ஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு

(ஐ.எஸ்.டி.என் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு (ஐ.எஸ்.டி.என் ) என்பது பொது தொலைபேசி வலையமைப்பில் (public switched telephone network) இருந்து வரும் பாரம்பரிய மின்சுற்றுகள் வழியாக ஒலி, ஒளி, தரவு மற்றும் பிற வலையமைப்பு சேவைகளின் இலக்குமுறைப் பரப்புகையை ஒரே நேரத்தில் கையாள்வதற்கான தொலைதொடர்பு தரமுறைகளின் ஒரு தொகுப்பாகும்.

ஐ.எஸ்.டி.என் தொலைபேசி

ஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு புழக்கத்துக்கு வருமுன், தொலைபேசி அமைப்பு முறையானது, தரவுகளுக்காக சில சிறப்பு சேவைகளை மட்டும் வைத்து கொண்டு, குரலொலியைக் கொண்டு செல்வதற்கான ஒரு வழியாக மட்டுமே பார்க்கப்பட்டது. ஒரே கம்பிகளில் தரவு மற்றும் குரலொலி இரண்டையும் ஒன்றாக கொண்டு செல்வது ஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பின் முக்கிய சிறப்பம்சமாகும், இதனோடு சேர்ந்திருக்கும் வசதிகள் பழைய தொலைபேசி அமைப்புமுறையில் கிடையாது. ஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்புக்கு பல்வேறு வகையான அணுகும் இடைமுகங்கள் இருக்கின்றன, இவை அடிப்படை வீத இடைமுகம் (BRI), முதன்மை வீத இடைமுகம் (PRI), மற்றும் அகலக்கற்றை ஐ.எஸ்.டி.என் (B-ISDN) என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

ஒருங்கிணை சேவை எண்ம வலையமைப்பு ஒரு மின்சுற்று-மாற்றும் தொலைபேசி வலையமைப்பு அமைப்புமுறையாகும், ஆனால் இது packet switched வலையமைப்புகள் அதனை அணுகுவதற்கும் இடமளிக்கிறது, மேலும் சாதாரண தொலைபேசிச் செப்புக் கம்பிகள் வழியாகவே குரலொலி மற்றும் தரவு ஆகிய இரண்டின் இலக்குமுறைப் பரப்புகையையும் அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது, இதனால் ஒரு தொடர்முறை தொலைபேசி அளிக்கும் குரலொலி தரத்தை விட இதில் சிறப்பான தரம் கிடைக்கிறது. இது மின்சுற்று-மாற்றும் இணைப்புகளையும் (குரலொலி அல்லது தரவு இரண்டிற்கும்), மற்றும் packet switched இணைப்புகளையும் (தரவுகளுக்கு மட்டும்) நொடிக்கு 64 கிலோபிட் மடங்குகளின் வேகத்தில் அளிக்கிறது. சில நாடுகளில் இணையத்தைப் பயன்படுத்த ஐ.எஸ்.டி.என் ஒரு முக்கிய சந்தை பயன்பாடாக அமைந்துள்ளது, இவ்வாறான இடங்களில் மோலோட்டம் மற்றும் கீழோட்டம் திசைகளில் ISDN அதிகபட்சமாக நொடிக்கு 128 கிலோபிட்கள் வேகத்தை அளிக்கிறது. ஐ.எஸ்.டி.என் B-தடங்கள் உயர்ந்த தரவு வேகவிகிதத்தை எட்ட இணைக்கப்படுகின்றன, இவற்றில் சுமார் 3 அல்லது 4 BRI-கள் (அதாவது, 6 முதல் 8 வரையிலான நொடிக்கு 64 கிலோபிட்களின் தடங்கள்) இணைக்கப்படுகின்றன.

ஐ.எஸ்.டி.என் என்பதை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நெறிமுறையுடன், Q.931 போன்ற நெறிமுறையுடன், தவறாக புரிந்து கொள்ள கூடாது, ஐ.எஸ்.டி.என் என்பது OSI மாடலின் கருத்தில் ஒரு வலையமைப்பாக, தரவு-தொடுப்பாக மற்றும் ஸ்தூல அடுக்காக நிறுவப்படுகிறது. பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், ஐ.எஸ்.டி.என் என்பது OSI மாடலின் அடுக்குகள் 1,2 மற்றும் 3 ஆகியவற்றில் இருக்கும் இலக்குமுறை சேவைகளின் ஒரு தொகுப்பாக கருதப்படுகிறது. ஒரே சமயத்தில் குரலொலி மற்றும் தரவு சேவைகள் இரண்டையும் அணுகுவதற்கான வசதியை அளிக்க ஐ.எஸ்.டி.என் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும், பொதுவான உபயோகம் ஐ.எஸ்.டி.என்-ஐ Q.931 மற்றும் அதனோடு சார்ந்த நெறிமுறைகளுக்குள் எல்லைக்கட்டிவிட்டது, மின்சுற்று-மாற்றும் இணைப்புகளை உருவாக்குவதற்கும், நீக்குவதற்குமான நெறிமுறைகளின் ஒரு தொகுப்பாக இருக்கும் இவை, பயனர்களுக்கு நவீன அழைப்பு வசதிகளை அளிக்கின்றன. இவை 1986-ல் அறிமுகப்படுத்தப்பட்டன.[1]

ஓர் ஒளிப்படக் கலந்தாய்வுக் கூட்டத்தின் போது, தனிநபர்களின் மேஜையிட ஒளிப்படக் கலந்தாய்வுக்கூட்ட அமைப்புமுறைகளுக்கும் மற்றும் குழுவின் (அறை) ஒளிப்படக் கலந்தாய்வுக்கூட்டங்களுக்கும் இடையே ஒரே சமயத்தில் குரலொலி, வீடியோ மற்றும் எழுத்துப் பரப்புகையை ஐ.எஸ்.டி.என் அளிக்கிறது.

ஐ.எஸ்.டி.என் உட்கூறுகள்

தொகு
  • ஒரேயொரு இணைப்பில் தரவு, குரலொலி, வீடியோ, மற்றும் மின்நகல் ஆகியவற்றில் குறைந்தபட்சம் ஏதாவது இரண்டை ஒரேநேரத்தில் இணைப்புகளில் அளிப்பதையே ஒருங்கிணைந்த சேவைகள் ஐ.எஸ்.டி.என்-இன் திறனாக குறிப்பிடுகிறது.

அந்த கம்பியில் பல உபகரணங்களை இணைத்து கொண்டு, தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளலாம். அதாவது, ஒரு ஐ.எஸ்.டி.என் இணைப்பானது பல தொடர்முறை தொலைபேசி இணைப்புகளை வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தாமல், பெரும்பாலான மக்களின் முழுமையான தொலைதொடர்பு தேவைகளை அதிக பரப்புகை வேகத்தில் கையாள்கிறது என்பதையே இது குறிக்கும்.

அடிப்படை வீத இடைமுகம்

தொகு

அடிப்படை வீத இடைமுகம் (BRI) என்பது ஐ.எஸ்.டி.என்-க்கான ஆரம்ப நிலை இடைமுகமாகும், இதில் ஒரு நிலையான தொலைபேசி தாமிர கம்பிகள் இணைப்பின் மூலமாக 128 kbit/s வேகத்தில் சேவை அளிக்கப்படும். 144 kbps விகிதம் இரண்டு 64 kbps தாங்கிச்செல்லும் தடமாகவும் ('B' தடங்கள்), ஒரு 16 kbps குறிகையாக்க தடமாகவும் ('D' தடம் அல்லது டெல்டா தடம்) பிரிக்கப்படுகிறது.

