ஐட்ஸாஸ் ஹசன்

ஐட்ஸா ஹசன் பங்காஷ் (Aitzaz Hasan Bangash) பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி சிறுவன் ஆவார். இவர், 2014ம் ஆண்டு, ஜனவரி 6ம் தேதி அன்று ஹங்கு கிராமத்தில் 2,000 மாணவர்களைக் கொண்ட தனது பள்ளியில் தற்கொலை குண்டுதாரி நுழைவதைத் தடுக்கும் போது இறந்தார்.[1][2]

தனது வகுப்பு தோழர்களைக் காப்பாற்ற ஐட்ஸாஸின் நடவடிக்கை பாகிஸ்தானின் இதயங்களை கவர்ந்தது, மேலும் அவர் ஒரு ஷாஹித் ( தியாகி ) மற்றும் 'தேசிய வீரர்' என்று பாராட்டப்பட்டார்.[3] அவரது செயலுக்காக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அலுவலகம் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனுக்கு சீதாரா-இ-சுஜாத் (துணிச்சலின் நட்சத்திரம்) உயர் சிவில் விருதை ஐட்சாஸ் ஹசனுக்கு வழங்குமாறு அறிவுறுத்தியது.[1][4] அவர் 2014 ஆம் ஆண்டிற்கான ஹெரால்டு ஆண்டின் சிறந்த நபராக பெயரிடப்பட்டார்.[5]

வாழ்க்கை தொகு

ஐட்ஸாஸ் ஹசனின் தந்தை முஜாஹித் அலி,[6] இந்த தாக்குதலின் போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்தார். இந்த வறிய பிராந்தியத்தில் உள்ள ஆண்கள் வளைகுடா பகுதி உட்பட வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கமாக இருந்தது.[3][7] அவரது குடும்பத்தில் அவரது தாய், சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர். ஐட்ஸாஸ் ஹசன் இப்ராஹிம் ஜாய் உயர்நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். ஹசனின் உறவினர் முடசிர் பங்காஷ் அவரை அனைத்து பாடநெறி நடவடிக்கைகளிலும் சிறந்து விளங்கிய ஒரு திறமையான மாணவர் என்று வர்ணித்தார்.[8]

ஐட்சாஸ் ஹசன் வாழ்ந்த பகுதி பல ஷியைட் முஸ்லிம்களின் தாயகமாக உள்ளது, அவர்களில் பலர் தலிபான்களால் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதமேந்திய தீவிர சுன்னி குழுக்களை வெளிப்படையாக விமர்சித்ததற்காக இந்த இளைஞர் அறியப்பட்டார்.[9]

இறப்பு தொகு

ஜனவரி 6, 2014 அன்று, ஹாங்குவில் உள்ள இப்ராஹிம் ஜாய் என்ற அரசு உயர்நிலைப் பள்ளியின் பள்ளி வாயிலுக்கு வெளியே ஐட்ஸாஸ் இருந்தார். மேலும் இரண்டு பள்ளித் தோழர்களுடன். அன்றைய தினம் களைப்பு காரணமாக ஐட்ஸாஸ் காலை பிரார்த்தனை சபையில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்த நேரத்தில், 20 முதல் 25 வயது இளைஞன் ஒருவர் வாயிலை அணுகி, "பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பம் கொடுக்க" இருப்பதாகக் கூறினார். மாணவர்களில் ஒருவர் அந்த மனிதனின் உடையில் ஒரு டெட்டனேட்டரைக் கவனித்தார், அதன்பின்னர் ஐட்ஸாஸின் பள்ளித் தோழர்கள் உள்ளே ஓடினர். அதே நேரத்தில் ஐட்ஸாஸ் தற்கொலைக் குண்டுதாரியை எதிர்கொண்டார். பின்னர் அந்த இளைஞர் தனது உடையை வெடிக்கச் செய்தார்.[7]

