முதன்மை பட்டியைத் திறக்கவும்

கால்நடை வளர்ப்பு

(கால்நடை வளர்த்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மறி ஆடு

கால்நடை வளர்ப்பு (Animal husbandry) என்பது வேளாண்மைத் துறையில், உணவு, உரோமம், உடல்வலுப் பயன்பாடு என்பவற்றை நோக்கமாகக் கொண்டு, ஆடு, மாடு, குதிரை, மீன், கோழி, வாத்து போன்ற விலங்குகள் மற்றும் பறவைகள் வளர்ப்பதைக் குறிக்கும். கால்நடைகள் வளர்ப்பது, வாழ்வாதார மட்டத்திலோ அல்லது பெருமளவு இலாபம் தரக்கூடிய வகையிலோ நடைபெறலாம். கால்நடை வளர்ப்பு என்பது நவீன வேளாண்மைத் துறையின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருக்கிறது. மனித சமூகம் வேட்டை மற்றும் உணவு சேகரித்தலை வாழ்க்கைமுறையாகக் கொண்டிருந்த நிலையிலிருந்து வேளாண்மை நிலைக்கு மாறிய காலத்திலிருந்து கால்நடை வளர்ப்பு இடம்பெற்றுவருகிறது.

கால்நடை வளர்ப்பின் தோற்றம்தொகு

 
கால்நடை வளர்ப்பில் முக்கிய இடம்பெறும் செம்மறியாடுகள்.

வேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் தீவிர மாற்ரங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். ஆடுகள், செம்மறியாடுகள், பன்றிகள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே ஆசியாவில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.

கால்நடை வளர்ப்பின் முன்னோடி தோற்றம்தொகு

விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின.

 
கிராமத்துக் கால்நடைகள்

கால்நடை வளர்ப்பின் நோக்கங்கள்தொகு

 • இறைச்சி
 • பால் பொருட்கள்
 • இழைகள் - கால்நடைகளின் மயிர்
 • உரம் - கால்நடைக் கழிவுகள்
 • வேலைக்கு - வண்டி இழுக்க, பாரம் தூக்க

உணவு தரும் விலங்குகள்தொகு

 
இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள்

பால், முட்டை மற்ரும் இறைச்சிக்காக விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பசு இனங்கள் முக்கியமாக அதன் பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. சில ஆட்டினங்கள் அதன் பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. தேனீக்கள் தேனுக்காகவும் மீன் புரதம் சார்ந்த உணவிற்கு ஒரு நல்ல மூலமாகவும் உள்ளது.

உரோமம் தரும் விலங்குகள்தொகு

செம்மறி ஆடு, வெள்ளாடு, லாமா எனப்படும் ஒரு வகைக் ஒட்டகக் குடும்ப விலங்கு போன்றவை நமக்கு உரோமத்தைத் தருகின்றன. இந்த உரோமங்கள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு கம்பளி உருவாக்கப்படுகிறது. பட்டுப்புழு மூலம் பட்டிழை உற்பத்தியாகிறது.

இழுவை விலங்குகள்தொகு

ஏர் உழுதலுக்கும், வண்டி இழுப்பதற்கும் பயன்படும் விளங்குகள் இழுவை விலங்குகள் ஆகும். எருது, காளை மாடு, குதிரை, யானை, கழுதை போன்ற விலங்குகள் விளை நிலங்களை உழுவதற்கும் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

கால்நடை உற்பத்தி அமைப்பை உணவளித்தல் அடிப்படையிலும் அதாவது புல்வெளி சார்ந்தது, கலந்தது, நிலமற்றது. என வரையறுக்கலாம்.[1] புல்வெளி சார்ந்த கால்நடை உற்பத்தியானது புதர்நிலம், மேய்ச்சல் நிலம் போன்ற தாவர இனங்களையும், விலங்குகளுக்கான உணவிற்கு மேய்ச்சல் நிலத்தையும் நம்பியிருக்கின்றன. இக்காலநடை வளர்ப்பின் மூலம் பெறப்படும் எருவானது வெளிப்புற ஊட்டச்சத்து அளிப்புகளும் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் எருவானது ஒரு பிரதான ஊட்டச்சத்து ஆதாரமாக புல்வெளிக்கே நேரடியாக திருப்பியளிக்கப்படுகிறது.

