கிராகுபிகா
கிராகுபிகா | |
---|---|
கிராகுபிகா நிக்ரிகோலிசு, கருப்பு பட்டை மைனா | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சுடுருனிடே
|
பேரினம்: | கிராகுபிகா லெசன், 1831
|
மாதிரி இனம் | |
கிராகுலா நிக்ரிகோலிசு[1] = கிராகுலா நிக்ரிகோலிசு லெசன், 1831 |
கிராகுபிகா (Gracupica) என்பது சுடுருனிடே குடும்பத்தில் உள்ள ஆசியப் பறவைகளின் பேரினமாகும். இது சில நேரங்களில் இசுடர்னசு அல்லது இசுடுர்னியாவுடன் இணைக்கப்படுகிறது.
வகைப்பாட்டியல்
தொகுகிராகுபிகா பேரினமானது 1831ஆம் ஆண்டில் பிரெஞ்சு இயற்கை ஆர்வலர் ரெனே லெசன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கருப்பு கழுத்து சூறைக்குருவிக்கு இடமளிக்கிறது. இது இப்பேரினத்தின் மாதிரி இனமாகும். பேரினப் பெயர் இலத்தீன் சொல்லான கிராகுலசு அதாவது "சாம்பல் தலைக் காகம்" மற்றும் "கருப்பு வெள்ளைக்குருவி" என்று பொருள்படும் பிகாவுடன் இணைத்து உருவானது.
சிற்றினங்கள்
தொகுஇந்தப் பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன.[2]
படம் | விலங்கியல் பெயர் | பொதுப் பெயர் | பரவல் |
---|---|---|---|
கிராகுபிகா நிக்ரிகோலிசு | கருப்பு பட்டை மைனா | புரூணே, கம்போடியா, சீனா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் | |
கிராகுபிகா கான்ட்ரா | இந்தியக் கருப்பு வெள்ளை மைனா | இந்திய துணைக்கண்டம் | |
கிராகுபிகா பிளவெரி | சியாமிய கருப்பு வெள்ளை மைனா | தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பகுதி | |
கிராகுபிகா ஜல்லாக் | சாவகம் கருப்பு வெள்ளை மைனா | தெற்கு சுமாத்திரா, சாவகம், பாலி |
2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், கி . கான்ட்ரா எனும் இந்தியக் கருப்பு வெள்ளை மைனா சிற்றினம் 3 வேறுபட்ட துணைச்சிற்றினங்களின் கூட்டமைப்பினைக் கொண்டதாகக் கண்டறியப்பட்டது. இவை மியான்மர், சீனாவின் யுன்னான் உள்ளிட்ட இந்தியத் துணைக்கண்டப்பகுதியில் வாழ்கின்றன. சியாமிசு கருப்பு வெள்ளை மைனா தாய்லாந்து மற்றும் கம்போடியாவில் இருந்தும், (கி. பிளவ்வரி) இந்தோனேசியாவின் சாவகம் மற்றும் பாலியிலிருந்தும் வரலாற்று ரீதியாக அறியப்பட்ட சாவகம் கருப்பு வெள்ளை மைனா (கி. ஜல்லா) இயலிடத்தில் அற்றுவிட்ட இனம் கி. கான்ட்ராவின் பிற துணைச்சிற்றினங்களாகும்.[3] பன்னாட்டுப் பறவையியல் மாநாடு இந்த முடிவுகளை ஏற்றுக்கொண்டுள்ளது. [4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sturnidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2021). "Nuthatches, Wallcreeper, treecreepers, mockingbirds, starlings, oxpeckers". IOC World Bird List Version 11.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 11 January 2022.
- ↑ Baveja, Pratibha; Garg, Kritika M.; Chattopadhyay, Balaji; Sadanandan, Keren R.; Prawiradilaga, Dewi M.; Yuda, Pramana; Lee, Jessica G. H.; Rheindt, Frank E. (2021). "Using historical genome-wide DNA to unravel the confused taxonomy in a songbird lineage that is extinct in the wild" (in en). Evolutionary Applications 14 (3): 698–709. doi:10.1111/eva.13149. பன்னாட்டுத் தர தொடர் எண்:1752-4571. பப்மெட்:33767745. Bibcode: 2021EvApp..14..698B.
- ↑ "Taxonomic Updates – IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-07-15.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Gracupica தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Gracupica பற்றிய தரவுகள்