கனடிய அரசியல்

கனடிய அரசியல் வலுவான மக்களாட்சி வழமைக்களுடைய நாடாளுமன்ற முறைமையையும் கூட்டாட்சி அமைப்பிலான நாடாளுமன்ற அரசையும் அடிப்படையாகக் கொண்டதாகும். கனடா பின்பற்றும் அரசியல்சட்ட முடியாட்சியில் மன்னரே நாட்டுத் தலைவர் ஆவார். நாட்டில் பல கட்சிகள் இயங்குகின்றன; கனடாவின் சட்டமன்ற நடைமுறைகள் வெசுட்டுமின்சுட்டர் நாடாளுமன்றத்தின் முன்மாதிரிகளையையும் வழமைகளையும் பின்பற்றியவை. இருப்பினும் கனடாவில் கட்சிக் கட்டுப்பாடு ஐக்கிய இராச்சியத்தினுடையதை விட வலுவானது. அமைச்சரவையில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறைவாக உள்ளது. இருப்பினும் இவர்கள் நாடாளுமன்ற குழுக்களில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவியலும். கனடாவின் வரலாற்றில் இரு முக்கிய அரசியல் கட்சிகளாக கனடா லிபரல் கட்சியும் கனடா பழமைவாதக் கட்சியும் (அல்லது அதன் முன்னோர்களும்) விளங்குகின்றன. இருப்பினும், 2011 தேர்தலில் சமூக-சனநாயக புதிய சனநாயகக் கட்சி முதன்மை பெற்றது. இந்த முன்னேற்றம் லிபரல் கட்சியின் பரவல் குறைந்து வருவதைக் காட்டுகிறது.[1] கியூபெக்வா கட்சி, கனடா பசுமைக் கட்சி போன்ற சிறு கட்சிகளும் கனடிய அரசியலில் தங்கள் தாக்கத்தை பதித்து வருகின்றன.

கனடிய நாடாளுமன்றத்தின் நடுவண் வளாகத் தோற்றம்

முக்கிய நடுவண் அரசியல் கட்சிகள்

தொகு
முக்கிய நடுவண் கனேடிய அரசியல் கட்சிகள்
கனடா பழமைவாதக் கட்சி

Conservative Party of Canada

கனடா நடுநிலைமைக் கட்சி

Liberal Party of Canada

க்குயூபெக்கா கட்சி

Bloc Quebecois

கனடா புதிய ஜனநாயகக் கட்சி

New Democratic Party

கனடா பசுமைக் கட்சி

Green Party of Canada

மேற்சான்றுகள்

தொகு
  1. Eugene Lang, "Whither the Liberals? Current State and Prospects of the Liberal Party of Canada," The Journal for International Relations and Global Trends, (2010) p. 195 online.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனடிய_அரசியல்&oldid=3355548" இலிருந்து மீள்விக்கப்பட்டது