ஓவோபிசு
ஓவோபிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | வைபெரிடே
|
பேரினம்: | ஓவோபிசு பர்கர், 1981
|
வேறு பெயர்கள் | |
|
- பொதுவான பெயர்கள் : மலை குழி விரியன்.
ஓவாபிசு (Ovophis) என்பது ஆசியாவில் காணப்படும் நச்சு குழி விரியன் பேரினமாகும்.[1] இதில் ஏழு சிற்றினங்கள் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[2]
புவியியல் வரம்பு
தொகுஆசியாவில் நேபாளம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் அசாம் கிழக்கே மியான்மர், கம்போடியா, தாய்லாந்து , லாவோஸ், வியட்நாம், மேற்கு மலேசியா, தைவான், ஒக்கினாவா, சுமாத்திரா மற்றும் போர்னியோ வரைக் காணப்படுகிறது.[1]
சிற்றினங்கள்
தொகுசிற்றினங்கள் | வகைப்பாட்டியல் ஆசிரியர் [2] | துணைப்பிரிவு * [2] | பொது பெயர் | புவியியல் வரம்பு[1] |
---|---|---|---|---|
ஓ. கன்விக்டசு | (இசுடோலிக்சா, 1870) | 0 | இந்தோ-மலேய மலை குழிவிரியன் | சுமாத்திரா, கம்போடியா; லாவோசு, தீபகற்ப மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம். |
ஓ.மகசயசய | (தகாகாசி, 1922) | 0 | தைவான் மலை குழிவிரியன் | தென்கிழக்கு சீனா, தைவான் மற்றும் வடக்கு வியட்நாம். |
ஓ. மல்கோத்ரே | சீயாங், லி, லியூ, வூயு-ஒய்., கோ, சாகோ, நிங்யூயென், கோ, & சீய், 2023 | 0 | சீனா மற்றும் வியட்நாம். | |
ஓ. மான்டிகோலா டி | (குந்தர், 1864) | 2 | மலை குழி குழிவிரியன் | நேபாளம், இந்தியா (அசாம், சிக்கிம்), மியான்மர், சீனா (செஜியாங், புஜியான், சிச்சுவான், யுன்னான் மற்றும் திபெத்) , ஆங்காங், தைவான், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ், வியட்நாம், மேற்கு மலேசியா மற்றும் இந்தோனேசியாவின் சுமாத்திரா . |
ஓ. ஒக்கினாவென்சிசு | (பௌலங்கர், 1892) | 0 | ஒகினாவா குழி குழிவிரியன் | சப்பான் (இரியூக்கியூ தீவுகள் : ஒக்கினாவா மற்றும் அமாமி தீவுகள்). |
ஓ. டோன்கினென்சிசு | (போர்ரெட், 1934) | 0 | டோங்கின் குழி குழிவிரியன் | வியட்நாம் மற்றும் சீனா. |
ஓ. ஜாயுயென்சிசு | (ஜியாங், 1977) | 0 | ஜாயுவான் மலை குழி குழிவிரியன் | சீனா. |
*) பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள் சேர்க்கப்படவில்லை.
டி) மாதிரி இனங்கள்.[1]
வகைப்பாட்டியல்
தொகுஇந்த குழுவில் வைக்கப்பட்டுள்ள சிற்றினங்கள் திரிமெரேசுரசு பேரினத்துடன் நீண்ட காலமாகத் தொடர்புடையவை.[1] வேறு சில வகைபிரித்தல்களில் சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு சிற்றினம் ஓ. டோன்கினென்சிசு (பெளரெட், 1934). இது பொதுவாக டோங்கின் குழி விரியன் என்று அழைக்கப்படுகிறது. இவை வியட்நாம் மற்றும் சீனாவில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ 2.0 2.1 2.2 "Ovophis". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 4 November 2006.
வெளி இணைப்புகள்
தொகு- Ovophis at the Reptarium.cz Reptile Database. Accessed 12 December 2007.