மற்ற தகவல்களின்படி, ஐட்ஸாஸ் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமான நபரைக் கண்டார். ஐட்ஸாஸ் அவரைத் தடுக்க முயன்றபோது, அவர் பள்ளியை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினார். குண்டுவெடிப்பைத் தடுக்கும் முயற்சியில், ஐட்ஸாஸ் ஒரு கல்லை வீசினார், அது அவரைத் தாக்கத் தவறியது. பின்னர் ஐட்ஸாஸ் அந்த நபரை நோக்கி ஓடிவந்து அவரைப் பிடித்தார், தற்கொலை குண்டுதாரி தனது வெடிக்கும் உடையை வெடிக்க தூண்டினார் என்பதாக உள்ளது.[10][11]

ஐட்சாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.[8] வேறு எந்த மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஐட்ஸாஸின் செயல், நூற்றுக்கணக்கான மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியது.[1] அவரது இறுதி சடங்கில் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.

பின்விளைவு தொகு

மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக தனது மகன் தியாகம் செய்ததாக ஐட்ஸாஸின் தந்தை கூறினார்: "என் மகன் தன் தாயை அழ வைத்தான், ஆனால் நூற்றுக்கணக்கான தாய்மார்களை தங்கள் குழந்தைகளுக்காக அழுவதிலிருந்து காப்பாற்றினான்." அவரது இறுதி சடங்கில் ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். பாகிஸ்தான் ராணுவத் தலைவர் சார்பாக ஐட்ஸாஸ் ஹசனின் கல்லறையில் மலர் மாலை அணிவிக்கப்பட்டது. ஐட்ஸாஸின் கதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் உணர்ச்சியை வெளிப்படுத்த வழிவகுத்தது, அங்கு #ஒரு மில்லியன் ஐட்ஸாஸ் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமானது.[12] அவரது செயலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முகநூல் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-ஜாங்வி குழு தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.[10]

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தகவல் அமைச்சர் ஷா ஃபர்மன், ஐட்ஸாஸ் "கைபர் பக்துன்க்வா மக்களின் உண்மையான தலைவர் மற்றும் உண்மையான முகம்" என்று கூறினார்.

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷெரீப், ஐட்ஸாஸ் ஹசன் "ஒரு தேசிய வீரர் என்றும் அவர் இன்றைய தனது நாளை, நாட்டு மக்களின் நாளைய தினத்திற்காக தியாகம் செய்துள்ளார்" என்று கூறினார்.[13][14]

பாகிஸ்தான் இளைஞர் கல்வி ஆர்வலரும், 2014 அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான மலாலா யூசுப்சாய், ஐட்ஸாஸை "துணிச்சல் மற்றும் தைரியமானவர்" என்று வர்ணித்து, "அவரது துணிச்சலை ஒருபோதும் மறக்கக்கூடாது" என்று கூறினார். ஹசனின் குடும்பத்திற்கு £ 5,000 நன்கொடை அளிப்பதாக அவர் உறுதியளித்தார்.[9]

ஃபஸல்-உர்-ரெஹ்மான் (அரசியல்வாதி) தலைமையிலான ஜாமியத் உலமா-இ-இஸ்லாம் (எஃப்), ஐட்ஸாஸை ஒரு " முஜாஹித் " என்று வர்ணித்து, "அவர் பயங்கரவாதத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம்" என்றும் கூறினார்.[15]

ஜனவரி 12 ஆம் தேதி, பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான், ஐட்ஸாஸ் ஹாசனின் குடும்பத்திற்கு ஒரு அறக்கட்டளை நிதி அமைப்பதாக அறிவித்தார். 2014ம் ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதி, மாகாண அரசாங்க பிரதிநிதிகள் இளம்-பருவத்தில் உள்ள குழந்தைகள் உள்ள குடும்பத்திற்காக ரூ. 5 மில்லியன் நிதியை அறிவித்து, ஐட்ஸாஸ் படித்த பள்ளியை "ஐட்ஸாஸ் ஹசன் ஷாஹீத் உயர்நிலைப்பள்ளி" என்று பெயர் மாற்றினர்.[16]

அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 2016 ஆம் ஆண்டில் சல்யூட் என்ற படம் வெளியிடப்பட்டது.[17]