BRI என்பது சில நேரங்களில் 2B+D என்றும் குறிப்பிடப்படுகிறது

இந்த இடைமுகம் பின்வரும் வலையமைப்பு இடைமுகங்களைக் குறிப்பிடுகிறது:

  • U இடைமுகம் என்பது இணைப்பகத்திற்கும், ஒரு வலையமைப்பு கடைநிலை சாதனத்திற்கும் (network terminating unit) இடையே இருக்கும் ஓர் இரண்டு-கம்பி இடைமுகமாகும், இது வட அமெரிக்கா தவிர்த்த வலையமைப்புகளில் பொதுவாக வரையறை புள்ளியாக இருக்கிறது.
  • T இடைமுகம் என்பது ஒரு கணினிமயப்பட்ட சாதனத்திற்கும் மற்றும் ஒரு கடைநிலை அடாப்டருக்கும் இடையிலான ஒரு சீரியல் இடைமுகமாகும், இலக்குமுறை அமைப்பில் இது ஒரு மோடம் இணையானதாகும்.
  • S இடைமுகம் என்பது ஒரு நான்கு-கம்பி தொகுப்பு, ஐ.எஸ்.டி.என் வாடிக்கையாளர் சாதனங்கள் இதில் இணைக்கப்பட்டிருக்கும்; S & T ஆதார இடங்கள் பொதுவாக ஒரு NT1-ல் 'S/T' என்று எழுதப்பட்ட ஒரேயொரு இடைமுகமாக நிறுவப்படுகிறது
  • R இடைமுகம் என்பது ஒரு ஐ.எஸ்.டி.என் அல்லாத சாதனத்திற்கும், ஒரு கடைநிலை adaptor-க்கும் இடையிலான புள்ளியை வரையறுக்கிறது, இது இதுபோன்ற ஒரு சாதனத்திற்கு உள்ளேயே, வெளியேயும் மொழிமாற்றம் செய்கிறது.

BRI-ஐ.எஸ்.டி.என் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமாகும், ஆனால் வட அமெரிக்காவில் இது மிகவும் குறைந்தளவே பயன்படுத்தப்படுகிறது. இது ஜப்பானிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது - இங்கு இது INS64 என்று அழைக்கப்படுகிறது.

முதன்மை வீத இடைமுகம்

தொகு

முதன்மை வீத இடைமுகம் என்பது மற்றொரு ஐ.எஸ்.டி.என் சேவையாகும், இது உலகின் பெரும்பாலான இடங்களில் ஒரு E1-ஆக (2048 kbit/s) கொண்டு செல்லப்படுகிறது. ஒரு E1 என்பது 64 kbps கொண்ட 30 'B' தடங்களையும், 64 kbps கொண்ட ஒரு 'D' தடத்தையும் மற்றும் 64 kbps கொண்ட ஒரு மாற்றக்கூடிய மற்றும் alarm தடத்தையும் கொண்டிருக்கும். வட அமெரிக்காவில் PRI சேவையானது 1544 kbps (24 தடங்கள்) கொண்ட ஒன்று அல்லது பல T1-களில் (சில சமயம் இது 23B+D என்று குறிப்பிடப்படுகிறது) அனுப்பப்படுகிறது. ஒரு 'T1' என்பது 23 'B' தடங்களையும், குறிகையாக்கத்திற்காக (ஜப்பான் J1 என்றழைக்கப்படும் ஒரு மின்சுற்றைப் பயன்படுத்துகிறது, இதுவும் T1-ஐ போன்றதே ஆகும்) 1 'D' தடத்தையும் கொண்டிருக்கும்.

வட அமெரிக்காவில், ஒரேயொரு D தடம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட PRI-களைக் கட்டுப்படுத்த NFAS அனுமதிக்கிறது, சில நேரங்களில் இது "23B+D + n*24B" என்று அழைக்கப்படுகிறது. D-தடம் பின்புலசேமிப்பானது, முதன்மை D தடம் பழுதடையும் போது பயன்படுத்துவதற்காக இரண்டாவது D தடத்தை அனுமதிக்கிறது. NFAS-ன் ஒரு பிரபல பயன்பாடு T3-ல் அமைந்துள்ளது.

PRI-ஐ.எஸ்.டி.என் உலகம் முழுவதும் பிரபலமாகும், குறிப்பாக PBX-களுக்கான PSTN மின்சுற்றுகளின் இணைப்புகளில் இது மிகவும் பிரபலமாகும்.

குறைந்த விரிவகலம் கொண்ட BRI மின்சுற்றிற்கு பல வலையமைப்பு நிபுணர்கள் "ஐ.எஸ்.டி.என்" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினாலும் கூட, வட அமெரிக்காவில் பெரும்பாலான ISDN சேவைகள் உண்மையில் PRI மின்சுற்றுகளாக இருந்து PBX-க்காக செயலாற்றி வருகின்றன.[சான்று தேவை]

தரவுத் தடம்

தொகு

Bearer தடம் (B) என்பது G.711 குறியேற்றத்துடன் 8 கிலோஹெர்ட்சில் 8 பிட்களாக சாம்பிள் செய்யப்பட்ட ஒரு தரமுறைப்பட்ட 64 kbps குரலொலி தடமாகும். B-தடங்களும் இலக்குமுறை தடங்கள் தான் என்பதால், அவையும் தரவுகளைக் கொண்டு செல்லும்.

இந்த தடங்களில் ஒவ்வொன்றும் DS0 என்று அழைக்கப்படுகின்றன.

பெரும்பாலான B தடங்கள் ஒரு 64 kbps குறியாக்கத்தைக் கொண்டு செல்லும், ஆனால் RBS இணைப்புகளில் கொண்டு செல்லப்படுவதற்காக, 56kbps அளவிற்கும் சில தடங்கள் குறைக்கப்பட்டிருக்கும். கடந்த காலத்தில் இதுவொரு பிரச்சினையாக இருந்தது, ஆனால் தற்போதைய காலத்தில் இதுவொரு பிரச்சினையாக இல்லை.

குறிகையாக்க தடம்

தொகு

குறிகையாக்க தடம் (D) குறிகையாக்கத்திற்கான, தொடுப்பின் மற்றொரு பகுதியுடன் Q.931-ஐ பயன்படுத்துகிறது.

ஒரு BRI இணைப்பில் B அல்லது D தடங்களிலும், ஒரு PRI இணைப்பில் B தடங்களிலும் X.25-ஐ கொண்டு செல்ல முடியும். D-சேனலின் வழியாக X.25 என்பது மோடம் அமைப்பைத் தவிர்த்துவிடுவதாலும், B-தடம் வழியாக மைய அமைப்புமுறையுடன் அது இணைப்பை ஏற்படுத்தி மோடம்களின் தேவையைத் தவிர்த்து விடுவதாலும், மைய அமைப்புமுறைகளின் தொலைபேசி இணைப்புகளைச் சிறப்பாக பயன்படுத்துவதாலும், பல்வேறு விற்பனை-முறை (கிரெட் கார்டு) உபகரணங்களில் இதுவே பயன்படுத்தப்படுகிறது.

X.25 ஆனது "Always On/Dynamic ஐ.எஸ்.டி.என்", அல்லது AO/DI என்றழைக்கப்பட்ட ISDN நெறிமுறையின் ஒரு பாகமாக இருந்தது. இது X.25-இல் இருக்கும் D தடம் வழியாக பயனர் இணையத்துடன் ஒரு நிலையான பல-தொடுப்பு PPP இணைப்பை ஏற்படுத்தி கொள்ள அனுமதிக்கிறது.

ஃபிரேம் ரிலே

தொகு

எழுத்துவடிவில், BRI மற்றும் PRI-ன் D தடங்களின் வழியாக இஃபிரேம் ரிலே வேலை செய்ய முடியும், ஆனால் பயன்படுத்தும் போது, அது எப்போதாவது தான் வேலை செய்கிறது.

வாடிக்கையாளரும், தொழில்துறை முன்னோக்கும்

தொகு

ஐ.எஸ்.டி.என் உலகில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மிக பெருமளவிலான கண்ணோட்டம் இறுதி பயனருடையதாகும், இவர்கள் தங்கள் வீட்டின் தொலைபேசி/தரவு வலையமைப்பிற்குள் ஓர் இலக்குமுறைஇணைப்பை பெற விரும்புகிறார்கள், அத்துடன் ஒரு சாதாரண தொடர்முறை மோடம் இணைப்பை விட இதன் திறன் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பயன்படுத்தி வரும் இறுதி பயனரின் இணைய இணைப்பு இந்த கண்ணோட்டத்தில் தான் தொடர்புபட்டிருக்கிறது, மேலும் பல்வேறு ஐ.எஸ்.டி.என் மோடம்களின் வசதிகள் மீதான விவாதங்கள், அளிக்கப்படும் ஊடகம் மற்றும் கட்டண விகிதங்கள் (வசதிகள், கட்டணங்கள்) அனைத்துமே இந்த முன்னோக்கில் தான் இருக்கின்றன. பின்வரும் விவாதங்களில் பெரும்பாலானவை இந்த கண்ணோட்டத்தைச் சார்ந்தவையே ஆகும், ஆனால் ஒரு தரவு இணைப்பு சேவை என்றளவில், ஐ.எஸ்.டி.என் பெரும்பான்மையாக DSL தொழில்நுட்பத்தைக் கடந்து வந்துவிட்டிருக்கிறது.

