கவ்வாயி உப்பங்கழி

கேரள தீவு

கவ்வாயி (Kavvayi) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தின், கண்ணூர் மாவட்டத்தில், பையனூர் அருகே உள்ள சிறிய தீவுக் கூட்டம் ஆகும். காவ்வாயி ஆற்றின் குறுக்கே உள்ள ஒரு சிறிய பாலமானது தீவை பையனூருடன் இணைக்கிது.

கவ்வாயி உப்பங்கழி
Kavvayi boat jetty
கவ்வாயி உப்பங்கழி is located in கேரளம்
கவ்வாயி உப்பங்கழி
கவ்வாயி உப்பங்கழி
கேரளத்தில் அமைவிடம்
கவ்வாயி உப்பங்கழி is located in இந்தியா
கவ்வாயி உப்பங்கழி
கவ்வாயி உப்பங்கழி
கவ்வாயி உப்பங்கழி (இந்தியா)
அமைவிடம்கேரளம்
ஆள்கூறுகள்12°05′N 75°11′E / 12.09°N 75.18°E / 12.09; 75.18
முதன்மை வரத்துகவ்வாயி ஆறு
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு37 km2 (14 sq mi)
Islandsவலியபரம்பா, கவ்வாயி

கவ்வாயி உப்பங்கழித் தீவுகள்

தொகு
  • கவ்வாயி
  • வலியபரம்பா
  • பதன்னக்கடப்புரம்
  • வடக்கெக்காடு
  • கொக்கல்
  • எடயிலக்காடு
  • மடக்கல்
  • கண்ணுவீடு
  • காவ்வாயிக்கடப்புரம்
  • உடும்பந்தலா
  • கோச்சென்
  • வடக்கும்பாட்

வரலாறு

தொகு

கவ்வாயியை மார்க்கோ போலோ கி.பி. 1293, இப்னு பதூதா கி.பி. 1342, அப்துல் ஃபிடா கி.பி. 1273 உள்ளிட்ட குறிப்பிடத்தக்க உலகப் பயணிகள் தங்கள் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.

கவ்வாயி தீவுக்கு முதலில் கவ்வில் பட்டனம் என்று பெயரிடப்பட்டது, ஆனால் அப்பகுதியின் அப்போதைய மாவட்ட ஆட்சியரான சர் வில்லியம் ஹோகனால் மறுபெயரிடப்பட்டது. காவ்வாயி 125 சதுர மைல்கள் (320 km2) பரப்பளவோடு ஆட்சித் தலைமையகமாக இருந்தது இது பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன ஆட்சியின் போது ஒரு பெரிய துறைமுகத்தையும் குற்றவியல் நீதிமன்றத்தையும் கொண்டிருந்தது. தலைமையகம் மலபாரின் பிற பகுதிகளுக்கு மாற்றப்பட்ட பின்னர் இதன் முக்கியத்துவம் குறைந்தது.

இந்த தீவு ஜமீந்தார்களின் வரலாற்றுக்காக புகழ்பெற்றது.

மக்கள் வகைப்பாடு

தொகு

கவ்வாயி மக்களில் பெரும்பாலானவர்கள் பழமைவாத முஸ்லிம்களாவர். பாரசீக வளைகுடா நாடுகளில் ஆண்கள் வேலைக்கு செல்கின்றனர். இந்த தீவில் இந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு சிறிய மீனவர் சமூகமும் உள்ளது.

போக்குவரத்து

தொகு

இங்கிருந்து பையனூர் நகருக்கு பேருந்து மற்றும் ஜீப் வசதிகள் உள்ளன. இங்குள்ள பண வசதியானது பொதுப் போக்குவரத்திற்கான தேவையை இல்லாது செய்கிறது. பெரும்பா சந்தி வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் வடக்குப் பகுதியில் கோவா மற்றும் மும்பையையும், தெற்கில் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தையும் அணுகலாம். இரிட்டியின் கிழக்கில் உள்ள சாலை மைசூர் மற்றும் பெங்களூருடன் இணைகிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் மங்களூர் - பாலக்காடு பாதையில் உள்ள பையனூர் ஆகும் . இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளுக்கும் தொடருந்து பயணச் சீட்டுகள் இங்கு இணையத்தில் முன்பதிவு செய்யப்படுகின்றன. கண்ணூர், மங்களூர், கோழிக்கோடு போன்ற வானூர்தி நிலையங்கள் உள்ளன. இவை அனைத்தும் பன்னாட்டு நிலையங்கள் ஆனால் நேரடி வானூர்திகள் மத்திய கிழக்கு நடுகளுக்கு மட்டுமே கிடைக்கின்றன