அவரது பெயரில் இ.எம்.இ. கல்லூரியில் ஒரு விடுதி கட்டப்பட்டது.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "Aitzaz Hasan to be awarded Sitara-e-Shujjat". 11 January 2014 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181224214057/http://newsweekpakistan.com/aitzaz-hassan-to-be-awarded-sitaja-e-shujjat/. 
  2. "PM announces Sitara-e-Shujaat for Hangu student Aitzaz Hasan". 10 January 2014. http://www.asianews.co/pm-announces-sitara-e-shujaat-for-hangu-student-aitzaz-hasan/. 
  3. 3.0 3.1 "Teenager dies trying to stop suicide bomber at his school in Pakistan". TheJournal.ie. 9 January 2014. http://www.thejournal.ie/pakistan-teenager-stop-suicide-bomber-1257181-Jan2014/. 
  4. "Aitzaz Hasan: Pakistan 'hero' recommended for award". The Sydney Morning Herald. 11 January 2014. http://www.smh.com.au/world/pakistani-boy-aitzaz-hasan-hailed-a-hero-for-stopping-suicide-bomber-entering-school-20140111-hv80g.html. 
  5. "Herald's Person of the Year: Aitzaz Hasan". http://www.dawn.com/news/1154337/. 
  6. Al Jazeera and wire services. "'Heroic' Pakistani teen dies foiling suicide attack". Al Jazeera. பார்க்கப்பட்ட நாள் 11 January 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. 7.0 7.1 Correspondent. "Saving lives: A teenager's sacrifice for hundreds of mothers". The Express Tribune. பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
  8. 8.0 8.1 "Schoolboy, 14, hailed a hero after sacrificing his own life to save classmates from Pakistan suicide bomber". Daily Mail. 9 January 2014. http://www.dailymail.co.uk/news/article-2536545/Schoolboy-14-hailed-hero-sacrificing-life-save-classmates-Pakistan-suicide-bomber.html. 
  9. 9.0 9.1 "Hero teenager dies chasing suicide bomber away from his school in Pakistan". https://www.mirror.co.uk/news/world-news/aitzaz-hasan-hero-pakistan-teenager-3007263. 
  10. 10.0 10.1 "Pakistan teen dies stopping suicide bomber". Al Jazeera. 12 January 2014. http://www.aljazeera.com/news/asia/2014/01/pakistan-teen-dies-stopping-suicide-bomber-201411093049572374.html. பார்த்த நாள்: 12 January 2014. 
  11. "Whole nation proud of Hangu hero: COAS". The Nation. 12 January 2014. http://www.nation.com.pk/national/12-Jan-2014/whole-nation-proud-of-hangu-hero-coas. பார்த்த நாள்: 12 January 2014. 
  12. Saqib, Nasir. "Young defender: Public demands Nishaan-e-Haider for Aitizaz". பார்க்கப்பட்ட நாள் 9 January 2014.
  13. "Chief of the Army Staff (COAS) General Raheel Sharif hailed Aitzaz Hasan as a national hero". Khybernews.tv. 11 January 2014 இம் மூலத்தில் இருந்து 11 January 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140111173027/http://www.khybernews.tv/newsDetails.php?cat=7&key=NTAwNzE=. பார்த்த நாள்: 11 January 2014. 
  14. "Martyr for the nation: Army chief salutes valour of Hangu teenager". The Express Tribune. 12 January 2014. http://tribune.com.pk/story/658050/martyr-for-the-nation-army-chief-salutes-valour-of-hangu-teenager/. 
  15. "Aitzaz Hasan: 15-yr-old gave his life tackling a bomber, saved 2000 schoolmates". Dunya News. 8 January 2014. http://dunyanews.tv/index.php/en/Pakistan/207834-Aitzaz-Hasan-15yrold-gave-his-life-tackling-a-b/. 
  16. . January 14, 2014. 
  17. "Biopic 'Salute' to pay homage to Aitzaz Hassan". DAWN Images (Anum Rehman). http://www.dawn.com/news/1155493. பார்த்த நாள்: 11 July 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐட்ஸாஸ்_ஹசன்&oldid=3536360" இலிருந்து மீள்விக்கப்பட்டது