ஐதராபாத் கருநாடகம் விடுதலை நாள்
ஐதராபாத் கருநாடகம் விடுதலை நாள் (Hyderabad-Karnataka Liberation Day), அதிகாரப்பூர்வமாக, கல்யாண்-கர்நாடக விடுதலை நாள் (விமோச்சன திவாசு[1]) என்று அழைக்கப்படும், இந்நாள் இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் பீதர் மாவட்டம், குல்பர்கா மாவட்டம், யாத்கிர் மாவட்டம், ராய்ச்சூர் மாவட்டம், பெல்லாரி மாவட்டம் மற்றும் கொப்பள் மாவட்டம், விஜயநகரம் போன்ற ஏழு மாவட்டங்களில் கொண்டாடப்படும் ஆண்டு விழா ஆகும்.[2] இந்நாள் செப்டம்பர் 17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியப் பிரிவினை மற்றும் ஐதராபாத் மாநிலத்தில் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து 1948-இல் ஐதராபாத்தை இந்தியாவுடன் இணைத்ததை இந்த விழா கொண்டாடுகிறது.
ஐதராபாத் கருநாடகம் விடுதலை நாள் | |
---|---|
அதிகாரப்பூர்வ பெயர் | ஐதராபாத் கருநாடகம் விடுதலை நாள் |
கடைபிடிப்போர் | |
வகை | அரசு விடுமுறை |
அனுசரிப்புகள் | பிராந்தியத்துடன் தொடர்புடைய பல்வேறு வரலாற்று, கலாச்சார மற்றும் சமூக நிகழ்ச்சிகளுடன் கொடி ஏற்றுதல் |
நாள் | 17 செப்டம்பர் |
நிகழ்வு | வருடந்தோறும் |
முதல் முறை | 17 செப்டம்பர் 1948 |
தொடர்புடையன | மராத்வாடா விடுதலை நாள் |
வரலாறு
தொகு1947-இல் பிரிவினையின் போது, கொள்கையளவில் தங்கள் சொந்தப் பிரதேசங்களுக்குள் சுயராஜ்ஜியத்தைக் கொண்டிருந்த இந்தியாவின் மன்னர் அரசுகள், ஆங்கிலேயர்களுடன் துணை கூட்டணிகளுக்கு உட்பட்டு, அவர்களுக்குத் தங்கள் வெளி உறவுகளின் கட்டுப்பாட்டைக் கொடுத்தன. இந்திய சுதந்திரச் சட்டம் 1947 உடன், ஆங்கிலேயர்கள் அத்தகைய கூட்டணிகளைக் கைவிட்டனர். முழு சுதந்திரத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை மாநிலங்களுக்கு விட்டுவிட்டனர்.[3][4] இருப்பினும், 1948 வாக்கில் கிட்டத்தட்ட அனைவரும் இந்தியா அல்லது பாக்கித்தானுடன் இணைந்தனர். ஒரு முக்கிய விதிவிலக்காக, செல்வம் மிகுந்த மற்றும் சக்திவாய்ந்த சமஸ்தானமான ஐதராபாத், அதன் நிஜாம், மிர் உஸ்மான் அலி கான், ஆசாப் ஜா VII, ஒரு முஸ்லீம் ஆட்சியாளர், பெருமளவில் இந்து மக்கள்தொகைக்குத் தலைமை தாங்கினர். சுதந்திரத்தைத் தேர்ந்தெடுத்து தனியாக இப்பகுதியினைப் பராமரிக்க விரும்பினர்.[5] :224 நிஜாம் தெலங்காணா கிளர்ச்சியால் சூழப்பட்டார். இதை இவரால் எதிர்கொள்ள முடியவில்லை.[5]:224
ஐதராபாத்தில் கிளர்ச்சியாளர்களால் பொதுவுடமை மாநிலமாக உருவாவதைத் தடுக்க,[6] முசுலீம் தேசியவாத இரசாக்கர்கள் போராளிகளின் எழுச்சிக்குப் பயந்து, இந்தியா இரசாக்கர்களை தோற்கடித்தனர். முடமான பொருளாதார முற்றுகையைத் தொடர்ந்து செப்டம்பர் 1948-இல் இந்தியா இம்மாநிலத்தைக் கைப்பற்றியது.[7][8] பின்னர், நிஜாம் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.[9] இந்த நடவடிக்கை வகுப்புவாத அடிப்படையில் பாரிய வன்முறைக்கு வழிவகுத்தது, சில சமயங்களில் இந்தியத் தரைப்படையினால் நிகழ்த்தப்பட்டது.[10][11]
அப்போதிருந்து, உள்ளூர்வாசிகள் அந்த நாளை ஒரு பிராந்தியச் சுதந்திர தினமாக நினைவுகூருகின்றனர். 2022ஆம் ஆண்டில், தெலங்காணா அரசு இந்த நாளை தெலங்காணா தேசிய ஒருங்கிணைப்பு தினமாக (தெலங்காணா ஜாதிய சமிக்யதா வஜ்ரோத்சவம்) கொண்டாட முடிவு செய்தது.[12]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Hyderabad-Karnataka region celebrates Vimochana Diwas". DNA India. 18 September 2013. பார்க்கப்பட்ட நாள் 13 July 2022.
