கார்த்தியாயனி அம்மா

கார்த்தியாயனி அம்மா (Karthyayani Amma) (பிறப்பு 1922கள்) இந்தியாவைச் சேர்ந்த இவர், தனது 96 வயதில் அதிக மதிப்பெண்களுடன் கல்வியறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தேசிய அளவில் பிரபலமானார். இதற்காக இவர் கேரள முதல்வர் பிணறாயி விஜயன், கல்வி அமைச்சர் சி. இரவீந்திரநாத் ஆகியோரால் கௌரவிக்கப்பட்டார். மேலும், இவருக்கு இந்திய அரசு நாரி சக்தி விருதினை வழங்கியது.

கார்த்தியாயனி அம்மா
பிறப்பு1922
தேசியம் இந்தியா
அறியப்படுவது96 வயதில் கல்வியறிவுத் தேர்வில் தேர்ச்சி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இவர், 1922களில் இந்திய மாநிலமான கேரளாவின் ஆலப்புழாவிலுள்ள செப்பாடு என்ற ஊரில் பிறந்தார். [1] சிறுமியாக இருந்தபோதே இவர் வீட்டுவேலை செய்ய வேண்டியிருந்தது. அதனால் இவரது பள்ளிப்படிப்பு நின்று போனது. மேலும் திருமணம் செய்து கொண்டு ஆறு குழந்தைகளையும் பெற்றார். இவர், தெரு துப்புரவாளராகவும் பணிபுரிந்தார். [2] இவர் தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து தமது பணிகளை செய்து வந்தார். மேலும் சைவ உணவையே உண்டார்.

புகழ் தொகு

2018 வாக்கில், இவர் வயதானவர்களுக்கான சமூக இல்லமான இலட்சுமி வீடு குடியிருப்பில் வசித்து வந்தார். [3] தனது மகள் அளித்த ஊக்கத்தினால் தனது அறுபது வயதில் கற்றல் தேர்வில் தேர்ச்சி பெற்றார். [2]ஆகத்து 2018 இல், கேரள மாநில எழுத்தறிவுத்திட்ட ஆணையத்தின் "அக்சரலட்சம்" ("மில்லியன் கடிதம்") திட்டத்தின் ஒரு பகுதியாக, 40,362 பேருடன் இவர் இந்தத் தேர்வை எழுதினார்.[2][1]இவர், தனது மாவட்டத்தில் தேர்வெழுதிய மிக வயதான நபராக இருந்தார். ஒன்பது மற்றும் பன்னிரண்டு வயதிற்குட்பட்ட இவரது பேரக்குழந்தைகளால் இவரது வாசிப்புப் பயிற்சியும், எழுத்து பயிற்சியும் வழங்கப்பட்டன.[4]

விருதுகள் தொகு

வாசிப்பு, எழுத்து, கணிதம் ஆகியவற்றில் தேர்வெழுதிய இவர் 100க்கு 98 மதிப்பெண்களைப் பெற்று, முதல் தரத்த்தில் தேர்ச்சி பெற்றார். [2] இவர் பின்னர் இதைப் பற்றி தெரிவிக்கையில் "நான் எந்தக் காரணமும் இல்லாமல் நிறைய கற்றுக்கொண்டேன். தேர்வுகள் எனக்கு மிகவும் எளிதாக இருந்தது " என்றார். தேர்வில் வெற்றி பெற்ற பிறகு, இவர் தேசிய அளவில் பிரபலமானார். நடிகை மஞ்சு வாரியர் இவரை சந்தித்தார். கேரளாவின் கல்வியமைச்சர் சி. இரவீந்திரநாத் இவருக்கு ஒரு மடிக்கணினியை வழங்கினார். கேரள முதலமைச்சர் பிணறாயி விஜயன் இவருக்கு தகுதிச் சான்றிதழை வழங்கினார். [5][6][3] தி எகனாமிக் டைம்ஸ் இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் 100 வயதில் அடுத்த நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவதே தனது லட்சியம் என்று கூறினார் . [2]

இவர், 2019 இல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவின் வான்கூவரைத் தலைமையிடமாகக் கொண்ட பொதுநலவாய கற்றல் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதரானார். .[7] மார்ச் 2020 இல், இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவருக்கு நாரி சக்தி விருது வழங்கி கௌரவித்தார். இவர் முதன்முறையாக விமானத்தில் தில்லிக்கு பறக்க வேண்டியிருந்தது. [8] கேரளாவைச் சேர்ந்த பாகீரதி அம்மா இந்த விருதைப் பெற்ற மற்றொருவர் சக பெண்மணியாவார். இவர் 105 வயதில் "அக்ரலட்சம்" தேர்வில் தேர்ச்சி பெற்ற மிக வயதான நபராவார். [9]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "96-year-old to take literacy exam" (in en-IN). The Hindu. IST. 4 August 2018. https://www.thehindu.com/news/national/kerala/96-year-old-to-take-literacy-exam/article24603902.ece. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "96-year-old Karthyayani Amma clears Kerala's literacy exam, win hearts - A winner". The Economic Times. IST. 31 October 2018. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/96-year-old-karthyayani-amma-clears-keralas-literacy-exam-win-hearts/easy-test/slideshow/66447006.cms. 
  3. 3.0 3.1 Bagchi, Poorbita Bagchi (21 January 2019). "Kerala: At 96, Karthyayani Amma Becomes Commonwealth Learning Goodwill Ambassador" (in en). The Logical Indian. https://thelogicalindian.com/story-feed/get-inspired/karthayayani-amma-commonwealth/. 
  4. Das, Ria (21 January 2019). "Karthyayani Amma Is Now Commonwealth Learning Goodwill Ambassador". She the people. https://www.shethepeople.tv/news/karthyayani-amma-commonwealth-learning-goodwill-ambassador/. 
  5. "Karthyayani Amma, the star at 96, celebrates Diwali with Manju Warrier" (in en). Mathrubhumi. IST. 7 November 2018 இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210722071136/https://english.mathrubhumi.com/news/good-news/karthyayani-amma-the-star-at-96-celebrates-diwali-with-manju-warrier-kerala-1.3288739. 
  6. "Education minister gifts laptop to Karthyayani Amma" (in en). Mathrubhumi. IST. 8 November 2018 இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210722071138/https://english.mathrubhumi.com/news/good-news/education-minister-gifts-laptop-to-karthyayani-amma-1.3291558. 
  7. "96-yr-old Karthyayani Amma becomes Commonwealth Goodwill Ambassador" (in en). Mathrubhumi. IST. 20 January 2019 இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210722071137/https://english.mathrubhumi.com/news/good-news/96-yr-old-karthyayani-amma-becomes-commonwealth-goodwill-ambassador-alappuzha-1.3498565. 
  8. "At 98, Karthyayani Amma prepares for 1st flight; to receive Nari Shakti Puraskar on Women's Day". Mathrubhumi (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-28. பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
  9. Staff (7 March 2020). "98 yrs old from Kerala to be presented Nari Shakti Puraskar: Here's Why?". The Dispatch இம் மூலத்தில் இருந்து 1 பிப்ரவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210201055714/https://www.thedispatch.in/98-yrs-old-from-kerala-to-be-presented-nari-shakti-puraskar-heres-why/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்த்தியாயனி_அம்மா&oldid=3725536" இலிருந்து மீள்விக்கப்பட்டது