கார்பன் டைசல்பைடு
கார்பன் டை சல்பைடு (Carbon disulfide) என்பது CS2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு நிறமற்ற எளிதில் ஆவியாகக்கூடிய ஒரு நீர்மமாகும். கரிம வேதியியலில் பெரும்பாலும் இச்சேர்மத்தை கட்டுறுப்புத் தொகுதியாகப் பயன்படுத்துவார்கள். தொழிற்சாலைகளில் இதை முனைவற்ற ஒரு கரைப்பானாகப் பயன்படுத்துவார்கள். கார்பன் டை சல்பைடு ஓர் ஈதரைப் போல நெடிகொண்ட நீர்மமாகும். ஆனால் வணிக மாதிரிகள் அவற்றுடன் கலந்துள்ள மாசுக்கள் காரணமாக தவறான நெடியை அளிக்கின்றன [7].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
மெத்தேன் டைதயோன்
| |
வேறு பெயர்கள்
கார்பன் பைசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
75-15-0 | |
ChEBI | CHEBI:23012 |
ChemSpider | 6108 |
EC number | 200-843-6 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C19033 |
பப்கெம் | 6348 |
வே.ந.வி.ப எண் | FF6650000 |
| |
UNII | S54S8B99E8 |
UN number | 1131 |
பண்புகள் | |
CS2 | |
வாய்ப்பாட்டு எடை | 76.13 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் Iமாசு: இள மஞ்சள் |
மணம் | குளோரோஃபார்ம் (தூய்மை) மாசு (வணிகம்) |
அடர்த்தி | 1.539 கி/செ.மீ3 (−186°செ) 1.2927 கி/செ.மீ3 (0 °செ) 1.266 கி/செ.மீ 3 (25 °செ)[1] |
உருகுநிலை | −111.61 °C (−168.90 °F; 161.54 K) |
கொதிநிலை | 46.24 செல்சியசு |
2.58 கி/லி (0 °செ) 2.39 கி/லி (10 °செ) 2.17 கி/லி (20 °செ)[2] 0.14 கி/லி (50 °செ)[1] | |
கரைதிறன் | ஆல்க்கால், டை எத்தில் ஈதர், பென்சீன், CHCl3, கார்பன் டெட்ரா குளோரைடு போன்றவற்றில் கரையும். |
பார்மிக் அமிலம்-இல் கரைதிறன் | 4.66 கி/100 கி[1] |
டைமெத்தில் சல்பாக்சைடு-இல் கரைதிறன் | 45 கி/100 கி (20.3 °செ)[1] |
ஆவியமுக்கம் | 48.1 கி.பாசுக்கல் (25 °செ) 82.4 கி.பாசுக்கல் (40 °செ)[3] |
−42.2•10−6 செ.மீ3/மோல் | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.627[4] |
பிசுக்குமை | 0.436 பாய்சு (அலகு) |
கட்டமைப்பு | |
மூலக்கூறு வடிவம் | |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 D (20 °செ)[1] |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
88.7 கியூ/மோல்[1] |
Std enthalpy of combustion ΔcH |
1687.2 கியூ/மோல்[3] |
நியம மோலார் எந்திரோப்பி S |
151 யூ/(மோல்•கெல்வின்)[1] |
வெப்பக் கொண்மை, C | 75.73 யூ/(மோல்•கெல்வின்)[1] |
தீங்குகள் | |
GHS pictograms | [4] |
GHS signal word | அபாயம் |
H225, H315, H319, H361, H372[4] | |
P210, P281, P305+351+338, P314[4] ICSC 0022 | |
உள்மூச்சு இடர் | எரிச்சலுட்டும்; நச்சு |
கண் இடர் | எரிச்சலூட்டும் |
தோல் இடர் | எரிச்சலுட்டும் |
தீப்பற்றும் வெப்பநிலை | −43 °C (−45 °F; 230 K)[1] |
Autoignition
temperature |
102 °C (216 °F; 375 K)[1] |
வெடிபொருள் வரம்புகள் | 1.3–50%[5] |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
3188 மி.கி/கி.கி (எலி, வாய்வழி) |
LC50 (Median concentration)
|