இரண்டாவது கண்ணோட்டமானது: ஐ.எஸ்.டி.என் ஒரு முக்கிய தொழில்நுட்பமாக விளங்கும் தொலைபேசி தொழில்துறையைச் சார்ந்தது. சுவிட்சிங் அமைப்புமுறைகளுக்கு இடையில் கோர்வையாக இருக்கும் கம்பிகளின் தொகுப்பாக ஒரு தொலைபேசி வலையமைப்பு கருதப்படக்கூடும். இந்த கம்பிகளில் செல்லும் குறியாக்கத்திற்கான பொதுவான மின்சார வரன்முறை தான் T1 மற்றும் E1. தொலைபேசி நிறுவன சுவிட்சுகளுக்கு இடையில், இந்த குறிகையாக்கம் SS7 மூலமாக செய்யப்படுகிறது. வழக்கமாக, அடையவேண்டிய எண்ணை குறியேற்றம் செய்வதற்கு on-hook அல்லது off-hook நிலைகளை மற்றும் MF மற்றும் DTMF ஒலிகளைக் குறிப்பிட்டுக் காட்ட ஒரு PBX தான் தொடர் பிட் குறிகையாக்கத்துடன் T1 வழியாக இணைக்கப்படும். ஆனால் ஐ.எஸ்.டி.என் மேலும் சிறப்பார்ந்து இருக்கிறது, ஏனென்றால் நீண்ட ஒலி வரிசைகள் (ஓர் இலக்கத்திற்கு 100 மில்லி நொடி) மூலமாக எண்களை குறியேற்றம் செய்வதை விட இதில் சேதிகளை (message) மிக விரைவாக அனுப்பி வைக்க முடியும். இது மிக விரைவான அழைப்பு இணைப்பு நேரத்தை அளிக்கிறது. இது மட்டுமின்றி, மேலும் பல சிறப்பான வசதிகள் கிடைப்பதுடன், மோசடிகளும் குறைக்கப்படுகின்றன.

Public Switched Telephone Network-ற்கு(PSTN) புதிய சேவைகளைச் சேர்க்கும் நோக்கில், ஐ.எஸ்.டி.என்-ஐ ஒரு மென்-வலையமைப்பு தொழில்நுட்பமாகவும் பயன்படுத்த முடியும், மின்சுற்று-மாற்றும் இலக்குமுறைசேவைகளின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு நேரடியாக அணுகும் வசதியை பயனர்களுக்கு அளிப்பதன் மூலமாகவும், முக்கிய தரவு மின்சுற்று பயன்பாட்டில் ஒரு பின்புலசேமிப்பு அல்லது failsafe மின்சுற்று தீர்வாக கொடுப்பதன் மூலம் இதை அவ்வாறு பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஐ.எஸ்.டி.என்-னும், ஒலி/ஒளிபரப்பு தொழில்துறையும்

தொகு

குறைந்த மறைப்புத்தன்மை சுவிட்சிங்கிற்கான ஒரு நம்பகமான வழி, உயர்ந்த தரம், நீண்ட தூர ஒலி மின்சுற்றுகள் போன்ற வசதிகளை ஐ.எஸ்.டி.என் கொண்டிருப்பதால் இது ஒலி/ஒளிபரப்பு தொழில்துறையில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஒரு தனி B தடத்தின் வழியாக காலத்தேய்வு பிரச்சினை கொண்ட G.722 குறியீடு பயன்படுத்தப்பட்டு ஒரு குறை-தரத்திலான "ஐ.எஸ்.டி.என் ஒலி" அளிக்கப்படுகிறது என்ற போதினும், பொருந்தமான குறியீட்டின் இணைப்புடன் ஒரு ISDN BRI கொண்டு 20 Hz-20 kHz விரிவகலத்தில் ஸ்டீரியோ வகையிலான இருதரப்பு (bi-directional) ஒலியை அனுப்ப முடியும். உயர்தரமான ஒலி தேவை உள்ள இடங்களில் பல ஐ.எஸ்.டி.என் BRI-கள் தேவைப்படக்கூடும், இவற்றை இணையாக கொண்டு ஓர் உயர்ந்த விரிவகலம் கொண்ட மின்சுற்று-மாற்றும் இணைப்பை அளிக்க பயன்படுத்தலாம். பிபிசி ரேடியோ 3 பொதுவாக நேரடி வெளிப்புற ஒலி/ஒளிபரப்புக்காக 320kbps ஒலி stream-ஐ கொண்டு செல்ல மூன்று ஐ.எஸ்.டி.என் BRI-களைப் பயன்படுத்துகிறது. ஐ.எஸ்.டி.என் BRI சேவைகள் தொலைதூர ஸ்டூடியோக்களையும், விளையாட்டு மைதானங்களையும் மற்றும் வெளிப்புற ஒளிபரப்பு தளங்களையும் முதன்மை ஒளிபரப்பு ஸ்டூடியோவுடன் இணைக்க பயன்படுகிறது. செயற்கோள் வழியிலான ஐ.எஸ்.டி.என் உலகமெங்கும் வெளிப்புற பத்திரிக்கையாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. தொலைதூர செயற்கைகோள் ஒளிபரப்பு வாகனங்களுக்காக திரும்பி வரும் ஒலி தொடுப்புகளிலும் பொதுவாக ஐ.எஸ்.டி.என் பயன்படுத்தப்படுகிறது.

Comrex அணுகுதல் போன்ற IP அடிப்படையிலான streaming codec-கள் ஒளிபரப்புத்துறையில் கால்பதிக்க தொடங்கி உள்ளன, இவை தொலைதூர ஸ்டூடியோக்களை இணைக்க அகலக்கற்றை இணையத்தைப் பயன்படுத்துகின்றன. எவ்வாறிருப்பினும், ஒளிப்பரப்பாளர்களுக்கு நிலைப்புத்திறன் மிகவும் அத்தியாவசியமாகும், மேலும் ஐ.எஸ்.டி.என்-ஆல் அளிக்கப்படும் சேவை தரமும் இதுவரை packet switched மாற்று நுட்பங்களால் எட்டப்படவில்லை.

அமெரிக்காவிலும், கனடாவிலும்

தொகு

கனடாவிலும், அமெரிக்காவிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் தொலைபேசி தொழில்நுட்பத்தில் ஐ.எஸ்.டி.என்-BRI ஒருபோதும் சிறந்த வரவேற்பைப் பெறவில்லை, இன்று அதுவொரு ஒதுக்கப்பட்ட தொழில்நுட்பமாக விலகி இருக்கிறது. சேவை என்பது ஒரு பிரச்சினையின் தேடலில் இருந்து கிடைக்கும் ஒரு தீர்வு ,[2] சாத்தியக்கூறுகள் மற்றும் வசதிகளின் விரிவான கோர்வையைப் புரிந்து கொள்வதும், பயன்படுத்துவதும் பெரும்பாலான பயனர்களுக்கு கடினமாகும். ஐ.எஸ்.டி.என் நீண்ட காலமாக இந்த பிரச்சினைகளைக் குறிப்பிட்டு காட்டும் பல்வேறு தரங்குறைந்த விரிவாக்கங்களால் குறிப்பிடப்பட்டு வந்தது, அதாவது It Still Does Nothing (இது இன்னும் ஒன்றும் செய்துவிடவில்லை) , Innovations Subscribers Don't Need (புதிய பயனர்கள் தேவையில்லை), மற்றும் I Still Don't kNow (எனக்கு இன்னும் தெரியவில்லை) போன்ற வரிகளால் இது கேலி செய்யப்பட்டது.[3][4]

