கட்டைச்சுறா
கட்டைச் சுறா அல்லது கட்டசுறா ( Blacktip shark ) என்பது கார்சார்ஹினிடே குடும்பத்தின், ரெக்வியாம் சுறா இனத்துக்கு உட்பட்ட ஒரு சுறா ஆகும். இது உலகெங்கிலும் உள்ள கரையோர வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல உவர் நீர் வாழ்விடங்களில் காணப்படுகிறது. மரபணு பகுப்பாய்வுகள் இந்த இனத்திற்குள் உள்ள கணிசமான மாறுபாட்டை வெளிப்படுத்தியுள்ளன. மேற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் தனிமைப்பட்டுள்ள சுறாக்கள், வேறு பகுதிகளில் உள்ள சுறாக்களில் இருந்து வேறுபடுகின்றன. கட்டைச்சுறா உறுதியான, இருமுனையுங்கூம்பிய உடலைக் கொண்டுள்ளது. இது கூர்மையான மூக்கு, நீண்ட செவுள் பிளவுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது. இவற்றின் அனைத்து துடுப்புகளின் முனைகளிலும் கருப்புத் திட்டுகள் உள்ளன. குறிப்பாக முதுகுத் துடுப்பில் முக்கோணம் போன்ற கருந்திட்டு காணப்படும். இவை பொதுவாக 1.5 m (4.9 அடி) நீளம்வரை வளர்கின்றன.
கட்டைச்சுறா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Carcharhinus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CarcharhinusC. limbatus
|
இருசொற் பெயரீடு | |
Carcharhinus limbatus (J. P. Müller & Henle, 1839) | |
கட்டைச்சுறா வாழும் கடற் பகுதி | |
வேறு பெயர்கள் | |
|
கட்டைச் சுறாக்கள் சின்னஞ் சிறிய மீன் கூட்டத்தை தாக்கும் போது தன்னனின மீன்களுடன் கூட்டாக செயல்படும். மேலும் இவை இரை மீனை வேவுபார்க்க கடலில் இருந்து எம்பி துள்ளிக் குதிக்கும். மற்ற பெரிய ரெக்விம் சுறாக்களுடன் ஒப்பிடும்போது இவற்றின் நடத்தை "பயமுறுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது. குட்டிகள் மற்றும் பெரிய மீன்கள் என இரண்டும் வெவ்வேறு அளவிலான குழுக்களாக சேர்கின்றன. இந்த குடும்பத்திற்கு உட்பட்ட பிற சுறா இனங்களைப் போலவே, கட்டைச்சுறாக்களும் குஞ்சுகளை ஈணுவன ; பெண் சுறாக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று முதல் 10 குட்டிகளை ஈணுகின்றன. குட்டி சுறாக்கள் தங்கள் வாழ்க்கையின் முதல் மாதங்களை ஆழமற்ற கடற் பகுதியில் கழிக்கின்றன. வளர்ந்த பெண் சுறாக்கள் தங்கள் பிறந்த இடத்தக்குத் திரும்புகிறன. ஆண் இல்லாத நிலையில், இந்த பெண் சுறாக்கள் கலவியற்ற இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை.
பொதுவாக இவை மனிதர்களிமிருந்து விலகி இருக்க விரும்பும். உணவு தேடும்போது ஆக்ரோஷமாக மாறும். அச்சமயங்கள் மனிதர் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது. இந்த இனமானது இதன் இறைச்சி, தோல், துடுப்புகள், கல்லீரல் எண்ணெய் ஆகிய வணிக நோக்கங்களுக்காக பெருமளவு பிடிக்கப்படுகிறது. இவற்றின் குறைந்த இனப்பெருக்க விகிதம் மற்றும் மீனவர்களுக்கு அதிக வருவயையப் பெற்றுத் தருவது போன்றவற்றின் அடிப்படையில் இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தால் அழிவாய்ப்பு இனம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விளக்கம்
தொகுகட்டைச்சுறா வலுவான, சீரான உடலைக் கொண்டுள்ளது. மேலும் இது நீண்ட, கூர்மையான மூக்கு மற்றும் ஒப்பீட்டளவில் சிறிய கண்களைக் கொண்டது. இதை ஒத்த சுறா இனங்களுக்கு உள்ளதைவிட இதன் ஐந்து ஜோடி செவுள் பிளவுகள் நீளமானவை. தாடைகளின் இருபுறமும் 15 பல் வரிசைகள் உள்ளன. மேல் தாடையில் இரண்டு ஒருங்கிணைந்து வளர்ந்த பற்களும் (தாடையின் நடுப்பகுதியில்), கீழ் தாடையில் ஒரு ஒருங்கிணைந்த பல்லும் உள்ளது. பற்கள் அகலமானவை, உயரமான, குறுகலான விளிம்புகள் கொண்டவை.[2] முதல் முதுகுத் துடுப்பு உயரமாகவும் அரிவாள் வடிவத்தில் இருக்கும். முதுகுத் துடுப்பின் பின் அடிப் பகுதியில் ஒரு சிறிய முனை பகுதி ஒன்று அமைந்திருக்கும். முதல் மற்றும் இரண்டாவது முதுகெலும்பு துடுப்புகளுக்கு இடையில் எந்த மேட்துத் தொடர்ச்சியும் இல்லை. இதன் மார்புத் துடுப்புகள் பெரியதாகவும் நெல்லரிவாள் போன்று கூர்மையாகவும் இருக்கும்.[3]
இதன் உடல் நிறமானது சாம்பல் நிறத்தில் இருந்து பழுப்பு நிறம் வரை இருக்கும். அடிப்பகுதி வெள்ளை நிறத்தில் இருக்கும். இடுப்புத் துடுப்புகள், இரண்டாவது முதுகுத் துடுப்பு, வால் துடுப்புகள் கருப்பு நுனிகளைக் கொண்டவை. இடுப்பு துடுப்புகள் மற்றும் அரிதாக குத துடுப்புகளிலும் கருப்பு-நுனிகள் இருக்கலாம். முதல் முதுகுத் துடுப்பின் மேல்புறத்தில் கருப்பு விளிம்புகள் இருக்கும்.[3] சில பெரிய மீன்களின் துடுப்புகளில் குறிகளற்றோ அல்லது தெளிவான குறிகளற்றோ இருக்கும்.[4] கட்டைச்சுறாக்கள் கடலில் பாசித்திரள் மிகும் போது கிட்டத்தட்ட தன் நிறத்தை தற்காலிகமாக இழக்க நேரிடும்.[5] இந்த இனமானது அதிகபட்சமாக 2.8 m (9.2 அடி) நீளத்தை அடைகிறது, இருப்பினும் 1.5 m (4.9 அடி) நீளம் என்பது பொதுவான நீளமாகும். மேலும் இவை அதிகபட்சமாக 123 kg (271 lb) எடையை அடைகின்றன.