> மில்லியனுக்கு 1670 ppm (எலி, 1 h) மில்லியனுக்கு 15500 பகுதிகள் (எலி, 1 h) மில்லியனுக்கு 3000 பகுதிகள் (எலி, 4 h) மில்லியனுக்கு 3500 பகுதிகள் (எலி, 4 h) மில்லியனுக்கு 7911 பகுதிகள் (எலி, 2 h) மில்லியனுக்கு 3165 பகுதிகள் (சுண்டெலி, 2 h)[6] |
LCLo (Lowest published)
|
மில்லியனுக்கு 4000 பகுதிகள் (மனிதன், 30 நிமிடம்)[6] |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
டி.டபிள்.யூ.ஏ மில்லியனுக்கு 20 பகுதிகள் C மில்லியனுக்கு 30 பகுதிகள், மில்லியனுக்கு 100 பகுதிகள் (30-நிமிடம் அதிகபட்ச உச்சம்)[5] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
டி.டபிள்.யூ.ஏ மில்லியனுக்கு 1 பகுதி (3 மி.கி/மீ3) ST மில்லியனுக்கு 10 பகுதிகள் (30 மி.கி/மீ3) [தோல்][5] |
உடனடி அபாயம்
|
மில்லியனுக்கு 500 பகுதிகள்[5] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தோற்றம் தயாரிப்பு, பண்புகள்
தொகுஎரிமலை வெடிப்புகளிலும் சதுப்பு நிலங்களிலும் சிறிய அளவுகளில் கார்பன் டை சல்பைடு வெளியிடப்படுகிறது. கார்பன் அல்லது கல்கரியுடன் உயர் வெப்பநிலைகளில் கந்தகத்தைச் சேர்த்து ஒரு காலத்தில் கார்பன் டை சல்பைடு பேரளவில் தயாரிக்கப்பட்டது.
- C + 2S → CS2
சிலிக்கா அரைதிண்மக் கரைசல் அல்லது அலுமினா வினையூக்கிகள் முன்னிலையில் இயற்கை எரிவாயுவை கார்பன் மூலமாகக் கொண்ட குறைவான வெப்பநிலை வினைகளில் 600 பாகை செல்சியசு வெப்பநிலை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது:[7]
- 2 CH4 + S8 → 2 CS2 + 4 H2S
மீத்தேனின் எரிதல் வினையை ஒத்த வினையாக இவ்வினை உள்ளது.
உலாகாய அளவில் கார்பன் டை சல்பைடு உற்பத்தியும் பயன்பாடும் தோராயமாக ஒரு மில்லியன் டன் அளவில் உள்ளது. இதில் சீனா 49 சதவீதமும் இந்தியா 13 சதவீதமும் பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் ரேயான் இழைகள் தயாரிப்பதற்காக இரு நாடுகளும் கார்பன் டை சல்பைடைப் பயன்படுத்துகின்றன. [8] அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு மட்டும் 56,000 டன் கார்பன் டை சல்பைடு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.[9]
கரைப்பான்
தொகுபாசுபரசு, கந்தகம், செலீனியம், புரோமின், அயோடின், கொழுப்புs, பிசின்s, இயற்கை மீள்மம், மற்றும் அசுபால்ட் போன்றவற்றுக்கு கார்பன் டை சல்பைடு ஒரு சிறந்த கரைப்பானாகும்.[10] It has been used in the purification of single-walled carbon nanotubes.[11]
வினைகள்
தொகுCS2 நீர்மம் உயர் தீப்பற்றும் வெப்பநிலை கொண்டதாகும்.:
- CS2 + 3 O2 → CO2 + 2 SO2
எலக்ட்ரான் அமைப்பில் கார்பனீராக்சைடை ஒத்துள்ள இச்சேர்மம் மின்னணு மிகுபொருட்களுடன் வினைத்திறன் மிக்கதாகவும் எளிதாக ஒடுக்கக் கூடிய வேதிப்பொருளாகவும் உள்ளது. சல்பிடோ மையங்களின் பலவீனமான π கொடையளிக்கும் திறனே இத்தீவிர வினை வேறுபாட்டிற்குக் காரணமாகும். இதுவே கார்பனின் மின்னணு மிகு திறனை அதிகரிக்கிறது. அமீன்கள் சோடியம் டையெத்தில்டைதயோகார்பமேட்டுகளைக் கொடுக்கின்றன:
- 2 R2NH + CS2 → [R2NH2+][R2NCS2−]
ஆல்காக்சைடுகளிலிருந்து சாந்தேட்டும் இவ்வாறே உருவாகிறது.
