கராத் வட்டம்
கராத் வட்டம், இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இதன் தலைமையிடம் கராத் நகரம் ஆகும். கராத் வருவாய் வட்டத்தில் கிருஷ்ணா ஆறு மற்றும் கொய்னா ஆறுகள் கலக்கிறது. கராத் வருவாய் வட்டத்தில் கரும்பு அதிகம் பயிரிடப்படுகிறது.
கராத் வட்டம் | |
---|---|
மகாராட்டிரா மாநிலத்தில் சதாரா மாவட்டத்தில் கராத் வருவாய் வட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 17°17′06″N 74°11′02″E / 17.285°N 74.184°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | சதாரா |
ஏற்றம் | 566 m (1,857 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 5,84,085. |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 415110 |
தொலைபேசி குறியீடு | +91-2164 |
வாகனப் பதிவு | MH-50 |
நிர்வாகப் பிரிவுகள்
தொகுகராத் வருவாய் வட்டத்தில் கராத் நகராட்சி, மல்காபூர் பேரூராட்சி, கராத் கணக்கெடுப்பில் உள்ள ஊர், சைதாப்பூர் கணக்கெடுப்பு ஊர், ஹாஜாமச்சி கணக்கெடுப்பு ஊர் மற்றும் 216 கிராமங்களைக் கொண்டுள்ளது.[2]
போக்குவரத்து
தொகுகராத் தொடருந்து நிலையம்
தொகுமத்திய இரயில்வே மண்டலம் மற்றும் புனே இரயில்வே கோட்டத்தில் உள்ள கராத் தொடர்ந்து நிலையத்தில் நாள்தோறும் 38 தொடருந்துகள் நின்று செல்கிறது.[3]
வானூர்தி நிலையம்
தொகுஇதன் அருகமைந்த வானூர்தி நிலையம் 76 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலாப்பூர் நகரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 1,24,925 வீடுகள் கொண்ட கராத் வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5,84,085. அதில் ஆண்கள் 2,96,157 மற்றும் பெண்கள் 2,87,928 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60,786 (10.41%) உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 972 பெண்கள் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 75.54% ஆக உள்ளது. 1038.81 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இவ்வட்டத்தின் மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 562 பேர் வீதம் வாழ்கின்றனர்.
பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 11.72% மற்றும் 0.54% ஆக உள்ளனர். இவ்வட்டத்தில் இந்துக்கள் 85.16%, முஸ்லீம்கள் 8.42%, பௌத்தர்கள் 5.42%, சமணர்கள் 0.64% மற்றும் பிறர் 0.36% ஆக உள்ளனர்.[4]