காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர் திருக்கோவில்
ஏகாந்தலீஸ்வரர் திருக்கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அருகில் உள்ள ஆழ்வார்தோப்பில் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள சிவாலயம் அகும்.[1] ஆயிரம் ஆண்டுகள் பழமையான[2] இத்தலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள நவலிங்கபுர சிவாலயங்களுள் ஒன்று.[3][4]
காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர் திருக்கோவில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 8°36′38″N 77°56′13″E / 8.610555°N 77.937072°E |
பெயர் | |
பெயர்: | காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர் திருக்கோவில் |
அமைவிடம் | |
ஊர்: | காந்தீஸ்வரம், ஆழ்வார்தோப்பு, ஸ்ரீவைகுண்டம் வட்டம் |
மாவட்டம்: | தூத்துக்குடி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஏகாந்தலிங்க சுவாமி |
தாயார்: | அறம் வளர்த்த நாயகி |
வரலாறு
தொகுமுற்காலத்தில் ஆழ்வார்திருநகரியில் இருந்த ஒன்பது சிவன் கோவில்களை தாமிரபரணி ஆற்றில் அணை கட்டுவதற்காக சாத்தாதுவர் என்பவர் அழித்தலால் அவருக்கு வயிற்றில் பிணி உண்டாயிற்று. அதற்குப் பரிகாரமாக தாமிரபரணி ஆற்றின் வடகரையில் காந்தீசுவரம் கோவிலைக் கட்டி அதில் ஏகாந்தலிங்கரைப் பிரதிஷ்டை செய்தார் என்பது இத்தலத்தின் வரலாறு.[5]
பெயர்க் காரணம்
தொகுகயிலாயத்திருந்து பூவுலகிற்கு வந்த காந்தை முனிவர், தாமிரபரணி நதிக்கரையில் பசுமையான சோலைகளுக்கு நடுவே அமைந்திருந்த இத்தலத்தில் தோன்றிய ஜோதியைக் கண்டு மெய்மறந்து, இங்கேயே தங்கி, தவசாலை அமைத்து சிவபெருமானை வழிபட்டார். இத்தலத்தில் வீற்றிருந்த பெருமானுக்கும், இத்தலத்திற்கும், இத்தலத்தின் தீர்த்தத்திற்கும் தன் பெயரையே இட்டு அருளும் வரத்தையும் பெற்றார். ஆகையால் இத்தலம் காந்தை நகர் என்று அழைக்கப்பட்டது, பின்னர் அது மருவி காந்தீஸ்வரம் ஆயிற்று.[3]
முற்காலத்தில் திருநகரி வடகாந்தீசுரம் என்று அழைக்கப்பெற்ற இவ்வூர், காந்தீசுவரம், கந்தேசுவரம், பாராங்குசநல்லூர், வடக்குருகூர், ஆழ்வார்தோப்பு என்றும் பலப்பெயர்களால் அழைக்கப்பெறுகிறது.[6]
கோவில் அமைப்பு
தொகுதாமிரபரணி ஆற்றின் வடகரையில் படித்துறை, அதன் மேல் கோபுரம் என இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றி தேவகோட்ட அமைப்பு உள்ளது. விநாயகர், முருகர், தட்சிணாமூர்த்தி, சனீஸ்வர பகவான், சந்திரன், பைரவர், காளி ஆகியோருக்கு சன்னதி உள்ளது. அர்த்தமண்டபத்தின் இடதுபுறம் நடராஜபெருமான் இருக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு எதிரே கருவறையை நோக்கியவாறு அறுபத்து மூன்று நாயன்மார்கள் அமைந்துள்ளனர்.[6]
தலச்சிறப்பு
தொகுஇக்கோவில் அஷ்ட சித்தர்களாகிய கவுண்சித்தர், மறைக்காட்டு சித்தர், மௌனகுருசாமி, மாயக்கூத்தர், சொக்கலிங்க அடிகள் உள்பட பல சித்தர்களால் வழிபடப்பெற்ற சிறப்புடையது. காசியிலும் சிறந்ததலம் காந்தீஸ்வரம் என்பது சித்தர் பெருமக்களின் சீரியவாக்கு.[3]
