபாத் நகரத்திற்கு குடிநீரை வழங்கிக் கொண்டிருந்த இந்த ஏரி, பெருகிவரும் மக்கள்தொகைக் காரணமாக தற்பொழுது முழுமையான நீர் தேவையை வழங்க முடியாத நிலையில் உள்ளது. ஆகவே, தற்பொழுது இது பொதுமக்களின் பொழுதுபோக்குக்காக மட்டும் பயன்பட்டு வருகிறது.

சகோதர நகரங்கள்

தொகு

ஐதராபாத்தின் சகோதர நகரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

இவற்றையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. ஐதராபாத் ஏ-1 தர நகரமாக மேம்படுத்தப்பட்டது. வீட்டு வாடகை மற்றும் இழப்பீடு ஒதுக்கீட்டுக்காக இது செய்யப்பட்டது.". செலவுகள் துறை. நிதி அமைச்சரவை. 10 அக்டோபர். 2007
  2. "www.hudahyd.org/". Archived from the original on 2010-02-05. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  3. International Telugu Institute (தெலுங்கு: Antarjātīya Telugu Saṃstha). Telugu Vāṇi. பக். 12. 
  4. "74.125.153.132/search?q=cache:AAuVO7d3cVMJ:www.hyderabadi.net/new/index.php%3Fview%3Darticle%26catid%3D1:latest-news%26id%3D1:history-of-hyderabad%26format%3Dpdf+Theories+explaining+the+origins+and+etymology+behind+Hyderabad's+name+differ.&cd=1&hl=en&ct=clnk&gl=in".[தொடர்பிழந்த இணைப்பு]
  5. Venkateshwarlu, K. (10 செப்டம்பர் 2008). "Iron Age burial site discovered". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2008-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080913015958/http://www.hindu.com/2008/09/10/stories/2008091058090100.htm. 
  6. "Hyderabad's history could date back to 500 BC". எக்கனாமிக் டைம்சு. Archived from the original on 2009-01-04. பார்க்கப்பட்ட நாள் 2008-09-10.
  7. Olson, JS and R Shadle (1996). Historical Dictionary of the British Empire. Greenwood. p. 544. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-31329-366-X.
  8. Aleem, S (1984). Developments in Administration Under H.E.H. the Nizam VII. Osmania University Press. p. 243.
  9. Bansal, SP (2007). Encyclopedia of India. Smriti. p. 61. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8-18796-771-4.
  10. 10.0 10.1 Richards, J. F. (1975). "The Hyderabad Karnatik, 1687–1707". Modern Asian Studies 9 (2): 241–260. doi:10.1017/S0026749X00004996. https://archive.org/details/sim_modern-asian-studies_1975-04_9_2/page/241. 
  11. "Cities of India : Hyderabad".
  12. 12.0 12.1 "www.indiaelections.co.in/lok-sabha-constituencies/andhra-pradesh/hyderabad/comment-page-1/".[தொடர்பிழந்த இணைப்பு]
  13. 13.0 13.1 "answers.yahoo.com/question/index?qid=20090603030920AA851z8". Archived from the original on 2021-04-10. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  14. ஐதராபாத்தை இந்தியாவின் இரண்டாம் தலைநகராக்கும்படி கூறுகிறார் அம்பேத்கர்
  15. "hyderabadonline.in/Profile/History/". Archived from the original on 2010-09-21. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  16. "fallingrain.com: Hyderabad".
  17. "www.iloveindia.com/travel/hyderabad/index.html".
  18. "www.thisismyindia.com/about_hyderabad/hyderabad-history.html".
  19. 19.0 19.1 http://www.docstoc.com/docs/6180220/Hyderabad __Andhra_Pradesh
  20. "answers.yahoo.com/question/index?qid=20090429080433AAjrK6S". Archived from the original on 2012-10-16. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  21. Weatherbase. "Historical Weather for Hyderabad, India". பார்க்கப்பட்ட நாள் 2008-10-03.
  22. 22.0 22.1 ஐதராபாத் நகர் மக்கள் தொகை பரணிடப்பட்டது 2006-11-17 at the வந்தவழி இயந்திரம் World Gazetteer. 29 ஜூன் 2009 இல் மீட்டெடுக்கப்பட்டது.
  23. Census of India Census of India does not have information from previous censuses on their site. Data from past censuses was obtained from World Gazetteer
  24. ஐதராபாத் பெருநகர புள்ளி விவரவியல் பரணிடப்பட்டது 2010-10-08 at the வந்தவழி இயந்திரம் World Gazetteer. 29 ஜூன் 2009 இல் மீட்டெடுக்கப்பட்டது.
  25. Khan, Masood Ali, "Muslim population in AP", The Milli Gazette, August, 2004
  26. 26.0 26.1 "www.docstoc.com/docs/6180223/Hyderabad__India".
  27. "GHMC comes into existence". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2008-04-17.[தொடர்பிழந்த இணைப்பு]
  28. "www.india.tm/php/show_distMore_wiki.php?state_name=Andhra%20Pradesh&district_id=56728&district_name=Hyderabad". Archived from the original on 2011-10-07. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  29. Hahne, Elsa (2008). You are where you eat: stories and recipes from the neighborhoods of New Orleans. University Press of Mississippi. pp. 47–49. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57806-941-5.
  30. "hmdahyd.org/inside/pn_ejhuda.doc". Archived from the original on 2009-03-25. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  31. "bhagyanagartimes.com/govt.php". Archived from the original on 2011-07-07. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  32. "sandbproperties.com/".
  33. "The Genome Valley, Hyderabad". Archived from the original on 2016-03-08. பார்க்கப்பட்ட நாள் 2006-03-06.
