கராட்சி உயிரியல் பூங்கா

பாக்கித்தான் கராச்சியில் உள்ள உயிரியல் பூங்கா

கராச்சி உயிரியல் பூங்கா (Karachi Zoo), கராச்சி விலங்கியல் தோட்டங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் அமைந்துள்ளது. இது பாக்கித்தானின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவாகும். இலாகூர் உயிரியல் பூங்காவிற்குப் பின்னர் நாட்டின் இரண்டாவது பழமையான உயிரியல் பூங்காவுமாகும் .

வரலாறு

தொகு

1878 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது பொதுவாக 'மகாத்மா காந்தி தோட்டம்' என்று அழைக்கப்பட்டது. 1861 ஆம் ஆண்டில், இதை அரசாங்கம் நகராட்சிக்கு மாற்றியது. 1878 ஆம் ஆண்டில், நகராட்சி இதை ஒரு அறக்கட்டளையின் கீழ் கொண்டு வந்தது. பின்னர், இது மீண்டும் 1881 இல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. 1947 இல் பாக்கித்தான் சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த பெயர் சுருக்கமாக 'கராச்சி விலங்கியல் தோட்டங்கள்' அல்லது 'கராச்சி உயிரியல் பூங்கா' என்று மாற்றப்பட்டது. 1953 ஆம் ஆண்டில், கராச்சி பெருநகரக் கழகம் இங்கு ஒருகண்காணிப்பாளரையும் ஒரு தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவரையும் பணி அமர்த்தியது. 1991-92 ஆம் ஆண்டில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தை மறுவடிவமைக்கப்பட்டு, சப்பானிய இளவரசி இதை திறந்து வைத்தார். தற்போது இங்கு 240 பணியாளர்கள் பணியிலிருக்கின்றனர்.

பகுதிகள் மற்றும் ஈர்ப்புகள்

தொகு
  • இதில் மிகவும் பிரபலமான கண்காட்சி யானை மாளிகை ஆகும்.இங்கிருந்த 65 வயதான ஆசிய யானை (அனார்கலி) ஒன்று சூலை 19, 2006 அன்று இறந்தது. கராச்சி சபாரி பூங்காவிலிருந்து 16 மே 2010 அன்று இரண்டு பெண் ஆப்பிரிக்க புதர் யானைகள் இங்கு கொண்டுவரப்பட்டன. இரண்டும் 2007 இல் தான்சானியாவில் பிறந்தது. அதற்கு 'நூர் சகான்' மற்றும் 'மது பாலா' என்று பெயரிடப்பட்டது.
  • 1992 இல் புதுப்பிக்கப்பட்ட இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், இங்கு மிகவும் பிரபலமான இடமாகும். அடைத்த விலங்குகள் தவிர, தோல்கள், எறும்புகள், கொம்புகள் மற்றும் இறகுகள் போன்றவை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த வசதி விலங்கியல் மாணவர்களால் ஆராய்ச்சி மற்றும் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
  • ஊர்வன மாளிகை 1992 இல் நீட்டிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. பாக்கித்தானில் உள்ள சில ஊர்வன வாழ்விடங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு 13 வகையான பாம்புகள் மற்றும் பல்லிகள் உள்ளன. ஆமைகள் மற்றும் முதலைகளின் புதிதாகப் பிறந்த குஞ்சுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
  • இங்கு நவீன வசதிகளுடன் 1998 இல் கால்நடை மருத்துவமனை ஒன்று நிறுவப்பட்டது. எக்ஸ்ரே மற்றும் சோனோகிராம் வசதிகள், ஒரு ஆய்வகம் மற்றும் அடைகாக்கும் அறை ஆகியவற்றைக் கொண்ட ஒரு அறுவை அரங்கமும் உள்ளது.
  • 1970 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட முகலாயத் தோட்டம், பருவகால தாவரங்களுடன் கூடிய பச்சை புல்வெளிகளைக் கொண்டுள்ளது. அவை தோட்டத்தின் பெரும்பகுதியை முகலாய பாணி நீரூற்றுகளுடன் ஆக்கிரமித்துள்ளன. இந்த தோட்டம் பல்வேறு வகையான ரோஜாக்கள் மற்றும் பிற பூக்களுக்கு பிரபலமானது.
  • வெள்ளைச் சிங்கங்கள், 2012 இல் வாங்கப்பட்டது மற்றும் மிருகக்காட்சிசாலையில் ஒரு பெரிய வரவாகும்.

கராச்சி நகராட்சி மீன்காட்சியகம்

தொகு

கராச்சி நகராட்சி மீன் காட்சியகம் 1953 இல் கட்டப்பட்டது. மிருகக்காட்சிசாலையில் அமைந்துள்ள இந்த மீன்காட்சியகத்தில் மொத்தம் 28 தொட்டிகள் உள்ளன. இதில் மொத்தம் சுமார் 30 இனங்கள் கொண்ட 300 மீன்கள் உள்ளன. [1] இது கராச்சியில் உள்ள மூன்று பொது மீன்காட்சியகங்களில் ஒன்றாகும். மற்றொன்று கிளிப்டன் மீன் அருங்காட்சியகம் மற்றும் லாண்டி கோரங்கி மீன் அருங்காட்சியகம்.

புதிய வருகை

தொகு

15 மார்ச் 2017 அன்று, ஆண் ஆசியக் கறுப்புக் கரடி மற்றும் ஒரு பெண் சிரிய பழுப்பு கரடி என்ற இரண்டு புதிய கரடிகள் மிருகக்காட்சிசாலைக்கு கொண்டுவரப்பட்டன.. [2]

இங்குள்ள உயிரினங்கள்

தொகு

பறவை

பாலூட்டி

ஊர்வன

படத் தொகுப்பு

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Karachi: Garden and parks". tourismsouthasia.com. Archived from the original on May 6, 2011. பார்க்கப்பட்ட நாள் November 26, 2010.
  2. (Express Tribune)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கராட்சி_உயிரியல்_பூங்கா&oldid=3015550" இலிருந்து மீள்விக்கப்பட்டது