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் திருப்பணியின் போது கூலிக்கு பணம் இல்லாததால், இறைவன் கூறியபடி இலை விபூதியைக் கூலியாகக் கொடுத்த திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள்[7] செந்தூர் முருகனின் அருள்வாக்குப்படி இத்தலத்திற்கு வந்து வணங்கினார். இவ்வூரிலேயே இறைவனடி சேர்ந்தார். இவரது ஜீவசமாதி ஆலயத்தின் பின்புறம் உள்ளது.[3][8]
கருவூர் சித்தர்
தொகுகருவூர் சித்தருக்கு மோட்சம் தந்தவர் அருட்கருணை வள்ளல் காந்தீஸ்வரம் ஏகாந்தலீஸ்வரர் என்பர். அவரின் சீடர்கள் பலரும் இங்கு தங்கி சித்தியடைந்துள்ளனர். இத்தலத்தை சுற்றி வந்ததாலேயே தமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கி இறந்த நாயின் உயிர், ஒளிபெற்று விண்ணுலகு எய்தியதைக் கண்ட கருவூர் சித்தர்,
திருவீதி எச்சிலை வாரி உண்ட
நாய்க்கும் பரமபதம் அளித்தாய்
அந்த நாயோடு இந்தப்
பேய்க்கும் பதம் அளித்தால்
பழுதோ? பெருமாள் மகுடம்
சாய்க்கும்படி கவி சொல்லும்
ஞானத் தமிழ்க் கடலே!
பூஜை
தொகுஅறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், வளையல் அலங்காரம், லலிதா சகஸ்கரநாம பாராயணம், குங்கும அர்ச்சனை உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.[1]
அமைவிடம்
தொகுமாநில நெடுஞ்சாலை 40, திருநெல்வேலி – திருச்செந்தூர் வழித்தடத்தில் ஆழ்வார்திருநகரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி தாமிரபரணி ஆற்றைக் கடந்து அக்கரை சென்றால் ஆழ்வார்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ள இத்தலத்தை அடையலாம். ஆழ்வார்திருநகரியிலிருந்து ஆட்டோ ரிக்சா மூலமாகவும் இக்கோவிலை அடையலாம்.[3][8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 செய்தி, ஸ்ரீவைகுண்டம் (22 ஜூலை 2016). "காந்தீஸ்வரம் சிவன் கோயிலில் ஆடி வெள்ளி பூஜை". www.dinamani.com. தினமணி. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "சிவன் கோயிலில் திருட்டு". www.dinamalar.com. தினமலர். 5 ஆகஸ்டு 2011. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "கருவூர் சித்தருக்கு மோட்சம் தந்த காந்தீஸ்வரம்". www.dinakaran.com. தினகரன். Archived from the original on 2023-02-20. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "வெள்ளூர் நடுநக்கர் கோவில்- ஸ்ரீவைகுண்டம்". www.maalaimalar.com. மாலை மலர். 26 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 20 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 5.0 5.1 தொ. மு., பாஸ்கரத் தொண்டைமான், தொகுப்பாசிரியர் (2001). " 26. ஆழ்வார் திருநகரி ஆழ்வார்". வேங்கடம் முதல் குமரி வரை (நான்காம் பாகம்) (நான்காவது ). கலைஞன் பதிப்பகம். Wikisource. விக்கிமூலம்
- ↑ 6.0 6.1 "பித்ரு சாபம் போக்கும் பிறைசூடன்". குமுதம் பக்தி ஸ்பெஷல், 1 ஏப்ரல் 2009. Archived from the original on 2023-02-20. பார்க்கப்பட்ட நாள் 2023-02-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "துறவிகள் திருப்பணி செய்த சென்தூர் ஆலயம்". www.dinamani.com. தினமணி. 3 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ 8.0 8.1 "திருச்செந்தூர் முருகனுக்கு திருப்பணி செய்த ஐவர்". www.maalaimalar.com. மாலை மலர். 3 ஜூலை 2021. பார்க்கப்பட்ட நாள் 21 பிப்ரவரி 2023.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)