கொண்றங்கி கீரனூர்

(கீரனூர் (ஒட்டன்சத்திரம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொண்றங்கி கீரனூர் [4](K Keeranur) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு (கிராமம்)ஊர். ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 6 வது வருவாய் கிராமம் (கிராம எண்:6)ஆகும்.[5] [6] [7]

கொண்றங்கி கீரனூர்
—  கிராமம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
ஊராட்சி மன்றத் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

ஒட்டன்சத்திரத்திலிருந்து மூலனூர் செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 19.5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 461 மீட்டர் உயரத்தில் உள்ளது. வடக்கு எல்லையாக ஈரோடு மாவட்டமும், ஐ.வாடிப்பட்டி கிராமம் கிழக்கு எல்லையாகவும், தெற்கு எல்லையாக மண்டைவாடி கிராமமும், மேற்கு எல்லையாக கள்ளிமந்தையம் கிராமமும் உள்ளது.

சிறப்பு

தொகு

இந்த கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் உயரமான மலையில் அருள்மிகு மல்லீஸ்வரர் சுயம்பு இலிங்க (குகையில்) சிவதலம் உள்ளது. அருள்மிகு மல்லீஸ்வரர் சுயம்பு இலிங்க சிவதலத்திற்கு மேலே மேகங்கள் (கொண்டல்) இறங்கி தவழ்ந்து செல்வதால் கொண்டல் இறங்கியை காரணப் பெயராகக் கொண்டுள்ளது. கொண்டல்+இறங்கி = கொண்டலிறங்கி என்பது நாளடைவில் கொண்றங்கிஆகியது. இதனால் கிராமத்தின் பெயரான கீரனூர் என்பது கொண்றங்கி கீரனூர் என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையின் உச்சியில் (கடல் மட்டத்திலிருந்து சுமார் 748 மீட்டர் உயரம்) தேசிய முக்கோண நில அளவை குறியீடு (Lamb-ton's Great Trigonometrical Survey station) உள்ளது. இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, மிளகாய், பீன்ஸ், பீட்ரூட், மக்காசோளம், முட்டைக்கோஸ், வெங்காயம் விளைகின்றன.

மக்கள் வகைப்பாடு

தொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, விருப்பாட்சியில் 872 குடியிருப்புகள் உள்ளது.இதில் 2885 பேர் வசிக்கின்றார்கள். இதில் ஆண்கள்-1475, பெண்கள்-1410, பாலின விகிதம் 956. எழுத்தறிவு பெற்றவர்கள் 1716 பேர். இதில் 1066பேர் ஆண்கள்; 650 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 64.9 ஆகும், ஆறு வயதுக்குட்பட்டோர் (241 பேர்) 10.48 சதவீதம் ஆவர்.[8]

சான்றாவணம்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. கொங்கு நாட்டு வரலாறு-பக்கம்-56- ஆசிரியர்- கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார்- அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு-1954.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-02. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.
  8. "Rural - Dindigul District;oddanchtram Taluk;Kondarangi Keeranur Village 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2013-05-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்றங்கி_கீரனூர்&oldid=3551677" இலிருந்து மீள்விக்கப்பட்டது