கிரேசி சிங்
கிரேசி சிங் (Gracy Singh) (பிறப்பு சூலை 20, 1980)[1] ஓர் இந்திய நடிகை. லகான் என்ற இந்தி மொழித் திரைப்படத்தின் மூலம் அறியப்படுகிறார்.[2] மேலும், பரதநாட்டியம் மற்றும் ஒடிசி நடனத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.[3][4]
கிரேசி சிங் | |
---|---|
![]() | |
பிறப்பு | 20 ஜூலை 1970[1] புது தில்லி, இந்தியா[1] |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1997–தற்போது வரை |
தொழில்
தொகுதில்லியில் பிறந்த கிரேசி சிங்,[1] "த பிளானட்ஸ்" என்கிற நடனக் குழு மூலமாக தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.[3] முதலில் அமானத் என்கிற தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் அசுதோசு கௌவார்க்கரின் இயக்கத்தில் ஆமிர் கான் நடித்திருந்த லகான் திரைப்படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளார். இப்படத்தின் சிறந்த அறிமுக நடிகையாக பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.[5] இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான திரை விருதினையும் பெற்றுள்ளார்.[6]
'லகான்' படத்தைத் தொடர்ந்து இந்தி (முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.; உள்பட) மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் [(சந்தோஷம் (2002)] நடித்துள்ளார்.[7] மேலும், பஞ்சாபி மொழியில் "லாக் பரதேசி ஹோயி" படத்திலும்,[8] ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான "லவுட் ஸ்பீக்கர்" என்கிற மலையாள மொழிப் படத்திலும் நடித்துள்ளார்.[9]
2015இல் மீண்டும் தொலைக்காட்சித் தொடரான "சந்தோஷி மாதா"வில் நடித்துள்ளார்.[10][11]
விருதுகள்
தொகுஇவர் 2002இல் லகான் திரைப்படத்தில் நடித்ததற்காக, ஐ ஐ எஃப் ஏ வின் சிறந்த அறிமுக நடிகை விருது, அறிமுக நடிகைக்கான திரை விருது மற்றும் சிறந்த அறிமுக நடிகைக்கான ஜீ திரைப்பட விருதுகளைப் பெற்றார். மேலும், இந்தியில் 'லகான்' மற்றும் தெலுங்கில் 'சந்தோஷம்' திரைப்படங்களில் நடித்ததற்காக 2002இல் பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Gracy Singh". Indiatimes.com. Retrieved 2016-08-26.
Gracy is actually from Punjab, but born in Delhi on July 20, 1980.
- ↑ Jha, Sumit (9 July 2016). "Gracy Singh: TV has a wider reach than cinema now". The Times of India. Retrieved 2016-08-26.
- ↑ 3.0 3.1 Bhayani, Viral. "Gracy Singh performs". Deccan Chronicle. Archived from the original on 11 அக்டோபர் 2016. Retrieved 26 ஆகத்து 2016.
- ↑ "Gracy's Foot Forward". Indian Express. 31 March 2001. http://www.indianexpress.com/ie/daily/20010331/ien31046.html. பார்த்த நாள்: 22 August 2011.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Gracy Singh Awards". One India. Archived from the original on 29 ஏப்ரல் 2014. Retrieved 31 January 2013.
- ↑ "'Lagaan', 'DCH' sweep Screen awards - Nation". The Tribune. Chandigarh, India. United News of India. 20 January 2002. Retrieved 2016-08-26.
- ↑ Shrivastava, Vipra (26 November 2015). "Lagaan actress Gracy Singh back on TV after 13 years". India Today. Retrieved 2016-08-26.
- ↑ Mathur, Siddhartha (14 December 2009). "Here's Gracy!". The Indian Express. Retrieved 26 August 2016.
- ↑ "Gracy Singh in Loud Speaker". Sify. Archived from the original on 27 August 2016. Retrieved 26 August 2016 – via Moviebuzz.
- ↑ Maheshwri, Neha (23 November 2015). "Gracy Singh repeats her 'Lagaan' look on TV". The Times of India. Retrieved 26 August 2016.
- ↑ "Lagaan actress Gracy Singh back on TV after 13 years". India Today (in ஆங்கிலம்). 26 November 2015. Retrieved 12 February 2022.
வெளி இணைப்புகள்
தொகு- Official website
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கிரேசி சிங்
- கிரேசி சிங் அழுகிய தக்காளிகள் தளத்தில்
- Gracy Singh பரணிடப்பட்டது 27 மார்ச் 2019 at the வந்தவழி இயந்திரம் on MFC பரணிடப்பட்டது 27 மார்ச் 2019 at the வந்தவழி இயந்திரம்