காட்டுப்பாக்கம் ஊராட்சி

இது தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் உள்ளது

காட்டுப்பாக்கம் ஊராட்சி (Kattupakkam Gram Panchayat), தமிழ்நாட்டின் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெமிலி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, சோளிங்கர் சட்டமன்றத் தொகுதிக்கும் அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5197 ஆகும். இவர்களில் பெண்கள் 2628 பேரும் ஆண்கள் 2569 பேரும் உள்ளனர்.

காட்டுப்பாக்கம்
—  ஊராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் இராணிப்பேட்டை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஜெ. யூ. சந்திரகலா, இ. ஆ. ப
ஊராட்சித் தலைவர்
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

எஸ். ஜெகத்ரட்சகன்

சட்டமன்றத் தொகுதி சோளிங்கர்
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. எம். முனிரத்தினம் (இ.தே.கா)

மக்கள் தொகை

அடர்த்தி

5,197

30/km2 (78/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

174 சதுர கிலோமீட்டர்கள் (67 sq mi)

6 மீட்டர்கள் (20 அடி)

குறியீடுகள்

அமைவிடம்

தொகு

இது மாவட்டத்தலைநகரான வேலூரிலிருந்து கிழக்கு நோக்கி 54 கி.மீ. தொலைவிலும், நெமிலியிலிருந்து 11 கி.மீ தொலைவிலும், மாநில தலைநகர் சென்னையில் இருந்து 89 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மகேந்திரவாடி (2 கிமீ), மேலேரி (3 கிமி), கோடம்பாக்கம் (4 கி.மீ.), மேல்பாக்கம்(4 கி.மீ.), குன்னத்தூர் (5 கிமீ)போன்ற கிராமங்கள் காட்டுப்பாக்கம் அருகில் உள்ளன. காட்டுப்பாக்கம் வட கிழக்கு நோக்கி, தெற்கு நோக்கி காவேரிபாக்கம் தாலுகா, மேற்கு நோக்கி சோளிங்கர் தாலுகா, ஆர்.கே பேட்டை தாலுகா நோக்கி அரக்கோணம் தாலுகா சூழப்பட்டுள்ளது. அரக்கோணம், சோளிங்கர், திருத்தணி, ஆற்காடு போன்ற நகரங்கள் காட்டுப்பாக்கம் அருகில் இருக்கின்றன.இந்த இடம் வேலூர் மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் உள்ளது. தமிழ் இங்கே உள்ளூர் மொழி ஆகும். காட்டுப்பாக்கம் தபால் குறியீடு 632502 மற்றும் தபால் தலைமை அலுவலகம் அன்வர்திகான்பேட்டை உள்ளது.

துணை கிராமங்கள்

தொகு

அருந்ததியர் காலனி, எம்.ஜி. ஆர் நகர், கவரப்பேட்டை, கன்னிகாபுரம், அட் காலனி இவை துணை கிராமங்கள் ஆகும்.

விவசாயம்

தொகு

கிராம மக்கள் வருவாய் விவசாயம் மற்றும் கல் உடைத்தல் சார்ந்து இருக்கிறது.விவசாயத்திற்கு "காட்டுப்பாக்கம் ஏரி" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறது. காட்டுப்பாக்கமத்தில் நெல், கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை, பழங்கள், மிளகாய் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது. நெல் மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது அதாவது குறுவை, சம்பா மற்றும் தாளடி. உளுந்து, பச்சைப்பயிறு மற்றும் எள் போன்ற பண பயிர்கள் பயிரிடப்படுகிறது.சில மாதங்களுக்கு தரிசு விடப்படுகின்றது. நெல் (அரிசி), கொள்ளு, தானியம், கரும்பு, கோதுமை, எள், காய்கறிகள், பழங்கள், மிளகாய், எள், வேர்க்கடலை, பருப்பு வகைகள் போன்றவை பெரும்பாலும் அறுவடை செய்யப்படுகின்றன.

அடிப்படை வசதிகள்

தொகு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]

அடிப்படை வசதிகள் எண்ணிக்கை
குடிநீர் இணைப்புகள் 287
சிறு மின்விசைக் குழாய்கள் 6
கைக்குழாய்கள் 21
மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6
தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள்
உள்ளாட்சிக் கட்டடங்கள் 13
உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 13
ஊரணிகள் அல்லது குளங்கள் 22
விளையாட்டு மையங்கள் 1
சந்தைகள்
ஊராட்சி ஒன்றியச் சாலைகள் 35
ஊராட்சிச் சாலைகள் 8
பேருந்து நிலையங்கள்
சுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 7

சிற்றூர்கள்

தொகு

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:

  1. இருளர் காலனி
  2. அம்பேத்கர் காலனி
  3. அருந்ததி பாளையம்
  4. கன்னிகாபுரம்
  5. எம்.ஜி.ஆர். நகர்
  6. கவரப்பேட்டை
  7. காட்டுப்பாக்கம்

கல்வி

தொகு

கல்லூரிகள்

தொகு
  • ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னி கல்லூரி, பானாவரம்.
  • ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி, அரக்கோணம்.
  • ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரக்கோணம்.
  • திருத்தணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருத்தணி.

பள்ளிகள்

தொகு
  • ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி, காட்டுப்பாக்கம்.
  • அரசு உயர்நிலை பள்ளி, காட்டுப்பாக்கம்.

போக்குவரத்து

தொகு

மகேந்திரவாடி ரயில் நிலையம் மிக அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும். எனினும், அரக்கோணம் ரயில் நிலையம் காட்டுப்பாக்கம் அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. முதன்மை பேருந்து நிலையம் அரக்கோணத்தில் உள்ளது. பேருந்துகள் ஒவ்வொரு மணி நேரமும் கிடைக்கிறது.

அரக்கோணம் வழியாக காட்டுப்பாக்கம்
தொகு

பேருந்து எண் T6, T12, பாரதி சாலைகள் பேருந்து, பாரதி பேருந்து சேவை பேருந்துகள் ஒவ்வொரு மணி நேரமும் கிடைக்கிறது.

திருத்தணி வழியாக காட்டுப்பாக்கம்
தொகு

பாரதி சாலைகள் பேருந்து ஒவ்வொரு மணி நேரமும் கிடைக்கிறது.

கோவில்கள்

தொகு
  • கோட்டாளி அம்மன் கோவில்
  • பிள்ளையார் கோவில்
  • பெருமாள் கோவில்
  • ஐயப்பன் கோவில்
  • திரெளபதி அம்மன் கோவில்
  • கங்கை அம்மன் கோவில்
  • வெசகோட்டி அம்மன் கோவில்
  • மாரியம்மன் கோவில்

கோட்டாளி அம்மன் கிராமம் காவல் தெய்வமாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா பொங்கல் முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. திரெளபதி அம்மன் கோவில் திருவிழா பதினெட்டு நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் எல்லா கோயில்களிலூம் திருவிழா கொண்டாடப்படுகிறது.

அருகிலுள்ள நகரங்களும் சிறுநகரங்களும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "நெமிலி வட்டார வரைபடம்". tnmaps.tn.nic.in. தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. 5.0 5.1 "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  6. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.