கஞ்சனூர்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

கஞ்சனூர் (Kanjanur) இந்தியாவின் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தின் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கிராமமாகும். இது கும்பகோணத்தின் வடகிழக்கில் சுமார் 18 கிலோமீட்டர்கள் (11 மைல்கள்) தொலைவில் காவேரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. காவிரி படுகை பகுதியில் அமைந்துள்ள நவகிரக தலங்களில் இதுவும் ஒன்றாகும். இது சுக்கிரனுக்கு (வீனஸ்) அர்ப்பணிக்கப்பட்ட தலமாகும். இங்குள்ளஅக்னீஸ்வரர் கோயில் பிரபலமானது. காவிரி படுகையின் "நவகிரக கோயில்களில்" இந்த கோயிலும் ஒன்றாகும். கஞ்சனூரின் வடக்கே, 100 முதல் 150 அடிகள் (30 முதல் 46 மீட்டர்கள்) உயரமுள்ள குறைந்த மலைப்பாங்கான தொடர்கள் உள்ளன. இந்த மலைகளில் மேக்னசைட் வைப்புக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கஞ்சனூர்
Kanjanur
—  புறநகர்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி மயிலாடுதுறை
மக்களவை உறுப்பினர்

இரா. சுதா

சட்டமன்றத் தொகுதி திருவிடைமருதூர்
சட்டமன்ற உறுப்பினர்

கோவி. செழியன் (திமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

மேற்கோள்கள்

தொகு
  • Census of India, 1961, Volume 7; Volume 9. Manager of Publications. 1971. p. 160.
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சனூர்&oldid=4164193" இலிருந்து மீள்விக்கப்பட்டது