-
கட்டைச்சுறா அதன் பெரும்பாலான துடுப்புகளில் கருப்பு அடையாளங்களைக் கொண்டுள்ளது.
-
கீழ் பற்கள்
-
மேல் பற்கள்
பரவல் மற்றும் வாழ்விடம்
தொகுகட்டைச்சுறா வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கடற் பகுதியில் உலகளாவில் பரவியுள்ளது. அட்லாண்டிக்கில், மாசச்சூசெட்ஸ் முதல் பிரேசில் வரை, மெக்சிகோ வளைகுடா மற்றும் கரிபியக் கடல் மற்றும் நடுநிலக் கடல், மதீரா மற்றும் கேனரி தீவுகள் முதல் காங்கோ மக்களாட்சிக் குடியரசு வரை காணப்படுகிறது. இது தென்னாப்பிரிக்கா மற்றும் மடகாசுகர் முதல் அரேபிய தீபகற்பம் மற்றும் இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா வரை, இந்தியப் பெருங்கடலின் எல்லையைச் சுற்றியும் உள்ளது. மேற்கு பசிபிக் பகுதியில், இது ஜப்பானின் ரியுக்யூ தீவுகளிலிருந்து [6] தெற்கு சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா உட்பட வடக்கு ஆத்திரேலியா வரை காணப்படுகிறது. கிழக்கு பசிபிக் பகுதியில், தெற்கு கலிபோர்னியாவிலிருந்து பெரு வரை உள்ளது. நியூ கலிடோனியா, தாகித்தி, மார்க்கெசசுத் தீவுகள், ஹவாய், ரெவிலிகிகெடோ மற்றும் கலாபகசுத் தீவுகள் உள்ளிட்ட பல பசிபிக் தீவுப் பகுதிகளிலும் இது பதிவாகியுள்ளது.
பெரும்பாலான கட்டைச் சுறாக்கள் கண்டத்திட்டில் 30 m (98 அடி) க்கும் குறைவான ஆழமுடைய நீரில் காணப்படுகின்றன. இருப்பினும் இவை 64 m (210 அடி) ஆழத்திலும் மூழ்கி இருக்கலாம். இவற்றிற்கு சாதகமான வாழ்விடங்களாக சேற்று விரிகுடாக்கள், தீவு கடற்காயல்கள், பவளப் பாறைகளுக்கு அருகிலுள்ள ஆழப் பகுதிகள் போன்றவை அள்ளன. இவை குறைந்த உவர்ப்பு த்தன்மையையையும் தாங்கிக்கொள்ளும். மேலும் இவை கழிமுகங்கள் மற்றும் சதுப்பு நிலங்களுக்குளும் நுழைகின்றன. அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் உள்ள இவ்வகை சுறாக்களின் பருவகால இடம்பெயர்வு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, கோடையில் வட கரோலினாவிற்கும் குளிர் காலத்தில் தெற்கே புளோரிடாவிற்கும் நகரும்.[7]
குறிப்புகள்
தொகு- ↑ Rigby, C.L., Carlson, J., Chin, A., Derrick, D., Dicken, M. & Pacoureau, N. 2021.. "Carcharhinus limbatus". IUCN Red List of Threatened Species. https://www.iucnredlist.org/species/3851/2870736.
- ↑ Curtis, T. Biological Profiles: Blacktip Shark பரணிடப்பட்டது 2007-06-29 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ 3.0 3.1
{{cite book}}
: Empty citation (help) - ↑ Ebert, D.A. (2003). Sharks, Rays, and Chimaeras of California. London: University of California Press. pp. 156–157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-23484-0.
- ↑ Martin, R.A. Albinism in Sharks.
- ↑ Yano, Kazunari; Morrissey, John F. (1999-06-01). "Confirmation of blacktip shark,Carcharhinus limbatus, in the Ryukyu Islands and notes on possible absence ofC. melanopterus in Japanese waters" (in en). Ichthyological Research 46 (2): 193–198. doi:10.1007/BF02675438. பன்னாட்டுத் தர தொடர் எண்:1341-8998.
- ↑ Castro, J.I. (November 1996). "Biology of the blacktip shark, Carcharhinus limbatus, off the southeastern United States". Bulletin of Marine Science 59 (3): 508–522. https://www.researchgate.net/publication/233658677.