BRI சேவைக்குள் வரும் போது வரும் பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்றால், அகலக்கற்றை என்ற வார்த்தை என்ன கருத்தை குறித்ததோ அது அதிகப்படியாக குறைந்தபட்சம் 256 kbps குறிப்பிடும் வகையில் உள்வரவாக வாடிக்கையாளருக்கு மாற்றி அமைக்கப்பட்டது.[5] அமெரிக்காவில் ADSL பிரபலமாக வளர்ந்ததால், BRI-க்கான வாடிக்கையாளர் சந்தை சிதறியது. ADSL ஒரு செயல்பாட்டு தூரம் வரையறையைக் கொண்டிருக்கிறது என்பது தான் ஒரே நேர்மறையான உட்கூறாக இருக்கிறது, BRI நீண்ட தூரம் செயல்படும் என்பதோடு repeater-களையும் பயன்படுத்தும். இந்நிலையில், ADSL செயல்படுத்த முடியாத அளவிற்கு வாடிக்கையாளர் மிக தூரத்தில் இருக்கும் சூழ்நிலைகளில் BRI ஏற்றுக்கொள்ளப்படலாம். CenturyTel போன்ற சில வட அமெரிக்க CLEC-க்கள் BRI-ஐ கைவிட்டதுடன், அதைப் பயன்படுத்தி இணைய சேவையையும் அளிக்க போவதில்லை என்பதால் BRI-ன் பரவலான பயன்பாடு மேலும் சுருங்கியது.[6] ஆனால், AT&T நிறுவனம் பெரும்பாலான மாகாணங்களில் (குறிப்பாக முன்னாள் SBC/SWB மாகாணங்கள்) சாதாரண தொடர்முறை இணைப்பு இருக்கும் எந்த இடத்திலும் ஒரு ஐ.எஸ்.டி.என் BRI-ஐ நிறுவுகிறது என்பதோடு, அதன் மாத கட்டணம் சுமார் $35 டாலர்கள் மட்டுமே நிர்ணயித்திருக்கிறது.

தற்போது ஐ.எஸ்.டி.என்-BRI சிறப்பார்ந்த மற்றும் மிகவும் சிறப்பு தேவைகளில் மட்டும் தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயர்-மட்ட ஒளிப்படக் கலந்தாய்வுக்கூட்டம் செய்யப்படும் சோனி, Polycom மற்றும் Tandberg போன்ற நிறுவனங்களால் 6 B-தடங்கள் வரை ஒன்றாக இணைக்கப்படுகின்றன (ஒவ்வொரு 2 தடங்களுக்கும் ஒரு BRI மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது), இதன் மூலம் பெரும்பாலும் உலகின் எந்த மூலைக்கும் இலக்கமுறை, மின்சுற்று-மாற்றும் ஒளிப்பட இணைப்புகள் அளிக்க பயன்படுத்துகின்றன. இது மிகவும் செலவுமிக்கதாகும், மேலும் இது IP-அடிப்படையிலான கலந்தாய்வுகளில் மாற்றி வெளியேற்றப்படுகிறது, ஆனால் செலவைப் பற்றிய பிரச்சினை இல்லாமல், துல்லியமான தரமே முதன்மையான தேவையாக இருந்தால், BRI நுட்பமே சிறந்த தேர்வாகும்.

பெரும்பாலான நவீன VoIP அல்லாத PBX-கள் ஐ.எஸ்.டி.என்-PRI மின்சுற்றுகளையே பயன்படுத்துகின்றன. இவை பழைய தொடர்முறை இரு-தரப்பு மற்றும் டைரெக்ட் இன்வர்டு டையலிங் (DID) இணைப்புவழிகளை நீக்கிவிட்டு மைய அலுவலக சுவிட்சுடன் T1 இணைப்புகள் மூலமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. PRI ஆனது இரண்டு திசைகளில் இருந்தும் இணை அங்கீகரப்பு அழைப்பை (CLID) அளிக்க கூடியதாகும், இதன் மூலம் நிறுவனத்தின் முதன்மை எண்ணை அனுப்பாமல் ஒரு விரிவாக்க தொலைபேசி எண் அனுப்பப்படுகிறது. இது இன்றும் பொதுவாக பதிவாக்க ஸ்டூடியோக்களில் பயன்படுத்தப்படுகின்றன, அதாவது குரல் கொடுக்க கூடிய நடிகர் ஒரு ஸ்டூடியோவில் இருக்கும் போது, இயக்குநரும், தயாரிப்பாளரும் வேறொரு இடத்தில் இருக்கும் ஸ்டூடியோவில் இருந்து இணைந்திருப்பார்கள். ஐ.எஸ்.டி.என் நெறிமுறை இணைய சேவை வழியாக அல்லாமல் தடமாக பிரிக்கப்பட்ட வகையிலும், சக்திவாய்ந்த அழைப்பு அமைப்புடனும், மற்றும் திசைவு வசதிகளுடனும், விரைவான இணைப்புடனும் மற்றும் அளவிடக்கூடியளவிலும், சிறந்த ஒலி துல்லியத்தோடும் (POTS (Plain Old Telephone Service) உடன் ஒப்பிடுகையில்), குறைந்த தாமத நேரத்தோடும், மற்றும் உயர்ந்த அடர்த்தியுடன், குறைந்த கட்டணத்திலும் சேவையை வழங்குகிறது.

ஜப்பான்

தொகு

ஜப்பானில், சுமார் 1999 முதல் 2001 வரை ஓரளவிற்கு இது பிரபலமாக இருந்தது, ஆனால் ADSL இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஒரு முன்னணி ஜப்பானிய தொலைபேசி நிறுவனமான NTT நிறுவனம், INS64 மற்றும் INS1500 என்ற பெயர்களில் ஒரு ஐ.எஸ்.டி.என் சேவையை வழங்கி வருகிறது, இவை ISDN-ஐ விட குறைவான வரவேற்பையே பெற்றிருக்கின்றன.

இங்கிலாந்து

தொகு

இங்கிலாந்தில், பிரித்தானிய டெலிகாம் ஐ.எஸ்.டி.என்2e (BRI) மற்றும் ISDN30 (PRI) ஆகியவற்றை அளித்து வருகிறது. 2006 ஏப்ரல் வரை, ஹோம் ஹைவே மற்றும் பிஸினஸ் ஹைவே என்ற பெயர்களில் இவர்கள் சேவைகளை அளித்தார்கள், இவை BRI ஐ.எஸ்.டி.என் அடிப்படையிலான சேவைகளாகும், இது ISDN உடன் தொடர்முறை இணைப்பையும் ஒருங்கிணைத்து அளித்தது. ஹைவே திட்டங்களின் பிந்தைய பதிப்புகள் நேரடி கணினி அணுகுதலுக்காக யுனிவர்சல் சீரியல் பஸ் (USB) சாக்கெட்களையும் உள்ளடக்கமாக கொண்டிருந்தது. ஹோம் ஹைவே பல்வேறு வீட்டு பயனர்களால் பொதுவாக இணைய இணைப்பிற்காக ஏற்று கொள்ளப்பட்டது, ADSL அளவிற்கு விரைவாக இல்லை என்றாலும் கூட, ADSL நுட்பத்திற்கு முன்னதாகவே இது கிடைத்தது என்பதாலும், ADSL எட்ட முடியாத இடங்களில் இது கிடைத்ததாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. கேபிள் டிவி பகுதிகளில் வாழும் வெர்ஜின் அகலக்கற்றை வாடிக்கையாளர்களுக்காக வெர்ஜின் மீடியா நிறுவனமும் ஐ.எஸ்.டி.என் இணைப்புகளைப் பயன்படுத்தின[சான்று தேவை].

பிரான்ஸ்

தொகு

பிரான்ஸ் டெலிகாம் அவர்களின் தயாரிப்பு பெயரான நியூமெரிஸ் (2 B+D) என்ற பெயரின் கீழ் ஐ.எஸ்.டி.என் சேவைகளை வழங்குகிறார்கள், இதன்கீழ் ப்ரொஃபெஷனல் டியோ மற்றும் ஹோம் இடோ பதிப்புகள் இருக்கின்றன. பிரான்ஸில் பொதுவாக RNIS என்று குறிப்பிடப்படும் ஐ.எஸ்.டி.என், பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலான கிராமப்புறங்கள் மற்றும் புறநகர் பகுதிகளிலும், மற்றும் தொழில்துறைக்கான குரலொலி சேவை மற்றும் விற்பனை சார்ந்த கருவிகள் போன்ற பயன்பாடுகளிலும் ஐ.எஸ்.டி.என் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் கூட, ADSL-இன் அறிமுகம் தரவு பரிமாற்றம் மற்றும் இணைய அணுகுதலுக்கான ISDN பயன்பாட்டைக் குறைத்து வருகிறது.