- ↑ Dr. Somanatha.C.H (May 2020). "The Freedom Struggle of Kalyana Karnataka. with Special Reference to Koppal and Ballari district". International Journal of Research and Analytical Reviews 7 (2): 455. பன்னாட்டுத் தர தொடர் எண்:2348-1269. https://www.ijrar.org/papers/IJRAR19D1339.pdf. பார்த்த நாள்: 13 July 2022.
- ↑ Mehrotra, S.R. (1979). Towards Indias Freedom And Partition. Delhi: Vikash Publishing House. p. 247. பார்க்கப்பட்ட நாள் 17 August 2019.
- ↑ See Section 7 (1) (b): "the suzerainty of His Majesty over the Indian States lapses, and with it, all treaties and agreements in force at the date of the passing of this Act between His Majesty and the rulers of Indian States, all functions exercisable by His Majesty at that date with respect to Indian States, all obligations of His Majesty existing at that date towards Indian States or the rulers thereof, and all powers, rights, authority or jurisdiction exercisable by His Majesty at that date in or in relation to Indian States by treaty, grant, usage, sufferance or otherwise."
- ↑ 5.0 5.1 Barbara D. Metcalf. A Concise History of India. Cambridge University Press.
- ↑ "Delhi felt Razakars, communists a threat to India". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2018-09-15. பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
- ↑ "New book on Hyderabad's Invasion, 1948's Police Action". The Milli Gazette — Indian Muslims Leading News Source (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-04.
- ↑ Sherman, Taylor C. (2007). "The integration of the princely state of Hyderabad and the making of the postcolonial state in India, 1948 – 56". Indian Economic & Social History Review 44 (4): 489–516. doi:10.1177/001946460704400404. http://eprints.lse.ac.uk/32805/1/Sherman_Integration_princely_state_2007.pdf.
- ↑ Chandra, Mukherjee & Mukherjee 2008, ப. 96.
- ↑ Thomson, Mike (24 September 2013). "Hyderabad 1948: India's hidden massacre". BBC. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
- ↑ Noorani 2014
- ↑ "After Owaisi' plea, KCR govt says Sept 17 to be observed as 'Telangana National Integration Day'". 3 September 2022.
ஆதாரங்கள்
தொகு- Chandra, Bipan; Mukherjee, Aditya; Mukherjee, Mridula (2008) [first published 1999], India Since Independence, Penguin Books India, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-310409-4
- Noorani, A. G. (2014), The Destruction of Hyderabad, Hurst & Co, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84904-439-4