காசி விஸ்வநாதர் கோயில் குப்பம்
காசி விஸ்வநாதர் கோயில் குப்பம் அல்லது கே. வி. கே. குப்பம் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் திருவொற்றியூரில் உள்ள ஒரு மீனவர் கிராமம் ஆகும்.[1] இவ்வூரில் உள்ள மீனவர்கள் 1950களில் தஞ்சாவூர் (தற்பொழுது நாகை) மாவட்டத்தில் இருந்து பிழைப்புக்காக (மீன் பிடி தொழிலுக்காக) இங்கு குடியேறினார்கள்.
காசி விஸ்வநாதர் கோயில் குப்பம்
கே. வி. கே. குப்பம் | |
---|---|
ஆள்கூறுகள்: 13°10′36″N 80°18′46″E / 13.1768°N 80.3129°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
ஏற்றம் | 28.63 m (93.93 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600019 |
தொலைபேசி குறியீடு | +9144xxxxxxxx |
அருகிலுள்ள ஊர்கள் | திருவொற்றியூர், இராயபுரம், காசிமேடு |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மக்களவைத் தொகுதி | வட சென்னை |
சட்டமன்றத் தொகுதி | திருவொற்றியூர் |
பெயரியல்
தொகுஇங்கு கரும காரியங்களுக்குப் பெயர்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் இருந்தது. இந்த கோயிலால் தான் இவ்வூருக்கு காசி விஸ்வநாதர் கோயில் குப்பம், சுருக்கமாக KVK குப்பம், எனப் பெயர் வந்தது. 1990களில் ஏற்பட்ட புயலின் காரணமாக இக்கோயில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலில் மூழ்கியது.
வரலாறு
தொகுஇக்குப்பத்தைக் 'குட்டி நாகை மாவட்ட கிராமம்' என்றுகூடச் சொல்லலாம். இங்குள்ளவர்கள் அனைவரும் நாகை மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்டவர்கள். இப்பகுதி மக்களின் பேச்சு பழக்க வழக்கங்கள், திருவிழா, திருமணம் போன்ற சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் நாகை மாவட்டத்தைப் பின்பற்றியே தொடர்கிறது. பெண் கொடுப்பதும், எடுப்பதும் பெரும்பாலூம் நாகை மாவட்டத்தில்தான்.
குறிப்பிடத்தக்கோர்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kasi Viswanathar Koil Kuppam Locality". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-13.
- ↑ "திருவெற்றியூர் திமுக எம்.எல்.ஏ கே.பி.பி.சாமி திடீர் மரணம்". tamil.indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2023-10-13.
- ↑ Kanimozhi Pannerselvam. "திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி காலமானார்...!". Asianet News Network Pvt Ltd. பார்க்கப்பட்ட நாள் 2023-10-13.