ஜெர்மனி

தொகு

ஜெர்மனியில், ஐ.எஸ்.டி.என் மிகவும் பிரபலமாக இருக்கிறது, இங்கு சுமார் 25 மில்லியன் தடங்கள் நிறுவப்பட்டுள்ளன (2003-ல் ஜெர்மனியின் மொத்த வாடிக்கையாளர் இணைப்புகளில் 29 சதவீதமும், உலகளவிலான மொத்த ஐ.எஸ்.டி.என் தடங்களில் 20 சதவீதமும் ஜெர்மனியில் இருந்தது). ஐ.எஸ்.டி.என்-இன் வெற்றியின் காரணமாக, நிறுவப்பட்ட தொடர்முறை இணைப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தோச் டெலிகாம் (DTAG) BRI மற்றும் PRI ஆகிய இரண்டையும் வழங்குகிறது. போட்டி தொலைபேசி நிறுவனங்கள் பெரும்பாலும் தொடர்முறை இணைப்புகள் இல்லாமல் ஐ.எஸ்.டி.என்-ஐ மட்டுமே வழங்குகின்றன. ஆனால் இந்த சேவை வழங்குனர்கள் பொதுவாக வழங்கும் இலவச வன்பொருட்களில், ஒருங்கிணைந்த கடைநிலை இணைப்புசாதனங்களுடன் NTBA-கள் போன்ற POTS சாதனங்களைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. ADSL சேவைகள் பரவலாக இருப்பதால், ஐ.எஸ்.டி.என் இன்று குரலொலி மற்றும் மின்நகல் தொடர்பிற்கே முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இன்றும் பிரபலமாக இருப்பதற்கு ஜெர்மன் தொலைதொடர்பு சேவை வழங்குனர்களின் கட்டண கொள்கைக்கு நன்றி கூற வேண்டும். முக்கியமாக தொடர்முறை இணைப்புடன் கூடிய ADSL இணைப்பானது ஐ.எஸ்.டி.என்-ADSL ஒருங்கிணைந்த இணைப்பை விட கட்டணத்தில் எந்த இலாபத்தையும் தந்துவிட வில்லை என்பதால், இன்று ஐ.எஸ்.டி.என் (BRI) மற்றும் ADSL/VDSL ஆகியவை பெரும்பாலும் ஒரே இணைப்பில் சேர்த்து வழங்கப்படுகின்றன. சில ஜெர்மன் சேவை வழங்குனர்கள் அடுத்த தலைமுறை வலையமைப்பாக்கத்தை நிறுவ தொடங்கினார்கள், பொதுவாக இது DSL மற்றும் கோர்வையாக்கப்படாத லோக்கல் லூப் மூலமாக வழங்கப்பட்டது. ஆனால், ஒருசில சேவை வழங்குனர்கள் அதே சேவைகளை கேபிள் தொலைக்காட்சி உள்கட்டமைப்பின் மூலமாக வழங்கினார்கள் அல்லது, சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில், FTTH மூலமாக வழங்கினார்கள். ஐ.எஸ்.டி.என் பிரபலமானதால், இந்த தொலைதொடர்பு சேவை வழங்குனர்கள் அனைவரும் வெளிப்படையாக அவர்களின் தயாரிப்புகளை வீட்டு உபயோக கேட்வே உடன் சேர்த்து கொண்டார்கள், இந்த வீட்டு உபயோக கேட்வே ஒருங்கிணைந்த தொடர்முறை தொலைபேசி இணைப்புச்சாதனங்கள் மற்றும் ஐ.எஸ்.டி.என்-NGN இணைப்புச்சாதனங்கள் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்திருந்தது.

கிரீஸ்

தொகு

தொலைதொடர்பு சேவை வழங்குனரான OTE, கிரீஸில் ஐ.எஸ்.டி.என் BRI (BRA) சேவைகளை வழங்குகிறது. 2003-ல் ADSL அறிமுகத்தைத் தொடர்ந்து, தரவு பரிமாற்றத்திற்கான ஐ.எஸ்.டி.என்-இன் முக்கியத்துவம் குறைய தொடங்கியது, இதுவே இன்று சில பாயின்ட்-டூ-பாயின்ட் தேவைகளுக்காக ஓரங்கட்டப்பட்ட தொழில் பயன்பாடாக குறுகிவிட்டது.

இந்தியா

தொகு

இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை வழங்குனரும், அரசுத்துறை நிறுவனமும் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட், நாடு முழுவதும் அதன் ஐ.எஸ்.டி.என் வலையமைப்பின் வழியாக ISDN BRI மற்றும் PRI ஆகிய இரண்டு சேவைகளையும் வழங்கி வருகிறது. மாறா IP உடன் கூடிய ADSL அகலக்கற்றை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய பின்னர், தரவு பரிமாற்ற அளவு ADSL நுட்பத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருந்தும், ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கான பிரத்யேக கம்பிஇணைப்பு வாடிக்கையாளர்களுக்கான ஒரு பின்புலசேமிப்பு வலையமைப்பாக ஐ.எஸ்.டி.என் ஒரு முக்கிய பங்களிப்பை அளித்து வருகிறது, மேலும் வங்கிகள் போன்ற Eseva மையங்கள் [1] பரணிடப்பட்டது 2019-05-25 at the வந்தவழி இயந்திரம், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம், SBI ATM-கள் போன்ற நாட்டின் பல பகுதிகளில் கிளைகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு குறைந்த செலவில் நம்பகமான தரவு வலையமைப்பையும் இது வழங்குகிறது.

ரிலையன்ஸ் நிறுவனமும் (ADAG) ஐ.எஸ்.டி.என் சேவைகளை வழங்கி வருகிறது, அவ்வாறே VSNL நிறுவனமும் வழங்கி வருகிறது.

சர்வதேச அளவிலான நிறுவுதல்

தொகு

1000 நபர்கள் வசிக்கும் இடத்தில் ஐ.எஸ்.டி.என்-தடங்கள் எந்தளவிற்கு பரவியுள்ளன என்பதை குறித்து ஜெர்மன் அறிவியல்துறை 2005-ஆம் ஆண்டில் எடுத்த ஓர் ஆய்வு[7]:

உள்ளமைவுகள்

தொகு

ஐ.எஸ்.டி.என்-ல், இரண்டு விதமான தடங்கள் உள்ளன, அதாவது B (Bearer என்பதற்கானது) மற்றும் D ("டெல்டா" என்பதற்கானது) தடங்கள். B தடங்கள் தரவிற்காக (குரலொலியும் இதில் சேர்ந்திருக்கலாம்) பயன்படுத்தப்படும், D தடங்கள் குறிகையாக்கம் மற்றும் கட்டுப்பாட்டுக்கானவை (ஆனால் தரவிற்காகவும் பயன்படுத்தலாம்).

இரண்டு விதமான ஐ.எஸ்.டி.என் நிறுவுதல்கள் உள்ளன. அடிப்படை வீத இடைமுகமானது, Basic Rate Access (BRA) என்றும் அழைக்கப்படுகிறது — இது ஒவ்வொன்றும் 64 kbit/s விரிவகலம் உடன் கூடிய இரண்டு B தடங்களையும், 16 kbit/s விரிவகலம் உடன் கூடிய ஒரு D தடத்தையும் கொண்டிருக்கும். இந்த மூன்று தடங்களும் ஒன்றாக சேர்ந்து 2B+D என்று குறிப்பிடப்படும். ஐரோப்பாவில் Primary Rate Access (PRA) என்றும் அழைக்கப்படும் முதன்மை வீத இடைமுகம் (PRI) — அதிக எண்ணிக்கையிலான B தடங்களையும், ஒரு D தடத்தையும் 64 kbit/s விரிவகலத்தில் கொண்டிருக்கும். PRI-க்கான B தடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப வேறுபடும்: வட அமெரிக்கா மற்றும் ஜப்பானில் இது 1.544 Mbit/s (T1) வேகத்துடனான 23B+1D ஆகும்; ஐரோப்பா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இது 2.048 Mbit/s (E1) வேகத்துடனான 30B+1D ஆகும். ப்ராட்பேன்ட் இன்டகரேட்டட் சர்வீசஸ் டிஜிடல் நெட்வொர்க் (பி.ஐ.எஸ்.டி.என்) என்பது மற்றொரு ISDN நிறுவுதலாகும், இது ஒரே நேரத்தில் பல்வேறு வகையான சேவைகளைக் கையாள கூடியதாகும். இது முதன்மையாக வலையமைப்பு பின்புல ஊடகத்தில் பயன்படுத்தப்படும் என்பதோடு ATM-யும் பயன்படுத்துகிறது.

