ஐசாஸ் கான்
ஐசாஸ் கான் (ஆங்கிலம்: Aizaz Khan) எனப்படும், முகம்மது ஐசாஸ் கான், 1993 மார்ச் 21 இல் பிறந்த இவர் ஓர் ஆங்காங் சர்வதேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார். பாக்கித்தானிய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2009 இல் ஆங்காங் தேசிய அணிக்காக அறிமுகமானார். பின்னர் அணிக்காக ஒரு வலது கை வேகப்பந்து வீச்சாளராகவும், திறமையான கீழ்-வரிசை வீரராகவும் விளையாடியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு2010 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையில்[1] ஆங்காங்கின் 19 வயதுக்குட்பட்டோருக்கான துடுப்பாட்டத்தில் விளையாடிய ஐசாஸ், 2011 உலக கிரிக்கெட் லீக் பிரிவு மூன்றில் ஆங்காங்கிற்காக தனது உலக துடுப்பாட்ட சங்கப் போட்டியில் அறிமுகமானார்.இந்த போட்டிகளில்தான் உகாண்டாவுக்கு எதிராக தனது பட்டியல் அ துடுப்பாட்டத்தில் அறிமுகமானார்.
இந்தத் தொடரில் மேலும் நான்கு பட்டியல் அ துடுப்பாட்டத்தில் விளையாடினார். கடைசியாக நமீபியாவுக்கு எதிராக விளையாடினார். [2] தனது ஐந்து போட்டிகளில், ஐசாஸ் ஓட்ட சராசரியாக 17.75 என்ற அளவில் 71 ஓட்டங்களை எடுத்தார். அதிகபட்சமாக 33 ஓட்டங்களை எடுத்தார். [3]
ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடிய 2012 சர்வதேச துடுப்பாட்ட சங்கத்தின் உலக இருபது -20 தகுதிச் சுற்றில், ஐசாஸ் எட்டு போட்டிகளில் 10 இலக்குகளைக் கைப்பற்றினார்.[4] இவரது பந்துவீச்சு சராசரி 17.40. மேலும் அமெரிக்காவிற்கு எதிராக 25 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதுபெற்றார்.
சர்வதேச போட்டிகள்
தொகு2014 உலகக் கோப்பைத் தகுதிச் சுற்றில் ஆங்காங்கின் செயல்திறன் ஒருநாள் போட்டிக்கான தகுதியினை தக்கவைக்கச் செய்தது. 2014 ஐ.சி.சி உலக இருபது -20 இன் குழு நிலைக்கு ஆங்காங்கும் தகுதி பெற்றது. நேபாளத்திற்கு எதிரான இருபதுக்கு -20 போட்டியில் இவர் அறிமுகமானார். [5] ஆஸ்திரேலியாவில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக, நவம்பர் 2014இல் ஆங்காங்கிற்காக தனது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் அறிமுகமானார். [6] அறிமுகமானபோது, அவர் எட்டாவது வீரராக களமிறங்கி 42 ஓட்டங்களை எடுத்தார். பட்டியல் அ போட்டிகளில் அவரது அதிகபட்ச ஓட்டமாகும். [7]
குறிப்புகள்
தொகு- ↑ "Youth One-Day International Matches played by Aizaz Khan". CricketArchive. Archived from the original on 25 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "List A Matches played by Aizaz Khan". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
- ↑ "List A Batting and Fielding For Each Team by Aizaz Khan". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
- ↑ ICC World Twenty20 Qualifier, 2011/12 / Records / Most wickets பரணிடப்பட்டது 24 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம் – ESPNcricinfo. Retrieved 25 November 2014.
- ↑ International Twenty20 matches played by Aizaz Khan (2) – CricketArchive. Retrieved 25 November 2014.
- ↑ "Hong Kong tour of Australia, 1st ODI: Papua New Guinea v Hong Kong at Townsville, Nov 8, 2014". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 November 2014.
- ↑ Hong Kong v Papua New Guinea, Digicel ODI Series 2014/15 (1st ODI) – CricketArchive. Retrieved 25 November 2014.
வெளி இணைப்புகள்
தொகு- Aizaz Khan at இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ
- Aizaz Khan at CricketArchive