- RONa + CS2 → [Na+][ROCS2−]
விசுகோசு, ரேயான், செல்லோபேன் போன்றவற்றின் உட்கூறாகக் காணப்படும் மரு உருவாக்க செல்லுலோசு சேர்மத்தை பேரளவில் தயாரிப்பதற்கு இவ்வினையே அடிப்படையாகும். CS2 உடன் சோடியம் தயோலேட்டுகளுடன் சேர்த்து சூடுபடுத்தி சாந்தேட்டுகளும் தயோசாந்தேட்டுகளும் உருவாக்கப்படுகின்றன. கனிமவியல் செயல்முறையில் நுரைமிதப்பு முகவராக இவை பயன்படுகின்றன.
சோடியம் சல்பைடிலிருந்து டிரைதயோகார்பனேட்டு வருவிக்கப்படுகிறது:
- Na2S + CS2 → [Na+]2[CS32−]
கார்பன் டை சல்பைடு எளிதாக நீராற்பகுப்பு அடையாது. கார்பன் டை சல்பைடு ஐதரோலேசு என்ற நொதி வினையூக்கம் செய்தாலும் வினை நிகழ்வதில்லை.
சோடியத்துடன் சேர்த்து இதை ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் சோடியம் 1,3-டைதயோல்-2-தயோன்–4,5-டைதயோலேட்டும் உடன் சோடியம் டிரைதயோகார்பனேட்டும் உருவாகின்றன.[12]
- 4 Na + 4 CS2 → Na2C3S5 + Na2CS3
குளோரினேற்றம்
தொகுகார்பன் டெட்ரா குளோரைடு உருவாக்கத்திற்கான முக்கியமான வினை CS2 சேர்மத்தை குளோரினேற்றம் செய்யும் வினையாகும் :[7]
தயோபாசுகீன் சேர்மத்தின் இடைநிலை விளைபொருள் வழியாக இம்மாற்றம் நிகழ்கிறது.
ஒருங்கிணைவு வேதியியல்
தொகுCS2 பல உலோக அணைவுகளுக்கு ஒரு ஈந்தணைவியாக பை அணைவுகளை உருவாக்குகிறது. சைக்ளோபென்டாடையீனைல் அணைவு இதற்கு ஓர் உதாரணமாகும்.[13]
பலபடியாக்கல்
தொகுஒளியாற்பகுப்பு அல்லது உயர் அழுத்தத்தில் கார்பன் டை சல்பைடு பலபடியாக்கல் வினைக்கு உட்படுகிறது. பிரித்மான் பிளாக் என்ற ஒரு கரையாத பொருள் இவ்வினையில் உருவாகிறது. இப்பலபடியைக் கண்டறிந்த பெர்சி வில்லியம்சு பிரித்மான் பெயரையே விளைபொருளுக்கும் பெயராகச் சூட்டினர். டிரைதயோகார்பனேட்டு இணைப்புகள் ஒரு பகுதியாக உள்ள இப்பலபடி ஒரு குறைக்கடத்தியாகும்[14].
பயன்கள்
தொகுஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் கார்பன் டை சல்பைடின் மொத்த அளவில் 75 சதவீத அளவு விசுகோசு ரேயான் மற்றும் செல்லோபேன் படலம் தயாரிக்கவே பயன்படுகிறது[15] கார்பன் டெட்ராகுளோரைடை தொகுப்பு முறையில் தயாரிக்கும்போது ஒரு பயனுள்ள இடைநிலை வேதிப்பொருளாக கார்பன் டை சல்பைடு உருவாகிறது. இது சாந்தேட்டுகள், டைதயோகார்பமேட்டுகள், மெடாம் சோடியம் என்னும் பூச்சிக்கொல்லி போன்றவற்றை பேரளவில் தயாரிக்க இது பயன்படுகிறது. மேலும் இவை உலோகவியலில் தனிமங்களைப் பிரித்தெடுக்கவும் ரப்பர் எனப்படும் மீள்ம வேதியியலிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. காற்றுப்புகாத சேமிப்பு கிடங்குகள், காற்றுப்புகாத பன்மாடி கிடங்குகள், கொள்கலங்கள், தானிய மிந்தூக்கிகள், இரயில் பெட்டி கார்கள், கப்பல்களின் சேமிப்பறைகள் மற்றும் தானிய ஆலைகள் ஆகியவற்றின் புகைமூட்டம் உண்டாக்க இதைப் பயன்படுத்தப்படலாம் [16] Carbon disulfide is also used as an insecticide for the fumigation of grains, nursery stock, in fresh fruit conservation and as a soil disinfectant against insects and உருளைப்புழு.[17]
உடல்நல பாதிப்புகள்
தொகுகார்பன் டை சல்பைடு மிகவும் நச்சுத்தன்மையுடையது. நச்சுத்தன்மையின் கடுமையான மற்றும் நீடித்த வடிவங்களுடன் இது இணைக்கப்பட்டுள்ளது [1]. கார்பன் டை சல்பைடின் விளைவுகளை அடையாளம் காண அதன் வெளிப்பாடு, ஏற்புத்தன்மை அறிகுறிகள் மற்றும் தவிர்ப்பதால் கிடைக்கும் பிற சுகாதார நிலைகள் போன்றவற்றை உறுதிப்படுத்துவது அவசியமாகும். வழக்கமாக பரிந்துரைக்கப்பட்ட ஏற்பளவு 30 மி.கி / மீ3, மில்லியனுக்கு 10 பகுதிகள் ஆகும்.