மற்றொரு மாற்று ஐ.எஸ்.டி.என் உள்ளமைவும் பயன்படுத்தப்படுகிறது, இதில் ஒரு ஐ.எஸ்.டி.என் BRI இணைப்பின் B தடங்கள் மொத்த இருதரப்பு விரிவகலத்தில் 128 kbit/s அளிக்க இணைக்கப்பட்டிருக்கும். இது இணைய இணைப்பு பயன்பாட்டில் இருக்கும் போது குரலொலி அழைப்புகளை அந்த இணைப்பில் தடுத்துவிடும். பல்வேறு BRI-களின் B தடங்களை ஒன்றிணைக்க முடியும், இது ஒரு 384K ஒளிப்படக் கலந்தாய்வுக்கூட்டம் சேனலில் பயன்படுத்தப்படுகிறது.

எட்டு பூஜ்ஜிய மாற்றீட்டுடன் கூடிய bipolar குறிமுறை நுட்பத்தைப் பயன்படுத்தி, தரவு தடங்களின் வழியாக அழைப்பின் தரவு பரிமாறப்படுகிறது, இதில் அழைப்பு அமைப்பு மற்றும் நிர்வாகத்திற்காக குறிகையாக்க (D) தடங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒருமுறை அழைப்பு ஏற்படுத்தப்பட்டதும், இரண்டு முனைகளுக்கும் இடையே ஒரு சாதாரண 64 kbit/s ஒத்தமைந்த இருதரப்பு தரவு தடம் (உண்மையில் இரண்டு ஒருதரப்பு தடங்களாக நிறுவப்பட்டிருக்கும், ஒவ்வொரு திசையிலும் ஒன்று என்ற வகையில்) இருக்கும், இது அழைப்பு முடிவுக்கு வரும் வரையில் நீடித்திருக்கும். ஒரே எதிர்தரப்பிற்கோ அல்லது வெவ்வேறு எதிர்தரப்பிற்கோ எத்தனை bearer தடங்கள் இருக்கின்றதோ அத்தனை அழைப்புகள் ஏற்படுத்தலாம். Bearer தடங்கள் மல்டிபிளக்சிங் செய்யப்படவும் கூடும், இது B தடம் BONDING என்றழைக்கப்படும் ஒரு செயல்முறை வழியாகவோ அல்லது பல-தொடுப்பு PPP "தொகுப்பிடுதல்" பயன்படுத்தியோ அல்லது ஒரு PRI-ல் ஒரு H0, H11, அல்லது H12 பயன்படுத்தியோ ஒரே, உயர்-விரிவகல தடங்களாகவும் இருக்கலாம்.

D தடத்தை X.25 தரவு பேக்கெட்களை அனுப்பவும், பெறவும் கூட பயன்படுத்த முடியும், அத்துடன் X.25 பேக்கெட் வலையமைப்பிற்கு இணைப்பை ஏற்படுத்தவும் கூட பயன்படுத்த முடியும், இது X.31-ல் குறிக்கப்பட்டிருக்கிறது. நடைமுறையில், X.31 ஆனது இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களில் மட்டுமே வர்த்தரீதியாக நிறுவப்பட்டிருக்கிறது.

ஆதாரப்புள்ளிகள்

தொகு

தொலைதொடர்பு நிறுவனத்திற்கும் மற்றும் கடைநிலை பயனர் ஐ.எஸ்.டி.என் உபகரணத்திற்கும் இடையே இருக்கும் சில குறிப்பிட்ட புள்ளிகளைக் குறிப்பிட ISDN தரமுறையில் ஓர் ஆதாரப்புள்ளிகளின் தொகுப்பு வரையறுக்கப்பட்டிருக்கிறது.

  • R - ஐ.எஸ்.டி.என் அல்லாத உபகரணத்திற்கும், ஒரு கடைநிலை இணைப்புச்சாதனத்திற்கும் (TA) இடையிலான ஒரு புள்ளியைக் குறிக்கிறது, இந்த கடைநிலை இணைப்புச்சாதனம் இதுபோன்ற ஒரு சாதனத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மொழிமாற்றம் செய்தளிக்கிறது.
  • S - ஐ.எஸ்.டி.என் சாதனத்திற்கும், ஒரு வலையமைப்பு விடுப்பு முறை 2 உபகரணத்திற்கும் (NT-2) இடையே ஒரு புள்ளியை வரையறுக்கிறது.
  • T - NT-2 மற்றும் NT-1 சாதனங்கள் 1-க்கு இடையில் புள்ளியை வரையறுக்கிறது.

1 பெரும்பாலான NT-1 சாதனங்கள் NT-2 சாதனங்களின் செயல்பாடுகளையும் செய்யக்கூடியவையாகும், இதனால் S மற்றும் T ஆதாரப்புள்ளிகள் பொதுவாக S/T ஆதாரப்புள்ளிக்குள் பிணைந்திருக்கும்.
² வட அமெரிக்காவிற்குள், NT-1 சாதனமானது வாடிக்கையாளர் இடத்தில் வைக்கும் சாதனமாக (CPE) இருக்கிறது என்பதோடு இது வாடிக்கையாளராலேயே பராமரிக்கப்பட்டாக வேண்டும், இதனால், U இடைமுகம் வாடிக்கையாளரிடம் அளிக்கப்பட்டு விடுகிறது. பிற இடங்களில், NT-1 சாதனம் தொலைதொடர்பு நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது, வாடிக்கையாளரிடம் S/T இடைமுகம் அளிக்கப்படுகிறது. இந்தியாவில், சேவை வழங்குனர்கள் U இடைமுகத்தை அளிக்கிறார்கள் மற்றும் சேவை வழங்குதலின் ஒரு பாகமாக NT1 சேவை வழங்குனரால் அளிக்கப்படும்.

தொலைதொடர்பின் வகைகள்

தொகு

பல்வேறு தரவு வகைகளில் ஒன்றாக, pulse குறியீட்டு பண்பேற்றம் செய்யப்பட்ட குரலொலி அழைப்புகள் 64 kbit/s தடங்கள் வழியாக அனுப்பப்படுகின்றன, இது பழைய குரலொலி PSTN-ஐ அணுகுவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இந்த தகவல் அழைப்பு ஏற்படுத்தப்படும் போது வலையமைப்பிற்கும், பயனரின் இறுதிநிலைக்கும் இடையே பரிமாறி கொள்ளப்படும். வட அமெரிக்காவில், தொடர்முறை இணைப்புகளுக்கு மாற்றாக ஐ.எஸ்.டி.என் தற்போது பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் இணைய பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. ஐ.எஸ்.டி.என் வழியாக அனுப்ப திட்டமிடப்பட்டிருந்த சில சேவைகள் மாறாக தற்போது இணைய வழியில் அளிக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பாவில், குறைப்பாக ஜெர்மனியில், சில வசதிகளுடனோ அல்லது வசதிகளே இல்லாமலோ ஒரு POTS தொலைபேசிக்கு எதிராக, வசதிகளுடன் கூடிய ஒரு தொலைபேசி என்ற வகையில் ஐ.எஸ்.டி.என் வெற்றிகரமாக சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், ஐ.எஸ்.டி.என்-இல் முதலில் கிடைத்த வசதிகள் (மூவழி அழைப்பு, அழைப்பைத் திருப்பி விடுதல், அழைப்பாளர் எண் அறிதல், இதர பிற இதுபோன்ற சேவைகள்) தற்போது சாதாரண தொடர்முறை தொலைபேசிகளிலும் கூட கிடைக்கின்றன, இது ஐ.எஸ்.டி.என்-இன் பயன்களை நீக்கிவிடுகின்றன. ஒரேசமயத்தில் பல அழைப்புகள் (ஒரு B சேனலுக்கு ஓர் அழைப்பு) செய்யும் சாத்தியக்கூறும் ISDN-இன் மற்றொரு முக்கிய ஆதாயமாகும், எடுத்துக்காட்டாக பெரிய குடும்பங்களில், ஆனால் குறைந்த கட்டணத்தோடு அதிகளவில் பிரபலமாகி இருக்கும் மொபைல் தொலைபேசியால் இதன் மீதான ஆர்வமும் குறைந்துவிட்டிருக்கிறது, ஒருதனி வாடிக்கையாளருக்கு ஐ.எஸ்.டி.என் பொருந்தி வருவதில்லை. ஆனால் POTS உடன் ஒப்பிடும் போது ஐ.எஸ்.டி.என் மிகவும் நம்பகத்தன்மை பெற்றதாகும், மேலும் POTS உடன் ஒப்பிடும் போது அழைப்பு ஏற்படுத்துவதற்கான நேரமும் கணிசமான அளவிற்கு இதில் விரைவாக இருக்கிறது, ஐ.எஸ்.டி.என் வழியாக IP இணைப்புகள் சுமார் 30-35ms சுற்று விடுப்பு நேரத்தையே எடுத்து கொள்கின்றன, இது 56k அல்லது V.34/V.92 மோடம்களில் 120-180ms (இரண்டும் பயன்படுத்தப்படாத இணைப்புகளில் அளவிடப்பட்டவையாகும்) எடுத்துக்கொள்ளும், இது தொலைதொடர்பு கணினிகளில் ஐ.எஸ்.டி.என்-ஐ மிகுந்த நம்பகத்தன்மைக்குரியதாகவும், துல்லியமானதாகவும் ஆக்குகிறது.