கால்நடை வளர்ப்பு குறித்த சிக்கல்கள்தொகு

 
நவீன பால் கறக்கும் இயந்திரம்- பசு மாட்டின் மடியிலிருந்து பால் உறிஞ்சப்படுகிறது

இந்த அமைப்பு குறிப்பாக 30-40 மில்லியன் மேய்ப்பர்கள் உள்ள வெப்பநிலை அல்லது மண்ணின் காரணமாக பயிர் உற்பத்தி சாத்தியமாகாத பகுதிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.< ref name="CS"/> கலப்பு உற்பத்தி முறைகள் புல்வெளி, தீவன பயிர்கள் மற்றும் அசைபோடும் விலங்குகள் முக்கியமாக கோழிகளும் பன்றிகளும் கால்நடைகளுக்கு தீனியிடும் தானியப் பயி்ர்களை பயன்படுத்துகிறது. எருவானது பயிர்களுக்கான கலப்பு அமைப்புகளில் வகை மாதிரியாக மறுசுழற்சி செய்யப்படுகிறது. ஏறத்தாழ 68 சதவிகித விவசாய நிலம் காலநடை உற்பத்தியில் நிலையான மேய்ச்சல் நிலமாக உள்ளன.[2] நிலமற்ற அமைப்புகள், பண்ணைக்கு வெளியிலிருந்து வரும் உணவு முறையை நம்பியிருக்கிறது, இது பயிர்களுடன் தொடர்பற்றிருப்பதைக் குறிக்கிறது, அத்துடன் கால்நடை உற்பத்தி பொருளாதாரக் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கன அமைப்பு (Organisation for Economic Co-operation and Development (OECD)) உறுப்பு நாடுகளில் [3] மிகச்சாதாரணமாக காணப்படுகிறது. அமெரிக்காவில் 70 சதவிகித தானியம் வளர்ப்பு விலங்குகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.[4]

நில ஆக்கிரமிப்புதொகு

 
திபெத்தில் உள்ள ஒரு மேய்ச்சல் நிலம்

ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரியும், இந்தப் பிரச்சினை குறித்து விவரமளித்த ஐ.நா.அறிக்கையின் இணை ஆசிரியருமான ஹென்னிங் ஸ்டெயின்பீல்ட், "இன்றைய மிகவும் தீவிரமான சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மிகக் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளராக காலநடைகள் உள்ளன" என்று கூறியுள்ளார்.[5] கால்நடை உற்பத்தி விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் எழுபது சதவிகித நிலத்தை ஆக்கிரமித்துள்ளது, அல்லது பூமியின் நிலப்பரப்பில் 30 சதவிகிதத்தை ஆக்கிரமித்துள்ளது.[6]

கால்நடை விரிவாக்கம் காடு அழித்தலை தூண்டக்கூடிய முக்கியக் காரணியாகவும் பார்க்கப்படுகிறது, அமேசான் வடிநிலத்தில் முன்னர் 70 சதவிகிதம் காடாக இருந்த பகுதி தற்போது மேய்ச்சல் நிலமாகவும், மீதமுள்ள பகுதி தீவனப்பயிர்களுக்கென்று பயன்படுத்துவதற்கென்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.[6] காடு அழிப்பு மற்றும் நில தரமிழப்பு மூலமாக கால்நடைகளும் சுற்றுச்சூழல் மாறுபாட்டுக் குறைப்பையும் தூண்டுகிறது.கலப்பு உரங்கள் பயிர் உற்பத்தியை மிக அதிகமாக நம்பியிருக்கின்றன, எரு பயன்பாடு ஒரு சவாலாகவும் மாசுபாட்டிற்கான மூலாதாரமாகவும் ஆகிவிட்டன.