கூச்ச உணர்வு அல்லது உணர்வின்மை, தசைப்பிடிப்புகள், தசை பலவீனம், வலி, உணர்ச்சி இழப்பு, மற்றும் நரம்பியல் குறைபாடு போன்றவை அறிகுறிகளாகும் [15].
கார்பன் டை சல்பைடின் தொழில்முறை சார்ந்த நபர்கள் மீதான வெளிப்பாடு குறிப்பாக இதயநோயுடன் தொடர்புடையதாக குறிப்பாக பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது[18]
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 "Properties of substance: carbon disulfide". chemister.ru.
- ↑ Seidell, Atherton; Linke, William F. (1952). Solubilities of Inorganic and Organic Compounds. Van Nostrand.
- ↑ 3.0 3.1 Carbon disulfide in Linstrom, Peter J.; Mallard, William G. (eds.); NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, National Institute of Standards and Technology, Gaithersburg (MD), http://webbook.nist.gov (retrieved 2014-05-27).
- ↑ 4.0 4.1 4.2 4.3 Sigma-Aldrich Co., Carbon disulfide. Retrieved on 2014-05-27.
- ↑ 5.0 5.1 5.2 5.3 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0104". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 6.0 6.1 "Carbon disulfide". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 7.0 7.1 7.2 Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
- ↑ "Carbon Disulfide report from IHS Chemical". பார்க்கப்பட்ட நாள் June 15, 2013.
- ↑ "Chemical profile: carbon disulfide from ICIS.com". பார்க்கப்பட்ட நாள் June 15, 2013.
- ↑ "Carbon Disulfide". Akzo Nobel. Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2019-05-04.
- ↑ Park, Tae-Jin; Banerjee, Sarbajit; Hemraj-Benny, Tirandai; Wong, Stanislaus S. (2006). "Purification strategies and purity visualization techniques for single-walled carbon nanotubes". Journal of Materials Chemistry 16 (2): 141–154. doi:10.1039/b510858f.
- ↑ "4,5-Dibenzoyl-1,3-dithiole-1-thione". Org. Synth. 73: 270. 1996. doi:10.15227/orgsyn.073.0270.
- ↑ Werner, Helmut (1982). "Novel Coordination Compounds formed from CS2 and Heteroallenes". Coordination Chemistry Reviews 43: 165–185. doi:10.1016/S0010-8545(00)82095-0.
- ↑ Ochiai, Bungo; Endo, Takeshi. "Carbon dioxide and carbon disulfide as resources for functional polymers". Progress in Polymer Science 30 (2): 183–215. doi:10.1016/j.progpolymsci.2005.01.005.
- ↑ 15.0 15.1 Lay, Manchiu D. S.; Sauerhoff, Mitchell W.; Saunders, Donald R.; "Carbon Disulfide", in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2000 எஆசு:10.1002/14356007.a05_185 10.1002/14356007.a05_185
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Worthing, Charles R.; Hance, Raymond J. (1991). The Pesticide Manual, A World Compendium (9th ed.). British Crop Protection Council. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780948404429.
- ↑ "Occupational health and safety – chemical exposure". www.sbu.se (in ஆங்கிலம்). Swedish Agency for Health Technology Assessment and Assessment of Social Services (SBU). Archived from the original on 2017-06-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-07.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)
புற இணைப்புகள்
தொகு- Australian National Pollutant Inventory: Carbon disulfide
- CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards - Carbon Disulfide
- Inno Motion Engineering
- Agency for Toxic Substances & Disease Registry Public Health Statement for Carbon Disulfide, 1996.
- Resources on Carbon Disulfide by the National Institute for Occupational Safety and Health