ஒரு தொடர்முறை இணைப்பிற்கு ஒரு மோடம் தேவைப்படுவதைப் போலவே, ஒரு ஐ.எஸ்.டி.என் இணைப்பிற்கு ஒரு கடைநிலை இணைப்புச்சாதனம் (TA) தேவைப்படுகிறது. ஒரு ஐ.எஸ்.டி.என் கடைநிலை இணைப்புச்சாதனத்தின் செயல்பாடு பெரும்பாலும் S/T இடைமுகத்துடன் கூடிய ஒரு PC அட்டை வடிவத்தில் அளிக்கப்படும், மேலும் ஒரே-சிப் தீர்வுகளும் இதில் இருப்பதாக தெரிகிறது, இது ஒருங்கிணைந்த ஐ.எஸ்.டி.என்-மற்றும் ADSL-ரௌட்டர்களின் மிகுநிறைவைக் கணக்கில் எடுத்து கொள்கிறது.

ஐ.எஸ்.டி.என் பொதுவாக ரேடியோ ஒலிபரப்பில் பயன்படுத்தப்படுகிறது. ஐ.எஸ்.டி.என் ஒரு சிறந்த தரத்திலான இணைப்பை வழங்குவதால், ரேடியோ ஒலிபரப்பில் சிறந்த தரத்திலான ஒலியை அனுப்ப இது உதவுகிறது. பெரும்பாலான ரேடியோ ஸ்டூடியோக்கள் பிற ஸ்டூடியோக்களுடனோ அல்லது எப்போதும் இருக்கும் தொலைபேசி இணைப்புகளுடனோ முதன்மையான வடிவத்தில் தொடர்புகொள்ள வேண்டி இருப்பதால், இவற்றில் பெரும்பாலானவை ஐ.எஸ்.டி.என் இணைப்புகளை பெற்றிருக்கும். Omnia (பிரபல Zephyr codec) போன்ற மற்றும் பிற நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் சாதனங்கள் தான் ரேடியோ ஒலிபரப்பாளர்களால் வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் வெவ்வேறு உற்பத்தியாளர்களால் செய்யப்பட்டவைகளில் "பேசுவதற்கு" ஒரு குறியீட்டில் ஒரு விசை அமைப்பை மாற்ற வேண்டியதிருக்கலாம்.

மாதிரி அழைப்பு

தொகு

Q.921/LAPD மற்றும் Q.931/Network message ஒன்று கலந்த ஒரு முதன்மை வீத இடமுக (PRI) ஐ.எஸ்.டி.என் அழைப்பைப் பின்வரும் ஓர் உதாரணம் எடுத்துக்காட்டுகிறது (அதாவது, D-தடத்தில் எது பரிமாறப்பட்டதோ துல்லியமாக அதுவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது). சுவிட்சில் இருந்து அழைப்பு தொடங்கப்படுகிறது, இங்கே அதன் குறிப்புகள் எடுக்கப்பட்டு, பின்னர் வேறுசில சுவிட்சுகளுக்கு செல்கிறது, பெரும்பாலும் இது end-office LEC ஆக இருக்கும், இதுவே அழைப்பைத் துண்டிக்கிறது.

அழைப்பு ஆரம்பிப்பதற்கு முன்னால் உருவாகும் RR சேதிகள் தான் அழைப்பை உயிர்ப்போடு வைத்திருக்கும் சேதிகள். பிறகு நீங்கள் ஒரு அமைப்பின் சேதியைப் பார்ப்பீர்கள், இது அழைப்பைத் துவக்குகிறது. ஒவ்வொரு சேதியும் அடுத்த பக்கத்தால் ஒரு RR சேதியின் மூலம் அங்கீகரிக்கப்படுகிறது.

10:49:47.33  21/1/24  R  RR
0000  02 01 01 a5                                          ....

10:49:47.34  21/1/24  T  RR
0000  02 01 01 b9                                          ....

10:50:17.57  21/1/24  R  RR
0000  02 01 01 a5                                          ....

10:50:17.58  21/1/24  T  RR
0000  02 01 01 b9                                          ....

10:50:24.37  21/1/24  T  SETUP
    Call Reference       : 000062-local
    Bearer Capability    : CCITT, Speech, Circuit mode, 64 kbit/s 
    Channel ID           : Implicit Interface ID implies current span, 21/1/5, Exclusive
    Calling Party Number : 8018023000 National number  User-provided, not screened  Presentation allowed
    Called Party Number  : 3739120 Type: SUBSCRB
0000  00 01 a4 b8  08 02 00 3e  05 04 03 80  90 a2 18 03   .......>........
0010  a9 83 85 6c  0c 21 80 38  30 31 38 30  32 33 30 30   ...l.!.801802300
0020  30 70 08 c1  33 37 33 39  31 32 30                   0p..3739120

10:50:24.37  21/1/24  R  RR
0000  00 01 01 a6                                          ....

10:50:24.77  21/1/24  R  CALL PROCEEDING
    Call Reference       : 000062-local
    Channel ID           : Implicit Interface ID implies current span, 21/1/5, Exclusive
0000  02 01 b8 a6  08 02 80 3e  02 18 03 a9  83 85         .......>......

10:50:24.77  21/1/24  T  RR
0000  02 01 01 ba                                          ....

10:50:25.02  21/1/24  R  ALERTING
    Call Reference       : 000062-local
    Progress Indicator   : CCITT, Public network serving local user, 
In-band information or an appropriate pattern is now available
0000  02 01 ba a6  08 02 80 3e  01 1e 02 82  88            .......>.....

10:50:25.02  21/1/24  T  RR
0000  02 01 01 bc                                          ....

10:50:28.43  21/1/24  R  CONNECT
    Call Reference       : 000062-local
0000  02 01 bc a6  08 02 80 3e  07                         .......>.

10:50:28.43  21/1/24  T  RR
0000  02 01 01 be                                          ....

10:50:28.43  21/1/24  T  CONNECT_ACK
    Call Reference       : 000062-local
0000  00 01 a6 be  08 02 00 3e  0f                         .......>.

10:50:28.44  21/1/24  R  RR
0000  00 01 01 a8                                          ....

10:50:35.69  21/1/24  T  DISCONNECT
    Call Reference       : 000062-local
    Cause                : 16, Normal call clearing.
0000  00 01 a8 be  08 02 00 3e  45 08 02 8a  90            .......>E....

10:50:35.70  21/1/24  R  RR
0000  00 01 01 aa                                          ....

10:50:36.98  21/1/24  R  RELEASE
    Call Reference       : 000062-local
0000  02 01 be aa  08 02 80 3e  4d                         .......>M

10:50:36.98  21/1/24  T  RR
0000  02 01 01 c0                                          ....