புவி வெப்பமயமாக்கல்தொகு

இது பசுமையில்ல வாயுக்களின் மிகப்பெரிய மூலாதாரமாகவும், கார்பன் டை ஆக்ஸைடிற்கு இணையாக அளவிடப்பட்டுள்ள உலகின் 18 சதவிகித பசுமையில்ல வாயுக்களின் வெளிப்பாட்டிற்கு பொறுப்பேற்றுள்ளது. ஒப்பீட்டுரீதியில் பார்த்தால், போக்குவரத்துக்கள் அனைத்தும் 13.5 சதவிகித கார்பன் டை ஆக்ஸைடையே வெளியிடுகின்றன. இது மனித இனம் சார்ந்த 65 சதவிகித நைட்ரஸ் ஆக்ஸைடையும் (புவி வெப்பமாதலுக்கு 296 முறை வாய்ப்புள்ள கார்பன் டை ஆக்ஸைடையும் கொண்டுள்ளது) மனித இனம் தூண்டும் மீத்தேனையும் (கார்பன் டை ஆக்ஸைடு புவியை வெப்பமாக்குவதைப் போல 23 மடங்கு) கொண்டுள்ளது. இது, அமிலமழையையும், சுற்றுச்சூழல் அமிலமாதலையும் வழங்கக்கூடிய அம்மோனியாவையும் 64 சதவிகிதம் உருவாக்குகிறது.

இரசாயனமயமாக்கல்தொகு

இரசாயனமயமாதல் அதாவது நீர்சார்ந்த சூழலமைப்புகளில் மிதமிஞ்சிய ஊட்டச்சத்துக்களை சேர்ப்பது, அல்கல் பெருகுவதற்கும் அனோக்ஸியாவிற்கும் காரணமாகின்றதுது. மீன்கள் கொல்லப்படுதல், உயிர்மாறுபாட்டு இழப்பிற்கு வழிவகுப்பதோடு, நீர் நிலைகளை குடிப்பதற்கும் பிற தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் பயனற்றதாகச் செய்கிறது. பயிர்நிலத்தில் மிதமிஞ்சி உரமிடுதல் மற்றும் எருவைப் பயன்படுத்துவது மற்றும் அதிக அளவில் கால்நடைகள் பெருக்கம் ஆகியவை விவசாய நிலத்திலிருந்து ஊட்டச்சத்து (முக்கியமாக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ்) அழிவதற்கும் நீர் கசிவிற்கும் காரணமாகிறது. இந்த ஊட்டச் சத்துக்கள், நீர்சார்ந்த சூழலமைப்பின் இரசாயனமயமாக்கலுக்கு மாசுபாட்டு மூலாதாரங்களாக இருக்கின்றன.[7]

சான்றுகள்தொகு

 1. செரி, சி., எச். ஸ்டெயின்பீல்ட் மற்றும் ஜே. குரோயன்வெல்ட். 1995ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு. ரோம், இத்தாலி"உலக கால்நடை வளர்ப்பு முறைகளின் விவரி்ப்பு - தற்போதைய நிலை மற்றும் போக்குகள்" டிசம்பர் 7, 2008இல் அணுகப்பட்டது.
 2. FAO டேட்டாபேஸ், 2003
 3. http://www.oecd.org/document/58/0,3746,en_2649_201185_1889402_1_1_1_1,00.html
 4. கிறிஸ்ட்பீல்ஸ், எம்.ஜே. மற்றும் டி.இ. சதவா. 1994விவசாய முறைகள்: வளர்ச்சி, உற்பத்தி திறன், மற்றும் நீடிப்புத் திறன் "Plants, Genes, and Agriculture"இல் பக்கம் 25-57. ஜோன்ஸ் அண்ட் பார்ட்லெட் பப்ளிஷர்ஸ், பாஸ்டன், எம்ஏ.
 5. http://www.fao.org/newsroom/en/news/2006/1000448/index.html
 6. 6.0 6.1 ஸ்டெயின்ஃபீல்ட், எச்., பி. கெர்பர், டி. வாஸெனெர், வீ. கேஸ்டல், எம். ரொஸெல்ஸ், மற்றும் சி. டெ ஹான்2006ஐ.நா.உணவு மற்றும் விவசாய அமைப்பு. ரோம், இத்தாலி "கால்நடைகளின் நீண்ட நிழல் - சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் விருப்பத்தேர்வுகளும்." டிசம்பர் 5, 2008இல் திரும்ப எடுக்கப்பட்டது
 7. கார்பென்டர், எஸ்.ஆர்., என்.எஃப் காரெகோ, டி.எல். கோரல், ஆர்.டபிள்யூ. ஹோவார்த், ஏ.என் ஷார்ப்லே, மற்றும் வி.எச். ஸ்மித். 1998Nonpoint Pollution of Surface Waters with Phosphorus and Nitrogen. எகோலாஜிக்கல் அப்ளிகேஷன் 8:559-568.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்நடை_வளர்ப்பு&oldid=2740677" இருந்து மீள்விக்கப்பட்டது