கால்சியம் பெர்மாங்கனேட்டு

கால்சியம் பெர்மாங்கனேட்டு (Calcium permanganate) என்பது Ca(MnO4)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கால்சியம் உலோகம் மற்றும் இரண்டு பெர்மாங்கனேட்டு அயனிகள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. வலிமையான ஆக்சிசனேற்றியாகச் செயல்படும் இச்சேர்மம் காற்றில் எரியாது ஆனால் எரியும் பொருளின் எரிதலைத் தூண்டுகிறது, எரியும் பொருள் எரிந்து முடிந்தவுடன் இறுதியாக நிற்கும் கலவை வெடிக்க நேரிடலாம். எரியக்கூடிய நீர்மங்கள் கால்சியம் பெர்மாங்கனேட்டுடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால் உடனடியாக தீப்பிடிக்க நேரிடும். கந்தக அமிலத்துடன் தீப்பற்றலும் பென்சீன், கார்பன் டை சல்பைடு, இரு எத்தில் ஈதர், எத்தில் ஆல்ககால் பெட்ரோலியம் அல்லது இதர கரிமப் பொருட்களுடன் தொடர்பால் வெடித்தலும் நிகழும். இவ்வாறே அசிட்டிக் அமிலம் அல்லது அசிட்டிக் நீரிலியுடன் சேர்க்கப்படும் போது குளிரூட்டப்படாவிட்டால் வெடித்தல் ஏற்படும்.

கால்சியம் பெர்மாங்கனேட்டு
Calcium permanganate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கால்சியம் ஆக்சிடோ-டிரையாக்சோ மாங்கனீசு[1]
இனங்காட்டிகள்
10118-76-0 Y
ChemSpider 23333 Y
EC number 233-322-7
InChI
  • InChI=1S/Ca.2Mn.8O/q+2;;;;;;;;;2*-1 Y
    Key: HYSMCTNXSYZEHS-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ca.2Mn.8O/q+2;;;;;;;;;2*-1/rCa.2MnO4/c;2*2-1(3,4)5/q+2;2*-1
    Key: HYSMCTNXSYZEHS-KTXORSEZAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24959
வே.ந.வி.ப எண் EW3860000
  • [Ca+2].O=[Mn](=O)(=O)[O-].[O-][Mn](=O)(=O)=O
பண்புகள்
Ca(MnO4)2
வாய்ப்பாட்டு எடை 277.9493 கி/மோல்
தோற்றம் கருஞ்சிவப்புப் படிகங்கள்
நீருறிஞ்சி
அடர்த்தி 2.49 கி/செ,மீ3
உருகுநிலை 140 °C (284 °F; 413 K) (சிதைவடையும், நான்கு நீரேற்று)
நான்கு நீரேற்று:
331 கி/100 மி.லி (14 °செ)
338 கி/100 மி.லி (25 °செல்சியசு)
கரைதிறன் அமோனியம் ஐதராக்சைடுவில் கரையும்
ஆல்ககாலில் சிதைவடையும்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் பெர்மாங்கனேட்டு
அமோனியம் பெர்மாங்கனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் கால்சியம் குளோரைடு அல்லது அலுமினியம் பெர்மாங்கனேட்டுடன் கால்சியம் ஆக்சைடு வினைபுரிவதால் கால்சியம் பெர்மாங்கனேட்டு உண்டாகிறது.

பயன்கள்

தொகு

பற்களின் வெண்மைக்கு உதவுவதாக நம்பப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு


வார்ப்புரு:Inorganic-compound-stub