10:50:36.99  21/1/24  T  RELEASE COMPLETE
    Call Reference       : 000062-local
0000  00 01 aa c0  08 02 00 3e  5a                         .......>Z

10:50:36.00  21/1/24  R  RR
0000  00 01 01 ac                                          ....

10:51:06.10  21/1/24  R  RR
0000  02 01 01 ad                                          ....

10:51:06.10  21/1/24  T  RR
0000  02 01 01 c1                                          ....

10:51:36.37  21/1/24  R  RR
0000  02 01 01 ad                                          ....

10:51:36.37  21/1/24  T  RR
0000  02 01 01 c1                                          ....

மேலும் பார்க்க

தொகு

நெறிமுறைகள்

தொகு
  • DSS1 (ETSI "Euro-ஐ.எஸ்.டி.என்", இது ஐரோப்பா அல்லாத பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டது)
  • DSS2 (Digital Subscriber Signalling System No. 2)
  • ETSI-ல் இருக்கும் ETS 300 வரன்முறை பரணிடப்பட்டது 2007-03-06 at the வந்தவழி இயந்திரம்
  • NI-1 (அமெரிக்க தேசிய ஐ.எஸ்.டி.என் நிலை 1)
  • NI-2 (அமெரிக்க தேசிய ஐ.எஸ்.டி.என் நிலை 2)
  • 4ESS (AT&T TR 41459-ல் லூசண்ட் 4ESS பிரத்யேக நெறிமுறை வரையறுக்கப்பட்டது)
  • INS-NET 64/1500 (ஜப்பானின் தேசிய/NTT அலைவரிசை சார்ந்த நெறிமுறை)
  • இங்கிலாந்தில் பிரித்தானிய டெலிகாமினால் DACS பயன்படுத்தப்பட்டது, இது ஜோடி பெருக்கத்திற்காக தரமுறைப்படுத்தப்படாத D தடம் குறிகையாக்கத்தைப் பயன்படுத்துகிறது
  • QSIG
  • Remote operations service element protocol (ROSE)
  • Q.931
  • FTZ 1 TR 6 (முழுமையான ஜெர்மனியின் தேசிய நெறிமுறை)
  • TS.013/TS.014 (முழுமையான ஆஸ்திரேலியாவின் தேசிய நெறிமுறை)
  • VN2/VN3/VN4 (முழுமையான பிரான்சின் தேசிய நெறிமுறை)

ஐ.எஸ்.டி.என்-இன் ஸ்தூல அடுக்கு மற்றும் தரவு அடுக்கின் ஒரு பகுதியை வரையறுக்கும் வரன்முறைகள்:

  • ஐ.எஸ்.டி.என் BRI : ITU-T I.430.
  • ஐ.எஸ்.டி.என் PRI : ITU-T I.431.

OSI கட்டமைப்பின் கண்ணோட்டத்தில் இருந்து, ஒரு ஐ.எஸ்.டி.என் இணைப்பு மூன்று நெறிமுறைகளின் ஓர் அடுக்கைக் கொண்டிருக்கிறது

  • ஸ்தூல அடுக்கு
  • தரவு தொடுப்பு அடுக்கு
  • வலையமைப்பு அடுக்கு (முறையாக ஐ.எஸ்.டி.என் நெறிமுறை) [சான்று தேவை]

மற்றவை:

தொகு
  • CAPI
  • ADSL
  • ஏடிஎம்
  • B-ஐ.எஸ்.டி.என்
  • இணையம்
  • H.320
  • ETSI
  • உபகரண விரிவகலங்களின் பட்டியல்

குறிப்புதவிகள்

தொகு
  1. எதிர்கால போக்குகள் ஆர். ஆரோன், ஆர். வெயின்ட்ரம், ஏடி&டி பெல் ஆய்வகங்கள், IEEE தொலைதொடர்புகள் இதழ், மார்ச் 1986, தொகுதி 24 #3, பக்கம் 38-43. பெறப்பட்டது 2007-09-02.
  2. கம்ப்யூட்டிங் ஜப்பான் இதழ், செப்டம்பர்/அக்டோபர் 1995, கட்டுரை: ஐ.எஸ்.டி.என்: ஒரு பிரச்சினையின் தேடலில் ஒரு தீர்வு , கட்டுரைக்கான நேரடி தொடுப்பு: http://www.japaninc.com/cpj/magazine/issues/1995/sep95/09isdn.html
  3. புத்தகம்: The Irwin handbook of telecommunications, எழுதியவர் ஜேம்ஸ் ஹேரி க்ரீன், பதிப்பு: 5, விரிவாக்கப்பட்டது, பதிப்பகம் - McGraw-Hill Professional, 2005, ஐஎஸ்பிஎன் 0071452222, ஐஎஸ்பிஎன் 9780071452229, 770 பக்கங்கள், கூகுள் புத்தகங்களில் நேரடியாக பார்ப்பதற்கான தொடுப்பு: http://books.google.com/books?id=L1iJaXDV89gC&pg=PA262&lpg=PA262&dq=%22Innovations+Subscribers+Don%27t+Need 22&source=bl&ots=0nDvQodRaP&sig=TDUn6v4soz3d3kh_gM9hqXJRfls&hl=en&ei=c7MoSovhJJXIM9Gqmd8J&sa=X&oi=book_result&ct=result&resnum=1
  4. கால்சென்டர் டைரக்டரி: கால்சென்டர் & வாடிக்கையாளர் சேவை தொழில்நுட்ப சேவைகளுக்கான முழுமையான வழிகாட்டி, எழுதியவர்-Madeline Bodin, Keith Dawson, பதிப்பு: 3, விளக்கப்பட்டது, பதிப்பகம்-Focal Press, 2002, ஐஎஸ்பிஎன் 1578200954, ஐஎஸ்பிஎன் 9781578200955, 227 பக்கங்கள், கூகுள் புத்தகங்களில் பார்ப்பதற்கான நேரடி தொடுப்பு: http://books.google.com/books?id=CTXhqkFDQKQC&pg=PA101&lpg=PA101&dq=ஐ.எஸ்.டி.என்+%22it+still+does+nothing%22+computer+dictionary&source=bl&ots=P6kxGpkvmC&sig=H8qkKjKaOiUaEbaV2_8Xoez9LH0&hl=en&ei=tbUoSrT-EpGsMonG_d8J&sa=X&oi=book_result&ct=result&resnum=2 (scroll to bottom of page)
  5. அகலக்கற்றை இணைய அணுகுதல் என்ற கட்டுரையில் இருந்து: அகலக்கற்றை வரையறைகளில் குறைந்தபட்ச விரிவகலங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும் கூட, அதாவது 64 kbit/s முதல் 1.0 Mbit/s வரையில் வரையறுக்கப்பட்டிருந்தாலும் கூட, அகலக்கற்றை பதிவிறக்க தரவு பரிமாற்ற விகிதம் 256 kbit/s-க்கு சமமாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க வேண்டும் என்று வரையறுத்த 2006 OECD அறிக்கை மிகவும் முக்கியமாகும், இருப்பினும் அமெரிக்காவின் FCC, 2008-ன் படி, 786 kbit/s-க்கு அதிகமான வேகத்தை அளிக்கும் எதுவும் அகலக்கற்றை என்று வரையறுத்தது.[2] சந்தை விரைவான சேவைகளை வெளிப்படுத்தும் போது, அகலக்கற்றை வரையறையின் இலக்குமட்டத்தை உயர்த்துவதற்கான போக்கும் உயர்கிறது.[3] கட்டுரையின் மேற்குறிப்புகளைப் பார்க்கவும்.
  6. CenturyTel இணைய பயன்பாட்டு சேவை பின்வரும் வாசகத்தைக் குறிப்பிடுகிறது: ஐ.எஸ்.டி.என் இணைப்புகள் (BRI அல்லது PRI) மூலமாகவோ, பிரத்யேக மின்சுற்றுகள் அல்லது சிறப்பு சேவை மின்சுற்றுகள் மூலமாகவோ நீங்கள் இணைய சேவையைப் பெற வேண்டியதில்லை. http://www.centurytel.com/Pages/Disclaimers/internetDisclaimer.jsp பரணிடப்பட்டது 2008-12-25 at the வந்தவழி இயந்திரம்
  7. Studie des BMBF: ஐ.எஸ்.டி.என்-Verbreitung http://www.bmbf.de/pub/sdi-19-07.pdf பரணிடப்பட்டது 2008-10-02 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

தொகு