  34. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-23. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  35. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-05-15. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  36. http://property.magicbricks.com/news_tracker/hyderabad.html
  37. "rickshawchallenge.com/route/tech-raid/hyderabad".
  38. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-26. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
  39. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-07-08. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  40. "Report on IT exports of India". Archived from the original on 2009-11-30. பார்க்கப்பட்ட நாள் 2007-12-05.
  41. "Niloufer Hospital".
  42. "L V Prasad Eye Institute". Archived from the original on 2010-09-30. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  43. 43.0 43.1 43.2 "indiaforu.com/About%20Hyderabad.html". Archived from the original on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  44. APSRTC official web site "APSRTC". பார்க்கப்பட்ட நாள் 2006-08-29. {{cite web}}: Check |url= value (help)
  45. [90]
  46. "www.tvsventures.com/html/why-hyd.htm".
  47. "mountrose.in/hyd_transport.php". Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  48. "www.hindu.com/2006/06/21/stories/2006062121130300.htm". Archived from the original on 2011-05-06. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  49. http://www.thehindu.com/2008/01/28/stories/2008012858690400.htm.
  50. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-09-09. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  51. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-10-29. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  52. .http://www.indianexpress.com/news/hyderabad-airport-opening-spicejet-pips-luf/287558/
  53. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-06-06. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  54. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-18. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  55. http://www.expressbuzz.com/edition/story.aspx?title=Expressway%20off-limits%20to%20the%20aam%20aadmi?&artid=RTgEA9tzokE=&type=[தொடர்பிழந்த இணைப்பு]
  56. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  57. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-03-31. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  58. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-01-14. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  59. "www.merinews.com/catFull.jsp?articleID=144502". Archived from the original on 2009-07-20. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  60. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-03-29. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  61. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-11. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  62. "jannah.org/madina/index.php?topic=2944.0". Archived from the original on 2011-07-24. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  63. [125]
  64. ""Vice Chancellor's Speech about Osmania University"". பார்க்கப்பட்ட நாள் 2007-11-15.
  65. "www.orissalinks.com/archives/1583".
  66. [134]
  67. "www.bharat.co.in/about-hyd.html".
  68. "ahssan.wordpress.com/2009/02/04/amazing-hyderabad-the-wonders-within/". Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  69. "sawaal.ibibo.com/hyderabad/about-stadiums-hyd-540175.html". Archived from the original on 2012-05-21. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.
  70. "Olympian footballers remember 'Rahim Saab' on his birth centenary". Thaindian.com. 17 August 2009. Archived from the original on 18 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2010. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  71. http://www.hmdahyd.org/inside/bppa1.doc&usg=AFQjCNG2KEGuc2aoPGGuuMejWysKGbJdrA%7Ctitle=BBPA%7Caccessdate=2009-06-19}}[தொடர்பிழந்த இணைப்பு]
  72. Syed Amin Jafri (25 August 2007). "Hyderabad: 42 killed, 50 injured in twin blasts". Rediff News. பார்க்கப்பட்ட நாள் 2009-06-19.
  73. Staff Reporter (Friday, 14 Jan 2005). "Trial run of laser show begins today". The Hindu - Online Edition of India's National Newspaper. Archived from the original on 2007-12-14. பார்க்கப்பட்ட நாள் 2009-06-19. {{cite web}}: Check date values in: |date= (help); Unknown parameter |= ignored (help)
  74. "Riverside's Sister Cities". City of Riverside, California. 2009. Archived from the original on 2012-05-16. பார்க்கப்பட்ட நாள் 5 ஆகத்து 2009.
  75. "Suwon's International Sisterhood & Friendship Cities". Suwon-si. Archived from the original on 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2010-09-16.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஐதராபாது
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்து_(இந்தியா)&oldid=4168974" இலிருந்து மீள்விக்கப்பட்டது