நிலவியல்

தொகு

கவ்வாயியானது அரபிக் கடலை நேரடியாக எதிர்கொள்ளும் கடப்புரம் என்ற சிறிய தீவுகளால் சூழப்பட்டுள்ளது. இந்த சிறிய தீவுகளுக்கு சிறிய படகுகள் அல்லது பாரம்பரிய தோணிகளால் மட்டுமே செல்ல இயலும். இந்த தீவுகள் சிறியதாக வருகின்றன. மேலும் தீவு மக்கள் நகரங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். [1]

 
கவ்வாயி உப்பங்கழிகள்

பையனூருக்கு அருகே அமைந்துள்ள கவ்வாயி உப்பங்கழி கேரளத்தின் மூன்றாவது பெரிய உப்பங்கழியாகவும், வட கேரளத்தின் மிகப்பெரிய உப்பங்கழியாகவும் உள்ளது. வட கேரளத்தின் நன்கு அறியப்படாத இந்த ஏரிக்கு ஐந்து ஆறுகளிலிருந்து நீர் வருகிறது. அவை கவ்வாயி ஆறும் அதன் துணை ஆறுகளான கங்கோல், வன்னதிச்சல், குப்பித்தோடு, குனியன் ஆகியவை ஆகும். [2] கவ்வாயி உப்பங்கழிகளுக்கு பைய்யனூருக்கு அருகிலுள்ள கவ்வாயி தீவின் பெயரால் பெயரிடப்பட்டது. கவ்வாயி கடந்த நூற்றாண்டுகளிலும் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போதும் உள்நாட்டு துறைமுகமாகவும் முக்கிய நிர்வாக மையமாகவும் இருந்தது.

காவ்வாய் ஏரி பல சிறிய மற்றும் பெரிய தீவுகளைக் கொண்டது. வலியபரம்பா தீவு அவற்றில் மிகப்பெரியது மற்றும் இது 16  கிமீ 2 க்கும் கூடுதலானது. கவ்வாயி ஏரியின் வடக்கு பகுதி வலியாபரம்பா உப்பங்கழிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தீவின் மக்கள் தொகை 10000 ஆகும். தீவின் முக்கிய வருமான ஆதாரம் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் ஆகியவை ஆகும். வலிபரம்பா கடற்கரை என்ற கடற்கரை அதன் மேற்குப் பகுதியில் உள்ள உப்பங்கழிக்கு ஒட்டி உள்ளது.

சூழலியல் பார்வையில், கவ்வாயியும், அதைச் சுற்றியுள்ள பிராந்திய உப்பங்கழிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கவ்வாயி உப்பங்கழி 37 கிமீ 2 பரப்பளவு கொண்ட தாக வட கேரளத்தின் மிகப்பெரிய ஈரநில சுற்றுச்சூழல் ஆகும். இந்த உப்பங்கழிகள் மற்றும் ஈரநிலங்களில் பலவகையான விலங்கினங்களும், தாவரங்களும் உள்ளன. இப்பகுதிகள் எழிமலையில் உள்ள இந்திய கடற்படை அகாதமியால் பயிற்சிக்கு பயன்படுத்தப்படுகிறது [3]

தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தின், காசராகோடு மாவட்டத்தில், அரபிக் கடலில் உள்ள ஒரு சிறிய தீவுதான் வலியபரம்பா . இது மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும், மீன்பிடி மையமாகவும் உள்ளது.

மேலும் காண்க

தொகு
  • பையனூர்
  • வலியபரம்பா உப்பங்கழிகள்  பையனூரிலிருந்து 15 கி.மீ.
  • பெரிங்கோம்  பையனூரிலிருந்து 20 கி.மீ.
  • எழிமலை  பையனூர் நகரில் இருந்து 20 கி.மீ.
  • குன்கிமங்கலம் கிராமம்  பையனூர் நகரத்திலிருந்து 8 கி.மீ.
  • கவ்வாயி தீவு  பையனூரிலிருந்து 3 கி.மீ.
  • ராமந்தளி  பையனூரிலிருந்து 7 கி.மீ.
  • கரிவெல்லூர்  பையனூரிலிருந்து 10 கி.மீ.
  • திருக்கரிப்பூர்  பையனூரிலிருந்து 6 கி.மீ.

குறிப்புகள்

தொகு
  1. "Kavvayi Webpage". Archived from the original on 2020-07-09. பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-11-19. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-15. பார்க்கப்பட்ட நாள் 2020-09-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கவ்வாயி_உப்பங்கழி&oldid=3580510" இலிருந்து மீள்விக்கப்பட்டது