காசிப்பாளையம் (கோபி)

(காசிபாளையம் (கோபி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

காசிப்பாளையம் (கோபி) (ஆங்கிலம்:Kasipalayam (Gopi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

காசிபாளையம்
—  பேரூராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் கோபிசெட்டிபாளையம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

9,093 (2011)

1,074/km2 (2,782/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.47 சதுர கிலோமீட்டர்கள் (3.27 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kasipalayam-gobi

அமைவிடம்

தொகு

ஈரோடு - சத்தியமங்கலம் சாலையில் அமைந்த காசிப்பாளையம் பேரூராட்சிக்கு 50 கி.மீ. தொலைவில், ஈரோடு உள்ளது. இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 9 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 11 கி.மீ.; வடக்கில் தூக்கநாயக்கன்பாளையம் 17 கி.மீ.; தெற்கில் நம்பியூர் 15 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

தொகு

8.47 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 10 குக்கிராமங்களும், 67 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,838 வீடுகளும், 9,093 மக்கள்தொகையும் கொண்டது. [4]

ஆதாரங்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. காசிப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Kasipalayam Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=காசிப்பாளையம்_(கோபி)&oldid=3011077" இலிருந்து மீள்விக்கப்பட்டது