கீசராகுட்டா கோயில்

கீசரகுட்டா கோயில் (Keesaragutta Temple) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தில் கீசரகுட்டாவில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோவிலான இது சிவன், பவானி, சிவதுர்கை ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஐதராபாத்து நகரிலிர்நுது சுமார் 30 கி.மீ தொலைவில் ஒரு சிறிய குன்றின் மீது அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்றும் கார்த்திகை மாதமும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது.

கீசரகுட்டா
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தெலங்காணா
அமைவு:கீசரா, மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
இணையதளம்:keesaragutta.org

புனைவு தொகு

இராவணன் என்ற பிராமணனைக் கொன்ற பாவத்திற்கு பரிகாரம் செய்வதற்காக இராமன் இங்கு சிவலிங்கத்தை நிறுவியதாக புராணம் கூறுகிறது. மலைகள் மற்றும் பழமையான பசுமைகளால் சூழப்பட்ட இந்த அழகிய பள்ளத்தாக்கை அவர் இந்த நோக்கத்திற்காக தேர்ந்தெடுத்து, வாரணாசியிலிருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வருமாறு அனுமனுக்கு உத்தரவிட்டார். சிவலிங்கத்துடன் அனுமன் வருவது தாமதமாகிவிட்டது. நல்ல நேரம் நெருங்கி வருவதால், சிவபெருமானே இராமனிடம் நேரில் சென்று ஒரு சிவலிங்கத்தை வழங்கினார். இந்த இலிங்கம் இங்கே நிறுவப்பட்டது. எனவே கோயிலில் உள்ள இலிங்கத்தை சுயம்புலிங்கம் என்று அழைக்கிறார்கள். இராமன் லிங்கத்தை நிறுவியதால் இது இராமலிங்கேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது.

அனுமன் வாரணாசியிலிருந்து 101 இலிங்கங்களுடன் திரும்பினார். மேலும் அவரது இலிங்கம் நிறுவப்படாததால் வேதனைப்பட்டார். எனவே அவர் தான் எடுத்து வந்த இலிங்கங்களை அந்தப் பகுதி முழுவதும் வீசினார். இன்றுவரை கூட பல லிங்கங்கள் கோயிலுக்கு வெளியே எல்லா இடங்களிலும் சிதறிக்கிடக்கின்றன.

அனுமனின் துயரத்தை போக்குவதற்காக, கோயிலில் வழிபடுவதில் அனுமனௌக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இராமன் கட்டளையிட்டார். கேசரியின் மகன் அனுமன் என்பதால் இலிங்கம் நிறுவப்பட்ட மலையடிவாரத்திற்கு கேசரிகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், இது பேச்சுவழக்கில் மாறிவிட்டது. இப்போது கீசரா என்றும், மலை கீசரகுட்டா என்றும் அழைக்கப்படுகிறது. அப்போதிருந்து, சடங்குகள் இராமனின் கட்டளையை பின்பற்றுகின்றன.

தொல்பொருள் அகழ்வாராய்ச்சி தொகு

கோயிலின் சுற்றுப்புறங்களில் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டது.[1] கோயிலுக்கு வடக்கே உள்ள மலையிலும், நீர்வளத்திற்கு அருகிலுள்ள ஒரு குன்றிலும் செங்கல் கட்டமைப்புகள் மற்றும் சிவலிங்கங்களின் பல எச்சங்கள் காணப்பட்டன. எச்சங்கள் சாளுக்கியப் பேரரசின் ஆட்சியைச் சேர்ந்தவை. கோட்டை சுவர்கள், யாக குண்டம் மற்றும் பிரார்த்தனை கூடங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டன. சைனமும் பௌத்தமும் சமகாலத்தில் செழித்து வளர்ந்தன என்பதற்கான அறிகுறியாக மலைகளில் சில இடங்கள் மற்றும் பாறையில் கட்டப்பட்ட கோட்டைகள் காணப்பட்டன. 2014 அக்டோபர் 18 அன்று 4 முதல் 5 ஆம் நூற்றாண்டு வரையிலான சமண தீர்த்தங்கரரின் பன்னிரண்டு சிலைகள் கோயில் படிகளுக்கு அருகே ஒரு அடி ஆழத்தில் காணப்பட்டன. இது 4-5 ஆம் நூற்றாண்டுகளில் விஷ்ணுகுண்டினாவின் காலத்தில் கீசரகுட்டாவில் இந்து சமயத்துடன் சமணமும் இணைந்து இருந்தது என்பதை நிரூபிக்கிறது. [2][3]

மேற்கோள்கள் தொகு

  1. http://asi.nic.in/nmma_reviews/Indian%20Archaeology%201975-76%20A%20Review.pdf
  2. "Idols of Jain Tirthankaras belonging to 4th century unearthed - Times of India". Archived from the original on 2014-10-21.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-21. பார்க்கப்பட்ட நாள் 2021-05-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசராகுட்டா_கோயில்&oldid=3619923" இலிருந்து மீள்விக்கப்பட்டது